சுவாசம் 19

குணசேகரும் வெங்கடேசணும் அங்கு வந்தவர்கள் விஷயத்தை அறிந்து மகிழ்ச்சியடைந்தவர்கள் இசையை ஆசீர்வதித்தனர்.

ருத்ராவும் மகிழ்ச்சியுடன் இசையை கட்டிக்கொண்டாள்..

விஜயா போன் செய்து இசையின் பெற்றவர்களிடம் கூற அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி..

பின்னர் விஜயா எழிலுக்கு போன் செய்தார்..

ஹலோ அம்மா... என்ன மா என்றான் எழில்..

எழில் நீ இப்போ எங்க இருக்க..

இதென்ன கேள்வி... ஆபீஸ்ல தான்.. என்றான் எரிச்சலுடன்

சரி சரி உடனே நீ கிளம்பி வீட்டுக்கு வா..

மா என்ன ஆச்சு ஏன் திடீர்னு வீட்டுக்கு வர சொல்றிங்க..ஏதாவது பிரச்சனையா...

எழில் எல்லாம் காரணமா தான் கொஞ்சம் சீக்கிரம் வாடா... என்ற விஜயா போனை கட் செய்தார்..

என்ன விஷயம் என யோசித்தவன் அங்கிருந்து விரைவாக வீட்டிற்கு கிளம்பினான்...

இசை... நீ போய் ரெஸ்ட் எடு என்ற விஜயா ஸ்வாதி இசைய ரூம்க்கு கூட்டிட்டு போ என்க இல்லை அத்தை நானே போய்கிறேன்... என்றவள் வேகமாக அறைக்கு சென்று கதவை தாழ் போட்டுக்கொண்டவள் கதறி அழ தொடங்கினாள்...

அத்தை என அழைத்து கொண்டு வந்த சுருதி அத்தை அது என்ன நீங்க இசை அக்கா மேல மட்டும் இப்படி பாசம் காட்றிங்க.. தேவி அக்கா கிட்ட இந்த மாதிரிலாம் பேசி பாத்ததில்லை... இசை அக்காவையும் உங்களையும் பாத்தா மாமியார் மருமகள் மாதிரி இல்லை.. அம்மா பொண்ணு மாதிரி தான் இருக்கு..

நீ சொன்னாலும் சொல்லலானாலும் அவள நான் என் பொண்ணா தான் பாக்குறேன்... தேவியும் எனக்கு பொண்ணு மாதிரி தான்..
ஆனா இசை அதுல ரொம்பவே ஸ்பெஷல்..எழிலுக்கு முதல் முதலா பொண்ணுப்பாக்க போன அன்னைக்கு எனக்கு அந்த பொண்ணு கலைக்கு பதில் இசையை தான் பிடிச்சது... ஆனா பெரிய பொண்ணு இருக்கும் போது சின்ன பொண்ண கேட்டா அது அவங்களுக்கு மனசு கஷ்டப்படும்னு தான் நான் எதுவும் சொல்லல..ஆனா கடவுள் இசை தான் இந்த வீட்டுக்கு மருமகள்னு முன்னாடியே முடிவு பண்ணிட்டாரு போல..

இதெல்லாம் போக ஒவ்வொரு வீட்லயும் வந்த கொஞ்ச நாட்கள்லயே அந்த வீட்டு மருமகளுங்க புருஷன மயக்கி வெச்சுகிட்டு மாமியார வேலை வாங்கறதும் மரியாதை இல்லாம நடத்துற இந்த காலத்தில என் மருமக இசை எவ்வளவு பொறுப்பா நடந்துக்குறா...

