சுவாசம் 20

நான் இல்லாம எங்கிருந்து வந்தது டி இந்த கொழந்த.. ம்ம்ம்... உன் வயித்துல வளரது என் ரத்தம்... என் கொழந்த... அது எப்படி நீ மட்டும் சொந்தம் கொண்டாடலாம்... நம்ம கொழந்த மேல அம்மாவா உனக்கு என்ன உரிமை இருக்கோ அதே அளவுக்கு அப்பாவா எனக்கும் உரிமை இருக்கு....ஏய் நான் என்னைக்கு டி உனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணேன்..நான் என்ன நம்பிக்கை துரோகம் பண்ணேன்னு சொல்லு டி..என்ன காரணத்துக்காக நீ இப்படி பேசுற....

உன் அக்கா காதலிச்சவன கல்யாணம் பண்ணிக்கிட்டு போனா நான் என்ன பண்ண முடியும்.. அத உன் கிட்ட சொன்னா உன்னால உன்னால முடியாதுனு தான் நான் சொல்லாம மறைச்சேனே தவிர வேற எந்த எண்ணத்துலயும் இல்லை....நான் மனசார எந்த துரோகமும் நான் உனக்கு பண்ணல... நான் பண்ணது மன்னிக்க முடியாத ஒரு தப்புனா அது ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவள தொட்டது.. அதுவும் அன்னைக்கு நான் சுயநினைவோடு செய்யல..என் மனசுக்குள்ள அவ ஆழமா இருந்த ஒரே காரணம் அவள நெருங்க நான் யோசிக்கல...நீ என்ன தான் என்னை மன்னிச்சுருந்தாலும் அதுக்காக எத்தனை நாள் குற்ற உணர்ச்சில தூங்காம அழுதுருக்கேன் தெரியுமா.. ஆனா நீ இன்னைக்கு நான் உனக்கு துரோகம் பண்ணிட்டனு சொல்ற.. நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்னு தெரியுமா டி.. என் உயிரே நீ தான் ஆனா நீ தினம் தினம் என்ன ஒவ்வொரு நிமிஷமும் சித்ரவதை பண்ணிட்டுருக்க... என்னால முடியல இசை.. ப்ளீஸ்... என்று அவன் மனம் உடைந்து அழுதான்...

போதும் உங்க நடிப்பு... நீங்க சொல்றதெல்லாம் கேட்டு மறுபடியும் மறுபடியும் ஏமாந்து போக என்னால முடியாது...எங்கள விட்ருங்க.. நாங்க எங்கயாவது போய்டறோம்.. அப்புறம் நீங்க எப்படி வாழனும்னு ஆசை படுறிங்களோ அதே மாதிரி வாழ்ந்துக்கோங்க... என அவள் செல்லவும் அவள் முன் வந்து நின்ற எழில் இசை நான் ரொம்ப பொறுமையா பேசிட்டுருக்கேன்.. என் பொறுமைய சோதிக்காத ப்ளீஸ்.. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது.. என்றான் சினத்துடன்...

என்ன மிரற்றிங்களா.. உங்க மிரட்டளுக்கு பயந்தவ நான் இல்லை என அங்கிருந்து அவள் செல்லும் முன் வேகமாக அவள் கையை பிடித்து இழுத்த எழிலின் கை தடம் அவள் கண்ணத்தில் அழுத்தமாக பதிந்திருந்தது..

அடிக்க கூடாதுனு பாத்தா என்னடி ஓவரா போய்ட்டுருக்க... இந்த வீட்டை விட்டு வெளிய போகணும்னு கனவுல கூட நினச்சு பாக்காத...உன் வயித்துல வளரது என் கொழந்த.. அவ்ளோ சீக்கிரம் என் கொழந்தைய உன் கிட்ட கொடுத்துற முடியாது..எனக்கு நீ எந்த அளவுக்கு முக்கியமோ என் கொழந்தையும் அதே அளவுக்கு முக்கியம்...நீ என்னை புரிஞ்சிக்கவே வேணா... என்ன மன்னிக்கவும் வேணா... இனிமேலும் உன் கிட்ட பேசி எதையும் என்னால புரிய வைக்க முடியாது...என்றவன் அங்கிருந்து கோபமாக சென்று விட்டான்..

இசை அங்கேயே அமர்ந்து கதறி அழுதாள்.....

நான்கு மாதங்கள் சென்றது...
எழிலரசன் முன்பை விட மிகுந்த அக்கறையுடன் தன்னவளை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்து கொண்டான் அவள் வார்த்தைகளையும் வெறுப்பையும் சிறிதும் கண்டுக்கொள்ள வில்லை.

வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் இசையை ஒரு வேலையும் செய்யாமல் அன்புடன் பார்த்து கொண்டனர்..

இசையின் குடும்பத்திரனரும் மாதம் ஒரு முறை வந்து பார்த்து விட்டு செல்வர்..எழிலும் இசையை வாரம் ஒருமுறை அவள் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து செல்வான்..

இசையோ எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள்....
இசையோ அப்போது ஆறுமாதம் கருவுற்றிருந்தாள்....லேசாக வயிறு மேடிட்டிருந்தது..

ஒரு நாள் ஞாயிற்று கிழமை அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்..

அம்மா என வாசலில் ஒரு குரல் கேட்க சுஜாதா சென்று யாரென பார்த்தவருக்கு மிகுந்த அதிர்ச்சி..

சிவா என கத்த அனைவரும் அங்கு வந்து பார்க்க சிவாவும் கலையரசியும் ஜோடியாக நின்று கொண்டிருந்தனர்..

எழில் சற்றே அதிர்ந்தவன் இவன் என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம இங்க வந்து நிக்கிறான் என மனதில் நினைத்து கொண்டான் அவன்..

சிவா... எப்படி பா இருக்க நல்லாருக்கியா.. உன்னை பாத்து எவ்வளவு நாள் ஆகுது..என்ற சுஜாதா அவன் அருகில் ஓடினார்...

சிவாவுடன் கலையை பார்த்த விஜயா அவள் முன் சென்று ஏய் ஓடுக்காலி.. எதுக்கு டி இங்க வந்த எங்க வீட்டு மானத்தை வாங்கிட்டு ஓடி போனிவ இப்போ எதுக்கு எங்க வீட்டு வாசல்ல நிக்குற என்று கத்தினார் கோபமுடன்..

சிவா.. என்ன டா இது இவ ஏன் இங்க வந்துருக்கா.. இவள ஏன் இங்க கூட்டிட்டு வந்த என்றார் சுஜாதா கோபமுடன்..

மா... இவள் என் மனைவி. நானும் கலையும் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டோம்.. என சிவா கூறிமுடிக்க அவன் கண்ணத்தில் சுஜாதாவின் கை தடம் அழுத்தமாக பதிந்திருந்தது...

என்ன டா சொன்ன... கல்யாணம் ஆகிடுச்சா... அடப்பாவி... எங்கள அந்நியாயமா மோசம் பண்ணிட்டியே டா பாவி... எவ நம்ம வீட்டு மானத்தை வாங்கிட்டு ஓடிப்போனாளோ அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறியே டா.. நான் உன் கல்யாணத்தை பத்தி என்னென்னவோ கனவு கண்டிருந்தேனே ஆனா நீ அதெல்லாம் இப்படி ஒரே நாள்ள அழிச்சிட்டியே...என்று கதறி அழுதார் சுஜாதா..

சிவா அருகில் சென்ற விஜயா அவனை வேகமாக ஓங்கி அறைந்தவர் எதுக்கு டா இப்படி பண்ண... பாரு அவ எப்படி அழறான்னு.. ஒரு பெத்த தாயோட வயித்தெரிச்சல இப்படி வாங்கிகிட்டியே டா.. உனக்கு என்ன டா நாங்க கொறைவேச்சோம்.. உனக்கு இவ தான் பிடிச்சிருக்குனு ஒரு வார்த்தை சொல்லிருந்தா இவளையே உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுருப்போமே.. ஆனா இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிறியே டா என்றழுதார் விஜயா..

அவன் அருகில் சென்று அவன் சட்டையை பிடித்த வெங்கடேசன் அடப்பாவி என் ஒரே புள்ளனு உனக்கு எந்த கொறையும் வெக்காம தான டா வளத்தோம்.. ஆனா நீ சீ.. உன்னை என் மகன்னு சொல்லவே வெக்கமா இருக்கு.. வேதனையுடன் கூறினார் அவர்...

சிவா... நான் உன் மேல ரொம்ப நம்பிக்கை வெச்சுருந்தேன்.. ஆனா நீ அந்த நம்பிக்கையை ஒடச்சிட்ட..என்றார் குணசேகரன் சினத்துடன்...

கலையை கண்ணீருடன் பார்த்த இசை எதுவும் பேசாமல் முகத்தை வேறுபுறம் திருப்பி கொண்டாள்..

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top