சுவாசம் 4

ச்சி.... யாரும் என்ன புரிஞ்சிக்காம எதுக்கு இப்படி டார்ச்சர் பன்றாங்க... எல்லாம்... கோபமுடன்  சொல்லிவிட்டு பாத்ரூம் உள்ளே சென்று புகுந்து கொண்டான் அவன்...

மறுபுறம் விஜயாவின் இரு  அண்ணன் குடும்பமும் வந்திருந்தனர்.

விஜயா மூத்த  அண்ணன் ராஜேஷ் அவர் மனைவி சரோஜா மற்றும் அவர் மகள் ஸ்வாதி.

விஜயாவின் இரண்டாம் அண்ணன்
மூர்த்தி அவர் மனைவி வனஜா அவருக்கு ஒரு மகனும் மகளும் உண்டு .மகன் ஜெய் மகள் சுருதி .

ஸ்வாதிக்கு சிறு வயது முதலே சிவா  மீது ஆசை.. ஆனால் சிவாக்கு அந்த பெண்ணை பார்த்தாலே பிடிக்காது.. ஆனால் ஸ்வாதியோ அவனையே சுற்றி சுற்றி வருவாள்.

ஸ்வாதி இப்போது இங்கு வந்திருப்பதற்கு காரணம் இந்த திருமணத்தின் மூலம் சிவாவை தன்னை காதலிக்க வைப்பதற்கு தான்.

தன் அறையில் பிடிவாதமாக அமர்ந்திருந்தான் அவன்... அவன் தான் எழிலரசன் ...

அப்போது எழிலரசன் அறைக்கு சென்ற சிவா சில நிமிடங்களுக்கு பின் ஏதேதோ கூறி அவனை சம்மதிக்க வைத்து அழைத்து வந்தான்.

எழிலரசன் சில நிமிடத்தில் தயாராகி கீழே சென்றவன் முகம் புன்னகையில் பூரித்தது....
அங்கிருந்த அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யம்..இதுவரை திருமணம் வேண்டாம் என்று கூறிகொண்டிருந்தவன் இப்போது மட்டும் எப்படி சம்மதித்தான் என்று குழம்பினர் அனைவரும் ...

சில நிமிடங்களில் அனைவரும் தயார் ஆகினர்...ஒரு காரில் ஆண்களும் மற்றோரு காரில் பெண்களும் சென்றனர் .

பெண் வீட்டை நெருங்க எழிலரசனுக்கோ இனம் புரியாத
ஒரு உணர்வு தோன்றியது.
ஆனாலும் அதை அவன் பொருட்படுத்த வில்லை.

மனோகரன் மாப்பிளை வீட்டாரை நல் மரியாதையுடன் வரவேற்க அனைவரும் உள்ளே  சென்றனர்

இசையோ சற்று நேரத்தில்  தன் வாழ்க்கையே கேள்வி குறி ஆகப்போகிறது என தெரியாமல் தன் சகோதரியின் பெண் பார்க்கும் விழாவிற்கு மகிழ்ச்சியுடன் சிரித்த படி அவளை தயார் படுத்தி கொண்டிருந்தாள்...

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த புவனாவோ ஏய் கலை மாப்பிளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க சீக்கிரம் வாடி...இசை சீக்கிரம் இவள கூட்டிட்டு வா என சொல்லிவிட்டு காலில் சக்கரம் கட்டி விட்டது போல அங்கிருந்து சென்று விட

அக்கா வா போகலாம் ஒன்னும் கவலை படாத நல்லதே நடக்கும்... மாப்பிளை உன்னை பாத்து உன் அழகில மயங்கி இன்னைக்கே கல்யாணம் செய்துக்குவாரோனு எனக்கு தோணுது.....என்ற இசை நகைக்க..

ஐயோ நீ வேற சும்மா இரு டி என்றாள் கலை எரிச்சளுடன் .

கலையரசியை அழைத்து கொண்டு வெளியே சென்றாள் அவள் சகோதரி.

அங்கு பெரியவர்கள் முன்னிலையில் அமர்ந்திருந்த எழிலரசன் அந்த வீட்டை சுற்றி முற்றி பார்த்து கொண்டிருந்தான்.

