37 இழந்த கட்டுப்பாடு

37 இழந்த கட்டுப்பாடு 

தன் வீட்டிற்கு வந்த கரிமாவை பார்த்து ரத்னாவின் முகம் பிரகாசம் அடைந்தது. ஆனால் குஷியோ சாதாரணமாய் அமர்ந்திருந்தாள். அவள் முதுகில் ஒரு அடி போட்ட கரிமா,

"பாரு, என்னை பார்த்து எப்படி ரியாக்ட் பண்றான்னு... இவளை நான் அர்னவ்க்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கவே கூடாது. ஒரு என்ஆர்ஐக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து, வேற ஏதாவது ஒரு ஃபாரின் கன்ட்ரிக்கு அனுப்பி வைச்சிருக்கணும்"

"மா எதுக்காக இப்படி ஓவரா ரியாக்ட் பண்றீங்க? பிராக்டிக்கலா இருங்க. நம்ம ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீட்ல இருக்கோம்... டெய்லி பாக்குறோம்... என்னமோ ரொம்ப தூரத்துல இருந்து வர்ற மாதிரி ரியாக்ட் பண்றிங்க...? நீங்க என் அம்மா தானே? உங்களை நான் எதுக்கு ஒரு விருந்தாளி மாதிரி ட்ரீட் பண்ணனும்?"

"அவ சொல்றது சரிதானே?" என்று சிரித்தார் ரத்னா.

"ஆமாம். அதனால, உன்னோட திங்ஸை எல்லாம் பேக் பண்ணிக்கிட்டு என் கூட கிளம்பு"

"ஏன் வரணும்?" என்றாள் குஷி அதிர்ச்சியுடன்.

"ஏன்னா, நான் உன் அம்மா"

"ஆனா நான் உங்களுக்கு பொண்ணு மட்டும் இல்ல... என் புருஷனுக்கு வைஃப் அதை மறக்காதீங்க"

"எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்று அர்னவ் கூற, அனைவரும் அதிர்ந்தார்கள்.

'ஏன் அரு?"

"அவளுக்கு எக்ஸாம் முடியற வரைக்கும் அவங்க அம்மா வீட்டுல இருந்தா நல்லதுன்னு எனக்கு தோணுது"

"அதுக்கு என்ன அவசியம்?" என்றாள் குஷி.

"நீ படிக்கிறதுக்கு அமைதியான சூழல் அவசியம். அதனால தான் அர்னவ் நீ நம்ம வீட்டுக்கு வரணும்னு நினைக்கிறான்" என்றார் கரிமா. 

அவனைப் பார்த்து முறைத்த குஷி,

"என்கிட்ட கேக்காம நீயா எப்படி முடிவெடுக்க முடியும்?" என்றாள்.

அதைக் கேட்டு சிரித்த கரிமா,

"இப்போ தானே நீ உன் புருஷனுக்கு பொண்டாட்டின்னு சொன்ன... அப்புறம் அவன் சொல்றத ஏன் கேட்க மாட்டேங்கிற?" என்றார்.

"ஏன்னா, நான் இங்கேயே கம்ஃபர்டபிலா தான் இருக்கேன். நான் சொல்றத நம்புங்க" என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு.

"குஷி, ஏன் இப்படி ஓவரா ரியாக்ட் பண்ற? பி ப்ராக்டிகல். நீ இங்க எப்ப வேணும்னாலும் வரலாம். நான் என்னமோ உன்னை ரொம்ப தூரம் கூட்டிகிட்டு போற மாதிரி நடந்துக்கிற?"

"என்னை கிண்டல் பண்றீங்களா? என்னை  பழிவாங்கறீங்களா?"

"நான் ஏன் அப்படி எல்லாம் செய்யணும்?"

"குஷி, உங்க அம்மா கூட இருக்குறதுல உனக்கு என்ன பிரச்சனை? எக்ஸாம் வரைக்கும் தானே? நல்ல பொண்ணா அவங்க கூட போ?" என்றான் அர்னவ்.

