சுவாசம் 26

சரி மா நான் பாத்துக்கிறேன்..என்றவன் அவன் அறைக்கு சென்று விட்டான்..

ஒரு வாரம் சென்று இசைக்கு சீமந்த நாளும் வந்தது..

மிகவும் ஆடம்பரமாகவும் ப்ரம்மண்டாமாகவும் குணசேகரன் குடும்பத்தினர் சீமந்த விழாவை நடத்தினர்..

மனோகரன் தன் மகளுக்கான சீர் வரிசையை எந்த குறையும் இல்லாமல் கொடுத்தார் மகிழ்ச்சியுடன்..

அனைவரும் இசைக்கு வளையல் போட்டு சந்தனம் குங்குமம் இட்டு பூ தூவி வாழ்த்தி விட்டு சென்றனர் ...

எழிலின் முகமோ கலையிழந்திருக்க இசையோ முகத்தில் புன்னகை மலராத வாடிய முகமாய் இருந்தாள்..

ரம்யாவோ இசையை பார்த்து முறைத்துகொண்டு நின்றாள்..

இந்த ஒரு மாசம் மட்டும் தான் இசை நீ இந்த வீட்டுக்கு மருமகள்.. அப்புறம் நான் தான் இந்த வீட்டுக்கு மருமகள்.. உன்னை கொலை பண்ணிட்டு நான் ஜெயிலுக்கு போறதுக்கு பதில் உன்னை இந்த வீட்டை விட்டே விரட்டி அடிக்கிறேன்.. எழிலே உன்னை கழுத்த பிடிச்சி வெளிய தள்ளுவான்..பாரு டி என மனதிற்குள் கருவிக்கொண்டாள் ரம்யா...

சீமந்த விழா நிறைவு பெற்றது..
வந்த உறவினர்களையும் நண்பர்களையும் விருந்து வைத்து உபசரித்து அனுப்பி வைத்தனர் ...

அன்றைய நாள் முடிந்து மறுநாள் அழகாகவே விடிந்தது...

ரம்யாவின் அறையில் அவள் அமர்ந்திருக்க அவளுக்கு ஒரு அழைப்பு வரவும் அதை அட்டன் செய்து பேச தொடங்கினாள்..

ஹலோ..

ஹலோ ரம்யா நான் தான்மா அண்ணன் பேசுறேன்..

சொல்லுண்ணா என்ன ஆச்சு.. இந்த நேரத்தில போன் பண்ணிருக்க..

அது  நம்ம பெரியப்பாவுக்கு ஆக்சிடெண்ட் ஆகிருச்சாம். ரொம்ப சீரியஸா இருக்காரு..

என்னண்ணா நீ என்ன சொல்ற என்ற ரம்யாவின் கண்களில் கண்ணீர் தேங்கியது..

ஆமா மா..

அண்ணா நான் இப்போவே கிளம்பி வரேன்.. என்றாள் ரம்யா அழுது கொண்டே..

இப்ப வேண்டாம்.. நீ இன்னைக்கு ஈவினிங்கே தஞ்சாவூருக்கு கிளம்பிவா...நான் உனக்கு ட்ரெயின் புக் பண்ணிருக்கேன் இன்னைக்கு சயங்காலம்  4 மணிக்கு ட்ரெயின்ல வந்துரு மா..

சரி அண்ணா என போனை கட் செய்த ரம்யா கண்களை துடைத்து கொண்டாள்..

இப்போ நான் என்ன பண்றது... இங்க வந்து தங்கினது எல்லாம் வேஸ்ட்டா போய்டுச்சு... அந்த இசைக்கும் எழில்க்கும் ஏதாவது பிரச்சனை ஏற்படுத்தலாம்னு இங்க வந்தா உடனே கிளம்ப வேண்டிய நிலைமை.. நான் என்ன செய்றது இப்போ..இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் இருக்கு... இன்னைக்கு மதியத்துக்குள்ள ஏதாவது பண்ணியாகணும் என யோசித்து கொண்டிருந்தாள்...

மறுபக்கம் குளித்து விட்டு கீழே வந்த எழில் ஷோபாவில் அமர்ந்தான்..

