53 யார் அழகானவன்?

53 யார் அழகானவன்?

அது ஒரு மிக அருமையான குடும்ப சுற்றுலா. அனைவரும் ஒன்றிணைந்து ஆனந்தப்பட்டார்கள். சம்மந்திகள்  என்பதை தாண்டி, அனைவரும் நல்ல நண்பர்களாக மாறினார்கள். வாங்க, போங்க, என்பதை மீறி பெயர் சொல்லி அழைத்துக் கொண்டார்கள். அதை, ஒருவர் மற்றவரிடம் தாழ்மையுடன் கேட்டே பெற்றார்கள்.

அனைவரும் படகு சவாரி செய்யச் சென்றார்கள். ஹரிணி மிதித்து ஓட்டும் படகில் சவாரி செய்ய விரும்பினாள். அது, திரைப்படங்களில் பார்த்ததால் வந்த ஆர்வம்.

"ஹரிணி, இது நீ சினிமாவுல பார்க்கிற மாதிரி விஷயம் இல்ல. உன்னால மிதிக்க முடியாது" என்றான் சித்தார்த்.

"ப்ளீஸ், ப்ளீஸ், சித்... எனக்கு ரொம்ப ஆசை... சினிமாவுல ஹீரோவும், ஹீரோயினும், ரொமான்டிக்கா டூயட் பாடிக்கிட்டே அதை மிதிப்பாங்க... சூப்பரா இருக்கும்"

மெல்ல கண்களை இமைத்து சிரித்தான் சித்தார்த்.

"சரி வா, போகலாம்"

பெரியவர்கள் அனைவரும், துடுப்பு துழாவும் படகில் சென்றுவிட, இவர்கள் இருவரும் மிதிக்கும் படகில் ஏறினார்கள். ஆர்வத்துடன் அமர்ந்தாள் ஹரிணி.

"என்னோட இன்ஸ்ட்ரக்ஷன்சை ஃபாலோ பண்ணு. கரையோரமாவே தான் போகணும். ஏரிக்கு நடுவுல போக கூடாது" என்றான் சித்தார்த்.

"ஆனா ஏன்?"

"ஏன்னா, நமக்கு இது தான் ஃபர்ஸ்ட் டைம். கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணதுக்கு பிறகு நடுவுல போலாம்"

"ஓகே"

இருவரும் அந்தப் படகை மிதிக்கும் விசையை அழுத்தினார்கள். எதையோ எதிர்பார்த்து, ஹரிணியின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தான் சித்தார்த். அவன் எதிர்பார்த்தபடிய, சிறிது நேரத்தில் அந்தப் படகின் விசையை மிகவும் கஷ்டப்பட்டு அழுத்தினாள் ஹரிணி. அந்த படகை மிதித்து ஓட்டுவது இவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சினிமாவில் பார்த்த போது அது மிகவும் ஆனந்தமாய் இருக்கும் என்று எண்ணியிருந்தாள். ஆனால், கற்பனை செய்ய முடியாத அளவிற்கு, மிகவும் அழுத்தமாய், கடினமாய் இருந்தது.

"நல்லா, வேகமா மிதி ஹரிணி... ஏரிக்கு நடுவுல போக வேண்டாமா?"

"இல்லங்க... என்னால அழுத்த முடியல. காலெல்லாம் ரொம்ப வலிக்குது..."

"அதனால தான், அவங்க கூடவே நம்மளும் போலாம்னு சொன்னேன்"

"இது ரொம்ப ஜாலியா இருக்கும்னு நினைச்சேன்" முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டாள் ஹரிணி.

"சினிமாவுல வர்ற எல்லா சீனும் உண்மையானது இல்ல. குழந்தைத்தனமா இருக்காத"

"நல்லவேளை நம்ம ஏரிக்கு நடுவுல போகல. போயிருந்தா திரும்பி வர பெரும்பாடு பட்டிருக்கணும்..."

ஆமாம் என்று தலையசைத்தான் சித்தார்த்.

"நீங்க ஏற்கனவே இந்த போட்ல போயிருக்கீங்களா?"

"இல்ல... ஆனா தண்ணியோட பிரஷர் ரொம்ப அதிகமா இருக்கும்னு தெரியும்..."

ஆமாம் என்று தலையசைத்தாள் ஹரிணி.