அவர்கள் பேச்சை குறுக்கீடு செய்யாமல் அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தார் ரத்னா. அவர்களுக்குள் என்ன தான் பிரச்சனை? அவளுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்ட போது, அவளை ஒரு இரவு கூட அங்கே தங்க அனுமதிக்காத அவன், இப்பொழுது ஒரு மாதம் அங்கு செல் என்கிறானே, எதற்காக? அவள் இங்கு இருப்பதால் அவனுக்கு என்ன பிரச்சனை?

ரத்னாவை பார்த்த குஷி,

"ஆன்ட்டி,  நான் இங்கேயே இருக்கேன். ப்ளீஸ், இப்படி செய்ய வேண்டாம்னு சொல்லுங்க" என்றாள் கெஞ்சலாய்.

"செய்ய மாட்டாங்க" என்றார் ரத்னா கரிமாவையும் அர்னவ்வையும் உறுதியாய் பார்த்தவாறு. அது அவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

குஷியை நோக்கி திரும்பிய ரத்னா,

"ஆனா, நீ சின்சியரா படிப்புல கான்சன்ட்ரேட் பண்ண ஆரம்பிக்கணும். அதனால தான் அவங்க கவலைப்படறாங்க"

"நீ அவளை கெடுக்கிற, ரத்னா... இப்போ அவ என் கூட வந்தா என்ன குறைஞ்சிட போகுது? தொடுற தூரத்துல தானே இருக்கோம்?"

"ஆனா, லாவண்யா இங்க இருந்து தானே படிக்கிறா?" என்றாள் குஷி.

"அவ படிக்கிறா... நீ படிக்க மாட்டேங்குற. அது தான் அர்னவ்க்கு கவலையை தருது"

"நான் படிக்க மாட்டேங்கிறேன்னு யார் சொன்னது?"

கரிமாவின் பார்வை அர்னவ் பக்கம் திரும்பியது. கோபத்தில் பல்லை கடித்தாள் குஷி.

"அம்மா அவ மட்டும் ஒழுங்கா படிக்கலைன்னா, அவளை தூக்கி கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுட்டு வந்துடுவேன்னு அவ கிட்ட சொல்லுங்க"

"அவ படிப்பா"

"பாக்கலாம்"

கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள் குஷி. எவ்வளவு தைரியம் இருந்தால், தன்னிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல் அவளை அவள் அம்மா வீட்டிற்கு அனுப்புவது என்று முடிவெடுத்திருப்பான்? கரிமா அங்கிருந்து செல்லும் வரை காத்திருந்த அவள், தன் அறையை நோக்கி ஓடினாள். கதவை சாத்தி தாளிட்டு விட்டு, அர்னவ்வை நெருங்கினாள். இப்படி ஏதாவது நடக்கும் என்று அவனுக்கும் தெரியும். அவன் சட்டையின் காலரை பற்றி கொண்டு, அருகில் இருந்த சுற்றில் சாய்த்து,

"உனக்கு என்ன பிரச்சனை? எதுக்காக என்னை எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பணும்னு நினைக்கிற?" என்றாள்.

"நீ உன்னோட படிப்புல கவனம் செலுத்தவே மாட்டேங்குற. எக்ஸாம் வருதுன்னு உனக்கு பயம் கூட இல்ல. இப்படியே போனா, லாஸ்ட் செமஸ்டர்ல நீ ஃபெயில் ஆயிடுவ"

"நான் ஏற்கனவே என்னோட போர்ஷன்சை எல்லாம் முடிச்சிட்டேன்" என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு.

"பொய் சொல்லாத. நான் உன்னோட பிராக்ரஸ் கார்டை பார்த்தேன்"

"எப்படி?" என்றாள் அதிர்ச்சியாக.

"உன்னோட ப்ரொஃபசர்ஸ் எல்லாம் என்னோட ஃபிரண்ட்ஸ்ங்கிறதை மறக்காதே. ( அவள் தோளை தொட்டு) எனக்கு உன் மேல அக்கறை இருக்கு. நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான் செய்வேன்"

அவனது சட்டையின் பொத்தானுடன் விளையாடியபடி,

"சரி, நீ எனக்கு சொல்லித் தரியா?" என்றாள்.

