சுவாசம் 24
என்ன பயமா.. உன்னை பாத்தா..ஏய் நீ எல்லாம் ஒரு ஆளு உன்னை பாத்து பயந்து வேற போறாங்களா.. பயப்பட வேண்டியவ நான் இல்லை.. தப்பு பண்ண நீ தான்.. நீ பண்ண இந்த ஒவ்வொரு விஷயமும் என் புருஷனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா.. ம்ம்.. எப்போ எல்லாம் முடிஞ்சிருச்சுனு நீ என் கிட்ட சொன்னதெல்லாம் பொய் னு வந்து சொன்னியோ அப்பவே எல்லாம் ஆரம்பிச்சிருச்சு... என் மனசுல பொய் னு ஒரு விதயை விதைக்க தெரிஞ்ச உன்னால அத தண்ணி ஊத்தி காப்பாத்திக்க தெரியல... எப்போ என் புருஷன் எந்த தப்பும் செய்யாதவர்னு தெரிஞ்சிதோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் நான் அவர பிரிய கூடாதுனு...என்ன தைரியத்துல நான் அவர்கிட்ட சொல்ல மாட்டேன் நினைச்சுகிட்டு இந்த ஆட்டம் போடுற... இதெல்லாத்தையும் அவர் கிட்ட சொல்ல எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது... ஆனாலும் நான் சொல்லாம இருக்கேன்னா உனக்கு ஏதோ நல்ல நேரம்னு அர்த்தம்.. ஒழுங்கா எப்படி வந்தியோ அப்படியே ஓடிடு இல்லை.. அவ்ளோ தான் என்ற இசை வேகமாக அறைக்கு சென்று விட்டாள்....
ச்ச என கோபமாக கத்திய ரம்யா "இசை... உனக்கு இந்த அளவுக்கு தைரியம் வந்துருச்சுள... இனிமேலும் உன்னை உயிரோட விட்டு வைக்கிறதுல எந்த அர்த்தமும் இல்லை... நீ இந்த அளவுக்கு பேசுறனா அதுக்கு காரணம் நீ எழில் மேல வெச்சுருக்க காதல் மட்டும் தான்... அந்த காதல் எனக்கு சொந்தமானது... இது என் வீடு...எனக்கு இப்போ இடைஞ்சளா இருக்கிறது நீயும் உன் வைத்துல இருக்க கொழந்தையும் தான்.. உங்கள முடிச்சிட்டா என் ரூட் களியர் என கூறியவள் அங்கிருந்து அவளுக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு சென்று விட்டாள்..
கோவிலுக்கு சென்ற சுஜாதாவும் விஜயாவும் இறைவனை வணங்கி விட்டு சிறிது நேரம் அங்கு ஒரு கல்லில் அமர்ந்தனர்..
அக்கா.. நம்ம இசைக்கு எட்டாவது மாசம் முடிஞ்சு ஒன்பதாவது மாசம் தொடங்க போகுது.. அவளுக்கு சீக்கிரமா சீமந்தம் பண்ணணும் கா.. என்றார் சுஜாதா..
ஆமா சுஜாதா... நானும் இத தான் யோசிச்சுட்டிருந்தேன்...நீயே சொல்லிட்ட... நாளைக்கே ஜோசியர வீட்டுக்கு வர வெச்சு நாள குறிச்சிடலாம்.. இந்த வாரத்திலயே சீமந்தத்த முடிச்சிடலாம்..
ஆமாக்கா.. அக்கா அப்புறம் சொந்தகாரங்கள எல்லாம் கூப்பிட்டு ரொம்ப கிராண்டா பண்ணிடனும்..
சரி... சுஜாதா.. நம்ம எவ்வளவு நாளைக்கு தான் சிவாவ ஒதுக்கி வைக்க முடியும்.. அவன் ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டான்.. நம்மளும் அவன இவ்வளவு நாள் ஒதுக்கி வெச்சிட்டோம்.. இப்போவாவது மன்னிச்சு ஏத்துக்கலாமே என்றார் விஜயா..
அக்கா நீங்க என்ன தான் சொன்னாலும் சரி அவன மன்னிச்சு என்னால ஏத்துக்கவே முடியாது.. அவன் பண்ண தப்புக்கு இன்னும் அவன் அனுபவிப்பான்.. அப்போ தான் என் அருமை தெரியும்.. அக்கா அவன பத்தி எதுவும் பேசாதீங்க.. விடுங்க... சுஜாதா கோபமுடன் கூறவும் சரி விடு.. இப்போ நம்ப வீட்டுக்கு புதுசா ஒருத்தி வந்துருக்காளே ரம்யானு...என்ற விஜயாவை பார்த்த சுஜாதா
ஆமா கா எழிலோட பிரண்ட் ரம்யா..என்க..
