சுவாசம் 12
அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டவள் ஒன்னும் இல்லை எனக்கு தூக்கம் வருது நான் தூங்கணும் என்றவள் படுக்கையில் விழ எழிலரசன் எதுவும் பேசாமல் அங்கிருந்த ஷோபாவில் சென்று அமர்ந்தான்.
*********
வந்ததும் வராதுமா இந்த வீட்டு பிள்ளைய ஹாஸ்பத்திரிக்கு அனுப்பிட்டியா.. இன்னும் என்னென்ன பண்ண போறியா... நீ இந்த வீட்டுக்குள்ள வந்த முதல் நாளே பிரச்சனைய ஆரம்பிச்சிட்டியா விளங்கிடும் என வனஜா கூறவும் இசை கண்களில் கண்ணீர் பெறுகியது..
வனஜா நீ வாய மூடிட்டு சும்மா இருக்க மாட்டியா.. இசை என்ன பண்ணாணு நீ இப்படி பேசிட்டுருக்க.. அவன் தான் சொல்றான்ல அவங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லைனு என்றார் விஜயா எரிச்சலுடன் ....
இசை எதுவும் பேசாமல் அவள் அறைக்கு சென்று விட்டாள்.
வனஜாவை கோபமாக முறைத்த எழிலோ வேகமாக அவனும் அறைக்கு சென்று விட்டான்.
அறைக்கு சென்ற இசை கட்டிலில் அமர அங்கு வந்த எழிலரசன் இசை அவங்க அப்படி தான் அவங்க சொல்றதலாம் மனசுல வெச்சுக்காத ப்ளீஸ் என்றான் அவளுக்கு ஆறுதலாக..
சரி என்றாள் அவளும்..
ஒரு வாரம் சென்றது..
எழிலரசன் இசைக்கு விஜயா சொன்னது போலவே ரிசப்ஷன் வைத்து கொண்டாடினர்.. பல விஐபி களும் பல பிசினஸ் மேன்களும் கலந்து கொண்டனர்...எழிலரசன் அவன் நண்பர்களை மட்டும் அழைக்க வில்லை..இசையிடம் அன்று அப்படி நடந்து கொள்ள காரணம் குடிக்க கூறி கட்டாய படுத்திய நண்பர்கள் தான் என நம்பினான் எழில்...
நாட்கள் நகர துவங்கியது..
எழிலரசன் வீட்டில் அனைவரும் இசையுடன் அன்புடன் பழகினர் வனஜாவை தவிர்த்து..
ஸ்வாதி சுருதி இருவரும் அங்கேயே தங்கி தங்கள் படிப்பை தொடர அவர்களின் பெற்றோர்கள் மட்டும் அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.
ஸ்வாதி சுருதி ருத்ரா தேவி நான்கு பேரும் இசையிடம் ஒரு சகோதர அன்புடன் பழகினர். இசையும் அனைவரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வாள்.
எழிலரசன் இசை இருவரும் அறைக்கு வெளியில் மட்டும் கணவன் மனைவியாகவும் அறைக்கு உள்ளே யாரோ ஒருவர் போல் பேசாமலும் இருந்தனர்.
நாளடைவில் எழிலரசன் சொந்தமாக ஒரு பிஸிசினசை துவங்கினான்.சொந்தமாக பல கம்பெனி அவன் பெயரில் இருந்தாலும் புதியதாக ஒரு கம்பெனியை இசை குரூப் ஆப் கம்பெனி என தன் காதல் மனைவியின் பெயரை வைத்து துவங்கினான்..
இசைக்கு அதில் சிறிதும் விருப்பம் இல்லை. இசை ஆடம்பர வாழ்வை விரும்பாதவள் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் அவளுக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும் அவள் முழுமனதுடன் தன் கணவருடன் சேர்ந்து வாழததால் அதனை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வீட்டில் அனைவரும் உயர்ந்த விலையில் உயர் ரக ஆடைகள் அணிந்திருக்க அவள் மட்டும் விலை குறைவில் மிகவும் சாதாரண பூனம்புடவை உடுத்தியிருப்பாள்..எழிலரசன் தன்னவளுக்காக ஆடம்பர பட்டு உடைகளும் விலை உயர்ந்த தங்க நகைகளும் வாங்கி கொடுத்து எவ்வளவு வற்புறுத்தியும் அவளோ அதை எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
கழுத்தில் உள்ள தாலி மட்டும் தங்கத்தால் ஆனது என்பதால் அதை மட்டும் அவளால் நிராகரிக்க முடியவில்லை .
பெற்றவர் வீட்டில் வேலை செய்யாமல் இருந்த இசைக்கு தன் கணவர் வீட்டில் அப்படி இருப்பது
பிடிக்கவில்லை..இனி தானே சமையல் செய்ய போவதாக விஜயாவிடம் கூறி சம்மதம் வாங்கி கொண்டாள். விஜயாவும் சுஜாதாவும் முதலில் மறுத்தாலும் பின் சம்மதித்தவர்கள் அவர்களும் சமையல் செய்ய தொடங்கினர்.
வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிடித்தது போல் அவர்கள் உடலுக்கு ஏற்றது போல் இசை உணவை சமைப்பாள்.
எழிலரசன் காலை செல்பவன் இரவு தான் வீட்டிற்கு வருவான்.. இரவு வந்ததும் அவனுக்கு சாப்பாடு பரிமாறி அவன் உண்ட பின்னரே இசை சாப்பிடுவாள்.
