43 திடீர் அறிவுரை

43 திடீர் அறிவுரை

தனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்துடன் உணவருந்தினாள் ஹரிணி. சற்று நேரத்திற்கு முன்பு வரை தன்னை கேலி செய்து பாடாய் படுத்தி வைத்த அதே மனிதன், தன் அம்மாவை வேண்டுமென்றே தங்கள் அறைக்கு வர வைத்து கலாட்டா செய்து வேடிக்கை பார்த்த அதே மனிதன், அதற்கு முற்றிலும் நேரெதிரானவனாய் மாறிப் போயிருந்தான். உண்மை தான், ஒரு நல்ல கணவனாய் இருப்பதற்கும், மிகப் பெரிய நிறுவனத்தை நடத்தி செல்லும் நிறுவனராய் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு கணவன் இனிமையானவனாய் இருக்கலாம். ஆனால் ஒரு நிறுவனத்தின் முதலாளி எல்லா நேரமும் அப்படி இருப்பது  சாத்தியமல்ல. அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள, அவன் கண்டிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். நல்ல மனைவியான ஹரிணி, அந்த நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பது என்று எண்ணிக்கொண்டாள்.

அப்போது, சில பேர், ஒரு புதிய கட்டிலை கொண்டு வருவதை பார்த்து முகம் சுருக்கினார் சுவாமிநாதன். அதைப் பார்த்த தேவயானி, சிரிப்பை அடக்கிக் கொண்டார். ஹரிணி, தன் கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டு தலையில் கை வைத்துக் கொண்டாள்.

"எதுக்கு புது கட்டிலை கொண்டு வராங்க? யார் ஆடர் பண்ணது?" என்றார் சாமிநாதன்.

"நம்ம சித்து ரூம் கட்டில் உடைஞ்சி போச்சு"

"உடைஞ்சி போச்சா? எப்படி?" என்றார் கிண்டலான பார்வையை சித்தார்த், ஹரிணியை நோக்கி வீசியபடி.

"நீங்க அவங்கள பார்க்காதீங்க. அவங்க ரெண்டு பேரும் ஒன்னும் செய்யல. ஆனா, கட்டில் தான் உடைஞ்சு போச்சு..." என்றார் தேவயானி பரிதாபமாய் முகத்தை வைத்துக்கொண்டு.

தன் தட்டை பார்த்தபடி திருதிருவென விழித்துக் கொண்டிருந்த ஹரிணியை பார்த்து புன்னகைத்தான் சித்தார்த்.

"ஆமா ஆமா... நம்ம சித்து ஒண்ணுமே செஞ்சிருக்க மாட்டான். அவன் எவ்வளவு நல்லவன்னு நமக்கு தான் தெரியுமே..." என்று சிரித்தார் சுவாமிநாதன்.

"அந்த பெட் ரொம்ப வீக்கா இருந்தது டாட்"

"அந்த பெட் வீக்கா இல்ல, மகனே... நீ தான் ரொம்ப ஸ்டராங்கா இருக்க"

அங்கிருந்து சீக்கிரம் சென்றால் போதும் என்று வேகவேகமாய் சாப்பிட்டாள் ஹரிணி. அதனால் அவள் தொண்டையில் உணவு சிக்கிக் கொள்ள, அவளுக்கு புரையேறியது. அவளது முதுகை லேசாய் தட்டி கொடுத்தான் சித்தார்த்.

"பார்த்து மெதுவா" என்றார் தேவயானி.

அவளை தண்ணீர் குடிக்கச் செய்தான் சித்தார்த்.

"நம்ம, எதுக்கும் அந்த புது கட்டிலை ஒரு தடவை செக் பண்ணிடலாம். இல்லன்னா, கட்டில் தான் வீக்கா இருந்ததுன்னு நம்ம சித்து சாக்கு சொல்லிக்கிட்டே இருப்பான்" என்றார் தேவயானி சீரியசாக.

"போதும் நிறுத்துங்க, மா. நான் ஒழுங்கா ஹரிணி சொன்ன ஐடியாவை  கேட்டு நடந்திருக்கணும்" என்றான் சோகமாக.

திடுக்கிட்டு அவனை நோக்கி திரும்பினாள் ஹரிணி.

"அவ சொன்ன மாதிரி, நீங்க கோயிலுக்கு போனதுக்கு பிறகு நான் கட்டிலை மாத்தி இருக்கணும்"

அவனை பார்த்து முறைத்தாள் ஹரிணி. சீக்கிரம் சாப்பிட்டு முடித்துவிட்டு தங்கள் அறையை நோக்கி விரைந்தாள்.

"இரு ஹரிணி... அந்தக் கட்டிலை செக் பண்ண நானும் வரேன்" என்று பின்னால் இருந்து கத்தினான் சித்தார்த்.