இவ்வளவு பெரிய வீட்ல சமையல் காரங்க இருந்தாலும் அவளே சமைப்பேன்னு பிடிவாதமா சமைக்கிறா.. பெரிய வீட்டுக்கு மருமகள்னு எந்த ஒரு ஆடம்பரமும் அதிகாரமும் இல்லாம எவ்வளவு எளிமையா இருக்கா இசை...அவளுக்கு எழில் வாங்கி கொடுக்காத பொருளா.. அவ வாய தொறந்து கேக்கறதுக்கு முன்னாடியே அவன் வாங்கி கொடுத்துரான்..ஆனா அவ அது எதையும் சட்டயே பண்ண மாற்றா..எழில் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி என்கிட்ட பாசமா இருந்தானோ அப்படியே தான் இப்பவும் இருக்கான்.. எந்த மாற்றமும் இல்லை..மத்த பொண்ணுங்க மாதிரி கல்யாணம் ஆனவுடனே புருஷன அடக்கி வெச்சுக்கல இசை...

அவ பேர்ல அவ்வளவு பெரிய கம்பெனி ரன் ஆகிட்டுருக்கு ஆனா அவளோ அத பத்தி சுத்தமா கண்டுக்காம இருக்கா..ஒரு முறையாவது அந்த கம்பெனிக்கு போயிருப்பாளா...

எந்த ஒரு அகங்காரமும் இல்லாம வேலைக்கறாங்க சொந்தக்கறாங்கனு வெளியாலுங்கனு பிரிச்சு பாக்காம எல்லோருகிட்டயும் ஒரே மாதிரி அன்பா நடந்துக்கிறா.. இந்த மாதிரி ஒரு பொண்ண நான் பாத்ததேயில்லை... இதெல்லாம் தான் இசை மேல எனக்கு பாசத்தை நாளுக்கு நாள் கூட்டிகிட்டே போகுது.. அவ அக்கா பண்ண தப்பாள நான் அவ கிட்ட கல்யாணம் ஆன கொஞ்ச நாள் வெறுப்ப காட்டினேன்.. அதுக்கு அவ அழுதாளே தவிர, ஒரு வார்த்தை திருப்பி பேசல.. இப்போ பாரு மறுபடியும் இந்த வீட்டோட கவுரவத்தை அவ உயிர்த்திட்டா.. இந்த வீட்டுடோட முதல் வாரிச அவ வயித்துல சுமந்துட்டுருக்கா என் மருமகள்..
அதுக்காக நான் தேவிய குறை சொல்லல..அவளுடைய பிரச்சனை அது.. அத நம்ம எதுவும் சொல்ல முடியாது..

ஆமா அத்தை நீங்க சொல்றதெல்லாம் சரி தான் எங்க கிட்டயும் கூடப்பொறாந்த அக்காவா தான் பழகுறாங்க இசை அக்கா என்றாள் சுருதி.....

அறைக்கு சென்ற இசையோ தன் வயிற்றில் கை வைத்தவள் நான் அம்மாவாக போறேன்.. என்னை அம்மானு கூப்பிட என் கொழந்த வர போறான்.. என உள்ளம் மகிழ்ந்தவள் சில நிமிடங்களுக்கு பின் நான் படுற கஷ்டம்  போதாதுனு என் கொழந்தையும் இந்த கஷ்டத்த எல்லாம் அனுபவிக்கனுமா..
கடவுளே... என்றாள் கண்ணீருடன்..

இல்லை.. நான் விடமாட்டேன்... நீ என் கொழந்தடா..நான் எந்த ஒரு கஷ்டத்தையும் உன்கிட்ட நெருங்க விட மாட்டேன்.. உன்னை நான் நல்லபடியா பெத்து வளர்ப்பேன்டா செல்லம்..நம்ம இந்த வீட்ல இருக்க வேண்டாம்.. நம்ம வேறெங்கயாவது போய்டலாம்.. உனக்கு அப்பானு ஒருத்தர் இல்லை.. நமக்கு உன் அப்பா வேண்டாம்.. அவர் உன் அம்மாவ ஏமாத்திட்டாரு..உனக்கு இனிமேல் அம்மா மட்டும் தான்..  அம்மா உன்னை நல்லா பாத்துக்குவேன்... என அழுது கொண்டே கூறினாள் இசை...

