38 சுவரில் அடித்த பந்து

38 சுவரில் அடித்த பந்து

அர்னவ் கோவைக்கு செல்லப் போகிறான் என்ற விஷயம் குஷியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"நீ எப்போ கிளம்பணும்?" என்றார் ரத்னா.

"நாளைக்கு சாயங்காலம்... ஒரு மாசம் கழிச்சு தான் திரும்ப வருவேன்" என்றான் குஷியை பார்த்தவாறு.

ஒன்றும் கூறாமல் தன் அறையை நோக்கி சென்றாள் குஷி. லாவண்யாவும் அங்கிருந்து சென்றாள். குஷிக்காக வருத்தப்பட்டார் ரத்னா. அவள் வருத்தமாக தான் இருப்பாள் என்று அவருக்கு தெரியும்.

"எதுக்காக இந்த டெபுடேஷனுக்கு நீ ஒத்துக்கிட்ட? வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே? உன்னோட கம்பெனியில உன்னை விட்டா வேற ஆளே இல்லையா?" என்றார் ரத்னா.

அமைதியாய் நின்றான் அர்னவ்.

"குஷியை பத்தி யோசிச்சி பார்த்தியா? அவ எப்படி நிம்மதியா படிப்பா?"

"அவ படிச்சு தான் ஆகணும்"

"இல்ல அரு, நீ போறதுல எனக்கு விருப்பம் இல்ல.  நான் போகலன்னு சொல்லிடு"

"மா, தயவுசெய்து புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க"

"நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குற?"

"நான் நல்லா புரிஞ்சுகிட்டேன். அதனால தான் போறேன்"

"நீ என்ன சொல்ற?"

"நான் இங்க இருந்தா, அவ ஒழுங்கா படிக்க மாட்டா மா"

"அப்படின்னா?"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நான் எப்படி எல்லாம் அவளை டிஸ்டர்ப் பண்றேன்னு அவ சொன்னாளோ, அதையெல்லாம் தான் அவ செஞ்சுகிட்டு இருக்கா. எங்க சின்ன வயசு கதை எல்லாம் பேசி என்னோட டைம் ஸ்பென்ட் பண்ணணும்னு நினைக்கிறா... எப்படி அவ இவ்வளவு கேர்லெஸ்ஸா இருக்கான்னு எனக்கு புரியல"

ரத்னாவுக்கு விஷயம் புரிந்து போனது.

"அப்படின்னா, நீ வேணும்முன்னே  கோயம்புத்தூர் போறியா?"

"ஆமாம். அப்போ தான் அவ ஒழுங்கா படிப்பா"

"அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டா"

"பரீட்சையில நல்ல மார்க் எடுக்க அது உதவாது, மா"

"நான் அவகிட்ட பேசுறேன். அவ புரிஞ்சிக்குவா"

"அம்மா, அவளைப் பத்தி உங்களுக்கு தெரியாதா?"

"நீ இல்லாம அவ ரொம்ப அப்செட்டா இருப்பா..."

"எனக்கு தெரியும் மா. ஆனா, எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. நீங்களும், கரிமா ஆன்டியும், லாவண்யாவும் சேர்ந்து அவளை அப்செட் ஆக விடாம பாத்துகுவீங்க. ஒரு மாசம் தானே, மா?"

"சொல்றது ரொம்ப ஈசி. எனக்கு என்னவோ இது நல்ல ஐடியான்னு தோணல. இதுக்காக நீ பின்னாடி வருத்தப்படாம இருந்தா சரி..."

"அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. நான் வேணும்னு தான் கோயம்புத்தூர் போறேன்னு அவளுக்கு தெரிய வேண்டாம். அவளுக்கு சுள்ளுன்னு கோபம் வரும். எதையும் யோசிக்க மாட்டா. அது தான் அவ பிரச்சனையே..."

"நீ செய்யறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. போய் அவளை சமாதானப்படுத்து"

சரி என்று தலையசைத்து விட்டு தன் அறைக்கு சென்றான். அவனது முகம் களை இழந்து போனது, குஷி அழுது கொண்டிருந்ததை பார்த்து. மெல்ல அவள் தோளை தொட்டு,

"குஷி..." என்றான்.

