33 சகஜ நிலை
33 சகஜ நிலை
ரோஹிதிடமிருந்து வந்த அழைப்பை ஏற்றாள் ஹரிணி.
"எப்படி இருக்க ஹரிணி?"
அவன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல்,
"எதுக்காக எனக்கு கால் பண்ண?"
"காரணம் இல்லாம நான் உனக்கு கால் பண்ண கூடாதா?"
"எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்கிற விஷயத்தை நீ மறக்கலன்னு நினைக்கிறேன்."
"உனக்கு கல்யாணம் ஆனா என்ன? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?"
"சம்பந்தம் இருக்கு... நிச்சயமா சம்பந்தம் இருக்கு..."
"உன் புருஷன் உன்னை சந்தேகப்படுறாரா?"
"என் புருஷன் கூட நான் டைம் ஸ்பென்ட் பண்ணும் போது நீ என்னை இப்படி டிஸ்டர்ப் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல"
"நான் உன்னோட ஃப்ரண்ட் ஹரிணி..."
"அப்படின்னா ஃபிரண்ட் மாதிரி நடந்துக்கோ. நீ உன்னோட லிமிட்டை க்ராஸ் பண்ற..."
"நான் என்ன செஞ்சேன்? ஃபிரண்டுக்கு ஃபோன் செய்யுறது கூடவா தப்பு?"
"கல்யாணம் ஆன ஃப்ரெண்டுக்கு கண்ட நேரத்துல ஃபோன் பண்றது தப்பு"
"நீ ரொம்ப மாறிட்ட ஹரிணி. நீ என்னை ஹர்ட் பண்றேன்னு உனக்கு புரியலையா?"
"உன்னை யாரு எனக்கு கால் பண்ண சொன்னது...? யாரு ஹர்ட் ஆக சொன்னது?"
"நீ இன்னைக்கு காலேஜிக்கு வந்தேன்னு கேள்விப்பட்டேன். எனக்கு தெரிஞ்சிருந்தா, நான் உன்னை காலேஜிலேயே வந்து பார்த்திருப்பேன்"
"நீ என்னை பார்க்க வர வேண்டிய அவசியமில்ல. உன்னை மீட் பண்ணவும் நான் விரும்பல. என்கிட்ட இருந்து தள்ளி இரு..."
"எதுக்காக ஹரிணி நீ என் மேல இவ்வளவு கோவமா இருக்க?"
"தூங்குறவங்களை எழுப்பிடலாம். ஆனா தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை நிச்சயம் எழுப்ப முடியாது"
அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் அழைப்பை துண்டித்தாள் ஹரிணி. ஆனால் அடுத்த நொடியே, ரோஹித் இடமிருந்து அவளுக்கு மீண்டும் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை துண்டித்து, அவனது எண்ணை *ப்ளாக்* செய்தாள் ஹரிணி.
ரோஹித் இவ்வளவு நாகரீகம் அற்றவனாக இருப்பான் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி பைத்தியக்காரனைப் போல் நடந்து கொள்கிறான்? அவளுக்கு புரியவில்லை.
அவளுடைய எண்ணச் சங்கிலி அறுபட்டது, குளியலறையிலிருந்து சித்தார்த் வெளியே வந்ததைப் பார்த்து. ரோஹித்தின் கைப்பேசி அழைப்பை பற்றி அவன் எதுவுமே கேட்கவில்லை.
"வாங்க, சாப்பிட போலாம்" என்றாள் ஹரிணி.
"நீ போ. நான் அஞ்சு நிமிஷத்துல வரேன்..."
அவன் இறுக்கமாய் இருப்பது போல் உணரவில்லை ஹரிணி. அவன், சாதாரணமாக இருப்பதாய் கட்டிக் கொள்ள முயன்றான்... குறைந்தபட்சம் ஹரிணியிடமாவது... அவள் சரி என்று தலையசைத்துவிட்டு கீழ்தளம் சென்றாள்.
