சுவாசம் 1

செந்நிற கதிரவன் சமுத்திர தேவியின் மடியில் தவழ்ந்த வண்ணம் விடிந்து கொண்டிருந்தான்......

பறவைகளின் கீச் கீச் சத்தமும் குயிலின் குக்கூ ஓசையும் செவிகளுக்கு இன்பம் சேர்க்கும் வகையிலும் தென்றலின் குளிர்ந்த வாடை காற்று காலையிலேயே வீட்டின் முற்றத்தில் உள்ள துளசி செடியை பூஜிக்கும் இசை என்பவளை தீண்டி சென்றது...

அவளை தீண்டி சென்ற காற்றை சிறுதும் பொருட்படுத்தாமளும் அசையாமளும் தன் சோக கீதங்களை இறைவனிடம் சொல்லி கொண்டிருந்தாள் அவள்..

"இசை இசை " என்று அழைத்து கொண்டே அவள் அருகில் வந்த விஜயா "என்னமா சாமி கும்பிட்டியா? "என்று வினவ...

"ஆமா அத்தை என்ன விஷயம்" என அவள் தன் தலையை உயர்த்தி கேட்கவும்...

"நான் கோவிலுக்கு போறேன்மா இன்னைக்கு வெள்ளிகிழமைல, நீயும் வரியா " என்றவரை சோகமுடன் பார்த்தவள்

" இல்லை அத்தை நான் வரல இன்னைக்கு என்னால வர முடியாது.. செக்கப் போகணும்" என்றாள் அவள் மெல்லிய குரலில்...

"சரி மா.சரி மா..பாத்து போய்ட்டு வாங்க... கோவில பூஜை இருக்கு நான் கிளம்புறேன்" என்றவர் "நான் போய்டு வரேன் மா, தேவியும் துர்காவும் சமையல் அறைல இருக்காங்க நீ போய் சாப்பிடு " என கூறிவிட்டு பூஜை கூடையை கையில் எடுத்து கொண்டு கோவிலுக்கு விரைந்தார்..

விஜயா தன் கண்களில் இருந்து மறையும் வரை அவரை வெறித்து நோக்கியவள் சில நொடிகளுக்கு பின் மாடியில் உள்ள அவள் அறைக்கு சென்று விட்டாள் இசை...

அவள் தன் அறைக்குள் நுழையும்போதே இரு இரும்பு கரங்கள் மலரினும் மென்மையாக அவள் இடையை சுற்றி வளைத்திருந்தது..

ஒரு கணம் பயந்தவள் தன்னவன் என்றறிந்ததும் பெருமூச்சு விட்டு அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு நின்றாள்
அவளை பொய் கோபமுடன் முறைத்துபடி ....

அவன் பார்வையிலிருந்து தப்பி செல்ல முயன்றவள் தவறுதலாக அவன் விழியின் சிறையில் சிக்கி கொண்டு நிற்க இருவரும் சில நொடிகளில் அவர்கள் கனவு உலகிலிருந்து விடுபட்டு எப்படியோ தப்பித்து நிஜ உலகிற்கு வந்து சேர்ந்தனர்...

அவனிடமிருந்து சற்று விலகி நின்றவள் "இப்போ என்ன வேணும் உங்களுக்கு " என தன் மௌனத்தை களைத்து பேச தொடங்கினாள் அவள்.

இசை, "எதுக்கு என்ன இப்படி பார்த்துட்டு நிக்கிறிங்க.. ஆபீஸ் போக வேண்டாமா, கோர்ட் ஷூட் போடாம, டி ஷர்ட் எதுக்கு போட்டுருக்கிங்க" கேள்வி மேல் கேள்வி எழுப்பியவளை ஆசையுடன் நெருங்கி வந்தவன்

"நீ எந்த உலகத்துல தான் டி இருக்க...நேத்து உன் கிட்ட நான் என்ன சொன்னேன்... நியாபகம் இருக்கா இல்லையா?? ஏன் டி நான் சொல்றத எதையும் காதுலயே வாங்கிக்க மாட்டியா " சற்றே அவள் செவியருகில் நெருங்கி சொன்னான் அவளின் அவன்..

