சுவாசம் 9
இசை காபி கப்பை அவன் முன்னே இருந்த டேபிள் மீது வைக்க சட்டென அவளை பார்த்த எழிலோ இசை என அழைத்து கொண்டே இருக்கையில் இருந்து எழுந்து நின்றான்...
அவன் செய்கையை கண்டு பயந்தவள் வேணாம் ப்ளீஸ் என கத்தி கொண்டு வேகமாக பின்னால் நகர்ந்து நின்றவளின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது..
வேணா என்ன எதுவும் பண்ணாதீங்க இதுக்கு மேலயும் என்னால தாங்கிக்க முடியாது என அழுது கொண்டே அவள் கூறவும்
இசை...... என்னை மன்னிச்சிடு...
இசை நான் வேணும்னே செய்யல.. நேத்து நான் குடிச்சிட்டு போதையில தான் அப்படி நடந்துக்கிட்டேன்.. மத்தபடி எனக்கு உன்மேல எந்த ஒரு தவறான எண்ணமும் இருந்தது இல்லை..
என்ன மன்னிச்சுடு இசை..என்றான் எழிலரசன் சோகமான குரலில்..
ஒரு நிமிடம் அவனை முறைத்து நின்றவள் உங்களுக்கு இப்படி பேச வெக்கமா இல்லை.. மன்னிக்கணுமா?... மன்னிக்கிற செயலா நீங்க பண்ணது... குடிச்சிட்டு வந்தா என்ன வேணா பண்ணலாமா..
இப்போ வந்து நான் தப்பான எண்ணத்துல பண்ணலனு சொன்னா உடனே உங்கள நம்பிடணும்ல.?... நீங்க பண்ணதெல்லாம் சரியாகிடுமா
நானும் நீங்க சொல்றத கேட்டு உங்கள மன்னிச்சுரனும்..நீங்க என்ன ஒரு மனுஷியா கூட மதிக்களல அப்புறம் எப்படி என்ன உங்க மனைவியா ஏத்துக்கக்குவீங்க..
எப்படி உங்களால இப்படிலாம் நடந்துக்க முடியுது... நான் உங்கள நல்லவருனு நினச்சு தான் எங்க அம்மா சொன்னதும் சரினு கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ஆனா நீங்க... ச்சீ.. சொல்லவே வாய் கூசுது...
உங்களுக்கு கல்யாணம் பேசினது நான் இல்லை என் அக்கா கலை...அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா??
அவக்கிட்ட போன்ல சிரிச்சு பேசி பழகினீங்க.. அவ ஓடி போனதால என்னை உங்களுக்கு உங்க அம்மா கல்யாணம் பண்ணி வெச்சாங்க..அவ ஓடிப்போன கஷ்டத்துல தான் குடிச்சிட்டு வந்திங்களா....குடிச்சிட்டு வந்தா உங்களுக்கு எல்லாமே மறந்துறும்மா என்ன...அதெல்லாம் அவ்வளவு ஈஸியா மறந்துட்டு எப்படி உங்களால சாதாரணமா இருக்க முடியுது...நான் கல்யாணத்துலயே கவனிச்சேன் உங்க நடவடிக்கையே சரி இல்லை...
என் கிட்ட கல்யாணம் ஆன முதல் நாளே நீங்க இவ்வளவு மோசமா நடந்துக்குவீங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..அத கூட விடுங்க..
நான் எந்த மாதிரி மனநிலைல இந்த வீட்டுக்கு மருமகளா வந்துருக்கேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்...எனக்கு விருப்பம் இருக்கா இல்லையா நான் எந்த மன நிலைல இருக்கேன்னு கொஞ்சம் கூட யோசிக்காம என் அனுமதி இல்லாம என்னை தொட யாரு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது.. தாலினு ஒன்னு கழுத்துல கட்டிட்டா என்ன வேனா பண்ணலாம் யாரும் எதுவும் கேக்க மாட்டாங்கன்ற எண்ணம்...எந்த ஒரு நல்ல புருஷனும் அவன் பொண்டாட்டியோட அனுமதியோட தான் அவள தொடணும் நினைப்பான் அவன் தான் உண்மையான ஆம்பள..நல்ல மனுஷனும் கூட..ஆனா நீங்க...என்னை...கற்.....என அழுது கொண்டே கூறியவளுக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை..
அவள் வார்த்தைகளை கேட்க முடியாதவன் அவன் செவியை முடிகொண்டவன் இசை ஐ அம் சாரி ப்ளீஸ்.... நான் பண்ணது மன்னிக்க முடியாத தப்பு தான்... தப்பு ரொம்ப தப்பு ஆனா உன் வார்த்தைகளால கொள்ளாத என்னால தாங்க முடியல என்ற எழிலரசனின் கண்களில் கண்ணீர் தேங்கியது....
அவளோ அவனை வெறித்து நோக்கினான்...
