சுவாசம் 10
என்னங்க கதவை திறங்க..கதவை எதுக்கு லாக் பண்ணீங்க.. ப்ளீஸ் கதவை திறங்க... அத்தை... சின்ன அத்தை...யாராவது வாங்க..என இசை சத்தமாக அழுது கொண்டே கத்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அங்கு ஓடி வந்தனர்..
என்னமா ஆச்சு இசை என்ன என விஜயா பதறி போய் கேட்கவும்
அத்தை அவர் கோபமா கதவை உள்ள லாக் பண்ணிக்கிட்டாரு அத்தை.. திறக்க மாற்றாரு என அழுது கொண்டே கூறிய இசையை பார்த்த குணசேகரன் என்ன மா உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா என வினவ ஆமாம் என தலை அசைத்தாள் இசை..
டேய் எழில் எழில் கதவை திற..என குணசேகரன் கதவை தட்ட
எழில் என்ன பா ஆச்சு... எழில் கதவை திற என விஜயாவும் சத்தமாக கூற எழிலோ அவர்கள் வார்த்தைகள் செவிகளில் விழவில்லை என்பது போல தரையில் அமர்ந்து கட்டிலில் சாய்திருந்தான்.
என்னங்க ப்ளீஸ் கதவை திறங்க என இசை ஒரு பக்கம் அழுது கொண்டு நின்றாள்.
ஏய் என்ன டி பண்ண.. எதுக்கு எழில் கதவை தாழ்ப்பாள் போட்ருக்கான்.. நீதான் ஏதாவது சொல்லிருப்ப வந்த மறுநாளே ஆரம்பச்சிட்டியா என்றார் வனஜா.
வனஜா என்ன பேசுற நீ.. அவன் தாழ்பாள் போட்டுக்கிட்டா பாவம் இசை என்ன பண்ணுவா.. நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா என சுஜாதா சிடுசிடுப்புடன் கூறவும்
வாயை மூடி கொண்டார் வனஜா.
ரவி, மா.. அவன் கதவை திறக்கறா மாதிரி தெரியல கதவை உடைக்கலாம் என்க குணசேகரனும் ரவியும் சேர்ந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல எழில் கைகளில் இரத்தம் வழிந்தபடி தரையில் சோர்ந்து அமந்திருந்தான்.
அறையின் உள்ளே ஓடிய இசை தன்னவன் அருகில் சென்றவள் என்னங்க ஏங்க இப்படி பண்றிங்க..வாங்க ஹாஸ்பிடல் போகலாம் என்றழவும்...
மற்ற அனைவரும் உள்ளே வந்தவர்கள் அவன் நிலையை கண்டு அதிர்ந்தனர்
டேய் எழில் என்ன டா ஆச்சு... ஐயோ என் புள்ள கையில இப்படி ரத்தம் கொட்டுதே எழில் என்ன பா ஆச்சு என விஜயா அழவும்
டேய் என்ன டா ஆச்சு இப்படி உட்கார்ந்துருக்க இரத்தம் போயிற்றுக்கு பாரு டா என்றான் ரவி.
ரவி பேச டைம் இல்லை அவன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் சீக்கிரம் என சுஜாதா கூறவும்
சரி என்ற ரவி எழிலரசனை அழைத்து கொண்டு கீழே செல்ல இசையும் அவர்கள் பின்னாலே ஓடினாள்.
எழிலரசனை காரில் அழைத்து கொண்டு சென்றான் ரவி.. இசை பிடிவாதமுடன் அவர்களுடன் சென்றவள் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.
மருத்துவமனை சென்றதும் மருத்துவர் அவன் கைகளில் உள்ள கண்ணாடி துகளை வெளியே எடுத்து ரத்தம் நிற்க மருந்து வைத்து கட்டு கட்டி இரண்டு செப்டிக் ஊசியும் போட்டு அவனை ஒரு தனி வார்டில் அனுமதித்தனர்...அவனுக்கு ட்ரிப்ஸ் ஏற்றப் பட்டது.
ரவி மட்டும் வெளியே அமர்ந்திருக்க இசை மட்டும் எழில் அருகில் இருந்து அவனை கவனித்து கொண்டாள்.
இரண்டு மணி நேரத்திற்கு பின் பொறுமையாக கண் விழித்து பார்த்தவன் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்க..