"பரவாயில்லை விடு... நம்ம ஆர்ட்டிஃபிஷியல் சீக்கு போகலாம்."

"சரி வாங்க, போகலாம்"

அவர்களது பெற்றோர்கள் வந்ததும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்கை கடலுக்குச் சென்றனர். ஹரிணி மட்டுமல்ல, தேவயானியும் அலமேலுவும் கூட நாலடி தண்ணீரில் வந்த அலைகளில் ஆட்டம் போட்டார்கள். தலைநகர் டில்லியில் வசிப்பவர்கள் என்பதால், அவர்கள் கடல் அலைகளில்  நிற்கும் சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் அல்லவா...! சித்தார்த்தின் தோள்களைப் பற்றிக் கொண்டு, அலைகளில் எகிறி குதித்தபடி இருந்தாள் ஹரிணி. சிறிது நேரத்திற்கு பிறகு பெரியவர்கள் கடையேறி விட, சிறியவர்கள் தொடர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஹரிணி கரையேற தயாராக இல்லை. அவள் ஆட்டத்திற்கு தோள் கொடுக்க ஒருவன் கிடைத்துவிட்டால் அவளுக்கு எப்படி அந்த எண்ணம் ஏற்படும்? நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக் கொண்டிருந்தது.

"நம்ம போகலாம்னு நினைக்கிறேன்" என்றாள் ஹரிணி.

"நெஜமாத்தான் சொல்றியா?"

ஆமாம் என்றபடி அவன் தோளை பிடித்துக் கொண்டு, அலைகளில் குதித்தபடியே அங்கிருந்து நடக்க துவங்கினாள் ஹரிணி. அப்பொழுது, ஹரிணியின் கண்களில், அங்கிருந்த ஐஸ்கிரீம் கடை தென்பட்டது.

"எனக்கு ஐஸ் கிரீம் வேணும்"

"நம்ம டிரஸ் கொஞ்சம் ஆறினதுக்கு பிறகு, நான் போய் வாங்கிட்டு வரேன்"

"நீங்க இருங்க. நான் போறேன்" காத்திருக்காமல் ஓடிச் சென்றாள்.

"பார்த்துப் போ..."

"ஓகே "

அந்தக் கடையில் ஏராளமான கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், ஐஸ்கிரீமை வாங்காமல் திரும்பிச் செல்லும் எண்ணம் ஹரிணிக்கு இல்லை. காத்திருப்பது என்று முடிவு செய்தாள். அப்பொழுது அவள் காதில் இருவர் பேசிக் கொண்டது விழுந்தது.

"நானும் பார்த்துகிட்டு இருக்கேன், காலையிலிருந்து என்ன யோசிச்சுகிட்டு இருக்க?"

அது ஒரு ஆணின் குரல்.

"நான் இங்க ஒருத்தரை பார்த்தேன். ரொம்ப தெரிஞ்ச மாதிரி இருக்காரு. ஆனா என்னால நிச்சயமா சொல்ல முடியல" என்றாள் ஒரு பெண்.

"நீ யாரைப் பத்தி பேசுற?"

"எங்க காலேஜ்ல ஒருத்தர் படிச்சாரு. இவரைப் பார்த்தா, அவரை மாதிரியே இருக்கு. ஆனா இவரோட நடவடிக்கை அப்படியே ஆப்போசிட்டா இருக்கு"

"அப்படின்னா?"

"என் கூட காலேஜ்ல படிச்சவரு, ரொம்ப ரிசர்வ்டு டைப். கேர்ள்ஸ் கிட்ட பேசக்கூட மாட்டாரு. ஆனா இவரு, ஒரு பொண்ணு கூட சேர்ந்து பயங்கரமா ஆட்டம் போட்டுகிட்டு இருக்காரு, என்னமோ உலகம் இன்னைக்கே முடிஞ்சு போற மாதிரி..."

"அந்த பொண்ணு அவரோட வைஃப்பா இருக்கலாம் இல்ல...?"

"இருக்கலாம்... அது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. அவரு இவ்வளவு தூரம் மாறி இருப்பார்னு என்னால நம்பவே முடியல. ஒருவேளை அவரா இருக்காதுன்னு தோணுது"

"அவர்கிட்டயே கேட்டு பாத்துடேன்"

"ஒருவேளை அவரா இல்லன்னா?"