அவனையே பார்த்து நின்றவளின் விழியின் கூர்மை அவன் பார்வையை கிழிக்க துடித்தது.
சில நொடி மௌனங்களுக்கு பின் "இல்லை ஞாபகம் இருக்கு... ஆனா உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம், செக்கப்க்கு நானே போய்ட்டு வந்துடுறேனே" என்றவளை தலையை நிமிர்த்தி கோபமுடன் பார்த்தவன்

"சிரமமா?? எனக்கா...எனக்கு இதனால என்ன சிரமம்?...உனக்கு தனியா போக தெரியாதுனு நான் சொல்லல..இந்த மாதிரி நேரத்தில உன் கூட நான் கட்டாயம் வந்து தான ஆகணும்.. இந்த நிலைல என் நிறை மாச கர்பிணி பொண்டாட்டி உன்னை மட்டும் எப்படி டி தனியா அனுப்ப முடியும்..சொல்லு" என்று அவள் முகத்தில் விழுந்த கற்றை கூந்தளை எடுத்து காதோரத்தில் சொருகியவன்
"பேச டைம் இல்லை போய் சீக்கிரம் கிளம்பு" அவன் கூறவும்

"வேறு வழியில்லை" என நினைத்து கொண்டவள் அங்கிருந்து சென்று அலமாரியில் உள்ள ஒரு சேலையும் அதற்கு பொருத்தமான ரவிகையும் எடுத்து கொண்டு குளியல் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்..

அவன் சென்று அங்கிருந்து இருக்கையில் அமர்ந்து அவளுக்காக காத்திருக்க சில நிமிடங்களுக்கு பின் மஞ்சள் நிற சேலைக்கு ஏற்றது போல் சிவப்பு நிறை ப்ளௌஸ் உடை அணிந்து வந்தவள் கண்ணாடியின் முன் சென்று தன் நீண்ட கூந்தளை பின்னி முடித்து கொண்டு முகத்தில் இரு வில்களின் இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்து நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு அழகின் மலராக அவன் முன் வந்து நின்று "போலாமா" எனவும்

அவளை தலை முதல் பாதம் வரை அவன் கண்களால் அளவெடுத்தவன் "எதுக்கு டியர் இந்த சோகம்..கொஞ்சமாவது சிரியேன் " என்று கூறியவன் அவள் கையை இருக்கமுடன் பற்றி கொண்டு அவளையும் அவனோடு அழைத்து சென்றான் அவள் பதிலை எதிர்பாராமல்...அவனை முறைத்தபடி அவனுடன் சென்றாள் இசை..

கீழே நுழைவு அறைக்கு சென்றவன் "அண்ணி.. அண்ணி" என்று அவன் சத்தமாக அழைக்க....

"எழில் என்ன பா" என்று கேட்டு கொண்டே சமையல் அறையிலிருந்து வெளியில் வந்தாள் அவன் அண்ணனின் மனைவி தேவி...

"அண்ணி இன்னைக்கு இவளுக்கு செக்கப்.. நாங்க ஹாஸ்பிடல் போயிட்டு வந்துறோம்... வீட்ல அம்மா சித்தி யாரும் இல்லை அதான்.. போயிட்டு வரோம்" என்றவனை பார்த்து "சரி பா பாத்து" என்று தேவி கூற..

"வரோம் கா" என்ற இசை தன் கணவனின் பின்னே சென்றாள்.

எழில் அவளை கார் அருகில் அழைத்து சென்று கார் முன் பக்க கதவை திறந்து பொறுமையுடன் அவளை அமர வைத்தவன் அவனும் காரில் அமர்ந்து காரை ஓட்ட தொடங்கினான்....

காரில் அமர்ந்திருந்த இசையின் பார்வை மட்டும் ஜன்னல் வழியாக ஊடுவியிருக்க சிந்தனை எல்லாம் வேறெங்கோ இருந்தது....

தன்னவளை தலையை திருப்பி பார்த்தவன் அவள் அழகில் சற்று சொக்கி தான் போனான் எழில்...

அவள் பளிங்கு மேனியானவளின் சிவந்த கன்னங்களும் கூர்மையான விழிகளுக்கு நடுவில் நீட்டிய மூக்கும் செந்நிற இதழ்களும் அவனை மேலும் வசிகரித்தது...
ஆனால் அவன் பார்வையை அறியாத இசையோ தன்னை மறந்து வேறு உலகில் பயணித்திருந்தாள்...

