சுவாசம் 3
வழக்கம் போல் மாலை கல்லூரி முடிந்து இசை தன் வீட்டிற்கு சென்றாள்...
தன் காதலனை இனி கல்லூரியில் பிரிய போகிறோம் என நினைத்தாலும் வீட்டிற்கு வந்து அவள் தன் குடும்பத்தை கண்டதும் அனைத்தும் மறந்து போனது அவள் மனதிலிருந்து....
வீட்டிற்கு சென்றவள் அம்மா.... நான் வந்துட்டேன் என்றவாரு உள்ளே சென்றவள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தன் அண்ணன் மகன் கிஷோர் ஹாலில் அமர்ந்து விளையாடி கொண்டிருப்பதை பார்த்து அவன் அருகில் சென்று என் கிஷோர் செல்லம் ... சின்ன பாட்டி,பெரிய பாட்டி உன் மம்மி, எல்லோரும் எங்க டா வீடே இப்படி அமைதியா இருக்கு என்று தன் கண்களை அங்கும் இங்கும் அலைய விட்டு கொண்டிருந்தாள் இசை.
அத்தே... மம்மியும் பாட்டியும் கோவிலுக்கு போயிருக்காங்க.பெரிய பாட்டி பக்கத்து வீட்டு பாட்டிக்கூட பேசிட்டுருக்காங்க..கலை அத்தை உள்ளே ரூம்ல இருக்காங்க என தன் பிஞ்சு குரலால் இசையிடம் கூறியவன் மீண்டும் தன் விளையாட்டை தொடர்ந்தான்..
ஓகே டா தங்கம் என அவன் கன்னத்தை கிள்ளியவள் நேராக தன் அக்காவின் அறைக்கு ஓடினாள்..
அறைக்கு ஓடிய இசை படுக்கயில் உருண்டு கொண்டிருக்கும் தன் அக்காவை ஓடி கட்டி அனைத்து கொண்டாள்...
பதறி போய் எழுந்து அமர்ந்தவள் அடியே இசை என்ன டி வந்ததும் வராததுமா.பயந்தே போயிட்டேன்.சரி சொல்லு காலேஜ் எப்படி போச்சு.... என்று அவள் கேட்கவும்..
ம்ம் கா ஏதோ போச்சு....
சரி சொல்லு உன் அடுத்த பிளான் என்ன?...காலேஜ் முடிச்சிட்ட அடுத்து என்ன செய்ய போற??
என்ன டி நான் சொல்ல.....அம்மா என்ன டா எனக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடிவு பண்ணிட்டாங்க... இதுல நான் எங்க நெக்ஸ்ட் பிளான் போட... நாளைக்கு மறுநாள் மாப்பிளை வீட்டுக்காரங்க வராங்களாம். இப்போ ரொம்ப முக்கியம் பாரு எனக்கு கல்யாணம்.. என வாடிய முகமாய் கூறினாள் கலையரசி.
அக்கா என்ன சொல்ற கங்கிரேட்ஸ்...எவ்ளோ ஹாப்பி நியூஸ் தெரியுமா...என கலையரசியை கட்டிகொண்டாள் இசை.
இசையை சற்று தள்ளியவள் போடி நானே கல்யாணம் நடக்குமானு சந்தேகத்தில இருக்கேன்... என உதட்டை சுழித்தாள் கலை.
ஏன் கா??? என்ன?...உனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லையா....
இல்லை டி எனக்கு இன்னும் கொஞ்சம் படிக்கணும்... என்றாள் கலை...
அக்கா ஆனா அம்மா இதுக்கு சம்மதிப்பாங்கனு நீ நினைக்கிறியா...
இல்லை டி ஆனா எப்படி என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும் அதுவும் யாருனு தெரியாத ஒருத்தன.. என சொல்லி கொண்டிருக்கும் போதே கலை இசை என கத்தி கொண்டே இசையின் அம்மா அறைக்குள் நுழைந்தார்...
ஏய் கலை வீடு என்ன நிலைமைல இருக்கு...நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்ணிட்டுருக்கீங்க...கொழந்தய அங்க ஹால்ல தனியா விட்டு..என்றவர் திரும்பி இசையை பார்த்து ஏன் டி இசை இன்னும் நீ டிரஸ் கூட மாத்தாம இங்க என்ன பண்ணிட்டுருக்க உனக்கு அத வேற சொல்லனுமா உன் ரூம்க்கு போய் பர்ஸ்ட் பிரெஷ் ஆகிட்டு வா,
மா அது இருக்கட்டும் அக்காவ நாளைக்கு மறுநாள் பொண்ணு பாக்க வராங்கனு சொன்னா, நிஜமாவா...
