சுவாசம் 7

டேய் எழில் இன்னையோட உன் பேச்சுலர் லைப் முடியுது அதனால எங்களுக்கு பார்ட்டி குடுத்தே ஆகணும்..

கண்டிப்பா டா உங்களுக்கு இல்லாமையா.. நான் ஆல்ரெடி எல்லாம் ரெடி பண்ணிட்டேன்.. எல்லாம் பாரின் சரக்கு கொஞ்சம் குடிச்சாலே ரொம்ப போதை ஆகிடும் டின்னரும் அரேஞ் பண்ணிருக்கேன்..சீக்கிரம் முடிச்சிட்டு வீட்டுக்கு போங்க.. எனக்கு இன்னைக்கு தான் மேரேஜ் முடிஞ்சிற்கு வீட்ல தேடுவாங்க நான் கிளம்புறேன் என்றான் எழிலரசன்.

என்னது கிளம்புறியா டேய் நீ இல்லாம எங்களுக்கு எதுக்கு பார்ட்டி.. அதெல்லாம் இல்லை நீயும் எங்களோட இந்த பார்ட்டில கலந்து கிட்டே ஆகணும் என ஒரு நண்பன் கூறவும்

ஆமா ஆமா என்றனர் மற்ற நண்பர்கள்..

சரி சரி.. என்றான் எழிலரசன் புன்னகையுடன்...

பார்ட்டி தொடங்க அனைவரும் குடித்து விட்டு ஆட்டம் போட தொடங்கினர்.

எழிலரசன் அவனுடைய ஒரு நண்பனுடன் பேசி கொண்டிருக்கையில் எழிலரசன் போன் சினுங்கியது.

ஒன் மினிட் என்றவன் தனியாக சென்று போனை அட்டன் செய்து பேச தொடங்கினான் டேய் எழில் எங்க டா இருக்க...வெளிய போனா சொல்லிட்டு போகமாட்டியா..

இல்லை மா பிரண்ட்ஸ் கூப்பிட்டாங்கனு வெளிய வந்துருக்கேன்..

சரி சரி சீக்கிரம் வா.. நடக்க வேண்டிய காரியம் நிறைய இருக்கு..

சரி மா நான் வந்துறேன் என்றவன் கைபேசி அழைப்பை துண்டித்தான்...

டேய் எழில் எழில் என அழைத்து கொண்டே எழிலரசன் நண்பன் அருண் அவன் அருகில் வந்தவன் டேய் நீ இங்க என்ன டா பண்ணிட்டுருக்க வாடா பார்ட்டிய என்ஜோய் பண்ணலாம் என அவனை அங்கிருந்து அழைத்து கொண்டு சென்றான்.

இந்தா நீ எங்களுக்கு பார்ட்டி குடுத்த இப்போ நாங்க உனக்கு தரோம் என மது நிறைந்த கண்ணாடி டம்ளரை அவன் முன் நீட்ட

டேய் இன்னைக்கு தான் எனக்கு கல்யாணம் ஆகிருக்கு.. என்னால குடிக்கலாம் முடியாது..என்றான் எழிலரசன்..

டேய் எங்களுக்காக இதுகூட பண்ண மாட்டியா என்றான் எழிலின் நண்பன் திலீப் போதையில்....

டேய் இல்லை டா..வீட்ல எனக்காக எல்லாரும் வெயிட் பண்ணிட்டுருக்காங்க நான் எப்படி குடிச்சிட்டு போகறது.. அதோட நான் இப்போலாம் குடிக்கிறது இல்லை டா என்றான் எழில் தயக்கமுடன்

டேய் கொஞ்சமா குடி டா ஒன்னும் ஆகாது என எழிலரசனின் நண்பர்கள் அவனை வற்புறுத்த எழிலரசனும் சரி என்றவன் சிறிது குடிக்க தொடங்கினான்..மேலும் அவன் நண்பர்கள் வற்புறுத்தி குடிக்க வைத்தனர்.

போதை ஏற ஏற அதிகளவு குடிக்க தொடங்கினான் எழிலரசன்..