அவனை கட்டிக் கொண்டு உணர்ச்சி பொங்க தேம்பினாள்.

"ஹேய்... ப்ளீஸ், அழாத..." அவள் கண்களை துடைத்து விட்டான்

"போய் தான் ஆகணுமா?"

ஆமாம் என்று தலையசைத்தான்.

"மாட்டேன்னு சொல்ல முடியாதா?"

முடியாது என்று தலையசைத்தான்.

"நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்?"

"ஒரு மாசம் தானே?"

"ஒரு மாசம் உனக்கு பெருசா தெரியலையா? நான் இல்லாம நீ சந்தோஷமா இருப்பியா?"

"இது தவிர்க்க முடியாதது. என்னால முடியாதுன்னு சொல்ல முடியாது"

"நடுவுல உன்னால வந்துட்டு போக முடியாதா?"

"இப்போதைக்கு என்னால எதுவும் சொல்ல முடியாது டா"

"ஒரு தடவையாவது வந்துட்டு போக ட்ரை பண்ணேன்"

"நிச்சயமா ட்ரை பண்றேன். போய் உன் முகத்தை கழுவிக்கோ. லாவண்யா உன்னை கூப்பிடுவா."

"போ, நான் இன்னும் ரெண்டு நாளைக்கு படிக்க மாட்டேன். உன் கூட தான் இருப்பேன்"

"நான் என்ன வருஷகணக்காவா உன்னை விட்டுட்டு போறேன்?"

"நீ வருஷகணக்கா போறதா இருந்தா, நான் உன்னை போக விடவே மாட்டேன்"

"நான் மட்டும் உன்னை விட்டுட்டு போயிடுவேனா?"

மாட்டாய் என்பது போல் தலையசைத்தாள்.

"என்னோட திங்க்சை எல்லாம் பேக் பண்ணனும்"

"நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்"

"நான் பண்ணிக்கிறேன். நீ உன்னோட டைமை வேஸ்ட் பண்ணாத"

"நான் தான் நீ இல்லாம ஒரு மாசத்தை வேஸ்ட் பண்ண போறேனே..."

"அந்த டைமை ஒழுங்கா, யூஸ்ஃபுல்லா ஸ்பென்ட் பண்ணு"

"ம்ம்ம்"

அவன் கூறுவதை கேட்காமல் அவனது பொருட்களை பேக் செய்ய தொடங்கினாள். அவனும் ஒன்றும் சொல்லவில்லை. ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும் அவளை, மேலும் வருத்தப்படுத்த அவன் விரும்பவில்லை. அவளது பேக்கிங் திறமையை பார்த்து அவன் வியந்தான்.

"வாவ்... சூப்பர்..."

"இது என்ன பெரிய விஷயம்? நான் தான் பல வருஷமா பேக்கிங் பண்ணிக்கிட்டு இருக்கேனே... உண்மைய சொல்லப்போனா, எனக்கு பேக்கிங் பண்றது ரொம்ப பிடிக்கும்"

"தட்ஸ் நைஸ்"

அரை மணி நேரத்தில் அவள் பேக்கிங்கை முடித்து விட்டாள்.

"முடிஞ்சிடுச்சு. அடுத்தது என்ன?"

"ஒன்னும் இல்ல. நீ லாவண்யா கூட போய் படி"

"வாயை மூடு. இன்னொரு தடவை படிக்கிறத பத்தி பேசினா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. என்னை டார்ச்சர் பண்ணாத."

"சரி போகாத. ஆனா நான் போக போறேன்"

"எங்க?"

"என் மாமியார் வீட்டுக்கு. நான் ஊருக்கு போறதை அவங்க கிட்ட சொல்ல வேண்டாமா?"

"ஆமாம். சரி வா போகலாம். ஆனா அவங்ககிட்ட என்னை பார்த்துக்க சொல்லி சொல்லாத. நான் ஒன்னும் குழந்தை இல்ல"

"ஆனா, அவங்க உன்னோட பேரன்ட்ஸ்...  ஞாபகம் இருக்கு இல்ல?"

