சுவாசம் 17
ஓ அப்படியா உனக்கு துரோகம் பண்ண மாட்டானா.. அப்போ உன் அக்காவ கல்யாணம் பண்ணிக்க இருந்தவன் கடைசியா உன்னை கல்யாணம் பண்ணி குடிச்சிட்டு வந்து உன் கிட்ட தப்பா நடந்து கிட்டானே அதெல்லாம் தற்சயலா நடந்ததுனு நினைக்கிறியா... முட்டாள்...அப்புறம் நேத்து கூட வெளிய போனீங்களே..அது எல்லாமே பிளான் தான்.. என்ற ரம்யா சொன்னதை கேட்டு அதிர்ந்தவள் கண்களில் கண்ணீர் பெறுகியது...
இதெல்லாம் உனக்கெப்படி தெரியும் என்றாள் இசை மெல்லிய குரலில்..
அது மட்டும் இல்லை இன்னும் என்னென்னவோ தெரியும்...ஒரு நாள் எழில் குடிச்சிட்டு என் வீட்டுக்கு வந்திருந்தான்... அப்போ அவன் உன்கிட்ட எப்படி நடந்து கிட்டானோ அதே மாதிரி தான் என் கிட்டயும் நடந்து கிட்டான்...அப்போ தான் சொன்னான்...என்ற ரம்யாவின் வார்த்தை அவள் செவியில் நெருப்பை அள்ளி போட்டது போல் உணர்ந்தவள் நோ.. நோ என்று சத்தமாக கத்தினாள் இசை..
இல்லை நீ பொய் சொல்ற என் புருஷன் அப்படிலாம் பண்ண மாட்டாரு.. அவர் ரொம்ப நல்லவரு...நான் நம்ப மாட்டேன் நான் நம்ப மாட்டேன் என கதறி அழுதாள் இசை...
அப்படினு நீ மட்டும் தான் சொல்லனும்...உனக்கு ஒன்னு தெரியுமா எழில் உன் கிட்ட எதை மறச்சாலும் எதையும் என் கிட்ட மறச்சிதில்லை...இதுலேயே தெரியல அவனுக்கு யார பிடிச்சுருக்குனு....உன் அக்கா இருக்காளே அக்கா... ஓடி கூட போனாளே...அவ ஓடி போனது எழிலோட தம்பி சிவா கூட தான்... என்றாள் ரம்யா இசையை பார்த்து..
அதிர்ச்சியில் கண்களை விரித்து பார்த்தவள் நீ பொய் சொல்ற...சிவா ரொம்ப நல்ல பையன் அவன் அப்படிலாம் பண்ணிருக்க மாட்டான்.. இசை உறுதியாக கூறினாள்..
சரி அப்போ நீ எழில் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ இது உண்மையா பொய்யானு..இத என்னால நிரூபிக்கவும் முடியும்.. இப்போ நினைச்சாலும் எழில வெச்சே உன்னை இங்கிருந்து என்னால விரட்ட முடியும்.. ஆனா அது அவசியம் இல்லைனு நினைக்கிறன் என ரம்யா கூறவும்..இசை எதுவும் பேசாமல் அழுது கொண்டே அங்கிருந்து ஓடி விட்டாள்....
ரிசப்ஷன் பெண்ணின் அருகே சென்றவள் இங்க நடந்தது யாருக்கும் தெரிய கூடாது.. இது மட்டும் எழிலரசனுக்கு தெரிஞ்சுது அப்புறம் நீ உயிரோட இருக்க மாட்ட.. என்றவள் சிசிடிவி அறைக்கு சென்றவள் அங்கிருந்த சில வீடியோக்களை நீக்கி விட்டாள்..