கட்டிலின் மீது அமர்ந்தான் சித்தார்த். ஏனென்று தெரியவில்லை, அவனுக்கு ரோஹித்தை சுத்தமாய் பிடிக்கவில்லை. அவனுடைய அணுகுமுறை முற்றிலும் தவறாய் இருக்கிறது. அவனுக்கும் ஹரிணிக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுத்த வேண்டுமென்று, ரோஹித் வேண்டுமென்றே இதையெல்லாம் செய்வது போல் தோன்றியது அவனுக்கு. சித்தார்த் கோபப்பட்டால், ரோஹித் வெற்றி பெற்றது போல் ஆகும். அதற்கு சித்தார்த் இடம் கொடுக்கக் கூடாது. ஹரிணியும் ரோஹித் போன்ற முட்டாளை வளர்த்து விடும் பெண் அல்ல. இது கோபப்படும் விஷயமல்ல. புத்திசாலித்தனமாக கையாள வேண்டிய விஷயம். அப்படி அவன் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டுமென்றால், அவனுடைய கோபம், ஹரிணியை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ரோஹித்தின் செயலுக்கு ஹரிணி காரணமாக முடியாது. அதற்காக அவளை காயப்படுத்துவது நியாயமற்ற ஒன்று. இந்த விஷயத்தில் சித்தார்த் அவசரப்பட்டு விடக்கூடாது. ஏனென்றால், ரோஹித்தின் கைபேசி அழைப்பை ஹரிணியும் கூட விரும்பவில்லை என்பது சித்தார்த்க்கு நன்றாகவே புரிந்திருந்தது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் சித்தார்த்.
இதற்கிடையில், சமையலறையில்,
ஹரிணியின் சந்தோஷமான மனநிலை, ரோஹித்திடம் இருந்து வந்த அழைப்பால் முற்றிலும் மாறி இருந்தது. எதற்காக ரோஹித்திடம் நட்பு கொண்டோம் என்று வெறுப்பாக இருந்தது அவளுக்கு. சமையலறையில் தேவயானியை பார்த்தவுடன், இழந்த அவளது புத்துணர்ச்சி திரும்ப கிடைத்தது. ஓடி சென்று பின்னால் இருந்தபடி அவரை அணைத்துக் கொண்டாள்.
"யாரோ ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது..." என்றார் தேவயானி.
"யாரை சொல்றிங்க மா? டூத் பிரெஷ் பொண்ணையா?"
அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் அவளை நோக்கி திரும்பினார் தேவயானி. உதட்டை கடித்துக் கொண்டு தன் புருவத்தை உயர்த்தினாள் ஹரிணி. நிம்மதி பெருமூச்சு விட்டார் தேவயானி.
"சித்து உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டானா?"
"எல்லாத்தையும்..."
"அப்பாடா... ஒரு வழியா, இப்பவாவது அவன் சொன்னானே... உன்கிட்ட எல்லாத்தையும் அவன் எப்ப சொல்ல போறான்னு நான் எவ்வளவு ஆசையா காத்திருந்தேன் தெரியுமா?"
"அது நான் தான், ஷிவானி இல்லைன்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது மா?" என்றாள் ஆர்வமாக. ஏனென்றால் அதைப் பற்றி சித்தார்த்துக்கே தெரிந்திருக்கவில்லை அல்லவா?
"உனக்கு ஞாபகம் இருக்கா, ஷிவானி உங்க வீட்ல எப்பவுமே செடிகளுக்கு தண்ணி ஊத்தினது இல்லைன்னு ஒரு நாள் நீ என்கிட்ட சொன்ன" என்றார் குதுகலமாக.
ஆமாம் என்று ஹரிணியும் குதுகலமாய் தலையசைத்தாள்.
"அன்னைக்கு தான் நான் புரிஞ்சுகிட்டேன். சித்து விரும்பினது ஷிவானியை இல்ல, உன்னைத் தான்னு"
"அதனால தான், உங்களுக்கு அன்னைக்கு தலைசுத்தல் ஏற்பட்டுச்சா?"
"பின்ன என்ன? என்னோட சிடுமூஞ்சி பிள்ளை எந்த அளவுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் பட்டான்னு எங்களுக்கு தானே தெரியும்?"
"அவர் என்ன அவ்வளவு சிடுமூஞ்சியா?"
"உன்னோட முசுடு மாமாவைப் பத்தி உனக்கு தெரியாத மாதிரி கேக்குற..." என்று கூறியவுடன் இருவரும் கலகலவென சிரித்தார்கள்.
அப்பொழுது அவர்கள்,
"என்ன்னனனது...?" என்ற குரல் கேட்டு திரும்ப, அங்கு சித்தார்த் அவர்களை முறைத்தபடி நின்று கொண்டிருந்தான்.