"எப்படி கவனமா இருக்கணும்னு எனக்கு தெரியும்"

"அதுக்காக நான் ஃப்ரீயா இருக்க முடியாது. என் பொண்டாட்டியை விட்டுட்டு போகும்போது நான் எப்படி நிம்மதியா இருக்கிறது?"

"என் மேல உனக்கு ரொம்ப அக்கறை இருக்க மாதிரி பேச வேண்டாம்"

"எனக்கு அக்கறை இருக்கு. அதுல என்ன சந்தேகம்?"

"நீ உண்மையிலேயே என்னை லவ் பண்றியான்னே எனக்கு சந்தேகமா இருக்கு"

"நான் உயிரோட இருக்கேன் தானே?" என்று அவன் கேட்க அவள் திகைத்தாள்.

"உன்னை லவ் பண்ணலன்னா, நான் உயிரோடவே இல்லன்னு அர்த்தம்"

"ஆம்பளைங்க ரொம்ப விவரமானவங்க. பொம்பளைங்களை எப்படி சமாளிக்கணும்னு அவங்களுக்கு நல்லா தெரியும்"

"நீ ஏன் அப்படி எல்லாம் நினைக்கிற? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லயா?"

"உன்னை நான் எப்படி நம்புறது? நீ என் மேல இன்ட்ரஸ்ட் காட்டி நான் பார்க்கவே இல்லையே..."

"எல்லாத்தையும் வெளியில காட்டணும்னு அவசியம் இருக்கா? என் கண்ணை பார்த்து உன்னால புரிஞ்சுக்க முடியாதா?"

"நீதான் உன்னோட கண்ணை என்கிட்ட இருந்து மறைச்சிகிட்டே இருக்கியே. எனக்கு எதிர்பக்கம் திரும்பி நின்னு, நான் உன் கண்ணை பார்க்க முடியாம என்னை தடுத்துடுறியே..."

"அப்போ என் மனசுல ஏதோ இருக்கு அப்படிங்கிறது உண்மை தானே?"

"உன் மனசுல என்ன இருக்கு?"

"நீதான்"

"அப்படியா? ஆனா பாத்தா அப்படி தெரியலையே..."

"ஏன் தெரியல?"

"உன்னோட பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லையே" தலை குனிந்தபடி கூறினாள் அவள்.

அவள் முகத்தை உயர்த்தி,

"நான் கோயம்புத்தூர் போயிட்டு வந்ததுக்கு பிறகு, என்னோட காதல் என்னன்னு நீ பாப்ப"

"கோயம்புத்தூர் போயிட்டு வந்ததற்கு பிறகா? ஏன் அப்படி?"

"உன் கேள்விக்கு இப்போ என்கிட்ட பதில் இல்ல"

"பதில் இல்லயா? இல்ல, நீ பதில் சொல்ல விரும்பலையா?"

"கொஞ்ச நாளைக்கு, நல்ல ஸ்டூடண்டா படிச்சுக்கிட்டு இரு. அதுக்கப்புறம் உன் புருஷனுக்கும் உணர்ச்சிகள் இருக்குன்னு நீயே புரிஞ்சுக்குவ"

"எல்லாம் வெற்று வார்த்தை..."

"வார்த்தையை விடாத... என்னோட செயலால உன்னை நடுங்க வைக்கிற நாட்கள் காத்துக்கிட்டு இருக்கு..."

உண்மையிலேயே முதன்முறையாக அவளுக்குள் நடுக்கம் பிறந்தது.

"வா போகலாம்..."

.......

அர்னவ்வும் குஷியும் தங்கள் வீட்டுக்கு வருவதை பார்த்த கரிமா மகிழ்ச்சி அடைந்தார். குஷியை விட்டுவிட்டு, அவனை மட்டும் வரவேற்றார். அவள் தான் தன் அம்மாவால் விருந்தினர் போல் உபசரிக்க படுவதை விரும்புவதில்லையே.

