💕2 💕
நான் இங்க வந்து 2 டேஸ் ஆச்சு.. மார்னிங் எழுந்த உடனே ஜாலியா கார்டென்ல யோகா பண்ணிட்டு வீட்டுக்குள்ள போனேன்..
நந்து ஏதோ என் பக்கத்துல வந்து சொன்னா.. ஆனா என்னனு தான் சரியா புரியல.. என்னவா இருக்கும்னு யோசிச்சுட்டு வந்துட்டே இருந்தனா ராஜிவ் அண்ணா மேல மோதிட்டேன்..ஏய் குல்பீ உனக்கு கண்ணு தெரிலயானு கேட்டுட்டு அவர் பாட்டுக்கு போய்ட்டாரு.. அவர் அப்டிதான்.. எப்ப பாத்தாலும் பிஸி.. பிஸி..தான் ..
அப்பதான் மது எழுந்து வந்தா..நான் குட் மார்னிங்னு சொன்னேன்.. அதுக்கு ஈஈ னு பல்ல காமிச்சிட்டுக் காபி குடிக்க போய்ட்டா..
வீட்ல யாருமே இல்ல. நான், மது, நந்து.. அப்ரோம் நாலு குட்டி பசங்க மட்டும் தான் .. எல்லாரும் கோவிலுக்குப் போய்ட்டாங்க..
எனக்கு செம போராஹ் இருந்துச்சு.. வாடி நாமளும் போலாம்னு சொன்னா ஒருத்தியும் வர மாட்டீங்கிறாங்க..சரினு இந்த வாண்டுகளோட கண்ணாமூச்சியாது விளையாடுவோம்னு நினைச்சேன்..பரவால்ல.. அந்த குட்டிஸ்லாம் நான் கூப்பிட்ட உடனே வந்துட்டாங்க.. ஜாலி ஆஹ் இருந்துச்சு..
இப்ப நான் அவுட் ஆயிட்டேன்.. என்னோட கண்ணக்கட்டப் போரக்கு முன்னாடி நான் நந்துவை பார்த்தேன்..அவ என்ன வில்லங்கமா பாத்து சிரிச்சா. ஆனா என்னப் பண்ண போறான்னு தெரில..
எதுக்கும் கொஞ்சம் கேர்புல்லா எல்லா ஸ்டெப்பும் எடுத்து வெச்சேன்..பட் நான் நினைச்ச மாறியே என் கால்ல ஆயில் மாறி ஏதோ பட்டுச்சு.. அடுத்த செகண்ட் பேலன்ஸ் மிஸ் ஆகி நான் கீழ விழுந்துட்டேன்..என்னால நகரக் கூட முடில..
கால்ல ரொம்ப வலி..அந்த குட்டிஸ்லாம் என்ன எழுப்ப ட்ரை பண்ணாங்க.. பட் என்னால முடில..
மது அப்பதான் என்ன பாத்தா.. வேகமா ஓடி வந்து என்ன எழுப்பி விட்டா..பட் என்னால நடக்க முடில.. அப்பா தான் என்னோட கால கவனிச்சேன்.. நல்லா இட்லி மாறி புஸ்ன்னு அதுக்குள்ள வீங்கிடுச்சு..ஐயோ வலி வேற ..தாங்க முடியல.. நான் கீழ உக்காந்துட்டேன்..மது டாக்டரு்க்கு கால் பண்ணா..
நந்து இப்ப தான் எங்கிட்ட வந்து "அச்சோ என்னாச்சு சங்கரி" னு பாவமா கேக்கற மாறி கேட்டா.. அதுல 'கரி ' மட்டும் நல்லா அழுத்தி சொன்னா..அவ மூஞ்சிலே நல்லா பஞ்ச் பன்னலாம்னு தோணுச்சு..ஆனா என்னோட வலியால என்னால அத பண்ண முடில..
