47 தேன்நிலவு

47 தேன்நிலவு

அர்னவ்வும் குஷியும் தேனிலவிற்கு செல்ல தயார். தங்கள் பெட்டி படுக்கையுடன் அவர்கள் தரைதளம் வந்தார்கள். அவர்களை வழி அனுப்புவதற்காக விமான நிலையம் செல்ல, அரவிந்தன், ரத்னா, நந்தா மற்றும் லாவண்யா ஆகியோர் தயாராகி இருந்தார்கள்.

"மா, இதுக்காக நீங்க எல்லாரும் எங்க கூட வரணும்னு அவசியமா?" என்றான் அர்னவ்.

"பின்ன? கல்யாணம் ஆகுமா ஆகாதான்னு தெரியாம இருந்த என் பிள்ளை, இன்னைக்கு ஹனிமூனுக்கு போறானே... அவனை வழி அனுப்ப வந்த சந்தர்ப்பத்தை எப்படி நான் மிஸ் பண்றது?"

"அவ சொல்றது சரி தான். நீ எங்களை தடுக்க முடியாது" என்றார் அரவிந்தன்.

"ஆமாம், டைமை வேஸ்ட் பண்ணாம கிளம்பு" என்றான் நந்தா.

"நீங்க எப்போ மணாலிக்கு போறீங்க?" என்றாள் குஷி.

"நாளனைக்கு கிளம்பறோம்" என்றான் நந்தா.

"அங்க எடுக்கிற போட்டோஸ் எல்லாம் எனக்கு அனுப்பு" என்றாள் குஷி.

"நீயும் உங்க போட்டோசை எங்களுக்கு அனுப்ப மறக்காதே" என்றாள் லாவன்யா.

"நிச்சயமா அனுப்புறேன்"

அவர்கள் விமான நிலையம் சென்றடைந்தார்கள்.

"அங்க போனதுக்கு அப்புறம் எங்க ஞாபகம் உனக்கு வந்தா, எங்களுக்கு ஃபோன் பண்ணு, என்றார் ரத்னா.

"மா, போதும் நிறுத்துறீங்களா?" என்றான் அர்னவ்.

தங்கள் பெட்டியை இழுத்தவாறு அவன் நடக்கத் தொடங்கினான். அவனது மற்றொரு கரத்தை, குஷியின் கை வளைத்து பிடித்திருந்தது. உள்ளே நுழையும் முன் அவர்களை பார்த்து கையசைத்து விட்டு அவர்கள் சென்றார்கள்.

விமானம் டேக் ஆஃப் ஆவதை பார்க்கும் ஆவலில், வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த குஷியின் பக்கத்தில் அமர்ந்தான் அர்னவ். விமானம் மேலெழுந்த பிறகு, வானத்தில் இருக்கிறோம் என்ற உணர்வே ஏற்படாதே...! விமானம் மேலே எழும்பும் போதும், தரையிறங்கும் போதும் மட்டும் தான் நாம் பறந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே ஏற்படும். விமானம் மேலே எழும்பிய போது, அவன் கைகளுடன் தன் கைகளை பிணைத்துக் கொண்டாள் குஷி. பிறகு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவனும் தன் தலையை அவள் தலை மீது சாய்த்து கொண்டான்

"அல்லவ்..."

"ம்ம்ம்...?"

"நம்ம பறந்துகிட்டு இருக்கோம்"

"ஆமாம்"

"நம்ம வானத்துல இருக்கோம்..."

"மேகங்களுக்கு நடுவுல..."

"இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு..."

"ம்ம்ம்"

"எவ்வளவு நாள் நம்ம அந்தமான்ல இருக்க போறோம்?"

"உனக்கு எவ்வளவு நாள் இருக்க தோணுதோ அவ்வளவு நாள்"

"நெஜமாவா?"

"ம்ம்ம்"

"எனக்கு திரும்ப வர்ற விருப்பமே இல்லன்னா?"