அதே நேரம், கடற்படை சீருடையில் கம்பீரமாய் உள்ளே நுழைந்தார் ஷஷி. வேண்டுமென்றே குஷியை விட்டுவிட்டு அர்னவ்க்கு மட்டும் காபி கொடுத்தார் கரிமா.

"எனக்கு காபி எங்க?"

"உனக்கு வேணும்னா நீயே போய் போட்டுக்கோ. இல்லன்னா, போய் உங்க ஆன்ட்டிகிட்ட கேளு. அவ உனக்கு போட்டு கொடுப்பா..."

"அவங்க நிச்சயமா போட்டுக் கொடுப்பாங்க. ஏன்னா, அவங்க ஒன்னும் உங்களை மாதிரி இல்ல"

"உன்னோட திமிருக்கு ரத்னா தான் காரணம். மாமியாரா லட்சணமா உங்க காலை உடைக்காம, உங்க கூட சேர்ந்து ஆடிகிட்டு இருக்கா"

"நல்லவேளை எனக்கு அண்ணன் யாரும் இல்ல. இருந்திருந்தா, உங்க கொடுமையை சகிக்க முடியாம, அவன் பொண்டாட்டியை கூட்டிகிட்டு ஓடிப் போயிருப்பான்"

அர்னவ்வும் ஷஷியும் அவர்கள் பேசுவதை மாறி மாறி பார்த்த வண்ணம் இருந்தார்கள்.

"இவங்க ரெண்டு பேரும் உண்மையிலேயே அம்மா பொண்ணு தானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு" என்று சிரித்தார் ஷஷி.

"இப்போ எனக்கு காபி குடுக்க போறீங்களா இல்லையா?"

"நீ தானே சொன்ன, நீ ஒன்னும் கெஸ்ட் இல்லைன்னு... அப்புறம் நீயே போய் போட்டுக்க வேண்டியது தானே?"

"குஷி, நீ இரு. உனக்கு நான் காபி போட்டு தரேன்" என்றார் ஷஷி.

இப்போ என்ன சொல்றீங்க? என்பது போல் கர்மாவை ஒரு தெனாவெட்டு பார்வை பார்த்தாள் குஷி.

"ரத்னாவும், இவரும் ஒரே மாதிரி..." என்றார் கரிமா.

ஆமாம் என்று தலையசைத்தான் அர்னவ்.

"டாட், நீங்க இருங்க. நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து நானே காபி போட்டு கொண்டு வரேன்" என்று கூறிவிட்டு கரிமாவை பார்த்து முறைத்தபடி சென்றாள் அவள்.

"இன்னும் ஒரு மாசத்துக்கு நான் இங்க இருக்க மாட்டேன், அங்கிள்" என்றான் அர்னவ்.

"ஆமாம். நீ கோயம்புத்தூர் போறேன்னு கரிமா சொன்னா. என் மக மேல இவ்வளவு அக்கறையோட இருக்கிற ஒரு மருமகப்பிள்ளை கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஐ அம் ப்ரவுட் ஆஃப் யூ"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல, அங்கிள்"

"நீ அங்க எப்படி தனியா இருப்ப, அர்னவ்?" என்றார் கரிமா.

"எனக்கு வேலை நிறைய இருக்கும் ஆன்ட்டி. அப்படியே ஒரு மாசம் ஓடிடும்"

"சாரி அர்னவ், குஷியோட படிப்புக்காக நீ எல்லாத்தையும் விட்டுட்டு வலிய கோயம்புத்தூர் போக வேண்டி இருக்கு..."

"பரவாயில்ல, அங்கிள்..."

"என்ன்னனது?" என்று அதிர்ந்தாள் குஷி.

மாட்டிக்கொண்டோம் என்பதை உணர்ந்து, கண்களை மூடினான் அர்னவ்.

கரிமா பதற்றம் அடைந்தார். அவன் வேண்டுமென்றே தான் கோயம்புத்தூர் செல்கிறான் என்ற உண்மையை அவர் குஷிக்கு முன்னால் உளறி விட்டார்.

