சுவாசம் 29

இசைக்கு இதய துடிப்பு குறைந்து கொண்டே சென்றது...

குழந்தையை ஆபரேஷன் செய்து வெளியில் எடுத்தவர்கள் குழந்தையை அப்சர்வேஷனில் வைத்தனர்..

இசைக்கு அதிகமாக மூச்சுதிணறல் ஏற்பட்டிருந்தது...அவளுக்கு ஆக்சிஜன் வைக்கப்பட...அவளது நாடிதுடிப்பும் இதய துடிப்பும் குறைந்து கொண்டே செல்ல
இசையை உடனடியாக ஐசியூ விற்கு மாற்றினர்...

எமர்ஜென்சி வார்டில் இருந்து வெளியே வந்த மருத்துவர்
மிஸ்டர் எழில்...என்றழைக்க

அவர் அருகில் சென்றவன் மேடம் சொல்லுங்க.. என்ன ஆச்சு.. என்று பயத்துடன் வினவியவன் குரல் தழுதழுத்தது.

மிஸ்டர் எழில்.. உங்க ஒய்ப்க்கு ஆபரேஷன் பண்ணி குழந்தைய வெளிய எடுத்தாச்சு...பெண் குழந்தை பிறந்துருக்கு...குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. குழந்தை ஆரோக்கியமாவே இருக்கு...

அங்கிருந்த அனைவரது முகத்திலும் லேசாக புன்னகை மலர்ந்தது..

டாக்டர் குழந்தைய நாங்க பாக்கலாமா என்றாள் சுஜாதா..

இல்லை இப்போதைக்கு குழந்தைய பாக்க முடியாது...குழந்தை டெலிவரி டேட் க்கு முன்னாடி வலி வராம சீக்கிரம் பிறந்ததால குழந்தைய இப்போ அப்சர்வேஷன்ல வெச்சுருக்கோம்...டூ டேஸ்க்கு அப்புறம் நீங்க பேபிய பாக்கலாம்.. என்றார் மருத்துவர்..

பட் அவங்க ஹார்ட் பீட் அண்ட் பல்ஸ் லோ ஆகிட்டே போகுது..அவங்க ரொம்ப கிரிட்டிக்கல் ஸ்டேஜ்ல தான் இருக்காங்க...நாங்க ட்ரீட்மென்ட் பண்ணிட்டு தான் இருக்கோம்.. ஆனாலும் எங்களால இப்ப எதுவும் சொல்ல முடியாது..என கூறிவிட்டு மருத்துவர் அங்கிருந்து சென்று விட்டார்.

எழில் மருத்துவர் கூறியதை கேட்டவன் அங்கேயே முட்டியிட்டு அமர்ந்து கதறி அழுதான்...

இசை.... என சத்தமாக கத்தி அழுதவனை ரவியும் குணசேகரனும் சமாதானம் செய்ய முயற்சிக்க...

ஐயோ...கடவுளே... எதுக்கு எங்கள இப்படி சோதிக்கிற.. என் பொண்ணுக்கு எதுவும் ஆகாம காப்பாத்து.. என புவனலக்ஷ்மி கண்ணீர் விட்டு நின்றார்...

உங்கள நம்பி தான மாப்பிளை என் பொண்ண உங்க வீட்டுக்கு அனுப்புனோம்...உங்களுக்கு பிடிக்கலனபோது அவளை எங்க வீட்டுக்கு அனுப்பி வெச்சுருக்க வேண்டியது தான...ஆனால் இப்படி அவளை இந்த நிலைமைல படுக்க வெச்சுட்டிங்களே..என் பொண்ண நாங்க முழுசா பறிகொடுத்துருவோம் போல..என்றார் மனோகரன் அவனை நோக்கி..

அவளை கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வெச்சாலும் எல்லா பிரச்சனையும் சரி ஆகி புருஷன் வீட்ல நல்லா வாழுவானு பாத்தோம் ஆனால் இப்படி மண்ணுக்கு இறையாக போறான்னு... என புவனலட்சுமி கூறி முடிக்கும் முன் அத்தை.. போதும் நிறுத்துங்க... என்று கத்தினான் எழில்...

அவர்கள் அவனை வியப்புடன் பார்த்து கொண்டு நிற்க எதுக்கு இந்த மாதிரிலாம் பேசுறீங்க.. உங்களுக்கு வேணா நம்பிக்கை இல்லாம போகலாம்.. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு.. என் இசைக்கு எதுவும் ஆகாது.. அவ என்ன விட்டு போக மாட்டா.. இன்னொரு முறை இந்த மாதிரி பேசாதீங்க ப்ளீஸ்..என்றான் எழில் அழுத்தமாக..

