52 சுற்றுலா தளம்

52 சுற்றுலா தளம்

கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான் சித்தார்த்.

"ஆமாம் அங்கிள்... உங்களுக்கும், ஆன்ட்டிக்கும் சன் கிளாஸ் எடுத்துக்கோங்க. காட்டன் டிரஸ் பிரிஃபர் பண்ணுங்க. நீங்க டிராக் பேண்ட்டும் டி-ஷர்ட்டும் எடுத்துக்கோங்க. அங்க நிறைய வாட்டர் கேம்ஸ், ஹார்ஸ் ரைடிங், போட்டிங் எல்லாம் இருக்கு"

தன்னுடைய மற்றும் ஹரிணியின் உடைகளை பேக்கிங் செய்தபடி, அவன் தன் மாமனார் வெங்கடேசனிடம் தான் பேசிக் கொண்டிருந்தான்.

"அலமேலு ஸ்நாக்ஸ்  செஞ்சு கொண்டு வரப் போறாளாம்"

"வேண்டாம் அங்கிள். எல்லாம் அங்கேயே கிடைக்கும். ஆன்ட்டிய ஃப்ரீயா வர சொல்லுங்க."

"நான் சொன்னா அவ கேட்கல... எப்பவும் போலவே" என்று சிரித்தார் வெங்கடேசன்.

சித்தார்த்தும் சிரித்தான்.

"நீங்க எப்போ வீட்டுக்கு போவீங்க சித்தார்த்?"

"நான் வீட்ல தான் இருக்கேன் அங்கிள். பேக்கிங் பண்ணிக்கிட்டு இருக்கேன்"

"இன்னும் ஹரிணி காலேஜ்ல இருந்து வரலையா?"

"இன்னும் இல்ல, அங்கிள்"

"இன்னைக்கு ஒரு நாள் லீவு எடுத்திருக்கலாம் இல்ல?"

"இல்ல அங்கிள். இன்னைக்கு அவ ஒரு  ப்ராஜெக்ட் சப்மிட் பண்ண வேண்டி இருக்கு"

"ப்ராஜெக்ட் சப்மிட் பண்ண இன்னைக்கு தான் லாஸ்ட் டேட்டா?"

"இல்ல அங்கிள் இன்னைக்கு சப்மிட் பண்ணிட்டா, ஃப்ரீயா இருப்பா. இல்லன்னா, அங்க வந்து கூட அதைப் பத்தியே யோசிச்சிக்கிட்டு இருப்பா"

"நீங்க சொல்றதும் கரெக்டு தான்"

"சாயங்காலம் பார்க்கலாம் அங்கிள்"

"ஓகே சித்தார்த், நாங்க கரெக்ட் டைமுக்கு வந்துடுவோம். பை"

அழைப்பை துண்டித்து விட்டு பேக்கிங் செய்வதை தொடர்ந்தான் சித்தார்த்.

ஹரிணி வருவதைப் பார்த்து, பேக்கிங் செய்வதை நிறுத்தினான். அவனைப் பார்த்து சம்பிரதாயமாய் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, தன் பையை கட்டில் மீது தூக்கி எறிந்து விட்டு அமைதியாய் அமர்ந்தாள் ஹரிணி. அவள், ஏதோ கவலையில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியாதா என்ன சித்தார்த்தால்?

"என்ன ஆச்சு?" என்றான்.

"ஒன்னும் இல்ல"

"ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணியாச்சா?"

"ம்ம்ம்... எனக்கு ஃபுல் மார்க் கிடைச்சிருக்கு"

"அது நான் எதிர்பார்த்தது தான். ஆனா நீ அதுக்காக சந்தோஷம் தானே படணும்? ஏன் டல்லா இருக்க?"

"எங்க ப்ரொஃபஸர் அனுவை பத்தி கேட்டாங்க." என்றாள் மெல்லிய குரலில்.

ஓஹோ... இது தான் அவளது சோர்வுக்கு காரணமா?

"நான் எதுவும் சொல்லல"

"அவளை நினைச்சு நீ வருத்தப்படுறியா?"

"நான் ஏன் வருத்தப்படணும்? அதுல என்னோட தப்பு என்ன இருக்கு? செஞ்ச தப்புக்கு தண்டனையை அனுபவிச்சு தானே ஆகணும்? எனக்கு எந்த வருத்தமும் இல்ல. என்னை ஏமாத்தினதோட மட்டும் இல்லாம, என் புருஷனையும் என்கிட்ட இருந்து பறிக்க பாத்திருக்கா. அவளை மாதிரி ஒரு நம்பிக்கை துரோகி, மன்னிப்புக்கும், என்னை மாதிரி ஒரு ஃபிரண்டுக்கும் தகுதி இல்லாதவ"

ஒன்றும் கூறாமல் அவளையே அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

"நீங்க ரோஹித்தை கவனிச்சுக்கிட்டு தானே இருக்கீங்க?"