"அவர் யாருன்னு என்கிட்ட காட்டு. அவரை நான் கேட்கிறேன்"

"இருங்க, இருங்க, அவரே வராரு"

"யாரு?"

"அதோ, பிளாக் த்ரீ ஃபோர்த் பேண்டும், ஒயிட் டீ சர்ட்ம் போட்டிருக்காரே அவரு"

அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஹரிணியின் கண்கள் அகல விரிந்தன. ஏனென்றால், சித்தார்த் அணிந்திருந்ததும் அதே உடையை தான். மெல்ல பின்னால் சாய்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களை கவனித்தாள். அப்பொழுது அவளைத் தேடிக் கொண்டு சித்தார்த் அங்கு வந்தான். மீண்டும் தூண்னின் பின் மறைந்து கொண்டு, அவர்கள் பேசுவதை கேட்கலானாள் ஹரிணி.

அந்தப் பெண்ணின் கணவர், சித்தார்த்தை அழைத்தார்.

"மிஸ்டர் சித்தார்த்"

"யா..."

"அப்போ நீங்க சித்தார்த் தானா?"

நீ என்ன பைத்தியமா? என்பது போல அவனைப் பார்த்தான் சித்தார்த்.

"உங்களுக்கு இவங்களை அடையாளம் தெரியுதா?" தன் மனைவியை சுட்டிக்காட்டி கேட்டான்.

இல்லை என்று தலையசைத்தான் சித்தார்த்.

"இவங்க உங்க காலேஜ்ல தான் படிச்சாங்க. இவங்க பேரு நேயா"

"நேயாவா?"

"நான் நம்ம காலேஜ் பேஸ்கட் பால் டீம் கேப்டன்" என்றாள் நேயா.

"ஓ... நீங்களா? சாரி, எனக்கு அடையாளம் தெரியல"

"எங்ககிட்ட எல்லாம் நீங்க பேசி இருந்தா தானே எங்களை உங்களுக்கு அடையாளம் தெரியும்?"

மென்மையாய் புன்முறுவல் பூத்தான் சித்தார்த்.

"இவர் என்னோட ஹஸ்பண்ட் ரகுராம்"

இருவரும் கைகுலுக்கி கொண்டார்கள்.

"நாங்க காலேஜ்ல படிக்கும் போது, இவரு கேர்ள்ஸ் கிட்ட பேசவே மாட்டாரு. ஆனா பொண்ணுங்க எல்லாரும் இவர் பின்னாடி தான் சுத்திக்கிட்டு இருப்பாங்க"

"என்னோட வைஃப், இந்த ட்ரிப்பை குழம்பி, குழம்பி வீணாக்கிட்டா" என்றான் நேயாவின் கணவன்.

"என்ன குழப்பம்?" என்றான் சித்தார்த்.

"அவ கூட காலேஜ்ல படிச்ச அதே சித்தார்த் நீங்க தானான்னு அவளுக்கு சந்தேகம்"

"ஏன்?"

"நீங்க ஒரு பொண்ணு கூட ரொம்ப க்ளோசா இருந்தத பாத்து நான் கன்ஃபியூஸ் ஆயிட்டேன்" - நேயா

"அவங்க என்னோட வைஃப்"

"ஆனா நீங்க கேர்ள்ஸ் கிட்ட இருந்து விலகியே இருந்ததால, நீங்க கல்யாணமே பண்ணிக்க மாட்டீங்கன்னு நாங்க எல்லாம் பேசிக்கிட்டிருப்போம்"

வாய்விட்டு சிரித்தான் சித்தார்த்.

"இங்க தான் ஐஸ்கிரீம் வாங்க வந்தாங்க. இருங்க நான் பார்க்கிறேன்"

அங்கிருந்த கூட்டத்தின் அருகில் சென்று, ஒன்றும் தெரியாதது போல் நின்று கொண்டாள் ஹரிணி.

"ஹரிணி, இங்க வா"

அவர்களுக்கு அருகில் வந்தாள் ஹரிணி.

"இவங்க ஹரிணி, என்னோட வைஃப்"

"ஹாய்" என்றாள் ஹரிணி.

"இவங்க என்கூட காலேஜ்ல படிச்சவங்க" என்றான் சித்தார்த்.

"அதை நான் தான் அவருக்கு ஞாபகப்படுத்தினேன்" என்றாள் நேயா.