"எப்படி இவரால் மட்டும் இவ்வளவு சந்தோசமா இருக்க முடியுது...
காதலிச்சது ஒருத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டது இன்னொருத்தி ச்ச...ஒரு பொண்ணோட மனசுல என்ன இருக்குனு தெரியாம அவளை எப்படி தொட முடியும்...அது தான் நியாயமா" என மனம் குமுறியவள் கார் ஆரன் சத்தம் கேட்டு தன் தனிமை உலகிலிருந்து வெளியே வந்தாள்...

"வா "என அழைத்தவனை பார்த்தவள் " ஹாஸ்பிடல் வந்துருச்சா" என்று வினவ

"இல்லை ஹோட்டல், நீ இன்னும் எதுவும் சாப்பிடல வா" என்றவன்
தன்னவளை பொறுமையுடன் அழைத்துகொண்டு ஹோட்டலுக்ககு சென்றான்..

இருவரும் சென்று ஒரு மேசையில் எதிரெதிரே அமர்ந்தனர்...

அவளுக்கு மட்டும் அவன் இரண்டு இட்டலி ஆர்டர் செய்ய இரண்டு நிமிடத்தில் சர்வன்ட் ஒரு தட்டில் இரண்டு இட்டலியும் தேங்காய் சட்னியும் ஒரு கிண்ணத்தில் சாம்பாரும் கொண்டு வந்து மேசை மேல் வைத்து விட்டு சென்றார்..

"சாப்பிடு " என்றவனை புரியாமல் பார்த்தவள் "உங்களுக்கு "எனவும் "எனக்கு வேண்டாம் நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குவேன் இப்போ நீ சாப்பிடு... " என்றான் எழிலரசன்..

"இல்லை நீங்களும் சாப்பிடுங்க" என்று வற்புறுத்தியவளை புன்னகைத்து பார்த்தவன்
"நான் சாப்பிடலான பரவாயில்ல... நீ சாப்பிடு.. நீ இந்த மாதிரி நேரத்தில சாப்பிடாம இருக்க கூடாது...குட்டி பாப்பாவுக்கு பசிக்கும்ல " என்றவன் அவனே அவளுக்கு இட்டலியை பிட்டு ஊட்டி விட அவளோ அவனை விழி அசையாமல் பார்த்து கொண்டே சாப்பிட தொடங்கினாள்..

அவள் சாப்பிட்டு முடிக்க அவன் கையை கழுவி கொண்டு சாப்பிட்டதுக்கு பணம் கொடுத்து விட்டு அவளை அழைத்து சென்று காரில் ஏற்றியவன் மருத்துவமனைக்கு விரைந்தான்...

இருவரும் மருத்துவமனை சென்று இசையை மருத்துவரிடம் காண்பித்து பரிசோதித்த பிறகு அவளை வீட்டிற்கு அழைத்து சென்றான் எழில்...

நேராக வீட்டிற்கு சென்ற இருவரும் அறைக்கு செல்ல "எழிலு நில்லு" என்று அவனை தடுத்தது ஒரு குரல்...

சட்டென அவன் திரும்பி பார்க்க அவன் அண்ணி தேவி நின்று கொண்டிருந்தார்..

"அண்ணி கூப்பிட்டீங்களா" என்றவனை பார்த்த தேவி
"எழில் டாக்டர் என்ன சொன்னாங்க கொழந்த நல்லாருக்குல்ல " என்று அவர் அக்கறையுடன் வினவவும்

"ஆமா அண்ணி.. கொழந்த நல்லாருக்குனு தான் டாக்டர் சொன்னாங்க "என்றவுடன் தேவியின் முகம் புன்னகையில் பூரித்தது.

"சரி அண்ணி இவ ரொம்ப டயர்டா இருக்கா அதனால நான் அவளை ரூம்க்கு அழைச்சுக்கிட்டு போறேன்" எனவும் " ம்ம் சரி நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா" என்றார் தேவி

"ம்ம் சாப்பிட்டோம்" என்று கூறியவனை முறைத்த இசையோ
"இல்லை கா அவர் சாப்பிடல" என்றாள் சற்று கோபம் கலந்த குரலில்...