விளையாட்டாய் அவன் தோளில் குத்தினார் சுவாமிநாதன். தன் மகனின் புன்னகை ததும்பும் முகத்தை பார்த்து ரசித்தபடி நின்றிருந்தார் தேவயானி.

"உன்னை இப்படி சந்தோஷமா பார்க்கவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா" என்றார் சுவாமிநாதன்.

"நீ காதலிச்சது ஹரிணியை தான் ஷிவானியை இல்லைன்னு தெரிஞ்ச போது, நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். உன் வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்" என்றார் தேவயானி.

"தேவா சொல்றது உண்மை. உன்னை  ஷிவானிக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்காக நாங்க ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணோம். கடவுள் புண்ணியத்துல ஹரிணியே உன் வாழ்க்கையில திரும்ப வந்துட்டா"

"அவளை வருத்தப்பட வைக்காத. அவளை சந்தோஷமா வச்சுக்கோ" என்றார் தேவயானி.

"அவ ரொம்ப நல்ல பொண்ணு மா. எல்லா சிச்சுவேஷன்லயும் சந்தோஷமா இருப்பா"

 "உண்மை தான். அவ இருக்கிற இடமே எப்பவும் கலகலப்பா இருக்கும்"

"அவ ஆஃபீசுக்கு வரப்போறா. உன்னோட சிஇஓ பக்கத்தை அவளுக்கும் காட்டிடாதே" என்றார் சாமிநாதன்.

சரி என்று தலையை அசைத்த அவன், குடும்பத்துடன் சுற்றுலா செல்வது பற்றி வெங்கடேசனிடம் பேசிய விஷயத்தை பற்றித் தன் பெற்றோரிடமும் பேச நினைத்தான்.

"நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"

"சொல்லு, சித்து"

"ஒரு ஃபேமிலி டிரிப் போகலாமா?"

"ஓ எஸ், போகலாமே..." 

"ஹரிணியோட அப்பா, அம்மா ஷிவானியை நெனச்சு ரொம்ப அப்செட்டா இருக்காங்க. நம்ம அவங்களையும் கூட கூட்டிட்டு போகலாம்னு நினைக்கிறேன்"

"ஆமாண்டா, அவங்களுக்கும் ஒரு மைண்ட் டைவர்ஷன் தேவை..." என்றார் தேவயானி.

"நான் அவங்களை கூப்பிடுறேன். அது தான் மரியாதையா இருக்கும்" என்றார் சாமிநாதன்.

"சரிப்பா"

"நம்ம எங்க போகப் போறோம்?" என்றார் தேவயானி ஆர்வத்துடன்.

"அது உங்க சாய்ஸ் தான் மா"

"என்னோட சாய்ஸா?"

"ஆமாம். நீங்க தான் சரியான என்டர்டெயின்மென்ட் ஸ்பாட்டை செலக்ட் பண்ணுவீங்கன்னு உங்க மருமக நினைக்கிறா"

"நிஜமாவா?" என்றார் சிரித்தபடி தேவயானி.

"ஆமாம். ஒரே ஒரு கண்டிஷன் தான். கோவில் கிடையாது" கலகலவென சிரித்தான் சித்தார்த்.

"தப்பிச்சேன் டா" என்றார் சாமிநாதன்.

"மில்கிவே ரிஸார்ட் போகலாமா? அங்க ஸ்விம்மிங் ஃபுல், போட்டிங், ஹார்ஸ் ரைடிங்,  எல்லாம் இருக்கு"

"கூல்..." என்றார் சுவாமிநாதன்.

"சூப்பர் கூல்... அது தான் நீங்க" என்றான் சித்தார்த்.

தன் புருவத்தை பெருமையாய் உயர்த்தினார் தேவயானி.

"எப்ப போக போறோம்?" என்றார் சுவாமிநாதன்.

"கமிங் வீக் எண்ட்"

"ஸ்னாக்ஸ் ஏதாவது செஞ்சு எடுத்துக்கலாமா?" என்றார் தேவயானி.

"எதுவும் வேண்டாம். நீங்களும் இந்த ட்ரிப்பை நல்லா என்ஜாய் பண்ணுங்க. உங்களுக்கும் ரெண்டு  நாள் லீவு." என்றான் சித்தார்த்.

"ரொம்ப சரி. நீங்களும் ஸ்டிரஸ் பண்ணிக்காதீங்க. இந்த ட்ரிப், எல்லாருக்காகவும் தான்... ஆம்பளைங்களுக்கு மட்டும் இல்ல..." என்றார் சுவாமிநாதன்.

"எக்ஸாக்ட்லி"

"அப்படின்னா, நான் அலமேலுவுக்கு ஃபோன் பண்ணி பேசுறேன்" என்றார் தேவயானி.

சரி என்று தலையசைத்தான் சித்தார்த்.

........

புதிய கட்டிலை வேலையாட்கள் வைத்து விட்டு சென்றார்கள். அங்கு வந்த சித்தார்த், ஹரிணி அந்தக் கட்டிலை சோதித்து கொண்டிருந்ததைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான்.