"நீங்களும் என்னை முசுடு மாமான்னு சொல்றீங்களா?" தேவயானியிடம் சண்டைக்கு வந்தான்.
"சேச்சே... நீ ஹரிணிக்கு மட்டும் தான் முசுடு மாமா... தேடி கண்டுபிடிச்சு எவ்வளவு பொருத்தமா உனக்கு அவ பேரு வச்சிருக்கா..."
"நீங்க என்னோட அம்மா, நீங்க எனக்கு தான் சப்போர்ட் பண்ணனும்..."
"எனக்கு புத்துணர்ச்சியா இருக்கிற பக்கம் இருக்க தான் பிடிக்கும்... உன் கூட இருந்தா நான் எங்க புத்துணர்ச்சியா இருக்கிறது? நீ சரியான போர்..."
உதடு கடித்து சிரித்தாள் ஹரிணி.
"நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்ல மா..."
அப்பொழுது அவர்கள், 'என்ன நல்லா இல்ல?' என்ற சுவாமிநாதன் குரலை கேட்டார்கள்.
அவரை நோக்கி விரைந்து சென்ற தேவயானி,
"ஏங்க, ஹரிணிக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சு" என்றார் சந்தோஷமாக.
"நெஜமாவா? எப்படி?" என்றார் ஆவலாக.
"நான் தான் அவகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்"
"அவனை சொல்ல வைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்" என்று அலுத்துக் கொண்டார் தேவயானி.
"அம்மா, சொல்றது ரொம்ப ஈஸி... செய்றவனுக்கு தான் கஷ்டம் தெரியும்"
"அதுக்காக இவ்வளவு நாளா எடுத்துக்குவாங்க?"
"சரியான நேரம் பார்த்து சொல்ல வேண்டாமா?"
"சரியான நேரமா? சந்தர்ப்பத்தை நம்ம தான் ஏற்படுத்திக்கணும். இதுவே நானா இருந்திருந்தா, முதல் நாளே எல்லாத்தையும் சொல்லி இருப்பேன்"
ஹரிணியின் கையை பிடித்து, உணவு மேசையை நோக்கி நடக்கத் தொடங்கினார் சுவாமிநாதன். மிகவும் தீவிரமாய் விவாதம் செய்து கொண்டிருந்த அம்மாவையும் மகனையும் திரும்பி திரும்பிப் பார்த்தபடி அவருடன் நடந்தாள் ஹரிணி.
"எனக்கு ரொம்ப பசிக்குது... அவங்க பிரச்சனையை முடிச்சுக்கிட்டு எப்ப வராங்களோ வரட்டும்... நம்ம வேலையை பார்ப்போம்"
சிரித்தபடி அவருக்கு உணவு பரிமாறத் தொடங்கினாள் ஹரிணி.
தங்களது சண்டையை நிறுத்திவிட்டு சுற்றுமுற்றும் பார்த்த அவர்கள், அங்கு சுவாமிநாதனும் ஹரிணியும் இல்லாததை கண்டு, குழப்பம் அடைந்தார்கள். அவர்கள் இருவரும் சமையலறையிலிருந்து வெளியே எட்டிப்பார்க்க, சுவாமிநாதனுடன் ஹரிணி சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருவரும் வெடித்து சிரித்தார்கள். அவர்களும் வந்து, அவர்களுடன் சேர்ந்து உணவருந்த துவங்கினார்கள்.
"ஹரி, உன்னைப் பத்தி சித்து என்ன சொன்னான்னு உனக்கு தெரியுமா?" என்றார் தேவயானி.
தெரியாது என்று ஹரிணி தலையசைக்க, *போச்சு போ* என்பது போல சித்தார்த்தும் தலையசைத்தான்.
"அவ... எவ்வளவு அழகா இருக்கா தெரியுமா மா...! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க. இதுக்கு மேல என்னால காத்திருக்க முடியாது..." என்று பல வித முகபாவத்துடன் கூறிய தேவயானியை நம்ப முடியாமல் சந்தேகமாய் பார்த்தாள் ஹரிணி, சித்தார்த்தாவது, இப்படியெல்லாம் பேசுவதாவது, என்பது போல.
திருதிருவென விழித்தான் சித்தார்த். அவன் எப்பொழுது அப்படி எல்லாம் கூறினான்? அவன் விழிப்பதைப் பார்த்து சிரித்தார் சுவாமிநாதன்.