நான் பண்ண தப்புக்கு நான் வெக்க படுறேன்....மன்னிக்க கூடிய செயல் இல்லை நான் பண்ணது.. என் மன்னிப்பால எதையும் மாத்த முடியாதுனு எனக்கு தெரியும் ஆனா எனக்கு வேற வழி தெரியல..நான் குடிச்சிட்டு வந்து உன் கிட்ட அப்படி நடந்து கிட்டது தப்பு தான் ஆனா அந்த நேரம் நான் சுயநினைவோடு எதையும் செய்யல இசை.. அந்த நேரத்தைலயும் நான் உன் மேல வெச்சிருந்த காதல்னால தான் அப்படி பண்ணிட்டேன் மத்தபடி நான் தப்பானவன் இல்லை இசை...என அவன் அழுது கொண்டு கூறவும்
இசை முகத்தை கோபமுடன் திருப்பி கொண்டு நின்றாள்.
இனிமேலும் நான் என்ன சொன்னாலும் நீ புரிஞ்சிக்கப்போறது இல்லை.. ஆனா நான் பண்ண இந்த தப்புக்கு நீ என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துக்குறேன் என எழிலரசன் நொறுங்கி அழ
உங்கள மன்னிக்க நான் யாரு..நீங்க என்ன பண்ணாலும் நான் என்னனு கேக்க முடியாது ஏன்னா நீங்க பெரிய இடம் நாங்க அப்படியா.. சாதாரண குடும்பத்துல பிறந்த என்னால என்ன பண்ணிடமுடியும். சரி உங்க உரிமையா நீங்க எடுத்துகிட்டிங்கனு கூட நினைச்சு இத மன்னிச்சுறேன் ஆனா என் வாழ்நாள் முழுக்கவும் இத என்னால மறக்க முடியாது..
பெருமூச்சு விட்ட எழில் இசை இன்னைக்கு சொல்றேன் எப்போ நான் குடிச்சிட்டு இவ்வளவு கேவலமான செயலை செஞ்சனோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் இன்னைலருந்து நான் சாகறவரைக்கும் குடிக்கவே மாட்டேன் இது நான் உன் கழுத்துல கட்டின தாலி மேல சத்தியம்..என்றான் அவன் அழுத்தமுடன்.
நான் பண்ண இந்த தப்புக்கு என்னால இப்போ இந்த சூழ்நிலைல உன் கிட்ட மன்னிப்பு மட்டும் தான் கேக்கமுடியும் என்ற எழிலரசன் வேகமாக ட்ரெஸ்ஸிங் டேபிள் அருகில் சென்று நின்றான்..
இசை எழிலை ஒன்றும் புரியாமல் பார்க்க..
என்னை மன்னிச்சுடு இசை...நீ தண்டனை கொடுக்கலனா என்ன இனி ஒவ்வொரு நாளும் எனக்கு நானே தண்டனை குடுத்துக்குறேன் என்ற எழிலரசன் அவன் ஒரு கையால் கண்ணாடியை வேகமாக குத்த அந்த நொடி கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது...
இசை கண்களை விரித்து அதிர்ச்சியுடன் அவனை பார்க்க
கைகளில் இரத்தம் சொட்ட நின்று கொண்டிருந்தான் எழிலரசன்..
உடனே அவன் அருகில் ஓடியவள் தன்னவனின் கையை பிடித்து பார்க்க அங்கங்கே கண்ணாடி துகள்கள் கையில் ஆழமாக குத்தியிருக்க ரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்ததை கண்டவளுக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது..
எதுக்கு இப்படி பண்ணீங்க... ஏங்க... ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க..பாருங்க எவ்வளவு ரத்தம் வருதுனு..என்ன பன்றோம்னு தெரிஞ்சு தான் பண்றிங்களா.நான் சொன்னேனா உங்களுக்கு தண்டனை கொடுக்கணும்னு ஏங்க இப்படி பண்ணீங்க ..வாங்க ஹாஸ்பிடல் போகலாம்... அழுது கொண்டே கூறியவள் அவன் கைகளை பிடித்து இழுத்து செல்ல முயற்சிக்க
சிறிதும் அசையாமல் நின்ற எழிலரசன் அவள் கையை தன் கைகளிலிருந்து விலக்கியவன் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ கீழே போ என்றான் பொறுமையாக..
அவனை முறைத்தவள் கீழ போணுமா உங்கள இந்த மாதிரி நிலமைல எப்படி விட்டு போக முடியும்.. பேச டைம் இல்லை ரத்தம் நிறைய போகுது.. கண்ணாடி தூள் குத்தியிருக்கு செப்டிக் ஆகிட போகுது சீக்கிரம் வாங்க ஹாஸ்பிடல் போகலாம் என்றாள் இசை கண்ணீருடன்.
நோ.. என்னால எங்கயும் வர முடியாது. நீ இங்கிருந்து போ என்றவன் இசை கையை பிடித்து இழுத்து சென்று அறைக்கு வெளியே தள்ளி கதவை தாழ் போட்டு கொண்டான்.
என்னங்க கதவை திறங்க..கதவை எதுக்கு லாக் பண்ணீங்க.. ப்ளீஸ் கதவை திறங்க... அத்தை... சின்ன அத்தை...யாராவது வாங்க..என இசை சத்தமாக அழுது கொண்டே கத்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அங்கு ஓடி வந்தனர்..
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top