1

ஹாய் , ஐ அம் சங்கரி..(நேம் ஓல்ட் ஆஹ் இருக்கா..) தப்பு தப்பு. சாமி கண்ண குத்திடும்..கன்னத்துல போட்டுக்கோங்க..ம்ம்.. குட் கைஸ்..

நான் சங்கரி.. என்ன பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே போலாம்.. அய்யாட.. ஓவர் அளப்பரிய இருக்கே.. ஓகே.. நா கொஞ்சம் இப்படித்தான்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..

நா  எதுல விட்டேன்.. ஹான்.. என்ன பத்தி சொல்லனும்னா .. படிப்புல ஸ்போர்ட்ஸ்ல எல்லாத்துலயும் நா தான் பர்ஸ்ட்.இஇஇஇ.. சும்மா சொன்னேன்.. நா எல்லாத்துலயும் ஆவெரேஜ் தான்.. பிட் அடிச்சாவது பாஸ் ஆயிடுவேன்..

நா என்ன படிச்சேன்னா.. பிஈ கம்யூட்டர் சயின்ஸ்.. ..எனக்கு நிறைய பிரண்ட்ஸ் ... என் லைப்ல சோகம்னா என்னன்னே தெரியாது.. எப்பவும் என் பிரண்ட்ஸ் ஓட ஜாலியா அரட்டை அடிச்சிட்டே இருப்பேன்..இதெல்லாம் நம்புகிற மாறியா இருக்கு (இல்லல
.. ஆமா.. என்னோட குட்டி குட்டி சோகத்துக்கான ரீஷன் என்னோட பேரண்ட்ஸ்..அவுங்கனால  தான் நான் ஆசிரமத்தில்  இருக்கேன்.. அதுனால இப்ப என்ன.. நான் ஹாப்பியா தான் இருக்கேன்....

இங்க இருக்கிறவுங்களுக்கு எப்பவும் நான்  தான் ஸ்பெசல்..2 வயசு நிம்மில இருந்து.. 80 வயசு பீட்டர் தாத்தா வரைக்கும்..

நா பக்கத்துல இருக்கிற ஒரு மொக்க கம்பனிக்கு தான் 9 மன்ந்த்  ஆஹ் என் எனர்ஜிய  வேஸ்ட் பண்றேன்.. அதாங்க ..அங்க ஒர்க் பண்றேன்..இது்தாங்க என்னோட கரண்ட் ஸ்டேட்டஸ்..

ஓகே.. மேட்டர் என்னனா.. எங்க கம்பெனில புதுசா ஒருத்தங்க ஜாயின்ட் பண்ணி இருக்காங்க.. அவுங்க ரொம்ப ஸ்டைல் ஆஹ் இருக்காங்க.. எல்லார்டயும் நல்ல பேசறாங்க.. ஓட்டவாய்னு பேரு கூட எடுத்துட்டாங்க....பட் எனக்கு பொறாமையா இருக்கு.. என்ன மாறியே ஒரு கேரக்டர் ..ச்சா எனக்கு பிடிக்கல.. இல்லல.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அவ கொண்டு வர மட்டன் பிரியாணிக்கு நா ஃபேன் ஆயிட்டேன்..

அவளானு   டவுட் ஆஹ் கேக்கறீங்களா.. ஆமாம் அவளோட நேம் மது.. அப்டியே என்ன மாறியே நடந்துக்கிறா..கொஞ்ச நாளிலே நாங்க பெஸ்ட் பிரண்ட்ஸ் ஆயிட்டோம்..இப்பலாம் அவ என்ன பேசவிடறதே இல்ல.. அவளே தான் பேசறா. இட்ஸ் ஓகே.. இப்ப நான் அட்ஜஸ்ட் பண்ணிக்க ஆரம்பிச்சிட்டேன்.. அவ அவளோட பேமிலிய ரொம்ப மிஸ் பண்றா..

எங்க அப்பா இப்டி பாத்துக்குவாங்க.. அண்ணா என்கோட அப்டி சண்டைபோடுவாங்க.. அம்மா என்ன திட்டிட்டே இருப்பாங்க.. தாத்தா எனக்கு நிறைய ஸ்டோரி சொல்லுவாங்கனு ஏதாவது சொல்லிட்டே இருப்பா .இப்ப தான் தெரிஞ்சது.. என் லைப்ல இத்தனை நாள் எத மிஸ் பண்ணி இருக்கேனு.. எனக்கும் அந்த மாறி இருந்திருக்கலாம்னு ஆச வந்துச்சு..

