சுவாசம் 21

சிவா கலை இருவரையும் பார்த்து நின்ற ஸ்வாதி அழுதுக்கொண்டே அறைக்கு ஓடி கதவை தாழிட்டு கொள்ள அனைவரும் அவள் பின்னே ஓடி கதவை தட்ட அவளோ சேலையால் தூக்கு போட்டு கொள்ள முயற்சி செய்தாள்.. அதற்குள் எழிலரசனும் ரவியும் கதவை உடைத்து உள்ளே சென்று அவளை தடுக்க மற்ற அனைவரும் உள்ளே சென்றனர்..

ஸ்வாதி உனக்கென்ன பைத்தியமா என்ன காரியம் பண்ண பாத்த.. என்றான் எழில் கோபமுடன் ..

நான் ஏமாந்துட்டேன்...நான் சிவா மாமாவ ரொம்பவே காதலிச்சேன் ஆனா அவர் வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டாரு...நான் சாகுறேன் என்ன விடுங்க என ஸ்வாதி கதறி அழ

ஸ்வாதி அழாத டா என விஜயா அவளை அணைத்து கொண்டார்..

ஸ்வாதி... விடு மா.. அவன் இல்லைனா என்ன உனக்கு ஒரு நல்ல பையன் கிடைப்பான் விடுடா..என ஒவ்வொருவரும் அவளை சமாதானம் செய்து அங்கிருந்து ஹால் ரூமிற்கு அழைத்து சென்று ஷோபாவில் அமர வைத்து அவளுக்கு தண்ணீர் கொடுத்தனர்...

சுருதி தேவி மட்டும் அவள் அருகில் இருக்க மற்று அனைவரும் வாசலில் நின்றருக்கும் சிவாவிடம் சென்றனர்..

சுஜாதா, இப்போ சந்தோசமா டா உனக்கு...

மா..

உன் வாயால அப்படி கூப்பிடாத...பாவம் டா அந்த பொண்ணு உன்னை நம்பி கடைசியா ஏமாந்து போனது தான் மிச்சம்... எங்களுக்கு இப்படி ஒரு மகனே இல்லைனு நினைச்சுக்கிறோம்... தயவு செஞ்சு என் மூஞ்சிலயே முழிக்காத...
போய்டு... இந்த ஓடுகாளிய ஒருநாளும் என் மருமகளா ஏத்துக்கவே மாட்டேன்... என் கண்முன்னாடி நிக்காத போய்டு என கூறிய சுஜாதா கதவை இழுத்து மூடினார்..

சிவாவும் கலையும் அங்கிருந்து சோகமுடன் சென்று விட்டனர்...

அறைக்கு சென்ற எழிலரசன் சிவாவிற்கு போன் செய்தான்..

எழில், டேய் எதுக்கு டா இப்படி பண்ண.. அவங்க தான் கோவமா இருக்காங்கனு தெரியும்ல அப்புறம் ஏன்டா....

சிவா, இல்லை டா எவ்வளவு நாளைக்கு தான் இத மறைக்க முடியும்.. என்னுடைய தப்பு தான்.. நான் வீட்ல பேசியிருக்கணும் அவசர பட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணதுக்கு தான் இவ்வளவு கஷ்டப்படுறேன்..

எழில், டேய் பீல் பண்ணாத.. இதுக்கு நானும் ஒரு காரணம் தானடா... சரி கொஞ்ச நாள் போகட்டும் சித்தியோட கோவம் சரியாகிடும்..

சிவா, எழில்.. ஸ்வாதி மேல எனக்கு எந்த ஆசையும் இல்லை டா.. ஆனா அவ அப்படி நடந்து கிட்டது மனசுக்கு கஷ்டமா இருக்கு..

சரி விடு டா அவ சின்ன பொண்ணு எடுத்து சொன்னா புரிஞ்சிக்குவா.. நீ எதை நினைச்சும் கவலை படாத..

சரி டா நான் வெச்சுறேன் என்று அழைப்பை துண்டித்தான் சிவா..

மறுபுறம் ஸ்வாதி எப்போதும் சிவாவை நினைத்து அழுது கொண்டே இருந்தாள்..

இசையும் மற்ற அனைவரும் அவளை சமாதானம் செய்ய முயற்சிக்க ஸ்வாதி தன் பெற்றோர் வீட்டிற்கே சென்று விட்டாள்...

இசை ஸ்வாதியிடம் கூறிய வார்த்தைகள் இசையை குற்ற உணர்வுக்குள் தள்ளியது... ஸ்வாதி உடன் இருக்கும் போது அவளுக்கு அது தெரியவில்லை அவள் சென்ற பின் ஸ்வாதி மனம் உடைய தானும் ஒரு காரணம் என நம்பினாள் இசை..

ஒரு நாள் இசை தன் அறையில் கட்டிலில் அமந்திருந்தவள் தன் வயிற்றில் கை வைத்து தன் குழந்தையுடன் பேசிகொண்டிருந்தாள்..