இந்த நாளுக்காக எத்தனை நாள் வெயிட் பண்ணேன்.. உன் இடத்துக்கு வந்து உன்னை மீட் பண்ணலாம்னு நினைச்சேன் டி ஆனா இன்னைக்கு நீயே வந்து என் கிட்ட மாட்டிக்கிட்ட...இசை நான் இன்னைக்கு சொன்ன ஒவ்வொரு பொய்யும் உன் வாழ்க்கையையே தலைகீழா மாத்தப்போகுது... எழில் என்ன ஒரு பிரண்ட்டா நினைச்சு தான் என் கிட்ட எல்லா விஷயத்தையும் ஷேர் பண்றான்.. ஆனா இத வெச்சே எழில உன் கிட்டருந்து நிரந்தரமா பிரிக்கிறேன் பாரு டி.. இப்போவரைக்கும் அவனுக்கு என் மேல காதல்னு ஒன்னு இல்லவே இல்லை ஆனா அத எப்படி வரவைக்கணும்னு எனக்கு தெரியும்.. இன்னைக்கு நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உன் மனசுல ஆழமா பதிஞ்சிருக்கும்.. இது போதும் இப்போதைக்கு... ரொம்ப நாள்க்கு அப்புறம் சரியான உங்க லைப் ல மறுபடியும் பிரச்சனை வெடிக்க போகுது...நீயா அவன் கிட்டயிருந்து பிரிஞ்சு போகணும்..இசை உனக்கு கூடிய சீக்கிரம் பை சொல்ற டைம் வரபோகுதுனு நினைக்கிறேன் என மனதில் நினைத்து சிரித்து கொண்டாள் ரம்யா..
வீட்டிற்கு சென்ற இசை வேகமாக அறைக்கு ஓடி கதவை தாழ்போட்டவள் கட்டில் மேல் விழுந்து கதறியழுதாள்..
இல்லை அப்படி இருக்காது.. என் எழில் அப்படி பண்ணிருக்க மாட்டாரு.. எனக்கு துரோகம் பண்ணிருக்க மாட்டாரு...அவர் நல்லவரு எனக்கு தெரியும்... இல்லை அவள் தான் பொய் சொல்றா..இல்லை என சத்தம் போட்டு கதறி அழுதாள் இசை...என் எழில் என்னை ஏமாத்த மாட்டாரு.... எனக்கு நம்பிக்கை இருக்கு என்று மாலை வரை அழுது கொண்டிருந்தாள் அவள்.
மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தனர் ஸ்வாதி சுருதி ருத்ரா மூவரும்...
வீட்டிற்கு வந்த ஸ்வாதி யூ டுயூப் பார்த்து பாயாசம் செய்தவள் அனைவருக்கும் கொடுத்து விட்டு அவர்களின் பாராட்டுகளை வாங்கியவள் இசையின் அறைக்கும் பாயசத்தை எடுத்து கொண்டு செல்ல அவள் அறையின் கதவு உள் புறம் பூட்டியிருந்தது..
அக்கா அக்கா என ஸ்வாதி கதவை தட்ட இசை அழுது கொண்டிருந்தவள் அழுகையை நிறுத்தி கொண்டு என்ன ஸ்வாதி என குரல் கொடுக்க...
அக்கா கதவை திறங்க... உங்களுக்கு பாயாசம் கொண்டு வந்துருக்கேன்.. நானே செஞ்சேன் என்றாள் ஸ்வாதி..
எனக்கு எதுவும் வேணாம் எடுத்துட்டு போ... ப்ளீஸ் யாரும் என்னை கொஞ்ச நேரம்
டிஸ்ட்ரப் பண்ணாதீங்க ப்ளீஸ் என அவள் கத்த சரி என ஸ்வாதி வாடிய முகமாய் கீழே சென்று விட்டாள்..
இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த எழில் நேராக தன் அறைக்கு சென்றான்..
அறைக்கு வெளியில் நின்று இசை இசை.. என கதவை தட்ட கண்ணீரை துடைத்து கொண்டு சில நிமிடங்களில் கதவை திறந்தாள் அவள்..
எழில் அவள் முகத்தை பார்க்க கண்கள் கோவப்பழம்போல் சிவந்து முகம் வீங்கியிருந்தது..
அவளை அதிர்ச்சியுடன் பார்த்த எழில் இசை என்ன ஆச்சு ஏன் உன் முகம் இப்படி வீங்கியிருக்கு என புரியாமல் வினவவும் அவள் எதுவும் பேசாமல் கட்டில் அருகில் சென்று நின்றாள்.
கதவை தாழிட்டவன் அவள் அருகில் சென்று இசை என அவளை தன் புறம் திருப்பியவன் இசை என்ன ஆச்சு எதுக்கு இப்போ நீ அழுதுட்டுருக்க என்றான் அவன் அவள் முகத்தை பற்றி...
என் அக்கா இப்போ எங்க இருக்கா .??
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top