சிறிய வீடாக இருந்தாலும் வண்ணம் தீட்டி புதுமையாகவும் சீராகவும் இருந்தது..

கலையை அழைத்து கொண்டு வெளியில் வந்த இசை அவளை பெரியவர்கள் முன் அழைத்து சென்றாள்..

இவ தான் என் மூத்த மகள் கலையரசி என மனோகரன் கூறவும் அனைவரின் பார்வையும் கலையரசி மீது விழுந்தது...

புவனா கலையரசியின் கையில் காபி தட்டை கொடுத்து மாப்பிள்ளை வீட்டாரிடம் கொடுக்க சொல்ல அவளும் அனைவருக்கும் காபி கொடுத்து மூத்தவர்களின் காலில் விழுந்து  ஆசீர்வாதம் வாங்கி கொண்டாள்..

பொண்ணு ரொம்ப அழகா இருக்காள எழிலரசன் தாயார் விஜயாவும் சித்தி சுஜாதாவும் பேசிக்கொண்டிருக்க. ஒரு பக்கம் ஸ்வாதி எழிலரசன் அருகில் நின்று கொண்டிருந்த சிவாவையே  பார்த்து கொண்டிருந்தாள்.

இவன் என் இளைய மகன் எழிலரசன்..எனவும் கலையரசியும் இசையும் ஒரே நேரத்தில் எழிலரசனை காண அடுத்த நொடி கலையரசி மனதில் பட்டாம்பூச்சி பறந்தது....அவள் அப்படியே சொக்கி நின்றாள்..

ஆனால் இசையின் இதயத்திலோ மின்னல் வெட்டியது.... கண்களில் கண்ணீர் வந்து விடவா என்று கேட்க அவளோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் தன்னவனை பார்த்தபடி...

எழிலரசனும் கலையை பார்த்து ஒரு லேசான புன்னகையை உதிர்த்து விட்டு அமைதியானான்.

அவனை கண்ட இசை மனதை கட்டுப்படுத்தி கொண்டு நின்றாள்.

பெரியவர்கள் அனைவரும் பேசி முடித்து சம்மதம் தெரிவித்து எழிலரசன் கலையரசியின் விருப்பத்தை கேட்கவும் கலை அரசி எழிலரசனும் இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.. இரு வீட்டாரும் அன்றே முகூர்த்த நாள் என்பதால் நிச்சயம் செய்ய முடிவு செய்தனர்..

இசை அங்கே நிற்க முடியாமல் இதோ வந்து விடுகிறேன் என கூறிவிட்டு தன் அறைக்கு ஓடி கதவை தாழ்போட்டு கொண்டவள் கட்டில் மேல் விழுந்து கதறினாள்...

எழிலரசன் தான் அக்கா கட்டிக்க போற மாப்பிளையா.. கடவுளே ஏன் என்னை இப்படி சோதிக்கிற...நான் அவனை  எவ்ளோ காதலிக்கிறேன்னு உனக்கே தெரியும்...தெரிஞ்சும் ஏன் இப்படி பண்ண....ம்ம் கல்யாணம் வேண்டாம்னு சொன்ன என்  அக்கா இப்போ தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கா ...

இப்போ நான் எழிலரசனை நான் விரும்புறேன்னு சொன்னா நிச்சயம் இந்த கல்யாணம் நின்னுடும்.... அப்பாவின் மானம் மரியாதை எல்லாம் போய்டும்... இதுக்கு நான் காரணமா இருக்க மாட்டேன்.. எழிலரசனுக்கும் அக்காவை பிடிசிருக்கு இனியும் அவர்கிட்ட போய் என் காதலை சொல்ல முடியாது.... வேற வழி இல்லை நான் தான் என் காதலை மறந்துடனும் ஆனா என்னால எப்படி முடியும்.... என்று கதறினாள் அவள் ...

சற்று நிமிடங்களில் தன்னை நிதானித்தவள் தன் கண்களின் கண்ணீரை துடைத்து விட்டு என்னால முடியும்...எழிலரசனை என் அக்காவின் வாழ்க்கைக்காக மறக்க  முடியும்.... எனக்கு என் காதலை விட என் அக்கா தான் முக்கியம்.... என் காதல என் அக்காவுக்காக விட்டு கொடுக்குறதுல
எனக்கு எந்த கவலையும் இல்லை என்று அங்கிருந்து எழுந்து குளியலறை உள்ளே சென்று முகத்தை கழுவிவிட்டு வெளியே வந்தவள் ஒரு டவலால் முகத்தை துடைத்து கொண்டு கீழே சென்றாள் பொய்யான சிரித்த முகமுடன் ....