அந்த டைம்ல யாரோ வந்து என்ன தூக்குனாங்க.. நான் யாருன்னு பாத்தேன்..ஐயோ இவனா.." ஆதி"
இவன் எங்க இங்க வந்தான்.."டேய் இறக்கி விடு டா".. அவனை அடிச்சேன்.. பட் அவன் என்னப் பாத்து மொறச்சானே தவிர இறக்கி விடல..என்ன ஷேஃபா சோபால உக்கார வெச்சான்..
நீ இங்க எதுக்குடா வந்தனு கேட்டேன்..
அவன் என்ன பாத்து ஸ்மைல் பண்ணிட்டு "சங்கு நீதான் என்னை பார்க்க எங்க வீட்டுக்கு வந்திருக்க.. ஓஒ.. எங்க வீட்டில உன்ன ஏத்துக்கணும்னு இங்க வந்து நடிச்சிட்டு இருக்கியான்னு சொன்னான்..
அடப்பாவி இது உங்க வீடா.. ஏற்கனவே எனக்கு கால் வலி .. இதுல தலைவலி வேற வந்திரும் போலயே..
"டேய் ஓவரா பேசாத.. இது உன் வீடுன்னு எனக்கு தெரியவே தெரியாது .ரொம்ப தான் கனவு காணாத"..
அவன் மறுபடியும் என்ன பாத்து சிரிச்சிட்டு
" ஓஒ என்னோட அவ்ளோ பெரிய போட்டோ ஹால்ல மாட்டிற்கு.. அதக்கூட நீ பாக்காம இருந்தியானு கேட்டான்..
என்ன ஒளரான்னு அங்க திரும்பிப் பார்த்தேன்.. அவன் சொன்ன மாறி தான் இருந்துச்சு..பட் இத நான் இங்க பாக்கவே இல்லயே..
என்னை எல்லாரையும் சம்மதிக்க வெச்சிட்டியானு கேட்டான்..கடவுளே இவன் என்னமோ உண்மைய சொல்ற மாறி கேசுவலா சொல்றான்.. ஐயோ மது இப்ப என்னை எவ்ளோ கேவலமா நினைப்பா..
நான் இப்ப தான் மதுவை பாத்தேன்.. அவ என்ன கோவமா பாத்துட்டு இருந்தா.. நந்து ஷாக்கிங்காஹ் பாத்தா..இவங்க நான் என்ன சொன்னாலும் நம்ப போறது இல்ல.. எல்லாத்துக்கும் காரணம் இந்த நாயி ஆதித்யா தான்..
இவன கொல்லாம விடக்கூடாது..நான் எழுந்து இவன அடிக்க ட்ரை பண்ணேன்.. ஆனா என்னால இப்போதைக்கு நகர முடில.. ஆனா அதுக்குன்னு அவனை சும்மா விடவும் முடில.. பக்கத்துல இருந்த பேப்பர் வெயிட்ட எடுத்து தூக்கி வீசுனேன்.. அவன் நகர்ந்துட்டான்..
ச்சே..எனக்கு குறி பாத்துக் கூட அடிக்கத் தெரில..நந்து என் பக்கத்துல வந்தா.. ஐயோ இவ என்ன சொல்லப் போறான்னு தெரிலையே..
நீங்க தான் என்னோட அண்ணியானு சந்தோசமா கேட்டா..
அப்ப இவன் நந்துவோட அண்ணனா.. மது தான் விரும்பறேன்னு சொன்ன அத்தை பையன் 'ஆதி' இவன் தானா..
மதுக்கு நான் என்ன சொல்லி புரிய வைப்பேன்.. மது என்ன பாத்து மொறச்சிட்டு அழுதுகிட்டே ரூம்க்குள்ள போயிட்டா...
"மது ப்ளீஸ் நான் சொல்றத கேளு ப்ளீஸ் டி.. "
ஆனா அவ அத கேக்கல.."அச்சோ அநியாயமா மதுவை அழ வெச்சிட்டேன்.. அவளை சமாதானம் பண்ணக் கூட முடியாத மாறி என் கால்ல வலி வேற..
