சுவாசம் 6
நான் பெத்த ஒரு பொண்ணாலையே என் இன்னோரு பொண்ணோட வாழ்க்கை கெட்டு போச்சே... பாவி இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு ஒரு வார்த்தை சொல்லிருந்தா அப்பவே இந்த கல்யாணத்தை நிறுத்திருப்பேன்.
ஆனா கடைசி நேரத்தில இப்படி கழுத்தருத்துட்டாளே... இனிமேல் இந்த ஊர்ல யாரு நம்மள மதிப்பா.. நம்ம குடும்பத்தோட மானம் மரியாதை எல்லாமே போச்சே... இனிமே நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் என மனம் குமுறினார் மனோகரன்.
அய்யோ என்னங்க ஏன்ங்க இப்படிலாம் பேசுறீங்க...நீங்க போய்ட்டா நான் மட்டும் இங்க இருந்து என்ன பண்ண போறேன் நானும் வந்துறேன்ங்க உங்க கூடவே...என்றழுதார் புவனலக்ஷ்மி
அப்பா அம்மா ஏன் மா..அவ ஓடிப்போனதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்.பேசறவங்க பேசதா செய்வாங்க அதுக்காக நீங்க இப்படி பண்ணா எல்லாம் சரி ஆகிடுமா என்ன...நீங்க இப்படி பேசறது மட்டும் இசைக்கு தெரிஞ்சா நிச்சயமா அவ நொறுங்கிடுவா அவ ஏற்கனவே மனசு ஒடஞ்சி போயிருக்கா..
இதுல நீங்க வேற.. அவ இந்த கல்யாணம் பண்ணிக்கிட்டது யாருக்காக நம்ம குடும்பம் கவுரவம் கெட வேண்டாம்ன்ற ஒரே நோக்கதுக்காக தான் இந்த முடிவு எடுத்தா.. அவ உங்களுக்காக அவ வாழ்க்கையே ஒருத்தன் கிட்ட ஒப்படச்சிட்டா.. நீங்க என்னடானா சாக போறேன்னு பேசுறீங்க..அந்த பையன் கலையரசிக்கு பாத்தவன் தான.. நல்லவன்னு தான நம்ம பொண்ண கல்யாணம் பண்ணிக்கொடுக்க முடிவு பண்ணோம் அதனால பயப்பட ஒன்னும் இல்லை அவன் பாத்துக்குவான் என்றான் சித்தார்த் அவர்களுக்கு ஆறுதலாக..
சரியா சொன்னடா ராஜா என்றார் மஞ்சுளா..
அத்தை மாமா எல்லாம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு இனிமே பேசி ஒன்னும் இல்லை.. வாங்க வீட்டுக்கு போகலாம்..நீங்க வேணும்னா பாருங்க இசை சந்தோசமா புள்ளக்குட்டியோடு வாழ போறா என்றாள் ஜானகி ஆறுதலாக.
சரி சரி வீட்டுக்கு போகலாம் என்றான் சித்தார்த்
சரி என தலை அசைத்த மனோகரன் மற்றும் புவனாவும் தன் குடும்பத்தினருடன் அவர்கள் காரில் ஏறி வீட்டிற்கு சென்றனர்.
வரும் வழியில் இசை எழிலரசனிடம் ஒன்றும் பேசாமல் மௌனமாகவே அமர்ந்திருந்தாள் காரில் .
கார் அவர்கள் வீட்டை அடைந்ததும் இசை அவர்கள் வீட்டை பார்த்து சற்று பிரம்மித்து போனாள்.
மிகப்பெரிய நுழைவாயில்.. ஒரு புறம் நீச்சல் குளமும்...மறுபக்கம் தோட்டமும்..கார் பார்க்கிங் வசதி அமைக்க பட்டு அதற்கு நடுவே பெரிய மாளிகை போன்ற பெரிய அழகான வீடு...
குணசேகரன் குடும்பக்த்தினர் வீட்டிற்கு சென்றதும் எழிலரசன் இசையரசி இருவரையும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இசையும் எழிலரசனும் உள்ளே சென்றனர்.
