சுவாசம் 16

இரவு நேரம் தாமதமாக எழிலரசன் இசை இருவரும் வீட்டிற்கு சென்றனர்.

சுருதி ஸ்வாதி ருத்ரா மூவரும் மட்டும் ஷோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தனர்.

இசை எழில் வீட்டிற்குள் செல்ல வாங்க அண்ணி என்ன செமயா என்ஜாய் பண்ணிங்களா... என்றாள் ருத்ரா புன்முறுவல் முகமாக..

ருத்ராவை பார்த்த இசை ஆமா..நீ வேற..சும்மா இரு ருத்ரா..சரி அத்தைலாம் தூங்கிட்டாங்களா..என்றாள் இசை சலிப்பு நிறைந்த குரலில்..

ஆமா அண்ணி..தூங்கிட்டாங்க..

சரி நான் ரூம்க்கு போறேன்...என்னங்க சீக்கிரம் வாங்க என கூறிவிட்டு அறைக்கு சென்று விட்டாள் இசை.

எழிலை பார்த்த ஸ்வாதி மாமா என்ன ஆச்சு இசை அக்கா ஏன் சோகமா போறாங்க என்று வினவவும் போன இடத்தில என் காலேஜ் பிரண்ட பாத்தேன் அவ கிட்ட கொஞ்சம் ஜாலியா பேசிட்டேன் அதுக்கு அவ கோச்சிக்கிட்டு போறா என்றான் எழிலரசன்..

இசை அக்காவுக்கு உங்க மேல ரொம்ப தான் போஸ்ஸசிவ்... என்றாள் சுருதி..

என்னங்க என இசை குரல் கொடுக்க...

ஆஹ் இதோ வரேன் டி... என்றவன் சரி.. நான் போறேன் இல்லைனா இதுக்கும் திட்டுவா என எழில் வாங்கிய பொருட்களை எடுத்து கொண்டு அறைக்கு சென்று விட்டான் அவன்..

நம்ம மாமா எவ்ளோ பெரிய பிசினஸ்மேன் அவருக்கு கீழே எத்தனை பேரு வேலை செய்றாங்க.. அத்தை மாமாக்குகூட மாமா பயந்தது இல்லை...ஆனா அவர் இப்போ அவர் பொண்டாட்டிக்கு இப்படி பயப்படுறாரு..என்றாள் ஸ்வாதி வியப்புடன்..

அறைக்கு சென்ற எழிலரசன் கதவை தாழிட்டு விட்டு வாங்கிய பொருட்களை டேபிள் மீது வைத்தவன் தன் முன் நின்ற தன்னவளை பார்க்க அவளோ அவன் வாங்கி தந்த இரவு உடையில் இருந்தாள்..

இசை, என்ன பாக்குறீங்க.. வாங்க வந்து தூங்குங்க.. நாளைக்கு ஆபீஸ் போகணும் ஞாபகம் இருக்குல எனவும்..

ம்ம்.. என்றவன் பொறுமையாக சென்று கட்டிலில் படுத்து கொள்ள இசையும் சென்று அவன் அருகில் படுத்து கொண்டாள்..

தன்னவளின் அருகில் நெருங்கி சென்றவன் பொறுமையாக அவள் கன்னத்தில் இதழ் பதிக்க இசையோ சட்டென தன்னவனை கட்டிக்கொண்டாள்..

மறுநாள் அழகாகவே விடிந்தது..

எப்போதும் போல் அனைவரும் அவரவர் அவர்கள் கடமைக்கு சென்று விட இசை காலை உணவை உண்டு விட்டு அறைக்கு செல்ல..

இசை... என விஜயா அழைக்க என்ன அத்தை என்றாள் இசை....

இசை நான் பக்கத்துல இருக்க கோவிலுக்கு போய்ட்டு வந்துறேன்.. நீ கொஞ்சம் வீட்டை பாத்துக்கோ மா...சுஜாதாவுக்கு கால் வலினு ரூம்ல படுத்துருக்கா..அவ ஏதாவது கேட்டா வேலைக்காரங்க கிட்ட கொடுத்தனுப்பு சரியா என்க சரி என்றாள் அவளும்.