எழில்...இசை எங்க.. என்றார் விஜயா..

மா.. அவ ரூம்ல இருக்கா... ரொம்ப டையர்ட்டா இருக்கா...அவ சும்மா கீழ இறங்க வேணாம் அதான் நானே அவளுக்கு சாப்பாடு எடுத்துட்டு போய் கொடுக்குறேன்..

ஓ.. சரி அப்போ நீ  சீக்கிரம் வந்து சாப்பிடு என்றவர் அவனுக்கு உணவை பரிமாறினார்..

ரம்யாவோ எழில் விஜயா பேசுவதை பார்த்து நின்றவள்
எழில் கிட்ட இசைய பத்தி ஏதாவது சொல்லி மறுபடியும் சண்டை வர வைக்கணும்... அப்போ தான் எழிலே அவளை சீக்கிரமா வீட்டை விட்டு துரத்துவான்... அவளை பத்தி அவனுக்கு நல்லாவே தெரியும்.. எதை சொன்னா அவன் நம்புவனோ அதை சொல்லி அவ மேல  வெறுப்ப உண்டாக்கணும்... அதுக்கு இது தான் கரெக்ட் சான்ஸ்..என நினைத்தாள் அவள்

எழில் சாப்பிட்டு முடித்து எழுந்து கொள்ள அவன் முன் சென்றவள்

எழில்..என்றழைக்க

சொல்லு ரம்யா என்று அவளை நோக்கினான் அவன்..

உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..

என்ன சொல்லு..

இல்லை தனியா பேசணும்..

என்ன ஆச்சு..

ப்ளீஸ் எழில்..

ஓ.. சரி வா என அவளை கார்டனுக்கு அழைத்து சென்றான் எழில்..

என்ன ரம்யா..என்ன பேசணும்

எழில் நான் கிளம்புறேன் எழில்.. என முகத்தை பாவமாக வைத்து கொண்டு கூறினாள் ரம்யா..

ஏன் ரம்யா என்ன ஆச்சு...என்றான் எழில் குழப்பமுடன்..

நான் இங்க இருக்கிறது தான் யாருக்கும் பிடிக்கலையே..

ஏன் யாராவது ஏதாவது சொன்னாங்களா...

ரம்யா மௌனமாக நின்றாள்..

சொல்லு ரம்யா யாரு என்ன சொன்னது...என்று அவன் வினவ ...

அது... இசை...இசைக்கு தான் நான் இங்க தங்கியிருக்கிறது பிடிக்கலனு நினைக்கிறேன்...

என்ன? என்று புருவம் சுருக்கினான் அவன்..

ஆமா எழில்...நான் உன் கூட பிரண்ட்லியா பேசுறது இங்க வந்து தங்கியிருக்கிறது எதுவும் இசைக்கு பிடிக்கல...இசை என்னையும் உன்னையும் சந்தேகபடுறாங்க எழில்.... என்னால உங்களுக்குள்ள எதுக்கு பிரச்சனை.. அதான் நான் போயிடுறேன்...இங்க வந்து தங்கினதால எனக்கு இந்த மாதிரி பேர் கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா வந்துருக்கவே மாட்டேன்... அவங்க பேசுன ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு வலிக்குது எழில்... நான் இப்படி சொல்றதுக்கு என்ன மன்னிச்சுடு... உன் மனைவி இசை ரொம்ப மோசமான பொண்ணுனு தான் நினைக்க தோணுது... அவங்க கூட இத்தனை நாள் நீ வாழறது ரொம்ப பெரிய விஷயம்... பொறக்க போற கொழந்தய தயவு செஞ்சு அவங்கள மாதிரி வளர்த்திடாத எழில்..என் மனசுல தோணுனத சொல்லிட்டேன்... நான் கிளம்புறேன் என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் அழுது கொண்டே அறைக்கு ஓடி விட்டாள்..

ரம்யா அறைக்கு சென்று கதவை தாழிட்டவள் பொறுமையாக சென்று கட்டிலில் விழுந்தாள்...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top