எழிலரசன் சில நேரங்களில் வேலையை முடித்து வீட்டிற்கு வர மிகவும் தாமதமாகும் நிலையிலும் தன்னவனுக்காக உண்ணாமல் காத்திருப்பாள் இசை..
நாட்கள் செல்ல தன்னவன் மேலிருந்த கோபம் மறைய துவங்கியது ஆனாலும் இசைக்கு அவனிடம் பேச சிறு தயக்கம்..
ஒரு நாள் இசை தன் அறையில் அமர்ந்திருக்க அவள் அறைக்கு வந்த ஸ்வாதி அவள் முன் அமந்தாள்...
என்ன ஸ்வாதி என்ன என இசை கேட்கவும் அக்கா அது ஒன்னும் இல்லை சிவா மாமா இருக்காருல..என்று அவள் வார்த்தையை இழுக்க..
ஆமா சிவா என்ன ஆச்சு சிவாக்கு.. என்றாள் இசை ஸ்வாதியை நோக்கி..
ஒன்னும் ஆகல.. ஆனா சிவா மாமா ஊருக்கு போய் ரொம்ப நாள் ஆகுது..நீங்க கொஞ்சம் எழில் மாமா கிட்ட கேட்டு சொல்றிங்களா..என்றாள் ஸ்வாதி புன்னகையுடன்..
ஆ சரி..சிவா நம்பர் உன் கிட்ட இல்லையா..
இல்லைகா..என்றவள் முகம் வாடியது..
சரி வீட்ல யாருகிட்டயாவது கேக்கலாமே..இல்லை நீயே எழில் கிட்ட கேக்கலாமே..
இல்லை கா எழில் மாமா என்ன திட்டுவாங்க.. படிக்கிற வேலைய பாருன்னு..நான் போன் பண்ணாலும் சிவா மாமா எடுக்க மாட்டாரு..
ஏன்..
தெரியல..
சரி நான் அவர் கிட்ட கேக்குறேன்..என்ன லவ்வா என இசை சிரித்து கொண்டே கேட்கவும் ஆமாம் என வெட்கமுடன் தலை அசைத்தாள் ஸ்வாதி.
அப்போ நெக்ஸ்ட் உங்களுக்கு தான் கல்யாணம்.. என்ற இசையை பார்த்தவள் இல்லைக்கா... சுஜாதா அத்தை ஓகே சொல்லுவாங்களானு தெரியல.. ஆனா நான் கல்யாணம் பண்ணா சிவா மாமாவ தான் கல்யாணம் பண்ணிக்குவேன்..என்றாள் உறுதியாக...
ஸ்வாதி நீ ஒன்னும் கவலை படாத.. அத்தை கிட்ட நான் பேசுறேன்.. உனக்கும் சிவாக்கும் தான் கல்யாணம் நடக்கும் இத நான் நடத்தி வைக்கிறேன் சரியா...என இசை ஸ்வாதியின் கரம் பற்றி கூறவும்...
சரிங்க 😊கா ரொம்ப தேங்க் யூ..என இசையை கட்டி கொண்டாள் ஸ்வாதி..
சிறிது நேரம் இருவரும் பேசி முடிக்க சரிங்க அக்கா நான் அப்புறம் வரேன் என ஸ்வாதி அங்கிருந்து சென்று விட்டாள்...
இரவு நெருங்க வீட்டிற்கு வந்தான் எழில்..
வீட்டிற்கு வந்தவன் நேராக தன் அறைக்கு சென்று குளித்துவிட்டு வந்து ஷோபாவில் அமரவதற்கு முன் இசை அவனுக்கான இரவு உணவை டேபிள் மேல் வைத்திருந்தாள்.
இரவு உணவு சப்பாத்தியும் குருமாவும் தன்னவனுக்காக தானே சமைத்து அறைக்கு கொண்டு வந்து பரிமாறுவது இசையின் பழக்கம்..
அவளை பார்த்தவன் நீ சாப்டியா என்று வினவ இதோ சாப்பிடணும்.. நீங்க சாப்பிடுங்க என கூறியவள் தன்னவனுக்கு பரிமாற தொடங்கினாள்.
இல்லை நீயும் சாப்பிடு வா ஏற்கனவே ரொம்ப டைம் ஆகிருச்சு என அவன் அழைக்க இல்லை நீங்க சாப்பிடுங்க நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்..என்றாள் இசை பிடிவாதமுடன்..
அவன் சாப்பிட்டு முடித்து பால்கனிக்கு சென்று விட கீழே சென்ற இசை இரவு உணவை உண்டு விட்டு அறைக்கு சென்றால் எழிலரசன் கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருப்பான்..
அவனை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் கட்டிலின் மறுபக்கம் சென்று படுத்து கொள்வாள்.
இரவு வேலை முடித்து எழிலரசன் உறங்க மணி ஒன்று இரண்டை நெருங்கியிருக்க இசையோ ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள்.
அவள் உறங்குகிறாளா விழித்திருக்கிறாளா என உறுதி செய்து கொள்பவன் தன்னவளின் நெற்றியில் இதழ் படித்து விட்டு அவனும் அவன் படுக்கையில் படுத்து உறங்கி விடுவான்.
மறுநாள்....
தொடரும்..
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top