"எங்க கம்பெனியோட ப்ரான்சை அந்தமான்ல ஆரம்பிக்க சொல்லி நான் ஒரு ப்ரொபோசல் அனுப்ப வேண்டி இருக்கும்" என்று சிரித்தான்.

"இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா!"

"எனக்கும் இந்த இடம் ரொம்ப பிடிக்கும்"

"நான் இந்தியாவில இருக்கிற எல்லா இடத்தையும் பாத்துட்டேன். ஆனா அந்தமான் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அது ஏன்னு தான் எனக்கும் தெரியல"

"ஏன்னா, நீ உன் வருங்கால புருஷனோட அங்க இருந்த..."

"அப்போ நான் ரொம்ப குட்டி பொண்ணு. உன்னை மாதிரி கிடையாது. அப்போ எனக்கு காதல்னா என்னன்னு கூட தெரியாது. ஆனா உனக்கு ஓரளவுக்கு விவரம் தெரியும். அப்போ நீ என்னை பத்தி என்ன நெனச்ச?"

"அப்போ நீ ரொம்ப குட்டி பொண்ணு. அதனால உனக்காக எந்த ஃபீலிங்ஸ்ஸும் எனக்கு இல்ல. நீ அந்தமானை விட்டு போன போது நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன். நீ சின்ன பொண்ணா இருந்தாலும் கூட, நான் உன்னை பத்தி தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்"

"அது தான் நமக்கு இடையில இருந்த வேவ்ஸ்ன்னு நினைக்கிறேன்"

"ஐ அக்ரி..."

போர்ட் பிளேயர்

அர்னவ்வும் குஷியும் விமானத்தை விட்டு இறங்கினார்கள். அந்த தீவின் அழகில் பேச்சை இழந்தாள் குஷி. யாரோ ஒருவர் கொஞ்சம் வழி விடுங்க என்று கூறிய போது தான் அவளுக்கு சுயநினைவே வந்தது. அங்கிருந்து நகர்ந்து சற்று தூரமாய் வந்து நின்றாள்.

"எல்லாமே மாறிப் போயிருக்கு... அந்தமான் ரொம்பவே டெவலப் ஆயிடுச்சு"

"நம்ம அந்தமானை விட்டு கிளம்பி பத்து வருஷம் ஆச்சே..."

"ஆனா அந்தமானோட அழகு மட்டும் எப்பவும் மாறாது..."

"என்னோட டின்டின் மாதிரி..."

"என் அல்லவ் மாதிரியும் தான்..."

"வா போகலாம்" என்றான் சிரித்தபடி.

ஒரு டாக்ஸியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு, ஹோட்டல் ப்ளூ மூனுக்கு போகச் சொல்லி கூறினான் அர்னவ். அவர்கள் கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் பயணம் மேற்கொண்டார்கள். அவர்கள் பல ஏ கிளாஸ் ஹோட்டல்களை கடந்து செல்வதை கண்டாள் குஷி. போர்ட் பிளேயர் கடலால் சூழப்பட்டு இருந்தாலும், அது ஒரு மலைப்பிரதேசம். தங்கள் டாக்ஸி ஒரு மலை மீது ஏறுவதை கண்ட அவள்,

"ஏர்போர்ட் பக்கத்திலேயே நிறைய ஹோட்டல்ஸ் இருந்தது... அதை எல்லாம் விட்டுட்டு, எதுக்காக இவ்வளவு தூரம் வந்து, இந்த ஹோட்டலை புக் பண்ணி இருக்க?"

"அது ஏன்னு நீயே தெரிஞ்சுக்குவ"

அவர்கள் ஹோட்டல் ப்ளூ மூனில் செக்-இன் செய்தார்கள். அந்த இடம் அவளுக்கு வெகுவாய் பிடித்திருந்தது. பார்க்க எளிமையாய், அதே நேரத்தில், மிகவும் ரசனையோடு இருந்தது அந்த இடம்.

"இங்க அப்படி என்ன ஸ்பெஷல்?"