உஷாரான அவன்,

"அஞ்சலியும், மாமாவும் உன்னோட எல்லா டவுட்டையும் கிளியர் பண்ணுவாங்க. அவங்களுக்கு ஈசி மெத்தட் தெரியும். அதனால அவங்ககிட்ட உன் டவுட்டை எல்லாம் கேட்டுக்கோ. சரியா?"

"சரி" என்றாள்.

மெல்ல அவன் நெஞ்சில் சாய்ந்த அவள், தன் மென்மையான விரலால் அவன் கழுத்தில் கோடுகள் வரைய, அவனது உடலின் வியர்வை மொட்டுக்கள் விழித்துக் கொண்டன. இதற்காகத்தான் அவன் அவளை அவளது அம்மா வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்தான். அவனிடம் அவளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அவனிடம் நெருங்கி பழக வேண்டும் என்ற துடிப்பு இருக்கிறது. அதனால் தான் அவளது தேர்வுகளுக்கு முன் அவளிடம் நெருங்குவதில்லை என்று முடிவெடுத்திருந்தான். 

அவனது தலையை மெல்ல கோதிவிட்ட அவள், அவனது முகத்தை அழகாய் துடைத்துவிட்டாள், துடைப்பதற்கு ஒன்றுமே இல்லாத போதும்...! மென்று விழுங்குவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாமல் அப்படியே நின்றான் அவன்.

"லைசன்ஸ் ஹோல்டர் ஏன் தன்னோட ப்ராப்பர்ட்டி மேல எந்த ரைட்சையும் காட்டுறதே இல்ல?"

"நீ எந்த ரைட்சை பத்தி பேசுற?" என்றான் அவனுக்கு அது புரியவில்லை என்பது போல.

அவனது மூக்கின் நுனியை மெல்ல கடித்து,

"எந்த ரைட்ஸ்னு காட்டட்டுமா?" என்றாள்.

"குஷி, உன்னோட கவனத்தை சிதற விடாத..."

"என்னோட கவனம் எல்லாம் என்னோட ப்ராப்பர்ட்டி மேல தான் இருக்கு. எனக்கு இப்ப தான் ஒரு விஷயம் தெரிஞ்சது... என்னோட ஹஸ்பண்ட் எவ்வளவு ஹேண்ட்ஸம் தெரியுமா...! உன்னோட ஒய்ஃப் அழகா இருக்கான்னு உனக்கு எப்ப புரியப்போகுது?"

"அது எனக்கு தெரியும்"

"அப்படியா?"

அவன் ஆம் என்று தலையசைக்க தன் முகத்தை திருப்பி தன் கன்னத்தை அவனுக்கு காட்டினாள். அவள் கன்னத்தில் மென்மையாய் முத்தமிட்டான்.

பெருமூச்சு விட்ட அவள்,

"என்னை தூக்கிக்கிட்டு இரண்டு ரவுண்ட் அடிக்கணும்" என்றாள்.

அவன் அவளை தூக்கி கொள்வதற்கு முன்பாக, அவன் மீது தாவி குதித்து தன் கால்களால் அவன் இடையை சுற்றி வளைத்துக் கொண்டு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக்கமாய் அவனை அணைத்துக் கொண்டாள்.

"நீ இன்னும் சின்ன குழந்தையாவே இருக்க"

"ஆனா, நான் குழந்தை இல்ல. வேணும்னா நிரூபிக்கட்டுமா?"

அமைதியான அவன், அந்த அறையை இரண்டு முறை வலம் வந்த பிறகு,

"கீழ இறங்கு" என்றான்.

மாட்டேன் என்று தலையசைத்த அவள்,

"நான் உன்னை விடமாட்டேன்" என்றாள். 

"டோன்ட் பி கிரேசி... கெட் டவுன்"

"எனக்கு உன் கூடவே இருக்கணும்னு தோணுது. என்னை கீழே இறக்கி விடாதே ப்ளீஸ்" என்றாள்.