"ஏன் எழில் என்ன ஆச்சு...என் கிட்டயே சாப்பிட்டேன்னு பொய் சொல்ற பாத்தியா... ஒழுங்கா வந்து சாப்பிடு இல்லை அத்தை கிட்ட சொல்லிடுவேன் ஜாக்கிரதை" என்று கூறிய அண்ணியை பார்த்து சிரித்தவன் "பசிக்கல அதான் அப்படி சொல்லிட்டேன் இதோ வரேன்" என்றவன் "இசை நீ ஹோட்டல்ல சரியாவே சாப்பிடல நீயும் வந்து சாப்பிடு" என்று அவள் கரம் பற்றி சாப்பிட அழைத்து செல்ல..

"இல்லை எனக்கு வேண்டாம்" என்றாள் அவள் ...

"இசை.. அப்படிலாம் சொல்ல கூடாது பாரு நீ எவ்வளவு டயர்டா இருக்கனு" என்ற தேவி அவளை நாற்காலியில் அமர வைத்து உணவை பரிமாறினார்..

******************

எழிலரசன் குடும்பம் ஒரு பெரிய கூட்டு குடும்பம்.அம்மா அப்பா, சித்தப்பா சித்தி, அண்ணன், அண்ணி , தம்பி தங்கை என வீடே நிறைந்திருக்கும்.

எழிலரசன் தந்தை குணசேகரன் சொந்தமாக கன்ஸ்ட்ரக்ஷன் பிஸ்சினஸ் செய்கிறார். அவன் தாய் விஜயா ஹவுஸ் ஒய்ப்..விஜயாவிற்கும் குணசேகரனுக்கும் இரண்டு மகன்கள் மட்டுமே.

மூத்தவன் ரவி...நேர்மையானவன் அமைதியானவன்.அவன் மனைவி தேவி அனைவரிடமும் அன்பு உள்ளம் கொண்டவள்.ரவி ஒரு பேங்க்கில் மேனேஜர்ராக பணிபுரிகிறான். திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை... வேண்டாத கடவுள் இல்லை போகாத மருத்துவமனை இல்லை.... ஏனோ அவர்களும் தங்கள் விதியை நினைத்து பொறுத்து கொண்டு தான் இருக்கின்றனர்.

குணசேகரனின் உடன் பிறந்த தம்பி வெங்கடேசன். அவர் மனைவி சுஜாதா. வெங்கடேசன் ஒரு ஆடை உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் மனைவி சுஜாதா ஹவுஸ் ஒய்ப்..வாயை திறந்தாள் மூட மாட்டாள்.

விஜயாவும் சுஜாதாவும் உடன் பிறந்த சகோதரிகளை போலவே எப்போதும் ஒட்டிக்கொண்டு இருப்பர்.

வெங்கடேசனுக்கும்
சுஜாதாவிற்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு.

மகன் சிவா. பி.கம் படித்து விட்டு வெட்டியாய் வீட்டில் இருப்பவன் எழிலரசனை விடவும் இரண்டு வயது சிறியவன். எழில் அவனுக்கு ஒரு சகோதரன் மட்டும் இன்றி அவன் உயிர் நண்பன்..

இரண்டாவது மகள் ருத்ரா... அந்த வீட்டின் அனைவரது செல்லம்... பெண் குழந்தை இல்லாத வீட்டில் இவள் தான் ஒரே பெண் பிள்ளை.
பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கிறாள்..

மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த குடும்பத்தில் அந்த வீட்டின் பிள்ளைகளாலே பெரிய அலை அடித்து விட்டது... பிள்ளைகளின் மேல் மட்டும் குறை சொல்ல முடியாது.. பெற்றவர்களும் காரணமே... பிள்ளைகளின் மனம் புரியாமல் நடந்தால் இவ்வித பிரச்சனைகளை அவர்கள் சந்தித்து தானே ஆக வேண்டும்..

.....

சாப்பிட்டு முடித்து அறைக்கு சென்ற இசை கட்டிலில் அமர எழிலரசன் கைபேசி ஒளிக்கவும் சரியாக இருந்தது..

எழிலரசன் தன் கைபேசியை எடுத்து பார்த்து திடுகிட்டவன் அதை வெளியில் காட்டி கொள்ளாமல் தன்னவளை பார்க்க அவளோ வேறெங்கோ பார்த்து கொண்டிருந்தாள்...