வேகமாக வீட்டிற்கு வந்த எழில் மா.. மா என்ன மா ஆச்சு என்று பதறினான் அவன்..

டேய் இந்தா ஸ்வீட் சாப்பிடு என லட்டுவை அவனுக்கு ஊட்டிய விஜயா எல்லாம் ரொம்ப நல்ல விஷயம் தான்.... என் மருமக இசை கூடிய சீக்கிரம் இந்த வீட்டுக்கு ஒரு வாரிசை பெத்துக்கொடுக்க போறா என கூறிய அன்னையை கண்களை விரித்து அதிர்ச்சியுடன் பார்த்தவனது வாடிய முகம் புன்னகையாய் மலர அம்மா நீங்க சொல்றது உண்மையா என்றான் கண்ணீருடன்..

ஆமா அவள் மேல ரூம்ல தான் இருக்கா போய் பாரு என புன்னகையுடன் விஜயா கூறவும் வேகமாக அறைக்கு ஓடியவன் அறையின் கதவை தட்ட சில நிமிடங்களில் இசை கதவை திறந்தவள் அவன் முகம் பாராமல் உள்ளே சென்று விட்டாள்...

உள்ளே சென்றவன் இசை என  அவளை பொறுமையாக அழைக்கவும் தன் அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு வேறு பக்கம் திரும்பி நின்றாள் அவள்..

இசை  எழில் அவளை நெருங்கி சென்று தன்னவளின் கரத்தை பிடித்து தன் புறம் திருப்பி அவள் முகத்தை பார்க்க இசையின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது..

இசை... என அவள் முகத்தை தன் கரங்களில் பற்றியவன் இசை என்ன ஆச்சு நீ ஏன் அழுவுற என்று அவன் குழப்பமுடன் வினவ அவள் கண்ணீரை துடைத்து கொண்டவள் ஒன்னுல்ல என்றாள் அவள் வேறெங்கோ பார்த்து கொண்டு...

அவளை இழுத்து இறுக்கமாக கட்டிக்கொண்டவன்.. இசை.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு..என்றவன் தன்னவளின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு தன் ஒரு கையை தன்னவளின் வயிற்றில் வைத்தவன் அம்மா சொன்னாங்க நம்ம... நம்ம கொழந்த உன் வியித்துல வளரான்னு  என்று அவன் இன்பமுடன் கூறவும் சட்டென கண்களை இறுக மூடிக்கொண்ட இசையின் கண்களில் கண்ணீர் துளிர்க்க அவன் கையை அவள் வயிற்றிலிருந்து பொறுமையாக விலக்கியவள் அவனிடமிருந்து பின் நகர்ந்து நின்றாள்..

இல்லை... இது என் கொழந்த... எனக்கு மட்டும் தான் சொந்தம்..உங்க யாருக்கும் என் கொழந்த மேல எந்த உரிமையும் இல்லை...என் கொழந்தைய நான் உன்கிட்ட தர மாட்டேன்..என அழுதவளை புரியாமல் பார்த்து நின்றான் எழில்..

இசை... நீ என்ன பேசுறனு புரிஞ்சுதான் பேசுறியா... இது நம்ம கொழந்த..

இல்லை இல்லை இல்லை என சத்தமாக கதியவள் இது என் கொழந்த... என்னுடைய கொழந்த..என் கொழந்த மேல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை...எப்போ எனக்கு நீங்க நம்பிக்கை துரோகம் பண்ணீங்கனு தெரிஞ்சுதோ அன்னைக்கே உங்கள நான் வெறுத்துட்டேன்... நான் கிளம்புறேன்.. இனிமேல் நான் உங்க கூட வாழ மாட்டேன்...எனக்கு என் கொழந்த மட்டும் போதும்.. என அங்கிருந்து இசை செல்லும் முன் அவள் கையை பிடித்து இழுத்து நிறுத்தியவன்

இசை.... நீ என்ன நினைச்சிட்டு இப்படிலாம் பேசிட்டுருக்க...உன் கொழந்தையா.....

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top