"ஏன்?" என்றாள் ஹரிணி அவள் எதுவுமே கேட்கவில்லை என்பது போல்.

"நான் அவங்களை மறந்துட்டேன்" என்றான் சித்தார்த்.

"மறந்துட்டீங்களா? என்னையெல்லாம் உங்களுக்கு தெரியவே தெரியாது... அப்புறம், எங்கிருந்து நீங்க என்னை ஞாபகம் வச்சிக்கிறது? உங்களுக்கு தெரியுமா ஹரிணி, காலேஜ் படிக்கும் போது, அவருக்கு நிறைய ப்ரொபோசல்ஸ் என்னோட கிளாஸ்ல இருந்தே போயிருக்கு... ஆனா அவர் எதையுமே ஒத்துக்கல"

தன்னுடைய கர்வத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தாள் ஹரிணி.

"நீ ஐஸ் கிரீம் வாங்கலையா?"

இல்லை என்று தலையசைத்தாள் ஹரிணி.

அப்பொழுது, நேயாவின் மகள், கை நிறைய ஐஸ்கிரீம்முடன் வந்தாள்.

"இவ என்னோட டாட்டர் சந்தனா"

"ஹாய் அங்கிள் ஹாய் அக்கா..."

"இது ரொம்ப அநியாயம். நான் அங்கிள், என்னோட வைஃப் அக்காவா?" என்றான் சித்தார்த்.

"ஏன்னா, நீங்க அவங்க அம்மாவோட காலேஜ் மேட்" என்றான் நேயாவின் கணவன்.

"அக்காவுக்கு ஒரு ஐஸ்கிரீம் கொடு" என்றாள் நேயா

"எடுத்துக்கோங்க கா"

"நீயே ஒன்னு குடு "

"நீங்க எது வேணா எடுத்துக்கலாம்"

"உனக்கு என்ன ஃபிளேவர் பிடிக்கும்?"

"டபுள் சாக்லேட் "

"அப்படின்னா நான் பிளாக் கரன்ட் எடுத்துக்கிறேன்"

"ஓகே"

"தேங்க்யூ "

அப்பொழுது தேவயானியும் அலமேலுவும் அங்கு வந்தார்கள்.

"அம்மா இவங்க நேயா. இவரோட காலேஜ் மேட் "

"நமஸ்தே ஆண்ட்டி?"

"நீங்க, எங்க இருந்து வரீங்க? "

"ராம் நகரில் இருந்து வரோம்"

"நாளைக்கு இங்கே இருப்பீங்களா?"

"இல்லைங்க ஆன்ட்டி. நாங்க இன்னைக்கு கிளம்பறோம் "

"அப்படின்னா டெல்லி வரும் போது கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும்"

"நிச்சயம் வரோம், ஆன்ட்டி"

 அவர்களிடமிருந்து விடை பெற்று சென்றாள் நேயா.

"ஏதாவது சாப்பிடலாம். எனக்கு ரொம்ப பசிக்குது" என்றார் தேவயானி.

"எனக்கும் தான்" என்றார் அலமேலு.

வெங்கடேசனுடன் அமர்ந்திருந்த  சுவாமிநாதனை நோக்கி இங்கே வாருங்கள் என்பது போல் கையசைத்தான் சித்தார்த். அவர்கள் என்ன என்பது போல் சைகையில் கேட்க, அருகே இருந்த உணவு விடுதியை காட்டினான் சித்தார்த். தண்ணீரில் ஆட்டம் போட்டதால் ஹரிணிக்கு கூட மிகவும் பசியாக தான் இருந்தது. அனைவரும் சேர்ந்து மாலை சிற்றுண்டியை சற்று அதிகமாகவே உண்டார்கள்.

"அடுத்து என்ன?" என்றான் சித்தார்த்.

"நாங்க ரூமுக்கு போறோம் எங்களுக்கு ரெஸ்ட் வேணும்" என்றார் தேவயானி.

"நீங்க என்ன செய்யப் போறீங்க, பா?"

"கார்ட்ஸ் விளையாடலாம்னு இருக்கோம்"

"நீங்க கார்ட்ஸ் ஆடுவீங்களா, அலமு?" என்றார் தேவயானி.