பெருமூச்சு விட்ட அவன், அவளை தன் மடியில் வைத்தபடியே கட்டிலில் அமர்ந்தான். மேலும் அவனிடம் நெருங்கி வந்த அவள், தன் மெத்தென்ற முகத்தை அவன் கழுத்தில் புதைத்தாள். அவளது மெல்லிய இதழ்களின் உரசலால் அவனுக்குள் தடுமாற்றம் துவங்கியது. எவ்வளவு நேரம் தான் ஒரு மனிதனால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்து விட முடியும்? தன் ஈர உதட்டால் அவன் கழுத்தை அவள் நனைத்த போது, அவனது கட்டுப்பாடு முற்றிலுமாய் துடைத்தெறியப்பட்டது. தேர்வுகள் முடியும் வரை அவளை தொடுவதில்லை என்று தான் மேற்கொண்ட சபதத்தை மறந்து, அவளை கட்டிலில் சாய்த்தான். பட்டுப் போன்ற அவளது தேகம் அவனது புத்தியை மழுங்கடித்தது. பூவின் மடல்களை விட மென்மையாய் இருந்த அவளது காது மடல்கள், அவனை பைத்தியம் அடிக்க செய்தது. தன் இதழ்களை அவளோடு உறவாட விட்டான். அந்த முத்தம் ஒரு மணி நேரம் நீடித்தது என்று கூற முடியாது என்றாலும், அது ஒரு நீண்ட முத்தம் தான். அவனது அதரங்கள் மெல்ல கீழ் நோக்கி பயணிக்க துவங்கின.

அப்போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு, தன்னை அவளிடமிருந்து விலக்கி, தன்னை இழந்து கிடந்த அவளை ஏறிட்டான். அவசரமாய் குளியல் அறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டான். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அவள், கதவைச் திறந்தாள். அங்கு லாவண்யா நின்று கொண்டிருந்தாள்.

"உனக்காக நான் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? வா, இன்னைக்கு நம்ம ரெண்டு சாப்ட்ரையாவது முடிச்சாகணும்" என்றாள்.

பின்னால் திரும்பி, மூடப்பட்டிருந்த குளியலறையின் கதவை பார்த்தாள் அவள். அவள் கையைப் பிடித்து விருந்தினர் அறையை நோக்கி இழுத்துச் சென்றாள் லாவண்யா.

ஷவரை திறந்து விட்டு தன்னைத்தானே வைதுகொண்டு நின்றிருந்தான் அர்னவ். இதற்கு அவன் ஏதாவது செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவன் எது வேண்டாம் என்று நினைக்கிறானோ, அங்கு அது அவனை இட்டுச் செல்லும். இதற்கு என்ன செய்வதென்று அவனுக்கு தெரியும்.

இரவு உணவை முடித்துக் கொண்டு குஷி தங்கள் அறைக்கு வருவதற்கு முன், உறங்கிப் போனான் அவன். அவன் உறங்குவதை பார்த்த அவள் வியந்தாள். அவனை உலுக்கி பார்த்தாள். ஆனால் எந்த பயனும் இல்லை.

"என்ன மனுஷன் இவன்?" என்றாள் முகத்தை சுளித்துக்கொண்டு.

ஒரு போர்வையை எடுத்து அவனுக்கு போர்த்திவிட்டு, விளக்கை அணைத்து, அதே போர்வையில் புகுந்து, அவனை அணைத்துக் கொண்டாள். விரைவிலேயே உறங்கியும் போனாள். மெல்ல கண் விழித்த அவன், அவள் கையில் இருந்து வெளியே வந்தான். அவளை சமாளிக்க அவன் திணறித்தான் போனான்.

மறுநாள் காலை

கோபச்சாயல் படர்ந்திருந்த குஷியின் முகத்தை பார்த்த அவன் துணுக்குற்றான்.

"என்ன ஆச்சு?"

"எதுக்காக நேத்து ராத்திரி அவ்வளவு சீக்கிரமா தூங்கின?"

"தூக்கம் வந்தது, தூங்கினேன்"

"என்கிட்ட ஷேர் பண்ணிக்க உனக்கு எதுவுமே இல்லையா? ஏன் இப்படி கொஞ்சம் கூட இன்ட்ரஸ்டே இல்லாமல் இருக்க?"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. உன்னோட தூக்கத்தை கெடுக்க வேண்டாம்னு நினச்சேன். நீ இன்னைக்கு காலேஜுக்கு போகணும். ஞாபகம் இருக்கு இல்ல?"