அஹ்.. அவள பாத்தா எனக்கு சந்தேகமாவே இருக்கு சுஜாதா... அவ ஏதோ ஒரு காரணத்துக்காக தான் நம்ம வீட்டுக்கு வந்துருகளோனு தோணுது..என்றார் விஜயா சந்தேகத்துடன்...
ஆமா கா எனக்கும் சந்தேகமா தான் இருக்கு.. அவ பார்வையே சரியில்லை... அது என்னனு கண்டுபிடிக்கணும் கா..
ஆமா சுஜாதா..சரி டைம் ஆச்சு.. இசை வீட்ல தனியா இருப்பா.. சாப்பிட்டாளானு கூட தெரியல..நம்ம வீட்டுக்கு போகலாம் வா.. என இருவரும் அங்கிருந்து கிளம்பினர்..
இசை தன் அறையில் கட்டில் மேல் அமந்திருந்தவள் எப்படி எழிலிடம் இது பற்றி கூறுவது என தெரியாமல் குழம்பி இருந்தாள்...
சில மணி நேரத்தில் சுஜாதாவும் விஜயாவும் வீட்டிற்கு வந்தனர்..
ரம்யா ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள்...
வீட்டிற்கு வந்த விஜயா அவர் அறைக்கு சென்று உடையை மாற்றி கொண்டவர் சமையல் அறைக்கு சென்றார்..
சமையல் அறையில் சமையல் வேலையை முடித்திருந்தனர் வேலைகரார்கள்..
இசை சாப்பிட்டாளா என விஜயா சமையல் கார பெண் ரேவதியிடம் கேட்கவும்
இல்லைங்கம்மா என்றாள் அந்த பெண்.
மணி என்னாச்சு இவ என்னடானா இன்னும் சாப்பிடாம இருக்கா என்றவர் ஒரு தட்டில் உணவுயிட்டு எடுத்து கொண்டு இசையின் அறைக்கு செல்லும் விஜயாவை பார்த்த ரம்யா
இவங்க என்ன அவள இப்படி தாங்குறாங்க.. இதெல்லாம் எவ்வளவு நாளைக்குனு நானும் பாக்குறேன்.. என நினைத்து கொண்டிருக்க..
விஜயா இசையின் அறைக்கு சாப்பாடு எடுத்து சென்றார்.
இசை என கதவை தட்டிக்கொண்டு உள்ளே சென்று பார்க்க இசை கட்டிலில் அமர்ந்திருந்தாள் ஏதோ யோசனையுடன்..
இசை..
இசை தன் நினைவில் இருந்து வெளியில் வந்தவள் அத்தை வாங்க.. என அவள் அழைக்க..
டைம் என்ன ஆச்சு... இன்னும் சாப்பிடாம என்ன பண்ணிட்டுருக்க என்ற விஜயா அவள் அருகில் சென்று அமர்ந்தார்..
வா....சாப்பிடு.. என்றவர் அருகில் உள்ள டேபிள் மீது சாப்பாடு தட்டை வைத்து விட்டு அவளுக்கு உணவை ஊட்டி விட இசை ஒரு நிமிடம் தன் மாமியாரை கண்ணிமைக்காமல் பார்த்தவளின் கண்களில் கண்ணீர் தேங்கியது...
அத்தை... என அவள் மெல்லிய குரலில் அழைக்கவும்..
இசை நீ என்னுடைய மருமகளா இருந்தாலும் நான் உன்னை என் சொந்த மகளா தான் டா பாக்குறேன் ..நீ என் கிட்ட எதுக்கும் தயங்க வேண்டாம்...எதுவா இருந்தாலும் பரவாயில்ல என் கிட்ட தைரியமா சொல்லு நான் இருக்கேன் உனக்கு துணையா.. நான் எப்பவும் உன்னை தப்பா நினைக்க மாட்டேன்.. எனக்கு தெரியும் உன்னை பத்தி..நீ என்ன மாமியாரா பாக்க வேண்டாம் ஒரு பிரண்ட்டா பாரு.. அதுவே போதும்..நீ கர்பமா இருக்கனு நான் பாசமா பேசல.. நீ கர்பமா இல்லைனாலும் நான் இப்படி தான் பேசுவேன்.. மத்த மருமளுங்க மாதிரி என் ரெண்டு மருமகளுமே இல்லை... அதுலையும் நீ என் தங்கம் டா...
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top