சுவாசம் 13

ஆதவனின் வருகையில் அழகாய் விடிந்தது அன்றைய பொழுது...
ஆறு மணியளவில் எழிலுக்கு முன்னாள் எழுந்து கொள்ளும் இசை குளித்து முடித்து தயாரானவள் அவள் கணவனுக்கு தேவையான உடை முதல் ஷூ வரை தயாராக வைத்து விட்டு கீழே சென்று விடுவாள்.

சமையல் அறைக்கு சென்று அனைவருக்கும் காபி போட்டு கொடுத்து விட்டு தன்னவனுக்கு காபி எடுத்து கொண்டு அறைக்கு செல்ல அவனோ ஏழு மணிக்கு எழுபவன் குளித்து முடித்து அவள் எடுத்து வைத்திருக்கும் உடையை மாற்றி கொண்டு தயாராகி இருப்பான்.

விஜயா சுஜாதா இருவரும் ஹாலில் அமந்திருக்க குணசேகரன் வெங்கடேசன் இருவரும் அமர்ந்து செய்தி தாள் படித்து கொண்டிருப்பது வழக்கம்.

இசை எழிலுக்கு காபியை கொடுத்து விட்டு கீழே செல்பவள் பூஜை வேலையை முடித்து விட்டு அன்றைய சமையலை அரக்க பறக்க தொடங்கிவிடுவாள்...தேவி வேலைக்கு செல்வதால் சுஜாதாவும் விஜயாவும் இசைக்கு சில உதவிகளை செய்யவும் எட்டு மணி அளவில் இசை சமையலை முழுவதும் முடித்து விடுவாள்.

அனைவரும் அவரவர் வேலைக்கு செல்ல தயாராகி ஹாலுக்க்கு வந்தவர்கள் டைனிங் டேபிளில் அமர இசையும் அந்த வீட்டில் சமையல் வேலை செய்யும் ரேவதியும் அனைவருக்கும் உணவை பரிமாறுவர்.

அன்று எழிலரசன் வெள்ளை நிற காஷுவல் சட்டையும் அதற்கு மேல் கருப்பு கோட் உடுத்தியவன் அதற்கு ஏற்றது போல கருப்பு ஷூவும்  அணிந்திருந்தான்.அவன் களைந்த கேசத்தை லேசாக சீவி அவன் இடது கையில் ஒரு சில்வர் வாட்ச் கட்டியிருந்தவன் அழகிய முகத்தில் கருமை நிறை மீசைக்கு கீழே லேசாக முளைத்த தாடியை லேசாக வருடி கொண்டிருந்தவன் அருகில் சென்ற இசை தன்னவனை பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு என்னங்க இன்னைக்காவது கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வரிங்களா என அவள் கேட்கவும் அவளை புரியாமல்  பார்த்தவன் சரி என கூறிவிட்டு சென்று விட்டான்.

எழிலரசன் தன் ஆபீஸ்க்கு காரை ஒட்டிகொண்டு சென்றிருந்த நேரம் தன்னவளின் ஞாபகம் நினைவில் எட்டிபார்க்கவும்.... என்ன இப்போல்லாம் இசை ரொம்ப வித்யாசமா நடந்துக்கிறா.. பாசமா பேசுறா ஒண்ணுமே புரியலயே.. ஒரு வேளை அவளுக்கு என் மேல லவ் வந்துருச்சா.. ச்ச.. ச்ச அப்படிலாம் இருக்காது..என நினைத்து கொண்டான் எழில்...

அன்று இரவு பெண்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிகொண்டிருந்தனர்...எழில் கார் வந்த சத்தம் கேட்டதும் சரி நான் போறேன் அவர் வந்துட்டாரு அவருக்கு சாப்பாடு எடுத்து வைக்கணும் என்ற இசை
அங்கிருந்து எழுந்து கொள்ள எழில் நேராக அவன் அறைக்கு செல்லவும்..

ம்ம்ம் புருஷன் வந்ததும் எங்கள கண்டுக்காம போறல?என்றாள் தேவி முறுவலுடன்..