ஆமாடி...
ஏன் மா திடீர்னு...
ஏன்னா. . திடீர்னு ஒரு சம்மதம் வந்துருச்சு... வேணான்னு சொல்ல முடியல... மாப்பிளை வீட்டுகாரங்க தங்க மானவங்களாம்.... மாப்பிளை பிஜி முடிச்சிருக்காராம் நேத்து தான் காலேஜ் கடைசி நாளாம்...ரொம்ப வசதியானவங்க....
அவங்களே நம்ம சம்மதம் பரவாயில்லை பொண்ணு நல்ல பொண்ணா, படிச்சவளா இருந்தா மட்டும் போதும்னு சொல்லிருக்காங்க...எப்படி இவ்ளோ நல்ல சம்மதத்த வேணாம்னு சொல்றது அதான் அப்பாவும் சம்மதிச்சுட்டாரு...
ம்ம் சரி... அக்கா ஆல் த பெஸ்ட் என்ற இசை அங்கிருந்து அவள் அறைக்கு ஓடினாள் .
" இவ வேற "என முனுமுனுத்தாள் கலை.
ஏய் கலை முதல்ல இங்கிருந்து எழுந்து போய் வீட்டு வாசல பெருக்கு... டைம் என்ன தெரியுமா 5 ஆக போகுது,
சரி வரேன் போ... சிடுசிடுத்தாள் கலை.
உன் அண்ணி பாத்திரத்த கழுவிட்டுருக்கா, நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன் என விறு விறு என அறையை விட்டு வெளியில் சென்று விட்டார் புவனா.
ச்ச....இந்த அம்மாவுக்காகவே சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு போகணும் என எழுந்து சென்று வீட்டை ஒதுக்கி வாசலை கூட்டிவிட்டு வீட்டிற்கு வந்தாள் கலை ...
பக்கத்து வீட்டிற்கு சென்று ஊர் கதை பேசிவிட்டு வீட்டிற்கு வந்த மஞ்சுளா ஏன் டி கலை உனக்கு, கல்யாணம்னு சொன்னதும் பொறுப்பு வந்துருச்சுபோல என சிரித்து கொண்டே வீட்டிற்கு சென்றாள்...
மஞ்சுளாவை கழுத்தை திருப்பி பார்த்த கலையரசி... இந்த கிழவிக்கு வேற வேலையே இல்லை முனு முனுத்துகொண்டு வேகமாக தன் அறைக்கு ஓடிவிட்டாள்.
புவனா மஞ்சுளாவை பார்த்தவர் அத்தை எங்க போனீங்க... சரி இருங்க காபி கொண்டு வரேன் என சமையல் அறைக்கு சென்று காபி போட தொடங்கினாள்.
பாத்திரத்தை கழுவி முடித்த
ஜானகி காசிய பாலை ஒரு டம்ளரில் ஊற்றி சர்க்கரை போட்டு வெளியே எடுத்து வந்தவள் டேய் கிச்சு... (கிஷோர் )..கிச்சு என அழைத்ததும் மம்மி என ஓடி வந்தான் கிஷோர்.
இந்தா பாலை குடி என டம்ளரை அவன் வாயில் வைத்து ஜானகியே தன் மகனுக்கு புகட்டினாள்.புவனா காபி போட்டு கொண்டு வந்து மஞ்சுளாவிடம் கொடுத்து விட்டு கலை அறைக்கு சென்று அவளுக்கும் கொடுத்து விட்டு சமையல் அறைக்குள் சென்று விட்டார்.
அறைக்கு சென்ற இசை தன் காலேஜ் பாக்கை கட்டிலில் போட்டு விட்டு பாத்ரூம் உள்ளே சென்று புகுந்து கொண்டாள்.
சில நிமிடங்களுக்கு பின் குளித்து முடித்து ஒரு நீல நிற சுடிதாரை அணிந்து கொண்டு வெளியே வந்து கட்டிலில் பொத்தென விழுந்தவள் அனாந்து சீலிங்கை பார்த்தபடி டேய்... ஐ லவ் யூ டா என் லவ்வ உன் கிட்ட இனிமேலும் என்னால சொல்ல முடியுமானு தெரியல...ஆனா என் கழுத்துல தாலினு ஒன்னு ஏருச்சுனா அது உன் கையால் மட்டுமா தான் இருக்கும் இல்லை அது தூக்கு கயிறாதான் இருக்கும்
என்றவளின் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.