"அந்த ஸ்கிரீனை விலக்கி விட்டா உனக்கே தெரியும்"

அந்த அறையில் இருந்த மிகப்பெரிய சாளரத்தை நோக்கி ஓடிய அவள், அதன் திறைச் சீலையை விலக்க, தன் கண் முன்னால் விரிந்த காட்சியை கண்டு பிரமித்து நின்றாள். தன் கைகளை கன்னங்களில் வைத்துக் கொண்டு வாயை பிளந்தாள். வங்காள விரிகுடாவால் சூழப்பட்டிருந்த போர்ட் பிளேயரின் பெரும்பாலான பகுதி அவர்களின் கண்ணுக்குத் தெரிந்தது.

"வாவ்! எவ்வளவு அழகு...!"

சந்தோஷத்தில் துள்ளி குதித்து அவனை அணைத்துக் கொண்டாள்.

"இதுக்காகத்தான் இந்த ஹோட்டலை புக் பண்ணியா?"

அவன் ஆம் என்று தலையசைத்தான்.

"இவ்வளவு தூரம் வந்தது உண்மையாவே ஒர்த் தான்"

"போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வா. நான் ஃபுட் ஆர்டர் பண்றேன்"

"இப்போ எனக்கு எதுவும் சாப்பிட தோணல"

"அப்படி சொன்னா எப்படி? இப்போ உனக்கு நிறைய எனர்ஜி தேவை"

அவனது சட்டை பொத்தானை உருட்டியவாறு,

"என்ன செய்யப் போற?" என்றாள்.

"பேச்சே கிடையாது... வீச்சு மட்டும் தான்" என்றான்.

தனது பையைத் திறந்த அவள் திடுக்கிட்டாள். ஏன் என்றால் அவள் அதில் எடுத்து வைத்திருந்த துணி ஒன்று கூட அதில் இல்லை. அதில் இருந்ததெல்லாம், ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், ஆஃப் பேண்டும் தான்.

"என்ன இது? என்னோட டிரஸ் எல்லாம் எங்க?"

"இதெல்லாம் உன்னோட டிரஸ் தான்... உன்னோட ஸ்வீட் அல்லவ் தான் எடுத்து வச்சான்..."

"என்னது? நான் இதை போட்டுக்கிட்டா இங்க சுத்த போறேன்?"

"யார் சுத்த போறா? நம்ம இங்க சுத்தி பார்க்கவா வந்திருக்கோம்?"

"அப்போ நீ என்னை எங்கேயும் கூட்டிகிட்டு போக மாட்டியா?"

"அந்தமானோட ரொம்ப அழகான காட்சி உன் கண்ணு முன்னாடியே இருக்கு. நீ அந்தமான்ல எங்க போனாலும் கடலும் மலையும் தான் இருக்கும். அது இங்கேயே இருக்கும் போது, வெளியில போய் ஏன் சுத்தி பாக்கணும்?"

"இது சீட்டிங்"

"ரூமை விட்டு வெளிய வராம, பத்து நாள் உள்ள இருக்கணும் அப்படிங்கிறத நீ மறந்துட்டியா?"

"நீ சீரியஸா தான் சொல்றியா?"

"ஆமாம். போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வா"

அவள் நகராமல் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை தன் கைகளில் தூக்கிக் கொண்ட அவன்,

"வா, நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்" என்றான்.

"வேண்டாம் என்னை கீழே விடு"

"நான் கொடுத்த சான்சை நீ மிஸ் பண்ணிட்ட. இது என்னோட சான்ஸ். நான் சொல்றதை நீ கேட்டு தான் ஆகணும்"

"மரியாதையா என்ன கீழே விடு. நீ சொல்றத நான் கேட்க மாட்டேன். உன்னை நம்பவும் மாட்டேன். நீ ஒரு ராஸ்கல். நீ என்ன செய்வன்னு எனக்கு தெரியும்"

"நான் உனக்கு ரெஸ்ட் எடுக்க கொஞ்சம் டைம் கொடுத்தேன். ஆனா, நீ அதை யூஸ் பண்ணிக்கல. அப்புறம் நான் ஏன் டைம் வேஸ்ட் பண்ணணும்? உடனே ஆரம்பிச்சிட வேண்டியது தானே...!"