அய்யோ அப்படிலாம் இல்லை அக்கா என இசை புன்னகையுடன் கூற சரி போங்க போங்க அப்புறம் உங்க ஹஸ்பண்ட் உங்கள திட்ட போறாரு என்றாள் ஸ்வாதி கேலியாக.

அவ போகட்டும் விடுங்க .. அவளுக்கு அங்க என்னென்ன வேலை இருக்கோ என்றார் சுஜாதா சிரித்து கொண்டே..

அவர்கள் வார்த்தையை புரிந்து கொண்ட இசை அத்தை என வெட்கமுடன் சிணுங்கினாள் இசை...

சரி சரி அவ போகட்டும் விடுங்க.. சும்மா கிண்டல் பண்ணிக்கிட்டு என்றார் விஜயா..

அறைக்கு சென்று கொண்டிருந்த எழில் அவர்கள் இசையிடம் பேசுவதை கேட்க எண்ணி படிக்கு கீழே நின்று அவர்கள் பேசுவதை கேட்டவன் இசை காலடி சத்தம் கேட்டு அங்கிருந்து வேகமாக அறைக்கு சென்று விட்டான்.

என்ன எல்லோரும் இசை கிட்ட இப்படி பேசுறாங்க.. அவ என்ன சொல்லிவெச்சுருக்கா அவங்க கிட்ட.. இவளும் அவங்க சொல்லும் போது வெக்கபடுறா.. என்ன தான் நடக்குது இங்க.. என குழம்பியவன் உடை மாற்ற குளியல் அறைக்கு சென்று விட்டான்.

அறைக்கு சாப்பாடு தட்டுடன் வந்த இசை அங்குள்ள டீபாய் மீது தட்டை வைக்க சில நிமிடங்களில் வெளியில் வந்து அமர்ந்தான் எழில்..

என்னங்க என இசை அவனை பொறுமையுடன் அழைக்க என்ன இசை சொல்லு என்றான் அவனும்..

அது வந்து... அது என்னனா என தயங்கியவள் என்னங்க நான் அன்னைக்கு உங்க கிட்ட நடந்து கிட்டது தப்பு தான்.. ஆனா என்னுடைய நிலைமை அந்த மாதிரி.. இப்போ நான் உங்கள நல்லா புரிஞ்சிக்கிட்டேன்.. நீங்களும் என் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டிங்க..நான் உங்க கிட்ட அன்னைக்கு அப்படி நடந்து கிட்டதுக்கு என்னை மன்னிச்சுடுங்க என அவள் கூறவும் இசையை ஆச்சர்யமுடன் பார்த்த எழில் இல்லை... இசை உன் மேல எந்த தப்பும் இல்லை உன் இடத்தில யாரா இருந்தாலும் இப்படி தான் நடந்துருப்பாங்க.. இதுக்குலாம் நீ என் கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டாம்.. என்றான் எழில்..

உங்களுக்கு என் மேல கோவம் எதுவும் இல்லையே..

இல்லை எனக்கு உன் மேல எந்த கோவமும் இல்லை என எழில் கூறவும்

அப்போ...நீங்க என் கிட்ட இனிமேல் பேசுவீங்கல்ல ..?.... என்றாள் தயக்கமுடன்..

அவன் முகமலர்ந்தவன் ம்ம்ம் கண்டிப்பா பேசுவேன் இசை..என எழில் கூற தேங்க்ஸ்ங்க என்றவள் தட்டில் இருந்த உணவை எடுத்து தன்னவன் வாய் அருகில் நீட்ட அவளை ஒரு நிமிடம் கண்ணிமைக்காமல் பார்த்தவன் கண்களில் கண்ணீர் தேங்கியது...
எழிலரசனும் சாப்பிட தொடங்கினான்..

நீயும் சாப்பிடு என்ற எழில் இசைக்கு ஊட்டி விட இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் ஊட்டிக்கொண்டனர்.

நாளடைவில் இசைக்கு எழிலரசன் மீது மலர்ந்து காய்ந்து போன காதல் மீண்டும் உயிர் பெற தொடங்கியது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top