54 இறுதிப் பகுதி

இறுதி பகுதி

தனது கைப்பையை சோபாவின் மீது எறிந்து விட்டு, தனது மாமியார் தேவயானியை சந்தோஷமாய் கட்டிக் கொண்டாள் ஹரிணி,

"என்னோட கிராஜுவேஷனை நான் முடிச்சிட்டேன் மா..." என்று சந்தோஷமாய் கூறிய படி.

"அடுத்து என்ன செய்யறதா இருக்க?"

"இப்போதைக்கு எதுவும் இல்ல மா. எந்த டென்ஷனும் இல்லாம சாப்பிட்டுட்டு தூங்கணும்."

"உன் புருஷனை என்ன செய்யப் போற?" என்று சிரித்தார் தேவயானி.

"அப்படின்னா?"

"அவன் வேற ஏதாவது பிளான் பண்ணி வச்சிருப்பான்"

"என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். ரிசல்ட் வர வரைக்கும், சமையல் கத்துக்கிறதை தவிர வேறு எதுவும் செய்யறதா இல்ல"

"ரொம்ப நல்லது... இப்போ ரெண்டு பேரும் டீ சாப்பிடலாம்"

இருவரும் சமையல் அறைக்கு சென்று டீ போட்டு எடுத்துக் கொண்டு, சில பிஸ்கட்டுகளுடன் வரவேற்பறைக்கு வந்தார்கள்.

அப்பொழுது, சித்தார்த்தும், சுவாமிநாதனும், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினார்கள்.

"நீங்களும் வந்துட்டீங்களா? டீ சாப்பிடுறீங்களா?"

"நாங்க அப்புறமா சாப்பிடுறோம். நீங்க சாப்பிடுங்க" என்றார் சுவாமிநாதன்.

"என்ன விஷயம், இன்னிக்கு ரெண்டு பேரும் ஒண்ணா, அதுவும் சீக்கிரமா வந்திருக்கீங்க?"

"நம்ம சித்து லாங் லீவ் எடுக்க போறான்"

"லாங் லீவா? எதுக்கு?"

ஹரிணியும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள், எதற்காக லாங் லீவ் என்று தெரிந்து கொள்ள.

"நம்ம சித்து லாங் ஹனிமூன் போறான்"

அதைக் கேட்ட ஹரிணிக்கு புறை ஏறியது.

"மெதுவா" என்று அவள் முதுகை தடவி கொடுத்தார் அவள் அருகில் அமர்ந்திருந்த தேவயானி.

"எப்ப டா பிளான் பண்ண?" என்றார் தேவயானி.

"நம்ம ஃபேமிலி ட்ரிப் போனப்போ"

"லாங்னா எவ்வளவு லாங்?"

"சாரி மா. அது எனக்கு தெரியாது. எங்களுக்கு போர் அடிக்கிற வரைக்கும் திரும்பி வர மாட்டேன்னு நான் உங்க மருமகளுக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுத்திருக்கேன்"

"அப்படின்னா, நீ திரும்பி வரவே போறதில்லைன்னு சொல்லு"

அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தார்கள் அப்பாவும் பிள்ளையும்.

"நாங்க போர் ஆகுறதுக்கு ட்ரை பண்றோம். என்ன ஹரிணி நான் சொல்றது?"

ஹரிணி தன் தலையில் கை வைத்துக் கொண்டாள்.

"எந்த ஊரு?"

"ஸ்விட்சர்லாண்ட்"

"சூப்பர் ஸ்பாட்" என்றார் சுவாமிநாதன்

"திரும்பி வரும் போது பேரப் பிள்ளையோட வந்துடமாட்டீங்களே" என்று சிரித்தார் தேவயானி.

"வாய்ப்பே இல்ல..."

"ஏன்?"

"இப்போதைக்கு அப்படி எதுவும் பிளான் இல்ல"

"அப்படி ஏதாவது பிளான் பண்ணா சொல்லு"

"கண்டிப்பா சொல்றேன்"

.....