இருந்தாலும் என்ன அவ ரொம்பத்தான் கடுப்பேத்தறா.. நா பீல் பண்ணுவேன்னு அவளுக்கு புரியவே இல்லையா..இருந்தாலும் அவ சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தானே.. பட் என்னைக்காவது ஒரு நாள் இனிமே என்ன வெறுப்பேத்துவியான்னு நங்கு நங்குன்னு வேகமா கொட்டலாம்னு தோணும்..😏😏பட் சங்குமா குட் girl  ஆச்சே.. அப்டிலாம் பண்ண மாட்டா..

அப்ரோம் என்ன பத்தி சொல்லனும்னா நா பார்க்க அப்டி இப்டினெலாம் ஓவரா பொய்  பேச மாட்டேன்.. ஜஸ்ட் நஷ்ரியா மாறி இருப்பேன்..சிரிக்காம நம்பிருங்க.. 😂😂😂


நான் இப்ப என்ன பண்ணிட்டு இருக்கேனா.. ஊருக்கு போக டிரஸ் பேக் பண்ணிட்டு இருக்கேன்.. ஆமா மது ஊருக்கு தான்.. அங்க திருவிழாவாம்.. நல்ல என்ஜோய் பண்ண போறேன்..

நாங்க ட்ரைன்ல போனோம்.. அவுங்க ஊர் தேனீ.. செமயா இருந்துச்சு.. எதுக்கு அவ அவ்ளோ சீன் போட்டானு இப்ப தான் புரியுது..அவுங்க வீட்ல நிறைய ரிலேடிவ்ஸ் இருக்காங்க.. பர்ஸ்ட் இவங்க கிட்ட நல்ல பேர் வாங்கி அவளை விட நான் தான் பெஸ்ட்னு காமிக்கிறேன்.. ஹ்ம்ம்..' சங்கரி மிஷன்' இஸ் ஸ்டார்ட்.. பாக்கலாம்.. என் டீம்ல யார் யார் சேர போறாங்கன்னு...யார்ட்டயும் சண்டை போடாம போனா சரி தான்

..மதுவோட அப்பா அம்மா அண்ட் அண்ணா எல்லாரும் என்ன சொந்த பொண்ணு மாறி பாத்துக்கிட்டாங்க.. மது சொன்ன மாறி ராஜிவ் அண்ணாவும் ரொம்ப நைஸ் கேரக்டர் தான் .அண்ணா அவகிட்ட சண்டை போட்டாலும் எவ்ளோ கேரிங் ஆஹ் பாத்துக்கறாங்க.. என்னையும் தான்..

ராஜிவ் அண்ணா மது மாறி இல்ல.. என்ன ரொம்பவெல்லாம் வெறுப்பேத்தல.
இவளோட தாத்தா பாட்டி சித்தி சித்தப்பா அத்தை மாமா நண்டு சிண்டு எல்லாரையும் விடாம பிரண்ட் பிடிச்சிட்டேன்..

எஸ்ஸப்ட் நந்தினி.. மதுவோட கசின்.. அவ என்னமோ நான் தப்பே பண்ணிட்டு இருக்கிற மாறி எப்பவும் மொறச்சிட்டே இருக்கா.. பட் இது கூட நல்லா தான்  இருக்கு.. அவ என்ன எப்படி இரிடேட் பன்னலாம்னு யோசிச்சுகிட்டே இருக்கா..மே பி இதுக்கு முன்னாடி இவளை பார்த்ததே இல்ல.. ஆனா எதோ ஒன்னு அவளுக்கும் எனக்கும் நடுவுல இருக்குனு தெரியுது.. ஆனா என்னனு தெரில.. பர்ஸ்ட் அத கண்டு பிடிக்கணும்..ஆனா நான் பார்த்து தான் ஸ்டெப் எடுத்து வைக்கணும்..

இல்லைனா என்னோட மது குட்டிக்கு தான் கஷ்டமா போய்டும்..இன்னும் 4 டேஸ் தான அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்....
.
.
.

என்னோட லைப்ல இப்டிலாம் நடக்கும்னு கனவுல கூட நினைக்கல.. ஆனா நடந்திருச்சு.. ஆனா இதுக்கு நான் எப்படி ரியாக்ட் பண்ணட்டும்னு தெரியவே இல்ல..

மது என்ன கோபமா பார்க்கிறா.. நந்து ஷாக்கிங் ஆஹ் பாக்கிறா..ஆனா இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல..ஆனா அத சொன்னா நம்பதான் போறீங்களா என்ன.... மொதல்ல இவன சொல்லணும்..ஆதித்யா ஆஆ உன்ன கொல்லாம விட மாட்டேன்..

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top