"இருக்கு இருக்கு... நீதான் அப்பப்போ சொல்லிகிட்டே இருக்கியே. அப்புறம் நான் எப்படி மறக்குறது?" என்றாள் எரிச்சலுடன்.

"சரி, போய் கெளம்பு"

"நீ என்னை டிராப் பண்ணு"

"உன்னோட ஸ்கூட்டி என்ன ஆச்சு?"

"ஆங்... நான் அதை பஞ்சர் பண்ணிட்டேன்" என்றாள் கோபமாய்.

"என்னது? ஏன்?" என்றான் அதிர்ச்சியோடு.

"ஏன்னா, உன் மூஞ்சியை என்னால பஞ்சர் பண்ண முடியல... அதனால தான்"

அதைக் கேட்டு சிரித்தான் அவன்.

அவளை கல்லூரியில் விட்டு விட்டு அலுவலகம் சென்றான்.

அந்த நாளை வெறுப்புடன் தள்ள வேண்டி இருந்தது குஷிக்கு. வகுப்புகள் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை. தொடர்ச்சியான ரிவிஷன் டெஸ்டுகள் அவளுக்கு சலிப்பை தந்தது. எப்பொழுது வீட்டிற்கு பறக்கலாம் என்று காத்திருந்தாள். அவளும் லாவன்யாவும் வீட்டுக்கு வந்தபோது அவர்களுக்காக சாம்பார் வடையுடன் காத்திருந்தார் ரத்னா.

"லாவண்யா, பாரு நமக்கு எப்படிப்பட்ட மாமியார் கிடைச்சிருக்காங்க... அவங்க ரொம்ப ஸ்வீட்" என்றாள் குஷி.

"ரொம்ப சந்தோஷப்படாதீங்க... இதையெல்லாம் நீங்க எனக்கு திரும்ப செய்யணும். நான் என் பேரப்பிள்ளைங்களோட பிஸியா இருக்கும் போது..."

அதைக் கேட்டு அவர்கள் இருவரும் வெட்கப்பட்டார்கள்.

"நீங்க இதை அல்லவ் கிட்ட கேட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று அவர் காதில் ரகசியமாய் கூறினாள் குஷி.

ரத்னாவின் முகம் சட்டென்று மாறியது. தான் யோசிக்காமல் உதிர்த்து விட்ட வார்த்தைகளை எண்ணிய குஷி, சமாளிக்க முயன்றாள்.

"அவன் சீக்கிரம் குழந்தை வேண்டாம்னு நினைக்கிறான்"

நிம்மதி பெருமூச்சு விட்ட ரத்னா,

"அதனால என்ன? எவ்வளவு நாள் அவன் சாக்குபோக்கு சொல்ல முடியும்? எல்லாத்துக்கும் மேல, எனக்கு உன் மேல நிறைய நம்பிக்கை இருக்கு. நீ அவனை அப்படி எல்லாம் விட்டுட மாட்ட தானே?" என்று அவர் கூற,

"நீங்க ரொம்ப டூ மச்" என்றாள்.

"சரி பேசுறதை நிறுத்திட்டு, இது ஆறிப்போறதுக்கு முன்னாடி சாப்பிடுங்க... உங்க அம்மா வேற ஏன் இன்னும் வரலைன்னு தெரியல..."

"நீங்க அவங்களை கூப்பிட்டீங்களா?"

"பின்ன... என் ஃபிரண்டை நான் எப்படி விட்டுடுவேன்?"

"அவங்க வர்றத பத்தி எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு நினைக்க வேண்டாம்னு சொல்லுங்க"

"அவ கூட்டிகிட்டு போக மாட்டா (என்று சற்று நிறுத்திய அவர்) எதுக்காக அரு உன்னை அங்க அனுப்பணும்னு நினைக்கிறான்?" என்றார்.