தங்களது தேன்நிலவுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தான் சித்தார்த். கட்டிலின் மீது அமர்ந்து அவனுக்கு உதவி கொண்டு இருந்தாள் ஹரிணி.

"எதுக்காக மொத்த பீரோவையும் காலி பண்றிங்க? அஞ்சு ஆறு செட் போதாதா?"

"அது எப்படி போதும்? நம்ம போக போறது லாங் ட்ரிப்"

"சீரியஸா தான் சொல்றீங்களா?"

"ஆமாம். நீ தானே லாங் ஹனிமூன் போகணும்னு ஆசைப்பட்ட?"

"நான் ஆசைப்பட்டேன். அதுக்காக நீங்க பிளான் பண்ணிட்டீங்களா?"

"ஆமாம். வேற என்ன செய்வேன்? தேவையில்லாத கேள்வி கேட்காம தூங்கு. நாளைக்கு காலையில கிளம்பனும்"

அப்போது, ஹரிணியின் கைபேசி ஒலித்தது. அழைத்தது அலமேலு.

"ஹலோ அம்மா..."

"ரெடி ஆயாச்சா? நீங்க ஸ்விட்சர்லாந்து போறதா சித்தார்த் சொன்னாரு"

"ஆமாம்மா, இன்னும் பத்து நாள்ல வந்துடுவோம்"

"ஆனா சித்தார்த், சீக்கிரம் வர மாட்டீங்கன்னு சொன்னாரு?"

"சொல்லிட்டாரா?" என்றாள் அவனை முறைத்த வண்ணம்.

"அவரைப் பார்த்துக்கோ ஹரிணி. ஃபர்ஸ்ட்-எயிட் கிட் எடுத்துக்கோ. தேவையான எல்லா மருந்தும் இருக்கான்னு செக் பண்ணிக்கோ."

"எல்லாத்தையும் ஏற்கனவே எடுத்து வச்சுட்டேன் மா"

"பாத்து பத்திரமா போயிட்டு வாங்க" அழைப்பை துண்டித்தார் அலமேலு.

"நம்ம என்ன பாதயாத்திரையா போறோம், ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு திரிய? கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம லாங் ஹனிமூன்னு சொல்லிவிட்டு திரியறீங்க...?"

"இதுல வெட்கம் எங்கிருந்து வந்தது? என்னமோ நீயும் நானும் மட்டும் தான் ஹனிமூன் போற மாதிரி பேசுற? சொல்லப் போனா நம்ம ரொம்ப லேட்"

பெருமூச்சு விட்டாள் ஹரிணி இவனிடம் பேச முடியாது என்பது போல்.

"படுத்து தூங்கு"

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் படுத்து கொண்டாள் ஹரிணி.

மறுநாள் காலை

தங்கள் பெற்றோரிடம் விடை பெற்றுக் கொண்டு, ஹரிணியுடன் இந்தியாவை விட்டு கிளம்பினான் சித்தார்த்.

பனிப்பொழிவுடன் அவர்களை வரவேற்றது ஸ்விட்சர்லாந்து. நாளை என்பது இல்லை என்பது போல் அவர்கள் இருவரும் தேனிலவை கொண்டாடித் தீர்த்தார்கள். இலக்கில்லாமல் ஓடினார்கள், பனி மலைகளில் உருண்டார்கள், வாய்விட்டு சிரித்தார்கள், சண்டையிட்டும் கொண்டார்கள், மீண்டும் புன்னகைத்தார்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஒருவரை ஒருவர் ரசித்துக் கொண்டார்கள்.

சுவிட்சர்லாந்தின் சில்லென்ற காலநிலை, பெரும்பாலும் அவர்களை போர்வைக்குள்ளேயே வைத்திருந்தது. முதன்முறையாக பனிப்பொழிவில் விளையாடியதால் ஹரிணிக்கு காய்ச்சல் வந்தது. தடுமாறி போனான் சித்தார்த். மருத்துவரின் வழிகாட்டுதலின்படி அவளுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து தேற்றிக்கொண்டு வருவதற்குள் அவனுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.

இப்படியே பதினைந்து நாட்கள் ஓடி விட்டது.