இரு வீட்டாரின் சம்மந்தத்துடன் திருமண தேதியை குறித்து விட்டு சில நிமிடங்களில் எழிலரசன் குடும்பம் அங்கிருந்து சென்று விட்டனர்....

கலையரசி வெட்கமுடன்  அறைக்கு ஓடினாள்... இசை தன் உணர்வுகளை கட்டு படுத்தி வைத்திருந்தாள்...

இசையரசிக்கு தேர்வுகள் தொடங்கியது...ஆனால் அவளால் அதில் கவனம் செலுத்தி படிக்க முடியாமல் போனது...கல்லூரி முடிந்து வீட்டிற்கு வருபவள் தன் அறையில் அமர்ந்து அழுது தீர்ப்பாள்...

நாட்கள் சென்றது....

இசைக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை விட பட்டது..

ஒரு நாள் வீட்டில் பெரியவர்கள் அனைவரும் வெளியே சென்றிருப்பதனால் இசை தன் அண்ணன் மகனுடன் விளையாடி கொண்டிருக்க அறையில் இருந்த கலையரசியோ யாருடனோ போனில் பேசிக்கொண்டு வெளியில் வந்து இசையின் அருகில் அமர்ந்தாள்..

போனில் யாரு என இசை சைகை காட்டி கேட்கவும் கலை வெட்கமுடன் உன் வருங்கால மாமா என்கவும்  அவளின் கண்களில் கண்ணீர் தேங்கியது...

அதை வெளிக்காட்டி கொள்ளாதவள் அக்கா நான் உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன் என்று அங்கிருந்து எழுந்து சமையல் அறைக்கு சென்று விட்டாள் இசை..
சமையல் அறைக்கு சென்றவள்
அங்கேயே நின்று அழுதாள் தன் காதலை எண்ணி...

இனிமேல் நம் காதல் வெற்றி அடைய போவதில்லை... என தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொண்டு கலையரசிக்கு காபி போட்டு எடுத்து கொண்டு கிஷோர்க்கு ஒரு டம்ளரில் பால் எடுத்து கொண்டு வெளியே சென்றவள் காபியை  கலையிடம் கொடுத்து விட்டு பாலை கிஷோரிடம் கொடுத்து விட்டு அவள் அறைக்கு சென்று விட்டாள்...

நாட்கள் நகர்ந்தது...

குணசேகரன் குடும்பம் கலையரசிக்கு புடவை நகை எடுக்க செல்வதால் கலையையும் இசையையும் உடன் அழைத்து செல்ல முடிவு செய்தனர்..
ஆனால் இசை நான் என் தோழியை பார்க்க செல்கிறேன் என ஒரு காரணத்தை சொல்லி  அதை மறுத்து விட்டாள்..

எழிலரசனுக்கும் ஆபீசில் ஒரு முக்கிய வேலை என்பதால் அவனால் செல்ல முடியாமல் போனது....

கலையரசி, புவனா ஜானகியை அழைத்து கொண்டு சென்றாள்... அனைவருக்கும் புடவை நகை மற்றும் திருமணத்திற்கு தாலி என எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்தனர்.. 

இசையிடம் கலை அனைத்தையும் காட்டி மகிழ்ந்தாள்...இசையும் தன் சகோதரியின் புன்னகை கண்டு உள்ளம் மகிழ்ந்தாள்...

ஒரு நாள் இசை வீட்டில் அவள் அறையில் இருக்க இசை இங்க வா  புவனா சத்தமாக அழைத்தார்.

இசையும் கீழ சென்றவள் புவனா அருகில் சென்று என்ன மா என்று கேட்க..

இதோ பாரு... மாப்பிளையோட மாமா  பொண்ணு...அன்னைக்கு கூட மாப்பிளை வீட்டு கரங்களோடு வந்திருந்தாங்களே   அவங்க தான் இந்த பக்கம் ஏதோ வேலை விஷயமா வந்திருக்காங்க அப்படியே வீட்டிற்கு வந்திருக்காங்க...ஆனா கலை கோவிலுக்கு போயிருக்கா இல்லையா ... அவ வரவரைக்கும் நீ கொஞ்சம் பேசிட்டுரு என்க.
சரி மா என்றாள் இசை.