தெரிஞ்சா மாதிரி பேசாதீங்க.. எங்களுக்கு அவள பிடிக்கலனு நாங்க உங்க கிட்ட வந்து சொன்னோமா.. நீங்களா ஒன்னு கற்பனை பண்ணிக்கிட்டு இங்க வந்து பேசிட்டிருக்கிங்க... அவள நாங்க எங்க வீட்டு மருமகளா பாக்கல.. எங்க வீட்டு பொண்ணா தான் பாத்தோம்.. அவ இப்படி முட்டாள் தனமான காரியத்தை பண்ணதும் உடனே எங்க மேல பழி போடுவீங்களா என்றார் சுஜாதா கோபமாக..

எழில் அழுது கொண்டு நின்றவன் நினைவில் இசையின் வார்த்தைகள் எட்டி பார்த்தது...

என்னங்க நான் போறதுக்கு முன்னாடி உங்க கிட்ட சில விஷயங்களை சொல்லணும்னு நினச்சேன்.. ஆனா நீங்க இவ்ளோ பேசினதுக்கு அப்புறம் என்னால அத உங்க கிட்ட சொல்ல முடியாது.

அதெல்லாம் நீங்க நம்புவீங்களானு கூட எனக்கு தெரியாது..அத நீங்க நம்பினாலும் நம்பவிலைனாலும் எனக்கு அதபத்தி கவலை இல்லை...

எனக்கு என் கொழந்த நல்லா இருக்கனும்.. யாருக்காக நீங்க என் கிட்ட இவ்ளோ கோபமா பேசினீங்களோ அவள் நல்லவ இல்லைனு நீங்க புரிஞ்சிகிட்டா எனக்கு அது போதும்...

நான் உங்கள விட்டு போனதும் ட்ரெஸ்ஸிங் டேபிள் ட்ராவ்ல ஒரு பேப்பர் இருக்கும் அத மறக்காம படிச்சு பாருங்க...

ஒரு நாள் நீங்க சொன்னிங்க
"கண்டிப்பா நீ ஒரு நாள் என்ன புரிஞ்சிக்குவ டி "னு...
அதே போல நான் உங்கள எப்பயோ புரிஞ்சிக்கிட்டேன்...

இன்னைக்கு அதையே நான் உங்களுக்கு சொல்றேன் "நீங்க ஒரு நாள் கண்டிப்பா என்ன புரிஞ்சிக்குவீங்க ஆனால் அப்போ உங்க கூட நான் இருக்க மாட்டேன்...

என்றதை நினைவு படுத்தியவன் மா... என வேகமாக விஜயாவின் அருகில் செல்ல என்ன பா என்ன ஆச்சு என்றார் விஜயா பயந்தபடி..

மா நான் வீட்டுக்கு போய்ட்டு வந்துறேன் மா...

எழில் இப்போ எதுக்கு டா வீட்டுக்கு...

மா நான் இப்போ வீட்டுக்கு போயே ஆகனும்..

எழில் இசை இந்த மாதிரி நிலைமைல இருக்கும் போது நீ இங்க இருக்கிறது ரொம்ப அவசியம் என்றார் குணசேகரன்..

இல்லை பா நான் போய்ட்டு சீக்கிரம் வந்துறேன். என் இசைக்கு எதுவும் ஆகாது..ஏதாவதுனா உடனே போன் பண்ணுங்க ப்ளீஸ் நான் போய்ட்டு சீக்கிரமா வந்துறேன்...
என்றவன் காரை ஓட்டி கொண்டு வேகமாக வீட்டிற்கு விரைந்தான்..

சில நிமிடங்களில் வீட்டிற்கு சென்றவன் அவன் அறைக்கு ஓடி ட்ரெஸ்ஸிங் டேபிள் ட்ராவை திறந்து பார்க்க அதில் ஒரு வெள்ளை நிறத்தில் ஒரு காகிதம் இருந்தது..

மூச்சு வாங்கியபடி அதை கையில் எடுத்தவன் வேகமாக பிரித்து படிக்க தொடங்கினான்..

அன்புள்ள என் கணவர் எழிலரசனுக்கு உங்கள் மனைவி இசை எழுதுவது..