"நம்ம இங்க வந்து பதினைஞ்சு நாள் ஆயிடுச்சுன்னு என்னால நம்பவே முடியல. நாள் எவ்வளவு வேகமா ஓடுது..." என்றாள் ஹரிணி.

"ஏன்னா, நம்ம மனசுக்கு பிடிச்சவங்க கூட இருக்கோம்"

"நமக்கு போரே அடிக்காது போல இருக்கு"

"நான் அதைப் பத்தி நினைக்கவே விரும்பல"

"எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு"

"அப்படியா? எனக்கு அந்த விஷயம் தெரியவே தெரியாதே" என்றான் கிண்டலாய்.

"நிஜமாவே நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்னு உங்களுக்கு தெரியாது. இப்பவே என்னை சாக சொன்னா கூட நான் ரெடி. ஏன்னா, வாழ்க்கையில இருக்கிற எல்லா சந்தோஷத்தையும் பாத்துட்ட மாதிரி எனக்கு மனம் நிறைவா இருக்கு"

"என்னை ரொம்ப காதலிக்கிறேன்னு சொன்ன. அப்படி இருக்கும் போது, சாகுற எண்ணம் உனக்கு ஏன் வருது? நம்ம ரெண்டு பேரும், ரொம்ப நாளைக்கு, இதே மாதிரி கையை கோர்த்துக்கிட்டு சந்தோஷமா இருப்போம்"

உணர்ச்சிவசப்பட்டு அவனை அணைத்துக் கொண்டாள் ஹரிணி.

"உங்களை எனக்கு கொடுத்ததுக்காக நான் வாழ்நாள் முழுக்க கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிட்டே இருப்பேன்"

மெல்ல அவள் முதுகை வருடி கொடுத்தான் சித்தார்த்.

"என்னை எமோஷனல் ஆக்காத. அதனால ஏற்படும் விளைவை நீ தான் சமாளிக்கணும்..." என்றான் குறும்புடன்.

"வேற எதுக்காக நம்ம இங்க வந்திருக்கோம்?" என்றாள் விழியோரம் எட்டிப் பார்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.

அவள் நெற்றியுடன், தன் நெற்றியை ஒற்றியபடி புன்னகைத்தான் சித்தார்த்.

"ஐ லவ் யூ"

"நானும் உங்களை கண்மண் தெரியாத அளவுக்கு காதலிக்கிறேன்" என்று மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள். அதனால் ஏற்பட்ட விளைவை அவளால் தடுக்க முடியவில்லை.

பதினைந்து நாட்களுக்கு பிறகு,

கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்த தேவயானி, சித்தார்த்தும், ஹரிணியும் நிற்பதை பார்த்தவுடன், சித்தார்த்தின் கையை பிடித்து கிள்ளினார்.

"ஆஆஆஆ..." என்று அவன் கத்த,

"நான் கனவு காணல" என்றார் தேவயானி.

சிரித்தபடி உள்ளே நுழைந்தார்கள் இருவரும்.

"என்னடா உங்க லாங் ஹனிமூன் வெறும் ஒரு மாசம் தானா?"

தனது கட்டை விரலை தலைகீழாய் காட்டினான் சித்தார்த்.

"ஆனா ஏன்?"

"சீனிவாசன் சாரோட வைஃப் கேரிங்கா இருக்காங்க. அதனால தான் ட்ரிப் பை கேன்சல் பண்ணிட்டு வந்துட்டோம்" என்றாள் ஹரிணி.

சீனிவாசனுடைய மனைவி, கர்ப்பமாய் இருந்த பொழுது, படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து அவருக்கு கரு கலைந்து போனதும், அதன் விளைவாக சித்தார்த் இலங்கைக்குச் செல்ல நேர்ந்ததும், அங்கு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பினால் இந்தியாவில் இருந்தவர்களுடன் அவன் தொடர்பு கொள்ள முடியாமல் போனதும், அதனால் அவன் தனக்கு வரப்போகும் மனைவியின் புகைப்படத்தை பார்க்க முடியாமல் போனதும், ஷிவானியை திருமணம் செய்து கொண்டதும், நாம் அறிந்ததே.