செல்லக்குட்டி... உனக்கு சாப்பாடு கரெக்டா பத்துதாடா... அம்மாவுக்கு சாப்பிடவே பிடிக்கல டா... உனக்காக மட்டும் தான் டா அம்மா சாப்பிடுறேன்...இப்போ என் பட்டுக்குட்டி அம்மா வயித்துக்குள்ள என்ன பண்ணிட்டுருக்கான்...உனக்காக உன் அப்பா ரொம்ப பெரிய பெரிய பொம்மை எல்லாம் வாங்கி வெச்சுருக்காரு டா நீ விளையாட ஆனா அம்மா உனக்குனு எதுவும் வாங்கி வைக்கல என் அன்ப தவிர...என்றவளின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது...

திடீரென அவளுடைய செல் பேசி
சினுங்க அதை அட்டன் செய்து காதில் வைத்து ஹலோ யாரு என்றாள் இசை..

ஹலோ மேடம்... நான் ரம்யா...

உனக்கு என்ன வேணும் இப்போ...எனக்கு எதுக்கு இப்போ போன் பண்ண...

சாரி பார் லேட் விஷஸ்...என்ன புரியலயா... நீ பிரெக்னண்டா
இருக்கல அதான்.. என்ன டா இவ இவ்ளோ நாளுக்கு அப்பறம் விஷ் பண்றளேனு நீ நினைக்கலாம்...ஆனா நான் அப்படி தான்.. எனக்கு எப்போ என்ன தோணுதோ அத மட்டும் தான் செய்வேன்.. அதே மாதிரி தான் இதுவும்..

சரி எதுக்கு போன் பண்ண...என்றாள் இசை...

ஒண்ணுமில்ல என் டார்லிங் எங்க இருக்கான்.. நான் அவனுக்கு போன் பண்ணா போன் சுவிட்ச் ஹாப்னு வருது.. அதான் உனக்கு கால் பண்ணேன்.. அவன் கரெக்டா சாப்டனா என்றாள் ரம்யா..

அழுகையை அடக்கி கொண்ட இசை இதுக்கு தான் எனக்கு போன் பண்ணியா... உனக்கு தேவைனா நீ அவருக்கே போன் பண்ணி தெரிஞ்சிக்கோ எதுக்கு எனக்கு போன் பண்ணி இதெல்லாம் கேட்டுட்டுருக்க  இசை கோபமுடன் வினவ..

நீ தான அவனோட வேலைக்காரி உன் கிட்ட கேக்காம நான் வேற யாருகிட்ட கேக்குறது....எழில நல்லா பாத்துக்கோ.. அப்புறம் நான் அவனுக்கு ஐ லவ் யூ சொன்னேன்னு சொல்லிடு பை என்று அழைப்பை துண்டித்தாள் ரம்யா..

சீ... என கையில் இருந்த போனை தூக்கி எரிந்த இசை பக்கத்தில் இருந்த தலையணையை கட்டிக்கொண்டு அழுதாள் சத்தமாக...

கடவுளே...ஏன் எனக்கு மட்டும் இந்த மாதிரி நடக்குது... எந்த ஒரு பொண்ணுக்கும் என்னுடைய நிலைமை வரவே கூடாது...என் புருஷன பத்தி என் கிட்டயே இவ்ளோ கேவலமா பேசுறா... என்னால இத தாங்கிக்கவே முடியல..  இந்த வீட்டை விட்டு போகவும் முடியல...அவர்கிட்ட இத பத்தி என்னால கேட்கவும் முடியாது....அப்படி கேட்டாலும் அவர் உண்மைய ஒத்துக்க போறது இல்லை....இதெல்லாம் அத்தைக்கு தெரிஞ்சா அவங்க என்ன நினைப்பாங்க...வீணா என்னால பிரச்சனை தான் வரும்..ஏற்கனவே எல்லோரும் சிவா பண்ண விஷயத்தால மனசொடஞ்சி போயிருக்காங்க... இதுல இந்த விஷயம் வேற அவங்களுக்கு தெரிஞ்சா கண்டிப்பா கஷ்டப்படுவாங்க...

நான் தினம் தினம் சாகுறதுக்கு ஒரே அடியா செத்து போய்டலாம்னு தோணுது ..ஆனா என் கொழந்த.... என அவள் வயிற்றை தன் இரண்டு கைகளால் இருக்கி கட்டிக் கொண்டவள் என்னால அதுவும் முடியாது...என் கொழந்தைக்காக நான் உயிரோடு இருந்து தான் ஆகணும்...எனக்கு என்ன விட என் கொழந்த தான் முக்கியம்.....என்ற
இசை கதறி அழுது கொண்டிருந்தாள்...

அறைக்கு வந்த எழில் தன்னவள் அழுது கொண்டிருப்பதை பார்த்தவன் வேகமாக அவள் அருகில் ஓடி அவள் முகத்தை தன் கரங்களால் பற்றியவன்

இசை...இசை என்ன ஆச்சு  ஏன் டி அழுகுற என பயத்துடன் கேட்கவும் அவளை அவனிடமிருந்து விளக்கினாள் இசை...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top