சுருதி ஹாலில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

அவள் அருகில் சென்ற இசை ஹாய் என்க சற்று தலையை தூக்கி பார்த்த சுருதி ஹாய்.. யூ ஆர் இசை..

இசை,ஆமாம் ..அக்கா இப்போ வந்துருவா நீங்க உட்காருங்க... நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்

ஸ்வாதி, நோ இசை.. இப்போ தான் ஆன்டி காபி தந்தாங்க... அதோட நான் உன் சிஸ்டர பாக்க வரல... உன்னை பாக்க தான் வந்தேன்..  என்றவளை புரியாத பார்வை பார்த்தாள் இசை...

இல்லை இசை எழில் உன்னை பத்தி சொன்னதும் எனக்கு உன்னை பார்க்க ஆசை வந்துடுச்சு அதான்.. வேற ஒன்னும் இல்லை..

இசைக்கு அவள் கூறுவது ஒன்றும் புரியவில்லை ..ஓ..அது நான் இல்லை என் அக்கா கலை.. என்றாள் அவள்

ஓ ..சாரி ஐம் சுருதி ...நைஸ் டு மீட் யூ... என கை குலுக்களுடன் ஆரம்பித்தது அவர்கள் நட்பு...

நான் எழிலரசனின் சின்ன மாமா மகள் எழிலரசன் மாமாவோட பெஸ்ட் பிரண்ட்னும் சொல்லலாம் .

ஓ..

சில மணி நேரத்திற்கு பின் சுருதி அங்கிருந்து சென்று விட்டாள்.

நாட்கள் சென்று எழிலரசன் திருமண நாளும் வந்தது...

ஒரு மிகப்பெரிய திருமண மண்டபத்தில் திருமணவிழா ஏற்பாடு செய்திருந்தனர்..

காலையில் எழிலரசன் தன் திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்தான்... திருமண வேலைகள் பரபரப்புடன் நடந்து கொண்டிருந்தது.. உற்றார் உறவினர் திருமண விழாவில் கலந்து கொள்ள வருகை தந்து கொண்டிருக்க குணசேகரன் விஜயாவும்,  மனோகரனும் புவனாவும் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று கொண்டிருந்தனர்... சிவா வேலை விஷயமாக வெளி ஊர் சென்றிருந்தான் ...அதனால் அவனால் மட்டும் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று எழிலரசனுக்கு மிகுந்த வருத்தம்...சிவாவிற்கும் தான் .

முகூர்த்த நேரம்  நெருங்கி கொண்டிருக்க அய்யர்  மாப்பிளைய அழைச்சிட்டு வாங்கோ என கூறவும் எழிலரசன் பட்டு வேஷ்டி சட்டையில்  மாப்பிளையாக வந்து மணமேடையில் அமர்ந்தவன்
அய்யர் கூறும் மந்திரங்களை சொல்லிகொண்டிருந்தான். 

அம்மா இந்த கல்யாணம் போலவே என் கல்யாணமும் நடக்கனும்   நான் என்ன தான் செய்ய இந்த சிவா என் காதலை புரிஞ்சிக்கவே மாட்டேங்குறான்   இப்போ ஊருக்கு வேற போயிருக்கான்..என ஸ்வாதி சரோஜாவிடம் புலம்பி கொண்டிருந்தாள்..

அமைதியா இரு டா.. நீ ஏன் கவலை படுற... இந்த கல்யாணம் முடிஞ்ச கையோடு உன் கல்யாணம் . என்றாள் சரோஜா .

மா இல்லை மா சிவா மாமா ..

நீ வாய மூடு ஸ்வாதி... நான் பாத்துக்கிறேன் விடு... என்றார் அவள் அன்னை..

பொண்ண அழைச்சிட்டு வாங்கோ என அய்யர் அழைக்கவும் புவனா கலையை அழைத்து வர  அவள் அறைக்கு  சென்றார்...