என்னங்க... என்ன மன்னிச்சிருங்க... நான் மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன்... எவளோ ஒருத்தி பேச்ச கேட்டுக்கிட்டு உங்கள நான் தப்பா நினைச்சிட்டேன்..

உங்க கிட்ட சண்டை போட்ருக்கேன்.. உங்க மனச எவ்வளவோ கஷ்டப்படுத்தியிருக்கேன்..
உங்கள நான் ரொம்ப லேட்டா தான் புரிஞ்சிக்கிட்டேன்..இது எல்லாதக்கும் முக்கிய காரணம் அந்த ரம்யா...

ஆமா... இதப்பத்தி உங்க கிட்ட கடைசி வரைக்கும் சொல்ல முடியாம போய்டுச்சு..அதுக்கு காரணம் உங்க கிட்ட கேக்க வேண்டாம்னு நினச்சேன்...

ரம்யா நீங்க நினைக்கிற மாதிரி நல்லவள் இல்லை... நம்ம ரெண்டு பேரும் பிரியருத்துக்கு முக்கிய காரணம் அவள் தான்...

நீங்க அவளை உங்க பிரண்ட்டா நினச்சு நம்ம பர்சனல் விஷயத்தை அவள் கிட்ட சொன்னத அவள் அவளுக்கு சாதகமாக யூஸ் பண்ணிக்கிட்டா..

ஏன்னா அவள் உங்கள காதலிக்கிறா... அதுக்கு இடைஞ்சலா நான் வந்துட்டேன்னு தெரிஞ்சதும் உங்கள பத்தி என் கிட்ட தப்பா சொல்லி என் மனசுல சந்தேகத்தை விதச்சா...

இது ஆரம்பிச்சது உங்க ஆபீஸ்ல..உங்க பைல நீங்க வீட்ல விட்டுட்டு வந்துட்டீங்கனு போன் பண்ணி சொன்னதும் எடுத்துட்டு வந்து கொடுத்தது வேலைக்காரங்க இல்லை நான் தான்..

அன்னைக்கு தான் நான் அவளை முதல் முதலா பார்த்தேன்.. அவள் யாருனு எனக்கு தெரியாது.. ஆனால் அவள் என்ன பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருந்தா உங்க மூலமா...அப்போ தான் என் கிட்ட நீங்களும் அவளும் காதலிக்கிறதாகவும்...நீங்க என்னை ஏமாத்திட்டு அவளை கல்யாணம் செஞ்சுக்க போறதாகவும், நமக்குள்ள முதல் நாள் இரவுலயிருந்து அந்த நிமிஷம் வரை எல்லாத்தையும் சொன்னா..எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது அப்பவும் நான் அவளை நம்பவே இல்லை.. ஆனால் அவள் சொன்ன ஒரு விஷயம் அவ சொன்ன எல்லா பொய்யும் உண்மையா இருக்கும்னு நம்ப வெச்சது...சிவாவும் கலையும் ஓடி போன அந்த விஷயம்... அதையே வீட்டுக்கு வந்து உங்க கிட்ட கேட்டதும் நீங்க உண்மைய சொன்னிங்க.. அன்னைக்கு என் மனசுல தோணுன வெறுப்பு நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போச்சு... கொஞ்சம் நாட்களயே நான் கர்பமானேன்.. எனக்கு அந்த நிமிஷம் வானத்துல பறக்குற மாதிரி ஒரு உணர்வு... ஒரு கொழந்தய சுமக்கிறேன்னு அவ்வளவு சந்தோஷப்பட்டேன்... என் கொழந்தைக்காக நான் வாழனும்னு நினச்சேன்... ஆனால் உங்க மேல இருந்த கோபம் உங்கள விட்டு விலக சொல்லுச்சு.. என் கொழந்தையோட இந்த வீட்டை விட்டு வெளிய போகலாம்னு நினச்சேன்.. ஆனா நீங்க என்ன விடல.. வேற வழியில்லாம அந்த வீட்ல வாழ தொடங்குனேன்.. மறுபடியும் கொஞ்ச நாள்ளயே அந்த ரம்யா போன் பண்ணி டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சா...

அவளுடைய கேவலமான பேச்ச எந்த ஒரு பொன்னாலயும் தாங்கிக்க முடியாது..கட்ன புருஷன இன்னொருத்தி கொஞ்சி பேசுறத எந்த பொண்ணால தான் தாங்கிக்க முடியும்...

