36 எப்போதும் உன்னுடன்...
36 எப்போதும் உன்னுடன்...
சித்தார்த் கூறிய வார்த்தைகள் ஹரிணிக்கு முழுவதும் பயத்தை அளித்தது என்று கூறுவதற்கில்லை. ஆனால் அவளை சற்றே அசைத்து தான் பார்த்தது. அவனுடைய மைல்ட்/ வைல்ட் ஆசைகளைப் பற்றி நினைத்தபடி இருந்தாள். அவனை தொந்தரவு செய்வது சரியாக இருக்காது என்ற முடிவுக்கு வந்தாள். எந்நேரமும் தனது பாடப்புத்தகத்துடன் இருந்த ஹரிணியை பார்த்து சிரிப்பை அடக்கியபடி வலம் வந்தான் சித்தார்த்.
வரவேற்பறையில் அமர்ந்து தனது மாமியாரிடம் உரையாடிக் கொண்டிருந்தாள் ஹரிணி. கல்லூரியில் இருந்து திரும்பிய பின், முகம் கை கால் கழுவிக்கொண்டு அவள் கீழ் தளம் வந்து விட்டாள். இப்பொழுதெல்லாம் அவள் அப்படித் தான் செய்கிறாள். தேவயானியுடன் நேரம் செலவிடுவது அவளுடைய வழக்கமாய் மாறிவிட்டது. தேவயானிக்கும் அது பழகி விட்டது. ஹரிணி கல்லூரியிலிருந்து வருவதற்காக அவர் காத்திருக்க துவங்கினார்.
தேவயானி செய்து வைத்திருந்த சமோசாவை ருசித்தபடி,
"அம்மா செம சூப்பரா இருக்கும்மா..." என்றாள் ஹரிணி.
"நாளைக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்யலாம்?"
"நாளைக்கு ஒன்னும் வேண்டாம் மா. என் ஃபிரண்ட் அனுவோட பர்த்டே பார்ட்டிக்கு போறேன்னு சொல்லி இருந்தேன் இல்ல... காலேஜ்ல இருந்து டைரக்டா அங்க போயிடுவேன்"
"பார்ட்டி எங்க? அனு வீட்லயா? இல்ல வேற எங்கயாவதா?"
"வீட்ல இல்ல மா... ஹோட்டல் தி பர்ப்பிள் ஆர்கிட்ல."
"சூப்பர்... வீட்டுக்கு எப்படி திரும்பி வருவ? நீயாவே வந்துடுவியா?"
"இல்லம்மா... நான் ஏற்கனவே அவர்கிட்ட சொல்லிட்டேன். அவர் வந்து என்னை கூட்டிக் கொண்டு வருவார்னு நினைக்கிறேன்"
"அவனுக்கு மறுபடி ஞாபகப்படுத்த மறக்காத. அப்போ தான் அவனுக்கு ஏதாவது வேலை இருந்தா அவனை ஃப்ரீ பண்ணிக்குவான்"
"சரிம்மா"
அப்பொழுது சித்தார்த்தின் கார் ஹாரன் சத்தம் கேட்டு எழுந்து நின்றாள் ஹரிணி.
"என்ன ஆச்சு?" என்றார் தேவயானி.
"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மா..."
"ஒ..."
"நான் போறேன்"
தன் அறையை நோக்கி நடந்தாள் ஹரிணி. திடீரென்று என்ன ஆனது இந்தப் பெண்ணுக்கு என்று எண்ணியபடி அவள் சென்ற பாதையை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். சித்தார்த் வந்து அவர் தோளை தட்டிய போது தான் அவருக்கு சுயநினைவு வந்தது.
"என்னமா யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க?"
"உன்னால தான்னு நான் நினைக்கிறேன்..."
"என்னாலயா? என்னது?"
"ஹரிணிகிட்ட நீ என்ன சொன்ன? உன்ன பாத்து ஏன் அவ இப்படி விழுந்தடிச்சி ஓடுறா?"
"நெஜமாவா?" என்று சிரித்தான் சித்தார்த்.
"நீ தான் ஏதோ செஞ்சிருக்க... பாவம் அவ "
"நான் ஒண்ணுமே செய்யல மா..."
