சுவாசம் 15

இருவரும் மதிய உணவை அங்கேயே உண்டனர்.

பின் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

இசை தன் குடும்பத்தை பிரிய மனமில்லாமல் தன்னவனுடன் சென்றாலும் மறுபக்கம் நீண்ட நாட்களுக்கு பின் தன் குடும்பத்தை பார்த்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள் இசை..

ரொம்ப தேங்க்ஸ்ங்க என இசை கூற லேசாக புன்னகைத்தவன் உன் தேங்க்ஸ நீயே வெச்சுக்கோ.. என அவன் கூறிக்கொண்டே காரை ஓட்டி செல்ல அவளோ எழிலின் தோளின் மீது சாய்ந்து கொண்டாள் இசை.

தன்னவளின் நெற்றியில் இதழ் பதித்தவன் அவளை அழைத்து கொண்டு ஒரு மால்க்கு சென்றான்.

இசைக்கு தேவையான பொருட்களை எழிலரசன் வற்புறுத்தி வாங்கி கொடுத்தவன் பின் வாங்கிய பொருட்களை காரில் வைத்து கொண்டு அவளை ஒரு பெரிய தீம் பார்க்கிற்கு அழைத்து சென்றான் .

இசையும் எழிலும் அங்கு மகிழ்ச்சியுடன் மனம் விட்டு பேசி கொண்டிருக்க,

அந்த நேரம் ஒரு இளம் வயது பெண் அறை குறை ஆடையுடன் நவ நாகரீக தோற்றமுடன் எழிலரசன் அருகில் வந்தவள் ஹே.. எழில் என கத்த

ஹேய் ஹேமா நீ எங்க இங்க என எழிலரசன் கேட்கவும் வேகமாக வந்து எழிலை கட்டி பிடித்தவள் ஹவ் ஆர் யூ டா எழில் என கொஞ்சுதலாக கேட்க ஐ அம் பைன் டியர்.. வாட் அபௌட் யூ என்றான் எழிலரசன்.

இதை பார்த்த இசையின் கண்களில் கண்ணீர் தேங்க மறுபுறம் கோபம் தலைக்கேறியது..யாரு இவ என் புருஷன என் கண் முன்னாடியே இப்படி கட்டிபிடிக்கிறா சீ.. என மனதில் நினைத்து கொண்டிருக்க

ஐ அம் டூ குட் டா என்ன காலேஜ்லயே ஹண்ட்ஸமா இருப்ப இப்போ ரொம்ப அழகாயிட்ட என்ன விஷயம்.என அவள் சிரிக்க..

நான் கூட என் புருஷன இப்படிலாம் சொன்னதில்லை இவ என்னடானா இந்த அளவுக்கு ஐஸ் வெக்குறா என நினைத்து கொண்டாள் இசை.

எழிலரசன் ஹேமாவை தன்னிடமிருந்து விலக்கியவன்

அப்படியா.. அப்படி எனக்கு எதுவும் தெரியல.. இப்போ நீ என்ன பண்ணிட்ருக்க ஹேமா..

நான் ஒரு கம்பெனில அசிஸ்டன் மானேஜரா ஒர்க் பண்றேன் டா..எழில் நீ..

நான் ப்ரோடெக் பிசினஸ் பண்றேன்..இசை குரூப் ஆப் கம்பெனிக்கு சிஇஓ...

கங்கிராஜூலேஷன்ஸ் யா.. சூப்பர்ப் தான்..

தேங்க்ஸ்..இப்போ நீ எங்க இருக்க காலேஜ்ல பாத்தது,ரொம்ப மிஸ் பண்றேன் ஹேமா நம்ம செட்ட.. கேர்ள்ஸ்ல ரம்யா மட்டும் தான் காண்டாக்ட்ல இருக்கா..

என்ன ரம்யா உன் கூட காண்டாக்ட்ல இருக்காளா எப்படி?..

அவ இப்போ என் ஆபிஸ்ல தான் ஒர்க் பண்றா..போன மாசம் தான் அவ எனக்கு பர்சனல் பிஏ வா ஜாய்ண்ட் பண்ணிருக்கா..

ரியலி.. சூப்பர் யா..நான் அவள கேட்டேன் சொல்லு.. சீக்கிரம் அவள மீட் பண்றேன்..

