சுவாசம் 25

அத்தை என்ற இசை சட்டென விஜயாவை கட்டி கொண்டு அழ தொடங்கினாள்..

அத்தை......என்ன மன்னிச்சுடுங்க அத்தை...என அழுது கொண்டே அவள் கூறவும்

அவளை ஒன்றும் புரியாமல் பார்த்த விஜயா ஏன்... என்ன ஆச்சு மா.. நீ தான் எந்த தப்பும் பண்ணலையே மா..நீ ஏன் என்கிட்ட மன்னிப்பு கேக்குற..

அத்தை இவ்ளோ அன்பா இருக்க உங்க கிட்டயே நான் நிறைய விஷயத்தை மறச்சுருக்கேன்..
எனக்கு வேற வழி தெரியல.. அப்போ நான் இருந்த சூழ்நிலை அப்படி.. ஆனா உங்க எல்லார்கிட்டயும் அத மறச்சிட்டு உங்க கூடவே சிரிச்சு பேசறது எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்தது... ஆனா இதுக்கு மேலயும் என்னால மறைக்க முடியாது...என எழிலரசன் பெண் பார்க்க வந்தது முதல் இசை எழில் திருமணம் வரை அனைத்தையும் கூறி முடித்தாள்...

இசை நீ சொல்றேதெல்லாம் உண்மையா என்றார் விஜயா கோபமுடன் .

ஆமா அத்தை என்றவளின் குரல் நடுங்கியது..

இசை இதுல உன் தப்பு எதுவும் இல்லை... இதுக்கும் உனக்கும் எந்த சம்மதமும் இல்லை...
நீ இத என் கிட்டருந்து மறச்சதுக்கு கூட நான் கோவப்பட மாட்டேன்.. ஏன்னா உன் இடத்தில யாரு இருந்தாலும் இதை தான் செஞ்சிருப்பாங்க... அனா எழில் இப்படி பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட நினச்சு பாக்கல... அவன் சுயநலத்துக்காக ஒரு பொண்ணோட விருப்பத்தை எதிர் பார்க்காம அவளை கல்யாணம் பண்ணிருக்கான்... இதுக்கு எல்லாத்துக்கும் முக்கிய காரணம் நான் தான் இசை... என்னை மன்னிச்சுடு..

அத்தை..என்ன அத்தை...நீங்க போய் மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு...

ஆமா மா.. அன்னைக்கு குடும்ப கௌரவம் போய்ட கூடாதுனு உன் விருப்பத்தை கேக்காம கல்யாணம் பண்ணி வெச்சது நான் தான.. நான் தான மா பெரிய தப்பு பண்ணிருக்கேன்..

அயோ அத்தை.. நீங்க எந்த தப்பும் பண்ணல...நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை...உங்க இடத்தில யாரா இருந்தாலும் இப்படி தான் செஞ்சிருப்பாங்க.. ஏன் நானா இருந்தாலும் இப்படி தான் செஞ்சிருப்பேன்... ஒவ்வொரு நிமிஷமும் நம்மள அந்த நிமிஷத்துக்கு ஏத்தது போல இருக்க சூழ்நிலைக்கு மாத்திடும்... முடிஞ்சது முடிஞ்சு போச்சு அத்தை... உங்க கிட்ட இத சொன்னதும் தான் மனசு நிம்மதியா இருக்கு..

அத்தை..

சொல்லு இசை.

அத்தை இத பத்தி அவர் கிட்ட எதுவும் பேசாதீங்க அத்தை ப்ளீஸ்...

ஏன் மா..

ஆமா அத்தை அவர் வேணும்னே செய்யல..அப்போ அந்த மாதிரி ஒரு நிலைமை...

அத்தை அவர் பாக்க தான் சந்தோசமா இருக்காரு.. ஆனா மனசுக்குள்ள அந்த அளவுக்கு வலியும் வேதனையோடு தான் இருக்காரு.. அதுக்கு நானும் ஒரு காரணம்.. உங்க கிட்ட இந்த விஷயத்தை மறச்சிட்டோமேனு குற்ற உணர்ச்சில தினம் தினம் துடிச்சுட்டு இருக்காரு..ஆனா இத அவரால உங்க கிட்ட சொல்லமுடியாத ஒரு சூழ்நிலை ப்ளீஸ் அத்தை..என்றாள் இசை பணிவுடன்....

ஒரு நிமிடம் யோசித்தவர்..ஓ...சரி மா இசை... நான் அவன் கிட்ட எதுவும் கேக்கல...இதுலயே தெரியுது உன்னால உன் புருஷன விட்டு கொடுக்க முடுயாதுனு...ரொம்ப சந்தோசமா இருக்கு இப்படி ஒரு பொண்டாட்டி என் மகனுக்கு கிடைச்சது அவன் செஞ்ச பாக்கியம்.. என்ற விஜயா..சரி வா... சாப்பிடு என உணவை அவளுக்கு ஊட்டி விட்டார்..

சிறிது நேரத்தில் விஜயா அங்கிருந்து சென்று விட இசை மட்டும் தன் அறையில் அமர்ந்திருந்தாள்..

விஜயா ஜோசியரை வீட்டிற்கு அழைத்து சீமந்த தேதியை குறித்து கொண்டார்.

எழிலரசன் வேலை முடித்து வீட்டிற்க்குள் நுழைய எழில் என விஜயா அழைக்க மா.. என்ன மா என்றான் எழில் அவர் அருகில் சென்று..

எழில் இசைக்கு ஒன்பதாம் மாசம் சீமந்தம் நடத்த ஜோசியர வர சொல்லிருந்தேன். அவர் இன்னைக்கு வந்துருந்தாரு... சீமந்தத்தை இந்த வாரம் வெச்சுக்கலாம்னு சொல்லி தேதி குறிச்சி குடுத்துருக்காரு... அதனால அதுக்கு தேவையான ஏற்பாடு எல்லாம் இப்போதுல இருந்தே ஆரம்பிக்கணும்.. உனக்கு தெரிஞ்சவங்களுக்கு சொல்லிடு...நானும் சொந்தகரங்களுக்கு சொல்லிடுறேன்...நான் இதபத்தி இசை கிட்ட எதுவும் பேசல.. அவ கிட்ட இத நீயே சொல்லிடு...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top