என்னங்க... ஏங்க இப்படி பண்ணீங்க...நீங்க இப்படி பண்ணுவீங்கனு நான் கொஞ்சம் கூட நினைக்கல... இன்னொரு முறை இந்த மாதிரி முட்டாள் தனமான செயல செய்யாதீங்க ப்ளீஸ்.. என அழுத இசையை புரியாமல் பார்த்தவன் இசை நீ ஏன் இப்போ அழுதுட்ருக்க... எனக்கு ஒன்னும் இல்லை நான் நல்லா தான் இருக்கேன்..எனக்கு ஒரு விஷயம் புரியல.. எனக்காக எதுக்கு நீ இவ்வளவு கவலை படற... காலைல அவ்வளவு கோவமா என் கிட்ட பேசுனவ இப்போ இப்படி பேச என்ன காரணம்..என எழில் கேள்வியெழுப்பினான்.
அப்போ எனக்கு அழறதுக்கு கூட உரிமை இல்லையா.. உங்களுக்காக நான் ஏன் கவலைபடணுமா..?... நேத்து வரைக்கும் நீங்க யாரோ தான் எனக்கு ஆனா இன்னைக்கு என் புருஷன்... சந்தர்ப்ப சூழ்நிலையால தான் நமக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் நீங்க என் புருஷன்..எப்படி என்னால அழாம இருக்க முடியும். நீங்க இந்த மாதிரி பண்ணதுக்கு காரணமே நான் தானே.. எனக்கு உங்க மேல இப்பவும் கோவம் இருக்கு தான் ஆனா அத இந்த மாதிரி நிலைமையும் எப்படி கோவத்தை காட்ட முடியும்... என்றாள் இசை..
கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்த ரவி எம்மா இசை டாக்டர் இவன வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க.. நான் இப்போ தான் பில் பே பண்ணிட்டு வந்தேன்.. அவன கூட்டிட்டு வா நான் கார் ஸ்டார்ட் பண்றேன் எழில் வாடா என கூறிவிட்டு ரவி அங்கிருந்து சென்று விட்டான்.
இசை எதுவும் பேசாமல் மௌனித்து நின்றவள் தன்னவனை அழைத்து கொண்டு வெளியில் சென்றாள்.
எழிலும் எதுவும் பேசவில்லை.
மூவரும் வீட்டிற்கு சென்றனர்.
எழிலரசன் அங்கிருந்த பெரிய ஷோபா ஒன்றில் அமர அவன் அருகில் வந்த விஜயா எழில் ஏன் டா இந்த மாதிரி பண்ண.. ரவி டாக்டர் என்ன சொன்னாங்க.. என வினவ..
மா கைல லேசா பிராக்சார் ஆகியிருக்காம் ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்னு சொன்னாங்க.. கைல அதிக ரத்தம் போனதுல ட்ரிப்ஸ் ஏத்துனாங்க.. கையை தண்ணி படாம பாத்துக்க சொல்லிருக்காங்க ரெண்டு செப்டிக் இன்ஜெக்ஷனும் போட்ருக்காங்க டாக்டர் என்றான் ரவி..
டேய் எழில் எதுக்கு டா இப்படி ஒரு முட்டாள் தனமான காரியத்தை செஞ்ச என்றார் சுஜாதா கோபமாக..
இசை சொன்னா உங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைனு. என்ன டா என விஜயா வினவ
மா இல்லை அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை எங்களுக்குள்ள..
அப்புறம் ஏன் இப்படி பண்ண என்றாள் சுருதி.
அது கை தெரியாம பட்டு ஒடஞ்சிருச்சு வேற ஒன்னும் இல்லை என எழில் கூறிக்கொண்டே இசையை அவன் முறைத்து கொண்டு நின்றான் .
வந்ததும் வராதுமா இந்த வீட்டு பிள்ளைய ஹாஸ்பத்திரிக்கு அனுப்பிட்டியா.. இன்னும் என்னென்ன பண்ண போறியா... நீ இந்த வீட்டுக்குள்ள வந்த முதல் நாளே பிரச்சனைய ஆரம்பிச்சிட்டியா விளங்கிடும் என வனஜா கூறவும் இசை கண்களில் கண்ணீர் பெறுகியது..
வனஜா நீ வாய மூடிட்டு சும்மா இருக்க மாட்டியா.. இசை என்ன பண்ணாணு நீ இப்படி பேசிட்டுருக்க.. அவன் தான் சொல்றான்ல அவங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லைனு என்றார் விஜயா எரிச்சலுடன் ....
இசை எதுவும் பேசாமல் அவள் அறைக்கு சென்று விட்டாள்.
வனஜாவை கோபமாக முறைத்த எழிலோ வேகமாக அவனும் அறைக்கு சென்று விட்டான்.
*********************
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top