"எக்ஸ்கியூஸ் மீ... கேன்சல் பண்ணல... ஜஸ்ட் தள்ளி போட்டிருக்கேன். ஒரு வருஷம் கழிச்சு, நம்ம மறுபடியும் கண்டினியூ பண்ணுவோம்"

"செகண்ட் ஹனிமூணா?" என்று சிரித்தார் தேவயானி.

அவன் மேற்கையில் ஒரு குத்து குத்தி விட்டு, தனது சூட்கேஸை இழுத்துக் கொண்டு நடந்தாள் ஹரிணி.

"என்ன ஆச்சு சித்து? ஏன் பாதியிலேயே வந்துட்ட?"

"சீனிவாசனோட வைஃப் கேரிங்கா இருக்காங்க. நான் இங்க இல்லன்னா அவன் ரொம்ப பிசியா இருப்பான். அப்பாவை எந்த வேலையும் செய்ய விடாம எல்லாத்தையும் தன் தலையில் இழுத்து போட்டுக்குவான். அவன் வைஃப் கூட அவனால டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது. இந்த தடவை, அவங்க ரெண்டு பேரையும் ஸ்ட்ரெஸ்ல வைக்க வேண்டாம்னு நினைக்கிறேன். சீனி கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கட்டும். அதனால தான் திரும்பி வந்துட்டேன்"

"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அவங்களுக்கு மட்டும் கரு கலையாம இருந்திருந்தா எல்லாமே மாறி போயிருக்கும்"

ஆமாம் என்று தலையசைத்த சித்தார்த்தின் முகத்தில் லேசான வலி தெரிந்தது.

"ஹரிணி எனக்கு கிடைக்காமலே கூட போயிருப்பா..." என்றான்.

"இல்ல சித்து... ஹரிணி உனக்காக விதிக்கப்பட்டவ. எது எப்படி இருந்தாலும், ஏதோ ஒரு வழியில, அவ நிச்சயம் உன்கிட்ட வந்து சேர்ந்திருப்பா. உங்க வாழ்க்கையில ஷிவானி ஒரு பகடைக்காய். உங்களை இணைக்கிற பாலம். அவ இல்லனாலும் இது நடந்திருக்கும். ஷிவானி செஞ்சதை வேற யாராவது செஞ்சிருப்பாங்க. நீ நிச்சயம் ஹரிணியை கல்யாணம் செஞ்சுக்கிட்டு இருப்ப"

ஆமாம் என்று தலையசைத்தான் சித்தார்த்.

தேவயானி கூறியது உண்மை தான். இதனால் தான் இப்படி நடந்தது, இவர்களால் தான் அப்படி நடந்தது என்பதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று இருந்தால், யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது எப்படியும் நடந்தே தீரும். அது ஆண்டவனின் கட்டளை. மனிதர்களான நாமெல்லாம் வெறும் பகடை காய்கள் தான். காய்கள் வெட்டப்படலாம்... ஆனால் ஆட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

அப்படித் தான், நமது சித்தார்த்தும் ஹரிணியும் ஒன்று சேர வேண்டும் என்பது இறைவன் விருப்பம். அதனால் தான் எவ்வளவு தடைகள் வந்த போதிலும், சித்தார்த்துக்கு திருமணமே ஆகிவிட்ட போதிலும், சித்தார்த்தே கூட எதிர்பாராத வகையில் ஹரிணி அவனிடம் வந்து சேர்ந்தாள்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பது சில வேலைகளில் அபத்தமாய் தோன்றலாம். ஆனால் காலம் செல்ல செல்ல அப்படி நடந்தது நல்லதுக்கு தான் என்பது புலப்படும். கவலைகள் அனைத்தையும் இறைவனிடம் விட்டுவிட்டு, இந்தப் பொழுதை சந்தோஷமாய் கழியுங்கள். வாழ்க வளமுடன்...!

முற்றும். 🙏🏻🙏🏻

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top