கலை கலை என்று அவர் அழைக்கவும் அங்கு யாரும் இல்லை... புவனா அந்த அறை முழுவதும் தேடியும் கலை அங்கு இல்லை...

புவன லட்சுமிக்கு மிகுந்த அதிர்ச்சி... மீண்டும் ஒரு முறை அந்த அறை முழுவதும் தேட கலையரசி எங்கும் இல்லை... 

மணப்பெண் திருமண மண்டபத்தில் இல்லை என மாப்பிளை வீட்டாருக்கும்  உறவுகளுக்கும் தெரிந்தால் எவ்வளவு அவதூறாக பேசுவார்கள் என்பது உலகறிந்த உண்மை.

அதை நினைத்து  உள்ளம் பதறிய புவனா என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

எழிலரசன் அண்ணி தேவி கலையை அழைக்க மணமகள் அறைக்கு வந்தவள் அம்மா.. பொண்ண கூட்டிட்டு வர சொன்னாங்க... எங்க அவ என்று கேட்கவும் புவனா கண்களில் கண்ணீர் பெறுகியது....கலையை காணவில்லை  என அழுது கொண்டே கூறினாள்...

அதிர்ச்சியடைந்த தேவி என்ன சொல்றிங்க உங்க பொண்ண காணுமா...  தெரிஞ்சி தான் பேசுறீங்களா... முகூர்த்தத்திற்கு இன்னும் 5நிமிடம் கூட இல்லை ... இப்போ வந்து பொண்ண காணும்னு சொன்னா என்ன அர்த்தம்...என்றாள் கோபகுரலில்..

இல்லை மா அவ இங்க தான் எங்கனா போயிருப்பா.. என்று புவனலட்சுமி கூறவும்

இங்க இருப்பானா எங்க போனா உங்க பொண்ணு....இப்படி தான் பொறுப்பில்லாம பேசுவீங்களா.... இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லைனு முன்னாடியே சொல்ல வேண்டியது தான...

இல்லை மா...

போதும் நீங்க எதுவா இருந்தாலும் எங்க அத்தை கிட்ட பேசிக்கோங்க என்று அந்த அறையை விட்டு வெளியே வந்த தேவி நேராக விஜயாவிடம் சென்று விவரத்தை கூறினாள்.

என்ன... தேவி நீ என்ன சொல்ற.... என கேட்டு விட்டு நேராக மணப்பெண் அறைக்கு சென்ற விஜயா புவனலக்ஷ்மியிடம் சென்று சம்மந்தி..தேவி சொல்றது நிஜமா....என கோபமுடன் கேட்கp.

புவனா தலை குனிந்து கண்ணீர் வழிந்தபடி நின்று கொண்டிருந்தார்..

உங்க பொண்ணுக்கு பிடிக்கலனா முன்னாடியே எங்க கிட்ட  சொல்லிருக்க வேண்டியது தான....இப்போ உங்க பொண்ணால  எங்க குடும்ப மானமே போச்சு...ஓடுகாலி பொண்ண பெத்துட்டு இப்போ அழுது என்ன ஆக போகுது...

சம்மந்தி அவ இங்க தான் இருப்பா, அவ எங்கயும் போயிருக்க மாட்டா.....

எனக்கு உங்களுடைய எந்த விளக்கமும் வேணாம்.. நீங்க என்ன பண்ணுவிங்களோ தெரியாது... எனக்கு... இப்போ இதே முகூர்த்தத்துல  என் மகன் கல்யாணம் நடக்கணும்....இந்த கல்யாணம் நின்னா எங்க குடும்ப மானமே போய்டும்... இந்த சொசைட்டில இருக்க எங்க மானம் கவுரவம் எல்லாம் கெட்டு போய்டும் அப்புறம் யாரு எங்கள மதிப்பா..அது நடக்க நான் விட மாட்டேன்... என்றார் புவனா சினத்துடன்.

ஆனா சம்மந்தி இப்போ எப்படி முடியும்... கலை எங்க இருக்கானு கண்டுபிடிக்கணும்... அப்புறம் கல்யாணத்த வெச்சுக்கலாம்...

என்ன அப்புறமா.... ஓடி போனவள கூட்டிட்டு வந்து மறுபடியும் என் புள்ளைக்கு கட்டி வைப்பிங்களோ...ஏன் உங்க ரெண்டாவது பொண்ணு இருக்காளே அவள மறந்துட்டிங்களா...