இசை முதன் முதலில் கல்லூரி சேர்ந்த அன்று அவள் மனதை பறித்து கொண்டவனும் அவன் நண்பர்களும் இசையை ரேகிங் எனும் பெயரில் வம்பிழுக்க இசைஅவன் மீது எரிச்சலடைந்தவள் அவன் மீது வெறுப்பு மட்டுமே கொண்டாள்.. அவனை கண்டாலே முகத்தை சுழித்தாள் இசை..
நாட்கள் நகர அவனின் நற்குணம் நண்பர்கள் என்றால் உயிரையே கொடுக்கும் தோழமை, பெண்களை சகோதர உணர்வோடு மட்டுமே பார்க்கும் கண்கள், அவன் அறிவின் ஞானம், அவன் அழகு, என அவன் மீது இசை அவளை அறியாமலே காதல் கொண்டாள்.
இரண்டு வருடம் காதலித்தவளுக்கு தன் காதலை அவனிடம் சொல்லும் தைரியம் ஒருநாளும் இல்லை... நாளை கல்லூரியில் அவனை பார்க்கும் கடைசி நாள் சொல்லிவிடலாம் என துடிக்கிறது இதயம்... விதி விடுமா....????
********
இசை என அழைத்து கொண்டே எழிலரசன் அறைக்குள் நுழைய கண்களில் உள்ள கண்ணீரை துடைத்து கொண்டு தன் ஒரு கையை தரையிளும் மற்றோரு கையை தன் வயிற்றில் வைத்து கொண்டு எழும் முன் இசை பாத்துடா என எழிலரசன் தன்னவளை பிடிக்கும் முன் தன் கரத்தை அவன் முன் நீட்டியவள் யாரும் எனக்கு ஹெல்ப் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு அவளே எழுந்து நின்றாள்.
எழிலரசன் அவளை மன வலியுடன் ஒரு பார்வை பார்த்தவன் முகத்தை திருப்பி கொண்டு பால்கனிக்கு சென்று விட்டான்.
இசை அவனை பார்த்து முறைத்து விட்டு கீழே சென்று ஹாலில் அமர்ந்தாள்..
சுஜாதாவும் விஜயாவும் அவளுடன் பேசி கொண்டிருக்க எழிலரசன் கண்களில் கண்ணீர் தேங்கியது...
******************
அதிகாலை காலை நேரம்... பறவைகள் சத்தத்துடன் ஆதவன் கண் விழித்து கொண்டிருந்தான்....
ஒரு மிகப்பெரிய கட்டிலில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கி கொண்டிருந்தான் ஒரு இளைஞன்..
டேய் கண்ணா... என அழைத்து கொண்டு உள்ளே நுழைந்தார் ஒரு பெண்மணி...
டேய் கண்ணா எழுந்துரு டா....
போர்வையை சற்று விளக்கி கண்விழித்தவனோ என்ன மா என்றான் உறக்க கலக்கத்தில்...
டேய் எழுந்துரு டா இன்னைக்கு உனக்கு பொண்ணு பார்க்க போறோம்ல சீக்கிரம் வா டா... என்றார் அவனின் தாய் விஜயா.
மா... நான் எங்கேயும் வரல...மா எனக்கு எதுக்கு இவ்ளோ சீக்கிரம் கல்யாணம்..நேத்து தான் மா எனக்கு காலேஜ் பினிஷ் ஆச்சு... இதுக்குள்ள என்ன அவசரம் கல்யாணத்துக்கு...
டேய் இது உன் அப்பாவோட முடிவு... இதை யாராலயும் மாத்த முடியாது...ஒழுங்கா கிளம்பி சீக்கிரம் கீழ வா .. என்ற விஜயா கண்டிப்புடன் கூறிவிட்டு வெளியில் சென்று விட்டாள்.
அவன் முகம் வாடியது....
டேய் அண்ணா என்றழைத்து கொண்டு இன்னொரு வாலிபன் வந்தான்..
படுக்கையில் அமர்ந்து கொண்டிருந்தவன் வந்தவனை பார்த்து என்ன டா என்று எரிந்து விழுந்தான்.
டேய் அண்ணா என்ன டா இப்படி இன்னும் பெட்லயே இருக்க...இன்னைக்கு உனக்கு பொண்ணு பார்க்க போறோம் ஞாபகம் இருக்கா இல்லையா ... என்று வினவ...
டேய் நீ வேற கோபத்தை கிளறாத டா... எனக்கு கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை... எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்து டா.. என்றான் அவன் சிடுசிடுப்புடன் .
அண்ணா என்ன பேசுற டா... தெரிஞ்சி தான் பேசுறியா... இது பெரியப்பாவோட முடிவு இத யாராலும் மாத்த முடியாது.. சீக்கிரம் கிளம்பி கீழே வா... என்ற வாலிபன் அங்கிருந்து சென்று விட்டான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top