சில நிமிடங்களில் போதையில் மயங்கினாலும் தன்னை நீதானித்து கொண்டவன் நண்பர்களிடம் கூறிவிட்டு வீட்டிற்கு சென்றான் தள்ளாடியபடியே...

இரவு நீண்ட நேரம் ஆனதால் அனைவரும் அவர்கள் அறைக்கு சென்றிருக்க சுஜாதா மட்டும் ஹாலில் அமர்ந்திருந்தார்.

விஜயா சிறிது நேரத்திற்கு முன்னரே எழிலரசனின் அறையை அன்று இரவிற்காக வேலையாட்கள் வைத்து அலங்கரித்தவர் தன் மருமகள் இசைக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார் மற்றோரு அறையில்.

தள்ளாடியபடி வீட்டிற்குள் நுழைந்தவனை கண்ட சுஜாதாவிற்கு மிகுந்த அதிர்ச்சி.

டேய்...எழில் என்னடா ஆச்சு என அவன் அருகில் ஓடி வந்தார் சுஜாதா..

எழில் குடிச்சிக்கியா...அவர் பதட்டமுடன் கேட்கவும்

இல்லை.. இல்லை.. ஆமா சித்தி.. கொஞ்சம் தான் குடிச்சேன்....
என்று அவன் உளறினான்....

அய்யோ என்ன காரியம் டா பண்ணிட்டு வந்து நிக்குற.. அக்காவுக்கு மாமாக்கும் இது தெரிஞ்சா அவ்ளதான்.. இன்னைக்கு வேற உனக்கு முதலிரவு ஏற்பாடு பண்ணிட்டுருக்காங்க.. நீ என்னடானா இப்படி குடிச்சிட்டு வந்துருக்க.. அந்த பொண்ணு பாவம் டா என்றவர் சரி வா என எழிலரசனை பிடிக்க அவனோ தள்ளாடி நின்றான்.

சுஜாதா எழிலரசனை அந்த ஷோபாவில் அமர வைத்தவர் வேகமாக சென்று எழிலரசனின் அண்ணன் ரவியை அழைத்து வந்தார்..

டேய் என்ன டா இப்படி பண்ணிர்க்க.. இன்னைக்கு கூடவா யாராவது குடிப்பாங்க என ரவி கோபமாக கூறவும் ரவி பேச டைம் இல்லை அக்கா வந்தா பெரிய பிரச்சனை ஆகிரும்.. நீ இவன யாருக்கும் தெரியாம அவன் ரூம்ல கூட்டிட்டு போய் படுக்க வெச்சுரு.. என்றார் சுஜாதா சுற்றும் முற்றும் பார்த்துகொண்டு...

மாமாக்கு தெரிஞ்சா கண்டிப்பா அடிச்சிருவாரு.. இவன் மனசுல என்ன சோகமோ இப்படி பண்ணிட்டான்.. கூட்டிட்டு போ பா என சுஜாதா கூறவும்

சரிங்க சித்தி என்ற ரவி தன் சகோதரனை அவன் அறைக்கு அழைத்து சென்றான்.

சுஜாதாவும் பெருமூச்சு விட்டு அவர் அறைக்கு சென்று விட்டார்.

ரவி எழிலரசனை கட்டிலில் படுக்க வைத்து விட்டு வெளியில் வர விஜயா இசையை அழைத்து கொண்டு அங்கே வந்தார்.

என்ன பா ரவி எழில் வந்துட்டான்ல இப்போ என்ன பண்றான் அவன் என விஜயா கேள்வி எழுப்ப

ஆ.. ஆமா மா.. உள்ள தான் இருக்கான்.. என்ன மா.. என்னாச்சு என பயத்துடன் ரவி வினவ

ஒன்னுல்ல... அவன் வந்துட்டானானு பாத்தேன் சரி நீ உன் ரூம் போ நாங்க பத்துக்குறோம்...என்றார் விஜயா...

சரி என்ற ரவி அய்யோ கடவுளே எழில் மாட்டிக்க கூடாது என முனகி கொண்டே அங்கிருந்து சென்று விட்டான்..

விஜயா பால் சொம்பை இசையிடம் கொடுத்தவர் உள்ள போ என அனுப்பி வைக்க இசையோ அரைமனதுடன் உள்ளே சென்றாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top