"நான் உன்னை நம்ப மாட்டேன். இப்பல்லாம் அவ நிறைய படிக்கிறா"
"எக்ஸாம் கிட்ட நெருங்கிகிட்டு இருக்கு இல்ல?" கூறியபடி தன் அறையை நோக்கி நடந்தான் சிரித்துக்கொண்டு.
"சமோசா சாப்பிடுறியா?"
"வேண்டாம்மா காபி மட்டும் போதும். குடுத்து அனுப்புங்க"
"சரி "
சோபாவில் அமர்ந்து, மிகவும் கவனமாய் படித்துக்கொண்டிருந்த ஹரிணியை பார்த்து ஒரு நொடி நின்றான்.
"ஹாய்..." என்றபடி அவள் அருகில் அமர்ந்து, தன் தோளால் அவள் தோளை லேசாய் தள்ளிவிட்டான்.
"உங்களுக்கு காபி வேணுமா?"
"அம்மா கொடுத்தனுப்புறேன்னு சொன்னாங்க"
"ஒ..."
"நீ படிக்கிறத பார்த்து, நான் அப்படியே பூரிச்சி போயிருக்கேன்..."
"ஏன் இருக்காது? நீங்க தான் என்னை ரொரும்ப காதலிக்கிறீங்களே...!" என்றாள் கிண்டலான முகபாவத்துடன்.
அவளது தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டு,
"ரொம்ம்ம்ம்ப..." என்று அவளை உச்சி முகர்ந்தான்.
"என்னை படிக்க விடுறீங்களா?"
"பாருடா... நெஜமாவா?"
"ஆமாம்..."
"உன்னோட கடமை உணர்ச்சியை பார்த்து, எனக்கு அப்படியே உடம்பெல்லாம் புல்லரிக்கிது..." என்றான் தன் கைகளை அவளிடம் காட்டியபடி.
அவன் கையில் பொய்க் கோபத்துடன் ஒரு அடி போட்டாள் ஹரிணி.
"நல்ல பொண்ணு... அப்படியே படிச்சிகிட்டு இரு" என்று மீண்டும் அவள் தலையில் முத்தமிட்டான் பல்லைக் கடித்துக் கொண்டு.
தனது உடைகளை எடுக்க அலமாரியை நோக்கி நடந்தான்.
"என்னங்க..."
"என்ன செல்லம்?"
"நாளைக்கு..."
"உன்னோட ஃப்ரண்ட் அனுவுக்கு பர்த்டே. நீ ஏற்கனவே என்கிட்ட சொன்ன"
"நீங்களும் என் கூட பார்ட்டிக்கு வரிங்களா?"
"இது உன் ஃப்ரண்டோட பார்ட்டி. உன் ஃப்ரெண்ட்ஸோட என்ஜாய் பண்ணு"
"நீங்க என் கூட இருந்தாலும் நான் என்ஜாய் பண்ணுவேன்"
"ஆனா உன்னோட ஃபிரண்ட்ஸ் சங்கடப் படுவாங்க"
"என்னை பிக்கப் பண்ண கூட வர மாட்டீங்களா?"
"ட்ரை பண்றேன்"
"பார்ட்டி நடக்கப் போறது அனுவோட வீட்டுல இல்ல"
"ஓஹோ "
"இது எங்களுக்கு ஃபைனல் இயர். அதனால அவ எங்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கிறா"
"தட்ஸ் கிரேட்"
"ஹோட்டல் தி பர்ப்பிள் ஆர்கிட்ல"
"சரி"
"நீங்களும் என் கூட வாங்களேன்"
"நம்ம கம்பெனியோட பார்ட்டிக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்"
முகத்தை சுளுக்கென்று வைத்துக்கொண்டாள் ஹரிணி.
"ஏன் அம்மா இன்னும் காபி அனுப்பாம இருக்காங்க?"
"இருங்க நான் போய் பார்க்கிறேன்" அங்கிருந்து சென்றாள் ஹரிணி.
தனது கைபேசியை எடுத்து சீனிக்கு ஃபோன் செய்தான் சித்தார்த். அந்த அழைப்பை உடனே ஏற்றான் சீனி.