"ஸ்ட்ராங்கா இருக்கா?" என்றான்.

"நீங்க என்கிட்ட பேசாதீங்க"

"ஏன்? நான் என்ன செஞ்சேன்?"

"நீங்க எல்லாத்தையும் அம்மாகிட்ட சொல்லி கிண்டல் பண்றீங்க."

"இல்லையே... நம்ம பெட்டை பத்தி நான் அம்மாகிட்ட எதுவும் சொல்லலையே"

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள். சித்தார்த்தும் அவள் பக்கத்தில் அமர்ந்தான்.

"நீ அப்ஸட்டா இருக்கியா?"

அவனுக்கு பதில் கூறவில்லை ஹரிணி.

"சரி. இனிமே அவங்ககிட்ட எதுவும் சொல்ல மாட்டேன். சந்தோஷமா?"

இல்லை என்று தலையசைத்தாள் ஹரிணி.

"ஏன்?"

"இதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு"

"ஓ..."

"அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் கூட கலங்கமே இல்லாதவங்க"

"உண்மையிலேயே உனக்கு கோவம் இல்லையா?

"இப்படிப்பட்ட மாமனார், மாமியார் எத்தனை பேருக்கு கிடைப்பாங்க? அந்த விதத்துல நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி"

"அப்ப உன்னோட புருஷன்?"

"அவரைப் பத்தி மட்டும் பேசாதீங்க. அவரை கொல்லனும் போல இருக்கு எனக்கு" என்று அவன் கழுத்தை நெரிப்பது போல் பாவனை செய்தாள்.

அவளை சிரித்தபடி கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.

"நீ எனக்கு ஒய்ஃபா வருவேன்னு நான் நினைச்சு கூட பாக்கல. நீ என் கூட தான் இருக்குறேன்னு என்னால நம்ப முடியல. உனக்கு தெரியுமா, அம்மா எனக்கு நிறைய பொண்ணு பார்த்தாங்க. ஆனா எனக்கு யாரையும் பிடிக்கல"

"தெரியும். உங்களுக்கு மேக்கப் பண்ண முகத்தை பிடிக்காது"

"அது மட்டும் இல்ல. அந்த பொண்ணுங்களை எல்லாம் பார்க்கும் போது, என் மனசுல எந்த ஒரு ஃபீலிங்கும் ஏற்படவே இல்லை. உன்னை பார்த்த போது மட்டும் தான் ஒரு இனம் புரியாத உணர்வு... "

"உங்களுக்கு நான் தான்னு எழுதி வச்சிருக்கு. அதனால தான் நான் உங்ககிட்ட வந்து சேர்ந்திருக்கேன். வாழ்க்கை நமக்கு நிறைய அனுபவங்களை கொடுத்திருக்கு" 

"சில சமயம் அப்படித் தான். மோசமான விஷயங்களை நம்மை அனுபவிக்க வச்சு வாழ்க்கைன்னா என்னன்னு கத்துக் கொடுக்கும். அந்த அனுபவம் நமக்கு என்ன சொல்லிக் கொடுக்குதோ, அதை நம்ம கத்துக்கணும். அது தான் வாழ்க்கையை ஜெயிக்கிறதுக்கான வழி"

"திடீர்னு இப்போ எதுக்காக இத என்கிட்ட சொல்றீங்க?"

"ஷிவானி உன்கிட்ட உண்மையை மறைச்சிட்டான்னு தெரிஞ்ச போது, நீ ரொம்ப வருத்தப்பட்ட. அதே மாதிரி ரோஹித் உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்ட போதும் வருத்தப்பட்ட..."

"ஆமாம்..."

"அதிலிருந்து நீ என்ன கத்துக்கிட்ட ஹரிணி? அதைப் பத்தி நீ எப்பவாவது யோசிச்சி பாத்திருக்கியா? உனக்கு கிடைச்ச மோசமான அனுபவங்களை பயன்படுத்தி உன்னை செதுக்கிக்க நீ எப்பவாவது நினைச்சிருக்கியா?"

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.

"எல்லாரையும் சந்தேகப்பட ஆரம்பி ஹரிணி. உன்னை சுத்தி இருக்கிறவங்களை சந்தேகப்படு. கண்மூடித்தனமா யாரையும் நம்பாதே. அது உன்னை ஏமாற்றங்களில் இருந்து காப்பாத்தும்"

"நீங்க என்ன சொல்ல வரீங்க?"

"நீ வேற யார்கிட்டயும் ஏமாற வேண்டாம்னு நினைக்கிறேன். அதைத் தான் நான் சொல்ல வரேன்"

மெல்ல தன் கண்களை இமைத்து அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி. திடீரென்று அவன் தனக்கு அறிவுரை சொல்ல என்ன காரணம் இருக்க முடியும் என்பது அவளுக்கு புரியவில்லை.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top