சுவாசம் 23

அன்று இரவு வீட்டிற்கு வந்த எழிலுக்கு அமைதியாக சாப்பாடு பரிமாறினாள் இசை..

உணவை சாப்பிட்டு முடித்தவன் அங்குள்ள ஷோபாவில் அமர்ந்திருந்தான்..

கலையும் சிவாவும் இப்போ எங்க தங்கிருக்காங்க.. என்றாள் இசை அவனை நோக்கி

ஆஹ்.. அவங்கள ஒரு அப்பார்ட்மெண்ட்ல தங்க வெச்சுருக்கேன்.

அவங்க இந்த அளவுக்கு கஷ்டப்படுறாங்கனா அதுக்கு காரணம் நீங்க மட்டும் தான்..உங்க தம்பி ஆசைப்பட்ட வாழ்க்கை அவனுக்கு சந்தோசமா கிடைக்கனும்னு நீங்க நினைச்சிருந்தா வீட்ல இருக்கவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கணும்.. ஆனா நீங்க... உங்களுக்கு உங்க கல்யாணம் நிக்க கூடாது.. பொண்ணு கிடைச்சா போதும் அதானே உங்க எண்ணம்
.அதனால தான் உங்க தம்பி விரும்பற பொண்ணு, என் அக்கானு தெரிஞ்சதும் அவளை உங்க தம்பி கூட அனுப்பி வெச்சுட்டு என்னை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கைய அழிச்சிட்டீங்க..உங்கள மாதிரி ஒரு சுயநலம் புடிச்சவர நான் பாத்ததே இல்லை... நான் என்ன பாவம் பண்ணேனோ நீங்க எனக்கு புருஷனா கிடைச்சிருக்கீங்க என்று விடாமல் பேசிக்கொண்டு சென்றாள் இசை...

அவளை முறைத்தவன் இசை போதும் எதுக்கு இப்போ இப்படிலாம் பேசுற... எனக்கு நீ ஏன் இப்படி நடந்துக்கிறனு சத்தியமா தெரியல... இசை எதையும் முழுசா தெரிஞ்சிக்காம பேசாத ப்ளீஸ் அப்புறம் நீ தான் ரொம்ப கஷ்டப்படுவ.. ஆமா நான் சுயநலம் பிடிச்சவன் தான் என் ஆசைக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..ஆனா எனக்கு வேற வழி தெரியல... என்னால உன்னை தவிர வேற யாரையும் என் வாழ்க்கைல நினச்சு கூட பாlக்க முடியாது.... நான் இதுவரைக்கும் இதை யாருகிட்டயும் சொன்னது இல்லை என் பிரண்ட் ரம்யாவை தவிர... ஆனா இன்னைக்கு நான் உன்கிட்ட சொல்றேன்.. இசை எனக்கு உன் அக்காவ கல்யாணம் பண்ணிக்கிறதுல துளியும் விருப்பம் இல்லை..ஏன்னா நான் காலேஜ்ல வேற ஒரு பொண்ண லவ் பண்ணேன்...வீட்ல வற்புறுத்துன தால தான் நான் பொண்ணு பாக்க வரதுக்கே சம்மதிச்சேன்...அதுவும் சிவா தான் சில விஷயங்களை சொல்லி என்ன சம்மதிக்க வெச்சான்...நான் பொண்ணு பாக்க வந்தபோ   உன் அக்காவ பாத்து சம்மதம் சொன்னதுக்கு காரணம் சிவா.. அவன் காதலிச்ச பொண்ணு உன் அக்காவதான் பொண்ணு பாக்க போறோம்னு அவன் என் கிட்ட அன்னைக்கு தான் சொன்னான்.. கல்யாணத்துக்கு சம்மதிக்கற மாதிரி நடிக்க சொன்னான்... நானும் சமாதிச்சேன்...உன் அக்காவும் சம்மதிச்சா சிவாவோட பிளான கேட்டு.. கலை என் கூட போன்ல பேசுறது போல சிவா கிட்ட பேசுவ..சுருதிக்கும் இது தெரியும்..

கல்யாணத்தன்னைக்கு உன் அக்காவும் சிவாவும் ஓடி போய்ட்டாங்க.. எல்லாருக்கும் நல்லாவே தெரியும் அக்கா ஓடி போனா தங்கச்சிய கல்யாணம் பண்ணி வைக்கிற விஷயம்.. அந்த மாதிரி தான் நாங்க பிளான் பண்ணோம்...

என் கல்யாணம் நிக்க வேண்டாம்னு என் தம்பி நினைச்சான்..அதனால தான் அவன் உன் அக்காவ கூட்டிகிட்டு ஓடி போய்ட்டான்..

நான் ஆசைப்பட்டது போலவே நான் காதலிச்ச பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

ஒரு நிமிடம் அதிர்ந்தவள் அவனை  புரியாத பார்வை பார்த்து நிற்க்க

ஆமா நான் காதலிச்ச பொண்ணு வேற யாரும் இல்லை நீ தான்...நீ படிச்ச அதே காலேஜ்ல தான் நான் படிச்சேன்.. உனக்கு என்னை தெரியுமான்னு எனக்கு தெரியாது.. ஆனா எனக்கு உன்னை நல்லாவே தெரியும்... உன் கிட்ட என் காதல சொல்லவே முடியாம போய்டுச்சு...உன்னை பத்தி ஒவ்வொரு விஷயத்தையும் தெரிஞ்சிகிட்டேன்.. அனா உன் மனசுல என்ன இருக்குனு மட்டும் நான் தெரிஞ்சிக்கல... ஆனால் இப்போ நல்லாவே தெரிஞ்சிகிட்டேன் உனக்கு என் கூட வாழ விருப்பம் இல்லைனு... பரவாயில்லை.. நான் உன்னை என் கூட வாழ்ந்துதான் ஆகணும்ம்னு என்னைக்கும் வற்புறுத்த மாட்டேன் என்றவன் அந்த அறையை விட்டு சென்று விட்டான் எழில்..