"சொல்லுங்க சார் "
"நாளைக்கு என்னோட எல்லா ஷெட்யூலையும் கேன்சல் பண்ணுங்க"
"கேன்சலா...?"
"எவ்வளவு முக்கியமானதா இருந்தாலும் பரவாயில்ல"
"ஓகே சார்"
"நான் சொல்றத கவனமா கேளுங்க"
"சொல்லுங்க சார்"
"நாளைக்கு ஈவினிங், ஹோட்டல் தி பர்ப்பிள் ஆர்கிட்ல ஒரு பர்த்டே பார்ட்டி நடக்குது"
"சரிங்க சார்"
சீனி செய்யவேண்டியதை விளக்கிக் கூறினான் சித்தார்த். அவன் கூறியதை எல்லாம் குறித்துக் கொண்டான் சீனி.
"சரிங்க சார்"
அழைப்பை துண்டித்தான் சித்தார்த். அதேநேரம் காபியுடன் உள்ளே நுழைந்தாள் ஹரிணி.
"இன்னும் நீங்க ப்ரெஷ்-இன்-அப் ஆகலையா?"
"உன்னை பார்த்த உடனேயே நான் ப்ரெஷ் ஆயிட்டேனே..."
முகத்தில் எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் காபியைக் கொடுத்தாள் ஹரிணி.
"யாரோ அப்செட்டா இருக்கிற மாதிரி தெரியுது?" என்றான் அவளிடமிருந்து காபியை பெற்றுக்கொண்டு.
"போங்க, உங்களுக்கு எல்லாம் தெரியும். ஆனாலும், ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி நடிப்பீங்க"
"அப்படியா? நான் பார்க்க அப்பாவி மாதிரியா இருக்கேன்?"
"அப்படிப்பட்ட எண்ணத்தில் ஒன்னும் நீங்க இருக்க வேண்டாம்... பச்சைக்குழந்தை கூட நீங்க ஒரு அப்பாவின்னு சொன்னா ஒத்துக்காது"
"எதுக்கு இப்போ என் மேல பாயுற?"
என்ன கூறுவதென்று தெரியாமல் விழித்தாள் ஹரிணி.
"உன்னை எது டிஸ்டர்ப் பண்ணுது? என் மனசுல இருக்கிற ஆசைகளைப் பத்தி நான் ஓப்பனா சொன்னதைக் கேட்டு நீ பயந்துட்டியா?"
அடுத்த நொடி அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் ஹரிணி. ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல் நின்றான் சித்தார்த்.
"என்ன ஆச்சு ஹரிணி?"
"எனக்கு தெரியல"
"அப்படின்னா?"
"என்னோட மூடு நல்லா இல்ல"
"ஏன்?"
"அதான், தெரியலன்னு சொன்னேனே..."
"இப்போ, நீ தான் என்னை டென்ஷன் பண்ற"
"ஏன்னே தெரியல... ஷிவானி சாகறதுக்கு முன்னாடி கூட எனக்கு இப்படி தான் இருந்தது. அதனால தான் எனக்கு பயமாயிருக்கு"
உள்ளுணர்வு கூறும் வார்த்தைகளை எல்லாம் பெரிதாய் நம்ப கூடியவன் அல்ல சித்தார்த் என்றாலும், இப்பொழுது ஹரிணியை சமாதானப்படுத்துவது முக்கியம் என்பதை அவன் உணர்ந்தான்.
"இங்க பாரு ஹரிணி, இதுக்கு முன்னாடி உனக்கு அப்படி எல்லாம் தோணும் போது, உன் கூட சித்தார்த் இல்ல... ஆனா இப்போ இருக்கான். புரிஞ்சிதா?"
"ஆனா, நீங்க தான் என் கூட பார்ட்டிக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டீங்களே..."
"நான் உன் பக்கத்துல இல்ல அப்படிங்கிறதுகாக, நான் உன் கூட இல்லன்னு அர்த்தம் இல்ல. நீ எங்க போனாலும், என்னோட நிழல், உன்னை தொடர்ந்துக்கிட்டு தான் இருக்கும்."