அய்யோ அவ சின்ன பொண்ணுங்க அவ எப்படி...

எனக்கு அதெல்லாம் தெரியாது... இன்னைக்கு உங்க சின்ன பொண்ணுக்கும் என் மகனுக்கும் தான் கல்யாணம்...இந்த கல்யாணம் நடந்தே ஆகணும் இல்லைனா உங்க குடும்பத்தை நான் சும்மா விட மாட்டேன். சீக்கிரம் போய் அவள ரெடி பண்ணி மண மேடைக்கு அனுப்புங்க இல்லை... உங்க குடும்பத்தயே அழிச்சுடுவேன் ஜாக்கிரதை..தேவி அவளை போய் கூட்டிடு வா... கோபமுடன் கூறிவிட்டு விஜயா சென்று விட்டார்...

ம்ம் அத்தை.. என அவளும் சென்று விட்டாள் .

கடவுளே  ....இசை... சின்ன பொண்ணு அவ எப்படி .... ஐயோ கடவுளே.. எங்களுக்கு எதுக்கு நீ இப்படி ஒரு  சோதனைய குடுத்த... என அழுதுகொண்டிருக்க தேவி இசையை அழைத்து வந்தாள்.

மா என்ன மா இங்க நிக்குற... அக்காவ கூப்பிடுறாங்க எங்க.. மா நீ ஏன் மா டல்லா இருக்க  என்று தன் அன்னையின் முகம் பார்த்து கேட்டாள் இசை..

ம்ம் உங்க அக்கா ஓடி போய்ட்டா என்றாள் தேவி கோபமுடன்.

என்ன என அதிர்ச்சி அடைந்த இசை மா அக்கா எங்க என்று வினவ புவனா கதறி அழுத படி நின்றுகொண்டிருந்தார்.

மா உன்னை தான் மா. அக்கா எங்க...இவங்கலாம் என்னமா சொல்றாங்க எனக்கு ஒன்னும் புரியல இசை அவள் தாயிடம் கேட்டு கொண்டிருக்க.

உங்க அக்கா நம்ம எல்லோரையும் ஏமாத்திட்டு ஓடி போய்ட்டா இசை என்று மேலும் கதறி அழுதார் புவனா.

இசை கண்ணீருடன் புவனாவை பார்க்க இசை அருகில் வந்த புவனா இசை எனக்கு வேற வழி தெரியல... நம்ம குடும்பம் மானம் இன்னைக்கு உன் கையில் தான் இருக்கு நீ தான் அத காப்பாத்தனும் என தன் மகளின் கரம் பற்றி கேட்டார்.

மா நான் என்ன பண்ணணும்... சொல்லு மா என்றாள் இசை அழுது கொண்டே...

இசை கலைக்கு பதில் நீ மண மேடையில் அமரணும்...

மா...... என்றதிர்ந்தாள் இசை அதிர்ச்சியுடன்...

ஆமா இசை...

மா..  நான் எப்படி மா... அக்கா இடத்தில...அக்கா எங்கயும் போயிருக்க மாட்டா... நம்ம போலீஸ்ல கம்ளைன்ட் குடுக்கலாம்... அவங்க தேடி கண்டு பிடிச்சிடுவாங்க...

இப்போ அதுக்கு நேரம் இல்லை... ஒழுங்கா போய் மணமேடைல போய் உட்காரு..இல்லை அவ்ளோ தான்  என்றாள் தேவி கண்டிப்புடன்...

இசை இந்த கல்யாணம் மட்டும் நடக்கலன்னா நீ உன் அம்மாவ உயிரோடு பார்க்க முடியாது....உன் அக்கா என் மானத்த வாங்கின மாதிரி நீயும் வாங்கிடாத... உன்னை கைஎடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன் என புவனா கதறி அழ வேறு வழியின்றி இசையும் அறை மனதுடன் சம்மதம் தெரிவித்தாள்.

இசை சில நிமிடத்தில் தயாராகி மணமேடைக்கு சென்று எழிலரசன் அருகில் அமர்ந்தாள்...

பெண் மாறியதை கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி அங்கிருந்த ஒருவரை தவிர...

தொடரும்... 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top