அவள், கேள்வி கேட்டாலே ஒழிய, அவன் பதில் கூற வேண்டும் என்று காத்திருக்கவில்லை.

"அவனை நம்பாதீங்க. அவன் நல்லவன் இல்ல. அவன்  உங்களுக்கு ஹெல்ப் பண்ணான் அப்படிங்குறதுக்காக அவன் எப்பவுமே நல்லவனா இருப்பான்னு அர்த்தமில்ல. அவன் மேல எப்பவும் ஒரு கண் வையுங்க"

கட்டிலை விட்டு எழுந்த ஹரிணி,

"ஆங்... நீங்க சொன்ன மாதிரியே உங்களை கண்காணிக்க நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட்டை அசைன் பண்ணி இருக்கேன். உங்களை மட்டுமில்ல, உங்க அம்மா அப்பா, எங்க அம்மா அப்பா எல்லாரையும் தான். என்னை யாராலையும் ஏமாத்த முடியாது. எல்லாரையும் கண்மூடித்தனமா நம்பிக்கிட்டு இருந்த அந்த பழைய ஹரிணி இல்ல நான். புரிஞ்சுதா?"

"நல்ல ஐடியா. எங்களைப் பத்தி நாங்களே சொல்றதை விட, வேற யாராவது சொல்றது தான் நல்லது. இனிமே நான் நிம்மதியா இருப்பேன். உன்னோட டிடெக்டிவ், எங்களை பத்தி நல்ல ரிப்போட்டை தானே கொடுப்பான்"

ஹரிணியின் கண்கள் கலங்கியது. அவளது தோல்களை சுற்றி வளைத்துக் கொண்டு,

"ரிலாக்ஸா இரு" என்றான் சித்தார்த்.

"சித்... நான்..."

"ரிலாக்ஸா இருன்னு சொன்னேன்"

அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் ஹரிணி.

"நீங்க என்னை விட்டுட மாட்டீங்க இல்ல?" என்ற அவளது குரல் குளறியது.

"கண்டிப்பா விடுவேன்"

தன் தலையை உயர்த்தி அவனை பார்த்தாள் ஹரிணி.

"நான் சாகும் போது..." என்று தனது வாசகத்தை முடித்தான்.

"அப்படியெல்லாம் பேசாதீங்க" என்று அவன் நெஞ்சில் குத்தினாள்.

"நீ மட்டும் விட்டுட்டு போறதை பத்தி பேசலாமா? என்னை பொருத்தவரை, உன்னை விட்டுட்டு போறதும், சாகுறதும் ஒன்னு தான். ஹரிணி இல்லன்னா சித்தார்த் பொணத்துக்கு சமம். என்னை நம்புன்னு நான் சொல்ல மாட்டேன். காலம் போகப் போக, உனக்கே ஒரு தெளிவு வரும்"

"நீங்க என் மேல கோவமா இல்லையே?"

"நான் ஏன் உன் மேல கோவமா இருக்க போறேன்? ஷிவானியை கல்யாணம் பண்ண போது, நானும் உன்னை மாதிரி தான் இருந்தேன். நம்ம எல்லாரும்   சாதாரண மனுஷங்க தானே... நம்மளை அடிச்சு துவைக்க சில சூறாவளிகள் நம்ம வாழ்க்கையில வரும். அந்த சூறாவளியோட விளைவை நம்ம தரையில பாத்தா, நம்ம கண்ணுக்கு தெரியறது எல்லாம் வெறும் முறிஞ்ச மரங்களும், உடைஞ்ச வீடுகளும், ஏராளமான அழிவும் தான். அது உன் நிம்மதியை கெடுக்கும். ஒருவேளை, அதுக்கு பதிலா, தலையை நிமிர்ந்து பார்த்தா, அங்க நமக்கு எந்த தடையுமே இல்லாத மாதிரி சுத்தமா இருக்கும். அழிஞ்சது அழிஞ்சது தான். அதை நம்மால மாத்த முடியாது. ஆனா ரிப்பேர் பண்ண முடியும். அதே மாதிரி தான், வந்த சூறாவளி உன்னுடைய வழியை சுத்தப்படுத்திட்டு போச்சுன்னு நெனச்சுக்கோ. உன்னோட அன்புக்கு தகுதி இல்லாதவங்கள பத்தி நீ யோசிக்க வேண்டிய அவசியமில்ல. புரிஞ்சுதா?"

