சுவாசம் 5
பெண் மாரியாதை கண்டு அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சி ஒருவரை தவிர்த்து...
புவனா என்ன இது என்று மனோகரன் தன் மனைவியிடம் அதிர்ச்சியுடன் கேட்கவும்
கலை நம்மள ஏமாத்திட்டு போய்ட்டாங்க... நம்ம குடும்ப மானத்தை காப்பாத்த இத விட்டா எனக்கு வேற வழி தெரியல என்ன மன்னிச்சுருங்க என புவனா கண்ணீருடன் கூறவும் மனோகரன் பேச்சற்று நின்றார் சில நிமிடம்..
ஏன் டி புவனா உன் பெரிய பொண்ணு ஓடி போனா அதுக்கு
என் பேத்தி வாழ்க்கை தான் கிடைச்சுதா உனக்கு என்றார் மஞ்சுளா கோபமுடன் ..
அத்தை நீங்க கொஞ்சம் சும்மா இருங்கிங்களா என அதட்டினாள் புவனா..
குணசேகரன் விஜயாவை பார்த்தவர் விஜயா கொஞ்சம் யோசிச்சு முடிவெடுக்கலாமே என்று கூறவும்இதுல யோசிக்க ஒண்ணுமே இல்லை.. இதுல நம்ம குடும்ப கௌரவம் மட்டும் இல்ல என் மகனோட மரியாதையும் அடங்கியிருக்கு....
என்றார் விஜயா..
சரி அவனுக்கு விருப்பமானு நீ கேட்டியா...என்றார் குணசேகரன்.
ஏன்.. அதெல்லாம் அவனுக்கு விருப்பம் தான்.. என்றார் புவனா சிடுசிடுப்புடன்.
அண்ணி அந்த பொண்ணு தான் ஓடிப்போய்டா.. அவ தங்கச்சி வேற இப்போ நம்ம குடும்பத்துக்கு மருமகளா வந்தா பாக்கிறவங்க என்ன பேசுவாங்க ஓடிப்போனவ தங்கச்சிய தான் எழிலுக்கு கட்டி வெச்சுருக்காங்கனு மறுபடியும் பேசிக்க மாட்டாங்களா என்றாள் வனஜா..
என் பொண்ணு முறை பொண்ணு தான சுருதிய ஏன் எழிலுக்கு கட்டி வைக்க கூடாது நீங்களே சொல்லுங்க என அவர் கூறவும் அவரை முறைத்து பார்த்த எழிலரசன் பொறுமை இழந்தான்...
என்ன நினைச்சுட்டுருக்கிங்க நீங்க உங்க இஷ்டத்துக்கு என்னன்னவோ பேசிட்டுருக்கிங்க.. சுருதிய என் தங்கச்சி மாதிரி தான் பாக்குறேன்.. வீணா தேவையில்லாம பேசி டைம வேஸ்ட் பண்ணாதீங்க.. என்றவன் நான் இசைய தான் கல்யாணம் பண்ணிக்குவேன்... அவ தான் என் பொண்டாட்டி எழிலரசன் அனைவரின் முன்னிலையிலும் கூற அனைவரும் அவனை அதிர்ச்சியுடன் பார்த்து நின்றனர்.
சுருதியும் ஸ்வாதியும் எழிலரசனை பார்த்து லேசாக புன்னகைத்து நிற்க..
சட்டென அவனை அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தாள் இசை.
எழிலரசன் அவளின் பார்வையை உணர்ந்தவன் அவளை பார்த்து லேசாக புன்னகைத்தான் காதலுடன் ❤...
எழிலரசனின் செயல்களை கண்ட இசை ஒன்றும் புரியாமல் மணமேடையில் அமர்ந்திருந்தாள்.
சரி சரி நாழி ஆகுறது முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள தாலிய கட்டுங்கோ என ஐயர் கூறவும் தட்டில் உள்ள தாலியை கையில் எடுத்தான் எழிலரசன்.
ஐயர் மந்திரத்தை கூற எழிலரசன் இசையரசியின் கழுத்தில் தாலி கட்டியவன் தன்னவளின் நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து அவளை தன் மனைவியாக்கி கொண்டான் முழுமனதுடன் .
சில நிமிடங்களில் இருவரும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கொள்ள எழிலரசனோ தன்னவளின் கரத்தை இருக்கமுடன் பற்றி கொண்டான்..
இசை எழிலரசனை குழப்பமுடனும் யோசனையுடனும் பார்க்க அவனோ இயல்பாகவே இருந்தான்.
மற்ற சடங்கு மற்றும் விருந்து முடிந்து அனைவரும் வீட்டிற்கு செல்ல தயாராகினர்..
இசை தன் பெற்றோரை பிரிய மனமில்லாமல் கண்ணீர் திவளயாக நின்றவளை மன வலியுடன் பார்த்து நின்றார் மனோகரன்.
என்னை மன்னிச்சுடு இசை உன்னை நல்லா படிக்க வெச்சு பெரிய ஆளாக்கி
பாக்க நினைச்சேன் ஆனா அது முடியாம போக நானே காரண மாயிட்டேன்..ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு நீ நல்லா இருப்ப மா அவர் வேதனையுடன் கண்களால் கூறவும்
தன் தந்தையின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட இசை அப்பா என அழைத்து கொண்டு மனோகரன் அருகில் செல்லும் முன்
ம்ம்ம் இப்போ பேசறதுக்குலாம் நேரம் இல்லை நல்ல நேரம் முடியறதுக்குள்ள மாப்பிள்ளையும் பொண்ணும் வீட்டுக்கு போயாகணும் என்று கூறிய விஜயா
எழில் இசைய சீக்கிரம் கூட்டிட்டு வா என்றார் கோபமுடன்.
எழிலரசனும் வா போகலாம் என்றவன் அவள் கரம் பற்றி அங்கிருந்து அவளை அழைத்து கொண்டு சென்று விட்டான்.
இசையோ கண்ணீருடன் தன் குடும்பத்தை பிரிந்து கணவருடன் சென்றாள் துயரத்துடன்...
எழிலரசனும் இசையும் மட்டும் ஒரு காரில் செல்ல அந்தந்த குடும்பத்தினர் அவரவர் காரில் ஏறி வீட்டிற்கு சென்றனர்.
மனோகரன் குடும்பத்தினர் தன் மகளிடம் ஒரு வார்த்தை கூட பேசமுடியாமல் அங்கேயே மனமுடைந்து நின்றனர்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top