"உங்களை கட்டிப் பிடிச்சுக்கணும்னு தோணுது"
"நீ என்னை நினைச்சு பயந்து போயிருக்கேன்னு நெனச்சேன்" என்றான் லேசாய் தலையை சாய்த்து.
"ஹரிணியாவது சித்தார்த்தை பார்த்து பயப்படுறதாவது...! உண்மையை சொல்லனும்னா நான் ரொம்ப க்யூரியஸ்ஸா இருக்கேன்"
அதை கேட்டு, *அட போங்கடா* என்றானது சித்தார்த்துக்கு.
"என்னங்க..."
"என்னங்க?" என்றான் மெல்ல கண் இமைத்து.
"நான் உங்க கூட இருக்கணும்"
"நீ என் கூட தானே இருக்க"
"உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னே எனக்கு தெரியல" என்றாள் அலுப்புடன்.
"எனக்கு புரிஞ்சுருச்சு... நான் குளிக்க போறேன்"
நிறைய நேரம் எடுத்துக் கொண்டு, நிதானமாய் குளித்தான் சித்தார்த். தன்னை சுதாகரித்துக்கொள்ள ஹரிணிக்கு சிறிது நேரம் தேவை அல்லவா? ஹரிணிக்கு வேண்டுமானால் நடக்க போவது என்னவென்பது புரியாமல் இருக்கலாம். ஆனால், சித்தார்த் ஓரளவுக்கு அதை யூகித்து தான் வைத்திருந்தான். அதை பற்றி அவன் கவலை படவில்லை என்று கூறிவிட முடியாது. என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து தான் வைத்திருந்தான்.
ஹரிணி சகஜமாகி விட்டிருப்பாள் என்று எண்ணி இருந்தான் சித்தார்த். ஆனால் இல்லை. அவன் குளியலறையிலிருந்து வெளியே வந்தது தான் தாமதம், திபுதிபுவென அவனை நோக்கி ஓடிச் சென்று அவன் முன் நின்றாள். அவன் எப்பொழுது வெளியே வருவான் என்று அவள் காத்திருக்கிறாள் போலிருக்கிறது. இந்த முறை சித்தார்த்தே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
"என்ன பிரச்சனை ஹரிணி? எதுவாக இருந்தாலும் என்கிட்ட தைரியமா சொல்லு"
"என்னை நம்புங்க. நிச்சயமா எனக்கு தெரியல"
"இப்போ நான் என்ன செய்யணும்?"
ஒன்றும் கூறாமல் தலைகுனிந்தாள்.
அவளது முகவாய்க்கட்டை உயர்த்தி,
"பதில் சொல்லு" என்றான்.
மீண்டும் அவனை இறுக்கமாய் அணைத்து அவனுக்கு செயலால் பதில் கூறினாள் ஹரிணி.
"அப்படின்னா, நான் உன்னை மிரட்டினதெல்லாம் வீணா போச்சா?" என்றான் இரகசியமாக.
"மொத்தமா வீணா போச்சி... நீங்க என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க? அப்படி எல்லாம் பேசினா என்னை உங்ககிட்ட இருந்து தூரமா நிறுத்திட முடியும்னு நினைக்கிறீங்களா?"
"உன்னை தூரமாக வைக்க நான் எப்போதும் நினைச்சதில்ல"
"ம்ம்ம்ம்"
"நம்மால ரொம்ப நாள் தள்ளி இருக்க முடியாதுன்னு நினைக்கிறேன்"
"அம்மா சொன்னது உண்மை தான். நீங்க ஒரு போரான ஆள்"
"ஓ... "
"பின்ன என்ன? இவ்வளவு அழகான பொண்டாட்டிய பக்கத்துல வச்சிக்கிட்டு எவனாவது தள்ளி இருப்பானா?"
"இவ்வளவு அம்சமான புருஷனை வச்சுக்கிட்டு, நீயே தள்ளி இருக்கும் போது, என்னால மட்டும் இருக்க முடியாதா?"
"அப்படியா...? உங்களுக்கு தைரியம் இருந்தா, வந்து என் கூட செஸ் விளையாடுங்க" என்று சவால் விட்டாள் ஹரிணி.
கைகளைக் கட்டிக் கொண்டு புருவத்தை உயர்த்தி சிரித்தான் சித்தார்த்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top