விஜயா கோவிலுக்கு சென்று விட இசை தன் அறைக்கு சென்று கட்டில் மேல் அமர சட்டென வாயை மூடிக்கொண்டு வேகமாக ஓடி குளியல் அறையில் வாந்தி எடுத்தாள்....

சில நிமிடங்களில் முகத்தை கழுவிக்கொண்டு சோர்வுடன் வந்து கட்டில் மேல் அமர்ந்தாள்...

ரிங் ரிங்....அவளது கைபேசி சினுங்கியது.

அட்டன் செய்து ஹலோ எனவும்

ஹலோ இசை நான் தான் எழில்..

ஆஹ் சொல்லுங்க என்ன..

இசை என் ஆபீசோட இம்போர்ட்டண்ட் பைல நான் வீட்லயே மறந்து விட்டுடு வந்துட்டேன்.. இப்போ எனக்கு இம்பார்ட்டண்ட்டான ஒரு மீட்டிங் இருக்கு.. அந்த பைல் இப்போ அர்ஜென்ட்டா எனக்கு வேணும்..என்னாலயும் இப்போ வீட்டுக்கு வர முடியாது..அத கொஞ்சம் யாரு கிட்டயாவது கொடுத்தனுப்புறியா.. ப்ளீஸ்.. என்று அவன் கெஞ்ச...

ம்ம் சரிங்க.. என்றாள் இசையும் ..

நம்ம ரூம்ல சைடு டேபிள் ட்ராவ்ல இருக்கு சீக்கிரம் என அழைப்பை துண்டித்தான் எழில்..

அதை தேடி எடுத்த இசை கீழே சென்று பார்க்க அன்று ஆண் வேலைக்காரர்கள் யாரும் இல்லை என்பதால் இசையே ஆட்டோ பிடித்து எழிலரசன் ஆபிசுக்கு சென்றாள் பைலுடன்..

அன்று தான் முதன் முதலாக தன் கணவனின் ஆபீசை நேரில் பார்த்தாள்.

இசை குரூப் ஆப் கம்பெனி ஹெர்பல் ப்ரோடெக்ஸ் என பெரியதாக சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்தது..

மனமகிழ்ச்சியுடன் ஆபீஸ் உள் நுழையும் போதே ஏசி குளிர் அவளை  வரவேற்க மிகவும் ப்ரம்மண்டாமாக இருந்தது ரிசப்ஷன்..

ரிசப்ஷனிஸ்ட் அருகில் சென்ற இசை எக்ஸ்யூஸ்மி சிஇஓ எழில நான் பாக்கணும் என்க..

என்ன சார பாக்கனுமா நீங்க யாரு..அப்பாய்ன்ட் இருக்கா.. சார் இப்போ ரொம்ப முக்கியமான மீட்டிங்ள இருக்காரு..என்றார் ரிசப்ஷன் பெண்மணி.

நான் அவர் ஒய்ப் மிஸஸ் இசையரசி எழிலரசன்.. இப்போ பாக்க முடியுமோ என்றாள் இசை..

ஒன் மினிட் மேடம் என்ற அப்பெண் உடனே எழிலரசன் பிஏ விற்கு போன் செய்தவர் ஹலோ மேம் சார பாக்க அவங்க ஒய்ப் வந்துருக்காங்க அனுப்பட்டுமா என கேட்கவும்...

என்ன ஒய்பா யாரு வந்து என்ன சொன்னாலும் நம்பி அனுப்பிடுவியா என்ன... இரு நான் அங்க வரேன் என்ற எழிலின் பிஏ அங்கு வந்தாள்.

ஹாய் இசை..

இசை ஒன்றும் புரியாமல் பார்த்தவள் நீங்க யாரு என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும்..என்றாள் சந்தேகமுடனும் வியப்புடனும்..