"ஆமாம் குஷி, நீ நல்லா படிக்கணும்னு தான், அவர் கோயம்புத்தூருக்கு போறாரு"

பல்லை கடித்தபடி கோபத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் குஷி. காப்பியை அங்கேயே வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியே ஓடிய அவளை குழப்பத்துடன் பார்த்தார் ஷஷி.

"அவளுக்கு என்ன ஆச்சு? எதுக்காக இப்படி திடீர்னு ஓடிப் போறா?"

"அர்னவ் வாலண்டரியா கோயம்புத்தூர் போற விஷயம் அவளுக்கு தெரியாது. நீங்க உண்மையை போட்டு உடைச்சிட்டீங்க"

"இதை முன்னாடியே நீ ஏன் என்கிட்ட சொல்லல?"

"நீங்க வீட்டுக்கு வந்ததுக்கு பிறகு டீடைலா பேசலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன்"

"சாரி அர்னவ்... நான் விஷயத்தை சிக்கலாகிட்டேன்னு நினைக்கிறேன்"

"இந்த பிரச்சினையை நான் தீர்க்க பாக்குறேன். நான் கிளம்புறேன்" என்று அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

அவன் வீட்டுக்கு வந்த போது, குஷி ரத்னாவிடம் கேட்டுக் கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது.

"அர்னவ் வாலண்டரியா தான் கோயம்புத்தூர் போறானா?" என்றாள் கலங்கிய கண்களுடன். ரத்னா அமைதி காத்தார்.

"உங்களுக்கும் அது சம்மதமா?"

"உன்னோட நல்லதுக்காக தான் அவன் இதை செய்றான்..."

"இல்லலலல... எனக்கு எது நல்லது, என்னை எது சந்தோஷப்படுத்தும்னு கூட அவனுக்கு தெரியாது. அவனுக்கு என் கூட இருக்கறதுல விருப்பமில்ல. அதனால தான் அவன் போறான்"

"இல்ல. நீ தப்பா நினைச்சுகிட்டு இருக்க"

"நான் தப்பா நினைக்கல... என்கிட்ட இருந்து அவன் விலகியே இருக்கிறதை பார்த்த பிறகு கூட அதை புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு நான் முட்டாள் இல்ல"

சில நொடி திகைத்த ரத்னா,

"நீ கோவமா இருக்க... கொஞ்சம் உன் மனசை ஆற விடு. அதுக்கு அப்புறம் நம்ம பேசலாம்"

"என்னை யாருமே புரிஞ்சுக்காதப்போ, பேசுறதுல என்ன பிரயோஜனம் இருக்கு?"

விருந்தினர் அறைக்கு ஓடிச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள் குஷி. அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு நின்ற அர்னவ்வை பார்த்த ரத்னா,

"இதெல்லாம் வேலைக்காகாதுன்னு நான் உன்கிட்ட சொன்னேன். இப்ப பாரு, என்ன ஆச்சுன்னு. அவ ஒன்னும் குழந்தை இல்ல, எல்லா முடிவையும் அவ சார்பா நீயே எடுக்கறதுக்கு... ஒரு உறவோட அழிவுக்கு காரணமே கம்யூனிகேஷன் கேப் தான். நீ இதைப்பத்தி அவகிட்ட பேசி இருக்கணும். நீ செஞ்சது ரொம்ப பெரிய தப்பு..." என்று சற்று நிறுத்திய அவர்,

"குஷி நார்மல் ஆகுற வரைக்கும் நீ இந்த வீட்டை விட்டு எங்கேயும் போகக்கூடாது. இது என்னோட ஆர்டர். நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது" என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றார்.

விருந்தினர் அறையின் கதவை தட்டினான் அர்னவ். ஆனால் எந்த பதிலும் இல்லை.

"குஷி கதவை திற... நான் சொல்றதை கேளு..."

அவன் கூறுவதை கேட்க அவள் தயாராக இல்லை. அவள் அவ்வளவு கோபமாய் இருந்தாள். செய்வதறியாது நின்றான் அர்னவ்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top