"ஐயோ இவ வேற இங்க இருக்காளே... இப்போ எப்படி பேசறது" மனதில் நினைத்தவன் போனை எடுத்து கொண்டு பால்கனிக்கு சென்று பேச தொடங்கினான்...

"ஹலோ" என்றான் எழிலரசன் பொறுமையாக..

மறுபக்கம் :------------------------------

உனக்கு இப்போ தான் எனக்கு போன் பண்ணனும்னு தோணுச்சா...? என்றான் கோபம் கலந்த குரலில்...

: --------------------------------

நீ எதுவும் பேசாத.... நான் கோச்சிக்கிட்டேன்.....என அவன் கோபித்து கொண்டான்..

: ---------------------------------

சரி நீ எப்போ இங்க வருவ??....

: --------------------------------------

சரி சீக்கிரம் வந்துரு... நானும் மத்த எல்லோரும் காத்துகிட்டுருக்கோம்...

: ----------------------------------

நீ வந்தாதான் என் போன நிம்மதி எனக்கு கிடைக்கும்.

:-----------------------------------

சரி நான் வெச்சிடுறேன் என போனை கட் செய்து விட்டு வியர்த்து விருவிருக்க திரும்பி பார்க்க

இசையோ கட்டிலில் அமர்ந்தபடி நித்ரா தேவியின் அணைப்பில் படுக்கையில் சரிந்திருந்தாள்..

சட்டென தன்னவளின் அருகே ஓடியவன் அவளை தூக்கி படுக்கயில் சீராக படுக்க வைத்து போர்வை போர்த்தியவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்

என்ன மன்னிச்சுடு இசை....நீ இந்த நிலைமைல இருக்கறதுக்கு நான் தான் காரணம்.... அன்னைக்கு நான் செஞ்ச தப்பு இன்னைக்கு உனக்குள்ள உயிராl வளர்ந்துக்கிட்டிருக்கு....

ஒரு நொடி கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள எவ்வளவு பெரிய மாற்றம் நம்ம வாழ்கையில.... எல்லாம் இறைவன் செயல்...."என்றவன் அங்கிருந்து எழுந்து கீழே சென்றான்....

அவன் கீழே செல்லவும் அவனை பார்த்த அவன் தாய் விஜயா "டேய் எழில் என் மருமகள் எங்க டா" என ஹாலில் அமர்ந்து காய்கறி நறுக்கியபடியே கேட்கவும் .

அவனோ நேராக சென்று ஷோபாவில் அமர்ந்தவன்
"மா... அவளுக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு போல அதான் தூங்கிட்டா நானும் எழுப்பலை... எனவும்

"சரி டா... எழில், அப்பாக்கு இன்னைக்கு ஏதோ பிஸ்னஸ்ல கொஞ்சம் பிரச்சனையாம் அதான் அவர் அவசரமா மும்பை போய்டாரு...ரெண்டு வாரத்துக்கு அப்புறம் தான் வருவார்.. நீ இசைய ஹாஸ்பிடல் கூட்டிடு போனதும் தான் இந்த விஷயம் தெரியும் எங்களுக்கு... அதான் அவர் யார்கிட்டயும் எதுவும் சொல்லிக்காம அவசரமா கிளம்பி போய்ருக்காரு....அதான் நீ வந்ததும் சொன்னேன்.. உன் பிஸினஸ் கூட சேர்ந்து அவருடய பிஸினஸ்சையும் கொஞ்சம் பார்த்துக்கோ ராசா சரியா" என கூறிவிட்டு அவன் பதிலை எதிர்பாரமல் நறுக்கி வைத்த காய்கறிகளை எடுத்து கொண்டு சமையல் அறைக்கு சென்றாள் விஜயா.

அவளை கோபமுடன் முறைத்தவன் "மா... எனக்கே ஆயிரத்தெட்டு வேலை இருக்கு... இதுல அப்பா பிஸினஸ் வேற நானே பார்த்துக்கனுமா என்ன??? வேற யாரும் இந்த வீட்ல உங்க கண்ணுல படலையா... " எரிச்சல் நிறைந்த குரலில் கத்தினான் எழில்...