"நீ அப்படியெல்லாம் சொல்லலன்னு சொல்ல போறியா சித்து?" என்றார் சிரித்தபடி.
இல்லை என்று எப்படி அவனால் கூறிவிட முடியும்? அவன் என்ன கூற போகிறான் என்று ஹரிணி அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாளே...!
"இல்லையா சித்து?" என்றார் தேவயானி.
"இல்ல... ஐ மீன்... ஆமா..." தடுமாறினான் சித்தார்த்.
அவன் தடுமாற்றத்தைப் பார்த்து சாமிநாதனும், தேவயானியும் சிரிக்க,
"போதும் விளையாட்டை நிறுத்துங்கம்மா... பாவம், அவரும் எவ்வளவு தான் சமாளிப்பாரு? எனக்கு தெரியாதா அவரைப் பத்தி? அவராவது இப்படியெல்லாம் பேசுறதாவது? வாய்ப்பே இல்ல" என்ற அவளை பார்த்து சிரித்தான் சித்தார்த்.
அவன் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டதைப் பார்த்து நிம்மதி அடைந்தாள் ஹரிணி.
சிறிது நேரத்திற்கு பிறகு, அறைக்குத் திரும்பினார்கள் சித்தார்த்தும் ஹரிணியும்.
"நீங்க நார்மல் ஆயிட்டீங்க இல்ல?" என்றாள் ஹரிணி.
"எனக்கு என்ன ஆச்சு?" என்றான் சித்தார்த்.
"நீங்க அப்செட்டா இருந்தீங்களே...?"
"நானா? எப்போ?"
"ரோஹித் அந்த நேரத்துல கால் பண்ண கூடாது தான்..."
"அவனைக் விடு" என்றான் அசட்டையாக.
"நெஜமா தான் சொல்றீங்களா?"
"பின்ன என்ன? அவனை நினைச்சு நம்ம டைமை வேஸ்ட் பண்ண சொல்றியா?"
சிரித்தபடி இல்லை என்று தலை அசைத்தாள்.
"நல்லவேளை. நான் நினைச்சேன்...."
அவளது பேச்சை தடுத்து,
"தேவையில்லாம யோசிக்கிறதை நிறுத்து. உன்னோட குட்டி மூளையை நிம்மதியா தூங்க விடு."
கட்டிலில் படுத்தான் சித்தார்த். அவனது நெஞ்சில் தலை சாய்த்தாள் ஹரிணி.
"நான் இப்போ என்ன யோசிக்கிறேன் சொல்லுங்க..."
"என்ன?"
"சிவாவை நெனச்சு பரிதாபப்படுறேன். உங்களை புருஷனா அடைய அவளுக்கு கொடுத்து வைக்கல..." என்றாள் தன் தலையை உயர்த்தி.
"உன்னை பொண்டாட்டியா அடைய எனக்கு கொடுத்து வச்சிருக்கு..."
"நான் அப்படி நினைக்கல..."
"ஏன்?"
"நான் குரங்கு மாதிரி... தெரியுமா?"
"இவ்வளவு அழகான குரங்கை நான் பார்த்ததே இல்ல...!"
கலகலவென்று சிரித்தான் சித்தார்த்.
"இப்போ குரங்கு என்ன யோசிக்குது?"
"புருஷனுக்கு முத்தம் கொடுக்கலாமான்னு யோசிக்குது"
"அப்படின்னா, *எதை பத்தியும் யோசிக்க கூடாதுங்குற* ரூல்சை குரங்கு மறந்துடுச்சா?"
"குரங்குக்கு ஏதாவது வேணும்னா அது எதையும் யோசிக்காது..."
"அந்த குரங்கை பிடிச்சி கட்டி போட்டுட்டு தூங்கு"
அவள் தலையை தன் நெஞ்சில் அழுத்தி மீண்டும் படுக்க வைத்து, உச்சி முகர்ந்தான். அவனது அணைப்பில் நிம்மதியாய் உறங்கி போனாள் ஹரிணி. ஆனால், சித்தார்த்துக்கு வெகு நேரம் தூக்கமே வரவில்லை. சந்தேகமில்லாமல் அவன் ரோஹித்தை பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு என்ன வேண்டும்? அவன் மனதில் இருப்பது என்ன? அவன் செய்ய நினைப்பது என்ன? என்பது தான் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top