அவனை குழப்பமுடன் பார்த்து நின்றவள் கண்களில் கண்ணீர் பெறுகியது...

எழில்... நீங்க என்னை காதலிச்சிங்களா....???என அதிர்ச்சியடைந்தவள் அப்போ நீங்க என்னை காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிங்களா....நான் எப்படி உங்கள காதலிச்சனோ அதே போல நீங்க என்னை காதலிச்சிங்களா???நான் தான் உங்க காதல புரிஞ்சிக்காம நடந்து கிட்டனோ...இல்லை நீங்க பொய் சொல்றிங்களா..ரம்யா சொல்றது தான் உண்மையா....என தனக்குதானே பல கேள்விகளை கேட்டு கொண்டவள் அங்கேயே அழுது கொண்டு நின்றாள்...

************

இசை உறக்கமும் தன் நீண்ட கடந்தகால நினைவும் களைந்து எழுந்தவள் தன்னவன் வந்து அருகில் உறங்கி கொண்டிருப்பதை பார்த்தவளின் கண்களில் கண்ணீர் தேங்கியது...

என்னங்க..என்னை மன்னிச்சுருங்க... உங்கள நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்... நீங்க என்னை மன்னிப்பீங்களானு கூட எனக்கு தெரியல... நான் யாரோ ஒருத்தி சொன்னத நம்பினேன்.. ஆனா நான் என் புருஷன் சொன்னதை நம்பள... அதனால தான் நான் இன்னைக்கு இந்த அளவுக்கு கஷ்டப் படுறேன்..நான் என்னைக்கும் மனசார என் கொழந்தய கொடுத்துட்டு போய்டுறேன்னு  சொல்ல மாட்டேன்.. பாவி அவ என் வாயால அப்படி ஒரு வார்த்தைய என் புருஷன்கிட்டயே சொல்ல வெச்சுட்டா... எந்த ஒரு தாயும் சொல்லக்கூடாத ஒரு வார்த்தைய என் வாயால சொல்ல வெச்சுட்டா... நான் கஷ்டப் படுறது மட்டும் இல்லாம உங்களையும் நம்ம கொழந்தையையுமே ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்...எனக்கு என்ன பண்றதுனு தெரியலங்க... இதுக்கு மேலயும் என்னால இதை பொறுத்துக்க முடியாது... எண் ஆனாலும் சரி இத உங்க கிட்ட சொன்னாதான் இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்  நான் கண்டிப்பா சொல்லிடுறேன்.. என மனம் குமுறினாள் இசை..

மறுநாள் அழகாவே விடிந்தது அன்றைய விடியல்...

எழிலரசன் அன்று முக்கிய வேலையாக வெளியில் சென்று விட்டான் அதிகாலையிலே...

அந்த வீட்டின் ஆண்கள் அனைவரும் ஆபீஸ்க்கு சென்றிவிட ரம்யா அன்று ஆபீஸ் செல்லாதவள் ஹாலில் வந்து அமர்ந்திருக்க சுருதியும் ஸ்வாதியும் ஷாப்பிங் சென்றிருந்தனர்.

சமையல் வேலை செய்பவர்கள் சமையலைறையில் நின்று சமையல் வேலை செய்து கொண்டிருந்தனர்..

விஜயாவும் சுஜாதாவும் கோவிலுக்கு சென்றிருக்க இசை மட்டும் தன் அறையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தாள்..

இசை... இசை என ரம்யா சத்தமாக இசையை அழைக்க..

இவ எதுக்கு இப்போ என்ன கூப்பிடுறா என மனதில் நினைத்து கொண்ட இசை தன் ஒரு கையை அவள் மேடிட்ட வயிற்றிலும் மற்றோரு கையை கட்டிலில் வைத்து பொறுமையாக எழுந்து நின்றவள்
மெதுவாக கீழே சென்றாள்..

என்ன.. எதுக்கு என்ன கூப்பிடுற... என்றாள் இசை கோபமுடன்..

உன்னை வேற எதுக்கு கூப்பிடுவாங்க.. வேலைக்காக தான்.. சரி சரி.. போய்ட்டு ஸ்டராங்கா ஒரு காபி போட்டு கொண்டு வா போ என்றாள் அதிகாரமுடன்..

அவளை முறைத்த இசை ஏய் நான் ஒன்னும் உன் வேலைக்காரி இல்லை.. உனக்கு காபி போட்டு கொண்டு வர... உனக்கு வேணும்னா வேலைக்காரங்கள கேளு இல்லனா நீயே போட்டு குடி.. என்ன அதிகாரம் பண்ற வேலை வெச்சுக்காத..

ஹலோ இசை.. என்ன பயம் விட்டு போச்சா...

தொடரும்..

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top