"எனக்கு பயமா இருக்கு"

"எனக்கு தெரியும். நான் தான் உன் கூட இருக்கேன் இல்ல?"

"இதிலிருந்து நான் வெளிய வரவே முடியாதோன்னு தோணுது"

"நிச்சயமா முடியும். ஆனா, வெளிய வரணும்னு நீ தான் நினைக்கணும். அது உன்கிட்ட தான் இருக்கு"

"என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு"

"நெஜமாவா?"

"இதை பத்தி எல்லாம் யோசிக்க நேரம் இல்லாம, பிஸியா இருந்தா யோசிக்காம இருப்பேன் இல்ல?"

"எப்படி பிஸியா இருக்க போற?"

"குழந்தை பெத்துக்கலாம். குழந்தை பிறந்துட்டா, நான் பிஸியா ஆயிடுவேன். அதுக்கப்புறம் தேவையில்லாத விஷயங்களை யோசிக்க எனக்கு நேரம் இருக்காது"

"அதுல எனக்கு உடன்பாடு இல்ல"

"ஏன்?"

"நீ இன்னும் அதிக இன்செக்யூரா ஃபீல் பண்ணா என்ன ஆகிறது? கேரிங்கா இருக்கும் போது மனசு அமைதியா இருக்கணும். இல்லன்னா அது குழந்தையை பாதிக்கும்"

முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள் ஹரிணி.

"உன்னுடைய எக்ஸாமை முடி. என் கூட ஆஃபீசுக்கு வா. ஆஃபீஸ்ல டைம் ஸ்பென்ட் பண்ணு. நீ நார்மல் ஆயிடுவ"

"அப்படின்னா நீங்க என்னை ஹனிமூன் கூட்டிகிட்டு போகப் போறதில்லையா?"

அவளை ஒரு அதிசயம் போல் பார்த்தான் சித்தார்த்.

"நிச்சயமா போலாம்"

"அந்த ஹனிமூன் சின்னதா இருக்க கூடாது. ரொம்ப பெருசா இருக்கணும். உங்க கையை பிடிச்சுக்கிட்டு இலக்கில்லாமல் நடந்து போகணும். நமக்கு போர் அடிக்கிற வரைக்கும் அந்த ஹனிமூன் முடியவே கூடாது"

அவள் மனதில் இவ்வளவு ஆசைகள் இருக்கிறதா என்பதை எண்ணியபடி அவள் பேசுவதை ரசித்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

"நமக்கு போர் அடிக்கிற வரைக்குமா? என் கூட இருக்க உனக்கு போர் அடிக்குமா என்ன?"

"உங்களுக்கு அடிக்காதா?"

"நிச்சயமா இல்ல..."

"பாக்கலாம்"

"எனக்கு போர் அடிக்கிற வரைக்கும் நிச்சயம் திரும்பி வர மாட்டேன்"

"அப்படின்னா, ஆஃபீஸை யார் பார்த்துக்கறது?"

"அதையெல்லாம் சுவாமிநாதன் பாத்துக்குவாரு"

"பாவம் அவரு..."

"அவரா பாவம்?" என்று சிரித்தான் சித்தார்த்

"உன் மனசுல இவ்வளவு கனவெல்லாம் இருக்குன்னு எனக்கு இவ்வளவு நாள் தெரியாம போச்சு. இதை பத்தி நீ என்கிட்ட சொன்னதே இல்லையே..."

"ஒவ்வொரு பொண்ணோட மனசுலயும் இந்த மாதிரி ஏராளமான கனவுகள் இருக்கும். அதை சொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது தான் அது வெளியே தெரியும்"

"உன் மனசுல வேற என்ன எல்லாம் இருக்கு?"

"அதைப் பத்தி நம்ம ஹனிமூன்க்கு போகும் போது சொல்றேன்"

"சஸ்பென்சா?"

"அப்படித் தான் வச்சுக்கோங்களேன்"

"பார்க்கலாம்"

"நமக்கு டைம் ஆகுது. கிளம்பலாம்."

குளியலறையை நோக்கி நடந்தாள் ஹரிணி.

மில்கிவே ரெசார்டை நள்ளிரவில் சென்று அடைந்தார்கள் அவர்கள். அவரவர்களுக்காக முன்பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த அறைகளில் தஞ்சம் புகுந்தார்கள். மறுநாள் காலை சுற்றி பார்க்க வேண்டியது நிறைய இருந்ததால், அனைவரும் உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டார்கள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top