நீங்களும் ரம்யாவும் சேந்து தான் இதெல்லாம் செய்றிங்கனு நினச்சு நான் உங்க கிட்ட இத பத்தி எதையும் கேக்கவே இல்லை.....

ஒரு நாள் அவ எனக்கு போன் பண்ணி என் கொழந்தய உங்க கிட்ட கொடுத்துட்டு போய்டுறேன்.. எனக்கு இந்த குழந்தை வேணான்னு சொல்ல சொல்லி கட்டாயப்படுத்துனா... நான் முடியாதுனு சொன்னதுக்கு அவள் என் அண்ணன் கொழந்தைய கடத்தி வெச்சுகிட்டு பிளாக் மெயில் பண்ணா.. அவன கொன்னுடுவேன்னு.. அந்த நேரம் எனக்கு வேற வழி தெரியல... வேற வழியில்லாம தான் நான் உங்க கிட்ட அப்படி சொன்னேன்.. நான் சுமந்துட்டிருக்க என் கொழந்தைய என் வாயாலயே இந்த கொழந்த எனக்கு வேண்டாம்னு சொல்ல வெச்சிட்டா... அன்னைக்கே என் பாதி உயிர் போய்டுச்சு... நீங்களும் என் கொழந்தய கொடுத்துட்டு போய்டுனு சொல்லிட்டீங்க...அதனால நீங்க என்னை முழுசா வெறுக்க ஆரம்பிச்சீங்க...

அப்புறம் நீங்களே அவள வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்கவெச்சீங்க..
அப்போ தான் அவள் வாயலையே சொன்னா அவள் என் கிட்ட இதுக்கு முன்னாடி சொன்னது எல்லாமே பொய்னு... உனக்கும் எழிலுக்கும் சண்டை ஏற்படுத்தி பிரிக்க தான் இதெல்லாம் செஞ்சதா சொன்னா...

அன்னைக்கு நான் முழுசா ஒடஞ்சிட்டேன்... என் புருஷன நம்பாம எவளோ ஒருத்தி சொன்ன பொய்ய உண்மைனு நம்பி உங்க கூட சண்டை போட்டது உங்கள வெறுத்தது எல்லாம் என் இதயத்தை முழுசா ஒடச்சுருச்சு... என்னால அந்த நிமிஷம் இத தாங்கிக்க முடியல. அப்போ தான்ங்க நான் உங்கள முழுசா புரிஞ்சிக்கிட்டேன்...
அப்பவும் உங்க கிட்ட வந்து எதையும் சொல்ல முடியல என்னால...அப்போ தான் நான் முடிவு பண்ணேன் இனிமேல் நான் உயிரோட இருக்க கூடாதுனு...என்னால என் கொழந்தைய பிரிஞ்சும் ரம்யாவோட டார்ச்சர தாங்கி கிட்டு வாழவும் முடியாது..

எந்த ஒரு பொண்டாட்டியாலையும் அவ புருஷன் கூட இன்னொருத்தி வாழ போறத பாக்க முடியாது.. அதான் என் கொழந்தய உங்க கிட்ட பெத்து கொடுத்துட்டு செத்து போக நினைச்சேன்..

இது எல்லாத்தையும் நீங்க நம்புவீங்களா நம்ப மாட்டிங்களானு கூட தெரியாது..
நான் பண்ண மிகப்பெரிய தப்பு என் கணவர் மேல நம்பிக்கை வைக்காதது தான்..

நம்ம கொழந்தைக்கு இனிமேல் எல்லாமே நீங்க தான்... அவன நீங்க நல்லா பாத்துக்கவீங்கனு தெரியும்...அதனால தான் நான் உங்க கிட்ட அவன முழுசா ஒப்படைச்சிட்டு போறேன்..

இது தான் என் கடைசி முடிவு...

எனக்கு உங்க மேல கோபமும் வெறுப்பும் இருந்தாலும் என்னைக்கும் என் இதயத்தில இருக்கிறது நீங்க மட்டும் தான்ங்க...

உங்களோட வாழ்க்கைய நான் நாசமாக்கிட்டேன்... நான் உங்க வாழ்க்கையில வந்துருக்கவே கூடாது..என்ன மன்னிச்சுருங்க..

நான் உங்கள ரொம்பவே காதலிக்கிறேன்... ஐ லவ் யூ எழில்.

இப்படிக்கு
உங்கள் மனைவி
இசையரசி..

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top