"பொண்ணுங்க வீட்ல இருந்தா, மூணு பேரும் சேர்ந்து விளையாடுவோம்" என்றார் அலமேலு.

"அப்படின்னா நாங்களும் உங்க கூட கார்ட்ஸ் விளையாட வரோம்" என்றார் தேவயானி.

"நீயும் வரியா சித்து?" என்றார் சுவாமிநாதன்.

"நான் செஸ்  மட்டும் தான் விளையாடுவேன்" என்று சித்தார்த் கூற, ஹரிணிக்கு புறை ஏறியது.

"பார்த்து" அவள் முதுகு லேசாய் தட்டி கொடுத்தான் சித்தார்த்.

"சரி, அப்ப நாங்க கிளம்பறோம்" என்றார் தேவயானி.

"நாங்க கொஞ்ச நேரம் கழிச்சு வரோம்" என்றான் சித்தார்த்.

அவர்கள் அறைக்கு கிளம்பிச் சென்றார்கள்.

"ஏன் உங்க காலேஜ் டைம்ல நீங்க கேர்ள்ஸ் கிட்ட பேசினது இல்ல?" என்றாள் ஹரிணி.

"பர்ட்டிகுலரா எந்த ரீசனும் இல்ல. கொஞ்சம் விட்டா ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குவாங்க. அது எனக்கு பிடிக்காது"

"உங்களுக்கு அவங்களை எல்லாம் பிடிக்காதா?"

பிடிக்காது என்று தலையசைத்தான்.

"ஏன்?"

"அவங்க வாயில டூத் பிரஷ் இல்ல" என்று சிரித்தான் சித்தார்த்.

"நல்ல வேலை இல்ல" என்றாள் ஹரிணி.

ஹரிணியின் முகத்தை சுட்டிக்காட்டி,

"இந்த முகத்தை மாதிரி வேற எந்த முகமும் என்னை கவர்ந்ததே இல்ல.  அழகா, சிம்பிள்ளா, க்யூட்டா, இப்படி ஒரு முகத்தை நான் பார்த்ததே இல்ல. எனக்கு விதியில நம்பிக்கை இல்ல. ஆனா இப்போ நம்புறதை தவிர எனக்கு வழி இல்ல"

"ஏன்?"

"எனக்கு யார் மேலயும் காதல் வந்ததே இல்ல. அது வந்த போது, அவ எனக்கு கிடைக்கல. அவளுக்கு பதிலா அவளோட அக்கா எனக்கு மனைவியானா. நமக்கு வாச்சது இவ்வளவு தான்னு என் மனசை தேத்திக்கிட்டு வாழலாம்னு நினைச்ச போது, அதுவும் இல்லன்னு ஆயிடுச்சு. என் தலையில எழுதி வச்சிருக்கிறது என்னனு எனக்கு புரியல. அப்போ தான் என் வாழ்க்கையில எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுச்சு. நான் விரும்பின அதே பொண்ணு, என்னோட மனைவியா என் வாழ்க்கையில நுழைஞ்சா. இதை விதின்னு சொல்லாம வேற என்ன சொல்றது?"

"நமக்கு விதிச்சது இது தான்னு இருக்கும் போது, அதை யாராலும் மாத்த முடியாது இல்லையா?"

"ஆமாம்... அழகான விதி..."

"நான் ரொம்ப ஸ்பெஷலா ஃபீல் பண்றேன். எனக்கு இப்படி ஒரு ஹஸ்பண்ட் கிடைப்பார்னு நான் நினைச்சு கூட பார்த்ததில்ல.  நீங்க ரொம்ப நல்லவர்"

"நிஜமாவா?"

"இல்லையா?"

"அதை நான் சொல்ல கூடாது. நீ தான் சொல்லணும்."

"இப்போ தானே சொன்னேனே..."

"வாழ்க்கை முழுக்க சொல்லணும். உனக்கு எப்பவும் நல்லவனாவே இருக்கணும். அது தான் என்னுடைய விருப்பம்"

ரசனை நிறைந்த பார்வை ஒன்றை அவன் மீது வீசினாள் ஹரிணி. தன் மனைவியை சந்தோஷப்படுத்தி பார்க்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு ஆணும் மிகவும் அழகானவன்...!

தொடரும்...

குறிப்பு: அடுத்த பாகத்துடன் *சில்லென்ற தீயே!* நிறைவு பெறுகிறது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top