மிகப்பெரிய வெள்ளை நிற ஹால் ரூமில் பெரிய படிக்கட்டும் அதன் அருகில் பெரிய பெரிய குஷன் ஷோபாக்களும் டீப்பாயும் அமைக்க பட்டிருந்தது.
பெரிய பெரிய ஜன்னல்கள் பல இருந்தாலும் கர்டைன்ஸ்கள் போட்டு மூடப்பட்டிருந்தது.. பெரிய பெரிய மின் விளக்குகள் அந்த அறையை அழகாகவும் ஆடம்பரமாகவும் காண்பித்தது.அரைமுழுவதும் சில்லென்று ஏசி காற்று பரவியிருந்தது.
மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இசைக்கோ இது அனைத்தும் புதியதாகவே இருந்தது.டிவியில் மட்டுமே இப்படி பார்த்துள்ள இசைக்கு முதல் முறை இவ்வளவு பெரிய வீட்டை நேரில் பார்ப்பது அதிசயாமாக தான் இருந்தது.
தன் யோசனையில் மூழ்கி இருந்த இசையை பார்த்த எழிலரசனோ இசை என்ன பாக்குற இது தான் நீ வாழ போற வீடு.. வீட்டை சுத்தி பாக்கணுமா என எழிலரசன் அவளை கேட்கவும்
இல்லை அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்றவள் முகத்தை திருப்பி கொண்டு நின்றாள் கோபமாக.
சிறிது புன்னகையை உதிர்த்து விட்டு அமைதியானான் எழில்.
சில நிமிடங்களில் அனைத்து சடங்குகளும் முடிந்து பூஜை அறையில் இசை விளக்கேற்றி பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டாள்.
என்னங்க இங்க பாருங்க இன்னைக்கு சாய்ங்காலம் நடக்க இருந்த ரிஷப்ஷன அடுத்த வாரம் மாத்தி வைக்க சொல்லிடுங்க..ஏன்னா இன்னைக்கு நடந்த பிரச்சனைல அது அவசியம் இல்லை. சம்மந்தி வீட்டுக்காரங்களும் சங்கடத்துல இருக்காங்க.. சொந்தகாரங்களும் இத பத்தி என்ன நினைப்பாங்க அதான் சொல்றேன்.இருந்தாலும் என் மகனுக்கு கண்டிப்பா அந்த பங்ஷன் நடக்கணும் அதான் இந்த கல்யாணத்துல நடந்த அந்த விஷயம் மறையட்டும்னு சொல்றேன் ... என்றார் விஜயா..
ஆமா கா நீ சொல்றதும் சரி தான் என்றார் விஜயாவின் மூத்த சகோதரன் ராஜேஷ்.
சரி நான் இப்போவே போன் பண்ணி சொல்லிடுறேன் என்றார் குணசேகரன்..
விஜயா, தேவி....
அத்தை.... என்று ஓடிவந்தாள் தேவி...
தேவி இசைய கெஸ்ட் ரூம் கூட்டிட்டு போ அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்...என விஜயா கூற சரி என்ற தேவி இசை வா என்றழைக்க இசை தயக்கமுடன் அவளுடன் அறைக்கு சென்றாள்.
எழிலரசன் அவன் அறைக்கு சென்று விட்டான்.
மாலை நேரம் நெருங்கி கொண்டிருக்க களைப்பில் உறங்கி கொண்டிருந்தான் எழிலரசன்.
அந்த நேரம் எழிலரசன் செல்பேசி சினுங்க உறக்கம் களைந்து எழுந்தவன் போனை அட்டன் செய்து காதில் வைத்து ஹலோ என்க.
மறுபுறம் " டேய் மச்சான் எங்க டா இருக்க.. இன்னைக்கு வரேன்னு சொல்லிருந்தியே என்ன டா ஆச்சு உனக்காக நாங்க எல்லோரும் இங்க வெயிட் பண்ணிட்டுருக்கோம் டா சீக்கிரம் வாடா என எழிலரசன் நண்பன் ஒருவன் கூறவும்.
கொஞ்சம் டயர்ட் தூங்கிட்டேன் ம்ம்ம் இதோ இப்போவே கிளம்பி வரேன் என்றவன் கிளம்பி தயாராகி நண்பரை பார்க்க சென்று விட்டான்...
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top