அப்புறம் எழில் லைப் எப்படி போகுது.. நீ மட்டும் என் லவ்வ அன்னைக்கு அட்சப்ட் பண்ணியிருந்தா இன்னைக்கு சிஇஓ ஒய்பா உன் கூட இருந்துருப்பேன் ப்ச்ச..மிஸ் பண்ணிட்டேன் பா.. இப்போ நீ ஓகே சொன்னாலும் நான் ரெடி தான் என சிரித்த அந்த பெண்ணை பார்த்து முறைத்த இசை

உனக்கு இந்த ஆசை வேறவா இருக்கா டி.. நீ என்ன தான் தலைகீழாக நின்னாலும் அது மட்டும் நடக்காது என நினைத்து கொண்டிருந்த இசையின் முகத்தை பார்த்த எழில் ஓ ஓ இங்க கதை இப்படி போகுதா லைட்டா இசைய வெறுப்பேத்தி பாக்கலாம் என நினைத்தவன்

ஆமா ஹேமா, நான் இப்போ தான் பீல் பண்றேன் நீ இப்போ ரொம்ப அழகாகிட்ட முன்ன விட செம ஸ்மார்ட்டா பேசுற என எழில் கூற அவனை முறைத்த இசை என்னது பீல் பண்றிங்களா.. என்ன விட அவ அழகா இருக்காளா என்ன..
இருக்கட்டும் வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு என முனகினாள் இசை.

இசையை பார்த்த ஹேமா எழில் யாரு இந்த பொண்ணு ரொம்ப நேரம் இங்கயே நிக்கிறா உனக்கு தெரிஞ்சவங்களா என கேட்க

ஆமா எனக்கு தெரிஞ்சவங்க தான் என்றான் எழிலரசன்..

என்னது தெரிஞ்சவங்களா.. நான் தெரிஞ்சவ மட்டும் தானா.. என நினைத்த இசை கோபமுடன் அங்கிருந்து செல்ல

அவள் செல்வதை பார்த்த எழில் ஏய் எங்க போற என தன்னவளின் கையை பிடித்து இழுத்து அவன் அருகில் நிற்கவைத்தவன் ஹேமா இவ தெரிஞ்சவங்க மட்டும் இல்லை என்னுடைய எல்லாமே இவ தான்.
மை லைப், மை பெட்டெர் ஹாஃப் எல்லாமே..மை டியர் ஒய்ப்
இசையசரசி..

தன்னவனை கண்ணிமைக்காமல் பார்த்து நின்றாள் இசை ஒருநிமிடம் .

என்ன ஒய்பா?..என அதிர்ச்சியுடன் அவள் கேட்கவும்

ஆமா ஹேமா.. என்னால அப்போ என் மேரேஜ்க்கு உன்னை இன்வைட் பண்ண முடியல அதான் சாரி..

இட்ஸ் ஓகே எழில் நோ ப்ராப்லம்..ஹாய் இசை..

ஹாய்.. என்றாள் இசை கண்டும் காணாமல்

ஓகே என் பிரண்ட்ஸ் எனக்காக வெயிட் பன்றாங்க இன்னொரு நாள் பாக்கலாம் பை எழில் என கூறியவள் அங்கிருந்து சென்று விட்டாள்..

எழிலை பார்த்த இசை அவளாம் ஒரு ஆளுனு அவ கிட்ட இப்படி கொஞ்சி கொளாவி பேசிட்டுருக்கிங்க.. நான் உங்க கிட்ட இத கொஞ்சம் கூட எதிர்பாக்கலங்க என சிடு சிடுப்புடன் கூறிய இசை சரி வாங்க வீட்டுக்கு போகலாம் என்றவள் நேராக சென்று காரில் அமர்ந்தாள்.

என்ன கொஞ்சி பேசுனனா..உன்னை வெறுப்பேத்த தான டி பேசினேன்..ஒரு பிரண்ட் கிட்ட பிரண்ட்லியா பேசறது கூடவா தப்பு....அதான் நான் தான் சொல்லிட்டேனே நீ தான் என் ஒய்ப்னு அப்புறம் என்ன ஆச்சு இந்த இசைக்கு என நினைத்தவன் அங்கிருந்து சென்று காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்தான்..

சரி வேற எங்க போகலாம்..

எங்கேயும் போக தேவையில்லை..வீட்டுக்கு போகலாம்..என முறைத்து கொண்டே கூறிய இசையை பார்த்தவன்

நான் அம்மா கிட்ட சொல்லிட்டேன் நைட்க்கு நாங்க வெளியே சாப்பிட்டு வந்துருவோம்னு.. இப்போவே ரொம்ப லேட்டாகிருச்சு நம்ம ஹோட்டல் போய்ட்டு சாப்பிட்டு போகலாம் என்றவன் அவளை ஒரு பெரிய ஹோட்டல்க்கு அழைத்து சென்றான்..

அவளுக்கு பிடித்ததை வாங்கி தந்தவன் அவனும்  சாப்பிட்டு விட்டு இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்..

எழில் காரை ஓட்ட இசை அமைதியாக அமர்திருந்தாள் எதுவும் பேசாமல்.

அவளை பார்த்த எழில் சரி இப்போ எதுக்கு மூஞ்சிய இப்படி தூக்கி வெச்சுருக்க கொஞ்சம் சிறியேன் மா...என்க

ம்ம்க்கும் என முகத்தை திருப்பி கொண்டாள் இசை...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top