உங்க பேர் என்ன உங்க பூர்விகமே எனக்கு தெரியும்.. ஓகே ஐ யம் ரம்யா
சிஇஒ ஓட பர்சனல் அசிஸ்டன்ட்.. என்ன விஷயமா இருந்தாலும் பரவாயில்லை என் கிட்ட சொல்லுங்க.. இப்போதைக்கு சார பாக்க முடியாது அவர் ஒரு இம்போர்ட்டண்ட் மீட்டிங்ல இருக்காரு என்றாள் நக்கலாக..

இந்த பைல மறந்து வீட்ல வெச்சுட்டு வந்துட்டாரு.. இப்போ தான் கால் பண்ணி இத கொண்டு வர சொன்னாரு அதான் என்றாள் இசை பொறுமையான குரலில்...

இசை கையில் இருந்த பைளை வேகமாக பிடிங்கிய ரம்யா அங்கிருந்த ஒரு பியூனிடம்  கொடுத்து எழிலிடம் கொடுக்க சொல்ல அவரும் அங்கிருந்து சென்று விட்டார் பைலுடன்.

ஓ... எடுபுடி வேலைக்கு தான் நீங்க இப்போ இங்க வந்திங்களா மேடம்... ரொம்ப தேங்க்ஸ்..ம்ம்ம் ஓகே வேலை முடிஞ்சுதுல கிளம்புங்க என்றாள் ரம்யா வாசலை காண்பித்து..

இசை அவள் பேச்சில் கோபமடைந்தவள் ஏய்.. என்ன டி நானும் பாத்துட்டுருக்கேன் ஓவரா பேசிட்டுருக்க.. மைண்ட் யூவர் வர்ட்ஸ்.. என் புருஷனுக்கு எடுபுடி வேலை செய்றவ நீ தான்.நான் இல்லை...நீ ஜஸ்ட் பிஏ அவ்ளோ தான்.. இந்த கம்பெனி ஓனர் மாதிரி ஓவரா பேசிட்டுருக்க ..நான் எப்போ கிளம்பனும் எப்போ கிளம்ப கூடாதுனுலாம் நீ சொல்லக்கூடாது என்று இசை கோபமாக கத்தினாள்...

அங்கிருந்த அனைவரும் இசையை அதிர்ச்சியுடன் பார்க்க

இசை...ரொம்ப ஆட்டம் போடாத..
நீ எழிலோட பொண்டாட்டினு ரொம்ப உரிமைலாம் எடுத்துக்காத...உனக்கு தெரியாம இன்னும் நிறைய இருக்கு.. நீ நினைச்சிட்டுருக்கலாம் உன் புருஷன் ரொம்ப நல்லவன்னு ஆனா அவன் எப்படிப்பட்டவன்னு எனக்கு தான் தெரியும்.. அவன் கூட ஸ்கூல இருந்து இப்போ வரைக்கும் அவன் கூட இருக்கவ நான்.. உன்னை விட எழில நான் நல்லாவே புரிஞ்சி வெச்சுருக்கேன்.. அவன் வேற வழி இல்லாம தான் உன் கூட வாழ்ந்துட்டுருக்கான்.. ஆனா அவன் லவ் பண்றது என்ன தான்.. அத என்னால உன் கிட்ட நிரூபிக்கவும் முடியும் என்றாள் ரம்யா உறுதியாக...

அவளை தீப்பார்வயுடன் முறைத்து நின்ற இசைக்கு கோபத்தை பொறுத்து கொள்ள முடியவில்லை....இப்படிலாம் பேச உனக்கு வெக்கமா இல்லை சீ... என் புருஷன பத்தி எனக்கு தெரியும் நீ.... அவர் எனக்கு துரோகம் பண்ண மாட்டாருனு எனக்கு நம்பிக்கையிருக்கு.. என்ன தான் நீ அவர மயக்க நினைச்சாலும் அது முடியாது...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top