சரி என்ன ஆனாலும் பரவாலன்னு எழுந்து போலாம்னு நினைச்சேன்.. அதுக்குள்ள டாக்டர் வந்துட்டாங்க..நந்து எனக்கு தேவையான ஹெல்ப்லாம் பண்ணா..
அந்த எருமை, மதுவை சமாதானம் பண்ண அவ ரூம்க்கு போய்ட்டான்..இவன் ஏதோ பிளான் பண்ணி தான் வந்துருக்கான்.. கண்டு பிடிக்கிறேன்..
அந்த போட்டோ திடீருன்னு எப்படி வந்ததுனு..
நான் மதுவை சமாதானம் பண்ண அவ ரூம்க்கு கஷ்டப்பட்டு நடந்து போனேன்.. ஆனா அங்க மது அவன் கிட்ட சிரிச்சு பேசிட்டு இருந்தா.
"டேய் ஆதி அவ மட்டும் ஓகே சொல்லிட்டா எனக்கு ஸ்கூட்டி வாங்கித் தரேன்னு சொல்லிருக்க.. ஏமாத்துன அப்ரோம் நீ பண்ண சீட்டிங் வேலை எல்லாத்தையும் போட்டுக் கொடுத்திடுவேன்னு "மது சொன்னா..
அடப்பாவி ...எரும இவளும் இவனுக்கு உடந்தையா.. ச்சே இவளை நம்பி இவ கூட வந்தேன் பாரு.. என்ன சொல்லணும்..
"மது இத அந்த நந்துகிட்டலாம் சொல்லிடாத.. அவ என்னக் காட்டி கொடுத்திடுவா "..
இத சொன்னது அந்த பிராடு பையன் தான்..
ஆமாடா அவ வந்த உடனே கேட்டா.. எதுக்கு இந்த பொண்ண கூட்டிட்டு வந்தேன்னு.. நான் தான் கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு இவதான் என்னோட அண்ணின்னு பிட்ட போட்டேன்.. பாவம் அத அந்தப் புள்ள நம்பி சங்காிய மொறச்சுக்கிட்டே திரிஞ்சா..ஹஹ்ஹா"
ச்சீ.. இவ சிரிப்பச் சத்தம் காதுல கேக்க முடில.. இவ்ளோ பெரிய பிராடுங்களா நீங்க.. நான் வேற நந்துவை தப்பா நினைச்சிட்டேன்.. சாரி நந்து..இன்னும் இங்க நின்னா என்ன உண்மை வரப்போதுனு தெரிலயே..
."ஆனா உன்மேல எனக்கு கோவம் டி.. நான் வந்த பிறகு தான ஆயில்ல கீழ ஊத்த சொன்னேன்.. நீ முன்னாடியே ஊத்திட்ட .. பாரு அவ கால் எப்படி வீங்கிருக்குனு".. ரொம்ப அக்கறையாதான் சொல்றான்..
"நான் என்ன பண்றது.. ஹிந்தி சீரியல்ல வர மாறி நீ கரெக்டா வருவேன்னு நினைச்சேன்.. நீ சொதப்பிட்ட" இத மது தான் சொன்னா...
இதுக்கு மேல இந்த வீட்டில ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது.. யார்கிட்டயும் சொல்லாம கிளம்ப வேண்டியது தான்.. நான் லூசு மாறி பேசறதுனால லூசுனே நினைச்சுட்டாங்களா.. என்னோட பீலிங்சோட விளையாடறாங்க..
இவன மட்டும் அன்னைக்கு ஒரு நாள் பாக்காம இருந்து இருந்தா நான் என் வாழ்க்கைல அவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சிருக்க மாட்டேன்.. இப்ப மறுபடியும் அதே வலி..சீக்கிரம் போகனும் சங்கரி.. இது உனக்கு ஏத்த இடம் இல்ல..இதுல இந்த கால் வலி வேற.. நடக்கவும் முடியல..
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top