"அவனுக்கு கில்டியா இருக்குன்னு நினைக்கிறேன்"

"கில்டியா? எதுக்கு?" என்று முகத்தை சுருக்கினார் ரத்னா.

"ஏன்னா, அவன் என்னை படிக்கவே விடமாட்டேங்கிறான்... எப்பவும் என் கூடவே இருக்கணும்னு ஆசைப்படுறான். எங்க சின்ன வயசு மெமரிசையெல்லாம் பேசி என்னை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்கான். அதனால தான் என்னை எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பணும்னு நினைக்கிறான்" என்று தன் சிரிப்பை அடக்கியபடி கூறினாள் அவள்.

அதைக் கேட்டு ரத்னாவும் லாவண்யாவும் சிரித்தார்கள்.

"நீங்க ரெண்டு பேரும் என்னை நம்பலயா? சரி போகட்டும் விடுங்க. ஆனா இதைப் பத்தி எல்லாம் அவன்கிட்ட எதுவும் கேட்காதீங்க. பாவம், ரொம்ப வருத்தப்படுவான்"

அப்போது அவள்,

"ஏன், அவங்க என்கிட்ட கேட்டா, நீ சொன்னதெல்லாம் பொய்னு அவங்களுக்கு தெரிஞ்சுடுமா?" என்றான் அர்னவ்.

அவன் குரலைக் கேட்டு திடுக்கிட்ட குஷி, விழிவிரித்து பின்னால் திரும்பி பார்த்தாள். தனது கோட்டை தோளில் போட்டபடி, கைகளைக் கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்தபடி நின்றிருந்த அவனது இதழ்களில் குறுநகை தவழ்ந்தது.

இல்லை என்று அவசரமாய் தலையசைத்த குஷி, அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பிக்கொண்டு,

"கடவுளே கடவுளே" என்று உச்சரிக்க துவங்கினாள். அவள் அருகில் வந்து அவளது தோளை தட்டிய அவன்,

"நீ என்ன சொன்ன?" என்றான்.

"அல்லவ், போய் ஃபிரஷ் ஆயிட்டு சீக்கிரம் வா. சாம்பார் வடை செம சூப்பரா இருக்கு" என்றாள் பல்லை காட்டி.

"நீ சொன்ன பொய்யை விட ஒண்ணும் சூப்பரா இருக்காது..."

"என்னது பொய்யா? நீ எதைப் பத்தி சொல்ற?" என்றார் ரத்னா, குஷி கூறியது பொய் என்பது தனக்கு தெரியாது என்பதைப் போல.

லாவண்யா சிரிக்க, தன் பல்லை கடித்தாள் குஷி.

"ஹான் ஹான்... நான் தான் அவனை டிஸ்டர்ப் பண்றேன்... போதுமா...? இவன் கிணத்துல போட்ட கல்லு மாதிரி இருந்தா நான் வேற என்ன செய்யறது?"

"அதுக்காகத்தான் அவன் உன்னை உங்க அம்மா வீட்டுக்கு அனுப்பணும்னு நினைக்கிறான். எனக்கு தெரியும், அரு நிச்சயம் காரணம் இல்லாம எதையும் செய்ய மாட்டான்"

"அப்படின்னா நீங்க என்னை அங்க அனுப்ப போறீங்களா?" என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.

"தேவையில்ல. நீ அங்க போக வேண்டாம்" என்றான் அர்னவ்.

குஷியின் முகம் மலர்ந்தது. ஆனால் ரத்னாவிற்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. அவர் மகனின் தொனி அவருக்கு நன்றாகவே தெரியும். அவன் என்ன கூறப் போகிறானோ என்று பதற்றம் மாறாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"ஏன்னா, நான் ஒரு மாசம் டெபுடேஷன்ல கோயம்புத்தூர் போக போறேன். அதனால நீ இங்க எந்த டிஸ்டர்பன்சும் இல்லாம இருக்கலாம்" என்று அவன் கூற, அது குஷியை அடியோடு அசைத்துப் பார்த்தது.

பொருளோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார் ரத்னா.

தொடரும்...

 














 











Bạn đang đọc truyện trên: AzTruyen.Top