அவளுக்கு மூச்சு திணறியது. தலையை இடவலமாய் இப்படியும் அப்படியும் அசைத்தாள்,  அவன் ஷவரை திறந்து விட்டு அவளை நனைய செய்ததால்...!

"என் டிரஸ் எல்லாம் நனைஞ்சுடுச்சு" என்று கூப்பிடு போட்டாள் அவள்.

"ஆமாம், நான் வேணா உனக்கு டிரஸ் சேஞ்ச் பண்ண ஹெல்ப் பண்ணட்டுமா?"

"கையை வச்சா உன்னை கொன்னுடுவேன்"

"கொன்னுடுவியா? டிரஸ்ல கையை வைக்காம எப்படி ஹனிமூனை என்ஜாய் பண்றது?"

"வெட்கம் கெட்டவனே..."

"வெட்கமா? ஹனிமூன்ல அது தடை செய்யப்பட்ட வார்த்தை..."

அவள் மேற்கொண்டு எதுவும் கூறுவதற்கு முன், அவளது வார்த்தைகள் அவள் தொண்டையிலேயே தடை செய்யப்பட்டது, அவளது இதழ்கள் அவன் கட்டுப்பாட்டுக்கு சென்றதால்.

வெளிப்பார்வைக்கு அவர்களது உடல்கள் தண்ணீரில் நனைந்து ஈரமாய் இருந்தது. ஆனால் அவர்களது உடலின் உள் நிலவரமும் அப்படித்தான் என்று கூறுவதற்கு இல்லை. பெயர் கூற முடியாத ஒரு நெருப்பில் அவர்கள் ஏற்கனவே எரியத் துவங்கி விட்டிருந்தார்கள்.

சில நிமிடங்களுக்கு முன்பு வரை அரற்றிக் கொண்டிருந்த அந்த பெண், தன் உதடுகளுக்கு விடுதலை வழங்கப்பட்டு விட்ட பிறகும் பேச்சிழந்து தான் காணப்பட்டாள். குறும்பே வடிவாய் காணப்பட்ட அவனது முகத்திலும் இப்போது அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவர்களை நனைத்துக் கொண்டிருந்த ஷவரை அணைத்துவிட்டு, அவளை தன் கையில் ஏந்திய படி கட்டிலை நோக்கி நடந்தான்.

அவர்கள் உடலில் இருந்த ஈரம் மற்றொருவரின் உடல் வெப்பத்தில் ஆவியாய் மாறியது. உச்சம் தொட்ட பின் அவள் நெஞ்சில் சரிந்தான். அவனை தன் கரங்களில் சுற்றி வளைத்துக் கொண்டாள் அவள்.

"தூங்கலாம்"என்றான் அர்னவ்.

"வேண்டாம்"

"ஏன் எனக்கு பசிக்குது"

"ஏதாவது சாப்பிட ஆர்டர் பண்ணு. இல்லன்னா என் பசி என்னை தின்னுடும்"

"உனக்கு சாப்பிடற மூடே இல்லன்னு சொன்ன?" என்று சிரித்தான்.

"அது தான் சீன் மாறிடுச்சே... நீ என் எனர்ஜியை உறிஞ்சுகிட்ட"

"அதுக்கு தான் நான் முன்னாடியே சொன்னேன்..."

தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு அவன் குஷியை பார்க்க, அவள் ஏற்கனவே உறங்கி விட்டிருந்தாள். உணவு வந்த பிறகு அவளை எழுப்பி வலுக்கட்டாயமாய் சாப்பிட வைக்க நினைத்தான். ஆனால் அவனால் அது இயலவில்லை. அவனும் அவளது போர்வைக்குள் புகுந்து கொண்டு அவளை அணைத்துக் கொண்டு, சாப்பிடமாலேயே உறங்கிப் போனான்.

தொடரும்...





Bạn đang đọc truyện trên: AzTruyen.Top