"இதுவே சிவா மட்டும் நம்ம கூட இருந்துருந்தா இந்த பிரச்சனையே இல்லை..."எழில் கூறி முடிக்க டேய் எழில் வாய மூடு.... "என கத்தி கொண்டு எழிலரசன் சித்தி சுஜாதா வந்து நின்றாள் அவன் முன்....

"என்ன டா பேசுற நீ ....இன்னொரு முறை அவன் பேச்ச எடுத்த அவ்ளோ தான் சொல்லிட்டேன் பார்த்துக்க....இந்த வீட்ட பொறுத்தவரைக்கும் அவன எப்போவோ தல முழிகியாச்சு.... இனிமேலும் அவன் இந்த வீட்ல காலடி எடுத்து வைக்க கூடாது" கோபமுடன் கூறியவரை புருவம் சுருக்கி பார்த்தவன் "சித்தி நீங்க புரியாம பேசுறீங்க அவன் பண்ணது தப்பு தான் ஆனாலும் அவன் உங்க மகன்... அந்த நேரம் அவனுக்கு வேற வழி தெரியல... தன்னுடைய வாழ்க்கைய தொலைக்க கூடாதுனு நினைச்சு தான் அவன் இந்த தப்ப செஞ்சிட்டான்.. இந்த ஒரு முறை அவனை மன்னிக்க கூடாதா ப்ளீஸ் எனக்காக "என்று எழில் சுஜாதா முன் சென்று மெல்லிய குரலில் கூறவும் .

"நீ இவ்ளோ பேசுறயே அவனுக்காக அந்த பொண்ணு ஏங்கி தவிச்சாலே.. அவளை நினைச்சி பார்த்தானாடா இவன்... அவ மனசு முழுக்க இவன் மேல ஆசைய வளர்த்து வாழ்ந்துட்டுருந்தவ இவன் பண்ண காரியம் தெரிஞ்சி கண்ணாடி மாதிரி உடைஞ்சவ தான டா... இன்னும் அவ அந்த சோகத்துல இருந்து மீளல....உனக்கே தெரியும்ல டா அந்த பிள்ளை படுற பாடெல்லாம்.... என்னால எப்படி அவன் பண்ணதெல்லாம் மன்னிச்சு மறுபடியும் அவன ஏத்துக்க முடியும் சொல்லு.. என் முடிவை யாருக்காகவும் என்னால மாத்திக்க முடியாது...."என படபடவென்று கூறி விட்டு அவள் வேகமாக அறைக்கு சென்று விட..

இவர்கள் பேசிய அனைத்தையும் ஒரு ஜீவன் கேட்டு கொண்டிருந்தது மாடி படியில் நின்று விழி கலங்கியபடி...

எழிலரசன் என்ன செய்வதென்று தெரியாமல் திரும்ப படிக்கட்டில் நின்று கொண்டிருந்தவளை பார்த்தவன் அதிர்ச்சியுடன் "இசை" என அழைக்கவும் அவள் நேராக தன் அறைக்கு ஓடி கட்டிலில் அமர்ந்து அழ தொடங்கினாள்..

எழிலரசனும் அவள் பின்னால் சென்று தன்னவளின் அருகில் அமர்ந்தவன் "இசை என்றழைக்க ...

"எல்லாம் என் தப்பு தான்... ஸ்வாதி வாழ்க்கை இப்படி கெட்டு போக நான் தான எழில் காரணம்... சொல்லுங்க " அவள் அழுது கொண்டே கேட்கவும்..

அவள் முகத்தை தன் கரங்களால் பற்றியவன் " உன் மேல எந்த தப்பும் இல்லை டா.....அந்த பொண்ணு தான் அவன் மேல வீணாக ஆசைய வளர்த்து கிட்டா அவ மேல தான் தப்பு.... நீ அவக்கூடவே இருந்ததால உனக்கு அப்படி தோணுதுடா சிவா பண்ணதுல என்ன தப்பு இருக்கு சொல்லு அவன் இடத்தில்ல் யாரா இருந்தாலும் இப்படி தான் பண்ணிருப்பாங்க...அதெல்லாம் விடு நீ காலையில சாப்பிட்டது அதோட எதுவும் சாப்பிடல... வா சாப்பிடலாம்" அவன் அவள் கரம் பற்றி அழைக்க

இல்லைங்க எனக்கு பசிக்கல என்றாள் அவள் கண்ணீருடன்...

தொடரும்..

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top