14 திருமண வேலைகள்

14 திருமண வேலைகள்

ஹரிணியின் திருமண உடைகள் இரண்டு நாட்களில் கிடைத்து விட்டது அவளுக்கு. தேவா டெக்ஸ்டைல்ஸ்ஸின் பணியாளர் ஒருவர், அவளது இல்லத்திற்கே வந்து, அவற்றை கொடுத்துவிட்டுச் சென்றார். முதல் நாள் அவள் அணியப் போகும் லெஹங்காவில் இருந்த கலைநயம்மிக்க வேலைப்பாடு, அவள் உள்ளத்தை கவர்ந்தது. அதில் இருந்த முத்து மணி வேலைபாடு, செர்ரி
சிவப்பு நிறத்திற்கு மெருகூட்டியது. அவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அந்த உடையை தைத்துக் கொடுத்த கிரணை கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. 

"என்ன விஷயம்? என் பொண்ணு ரொம்ப நாளைக்கப்புறம் சந்தோஷமா இருக்கா...?" என்றார் அலமேலு.

"அம்மா, இந்த ட்ரெஸ்ஸை பாருங்களேன்... எவ்வளவு அழகா இருக்கு...!" அந்த உடையை அவரிடம் காட்டினாள் ஹரிணி.

அலமேலுவிற்கும் அந்த உடை பார்த்தவுடன் பிடித்துவிட்டது.

"இந்த ட்ரெஸ்ல நீ ரொம்ப அழகா இருப்ப ப்ரியா...!"

"இந்த ட்ரெஸ்க்காக கிரணுக்கு நான் தேங்க்ஸ் சொல்லணும்" தன் கைபேசியை எடுத்தாள் ஹரிணி.

"ஃபோன் பண்ணி தேங்க்ஸ் சொன்னா, அது ரொம்ப ஃபார்மலா இருக்கும். நேர்ல போய் பார்த்துப் பேசிட்டு வாயேன்..." என்றார் அலமேலு.

அவர் கூறுவது சரி தான் என்பது போல், யோசனையுடன் தலையசைத்தாள் ஹரிணி.

"நீங்க சொல்றதும் சரி தான் மா. நான் நேர்ல போய் பாத்துட்டு வரேன்" தேவா டெக்ஸ்டைல்ஸ் அலுவலகம் தயாராவதற்கு தன் அறைக்குச் சென்றாள் ஹரிணி.

நிம்மதியாக இருந்தது அலமேலுவுக்கு. ஹரிணியும் சித்தார்த்தும் அடிக்கடி சந்தித்துக் கொண்டால், ஹரிணியின் கலகலப்பான மனோபாவம், சித்தார்த்தின் மனநிலையை மாற்றும் என்று நினைத்தார் அவர். அவர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை குறைக்க அது வாய்ப்பாக அமையும் அல்லவா?

சில நிமிடங்களில் தயாராகி வந்தாள் ஹரிணி. அவள் தன் அறையை விட்டு வெளியே வந்த போது, வரவேற்பறையில் அமர்ந்து அலமேலுவுடன் பேசிக் கொண்டிருந்தான் ரோஹித். சித்தார்த் கூறியது போல், ஹரிணியை சந்திக்க நேரிலேயே வந்து விட்டான் அவன்.  அவர்களுக்கு இடையில் நடந்த பிரச்சனைக்கு பிறகு, அவனை அவள் நேரில் சந்திப்பது இது தான் முதல் முறை. அவனை பார்த்தவுடன் தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள் ஹரிணி.

"ஹாய் ஹரிணி..." என்றான் ரோஹித் ஒன்றுமே நடக்காதது போல.

சம்பிரதாயமாக தலையசைத்தாள் ஹரிணி.

"காபி சாப்பிடுறியா ரோஹித்?" அலமேலு கேட்டவுடன் சரி என்று தலை அசைத்தான் ரோஹித். அவனுக்கு காபி கொண்டு வர சமையலறைக்குச் சென்றார் அலமேலு.

"நீ நார்மல் ஆயிட்டேன்னு நினைக்கிறேன்..." என்று பேச்சை தொடங்கினான் ரோஹித்.

"இல்ல..." என்றாள் ஹரிணி.

"ஐ அம் சாரி ஹரிணி..."

அவனை மேலே பேச விடாமல்,

"அதைப் பத்தி பேச நான் விரும்பல" என்றாள் வெடுக்கென்று.

"நான் சொல்றதை கேளு, ஹரிணி"

"ஒரு ஃபிரண்டா உன்னை என்னால எப்பவுமே மன்னிக்க முடியாது. சித்தார்த் சொன்னாருங்குற ஒரே காரணத்துக்காகத் தான் உன்னுடைய காலை நான் அட்டென்ட் பண்ணேன்"

அந்த இடத்தில், சித்தார்த்தை கொண்டு வந்து முன் நிறுத்தினாள் ஹரிணி. ஏனென்றால், அவள் எல்லாவற்றையும் சித்தார்த்திடம் கூறி விடுகிறாள் என்று ரோஹித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நினைத்தாள் அவள்.

"ஐ அம் சாரி ஹரிணி..."

"உன் சாரியை கொண்டு போய் குப்பைல போடு" என்று அனலைக் கக்கினாள்.

அப்போது, ரோஹித்துக்கு காபி கொண்டு வந்தார்   அலமேலு.

"நான் கிளம்பறேன் மா" என்றாள் ஹரிணி.

"நீ எங்க போற?" என்றான் ரோஹித்.

"அவ தேவா டெக்ஸ்டைல்ஸ்க்கு போறா" என்றார் அலமேலு அவனிடம் காபியை கொடுத்தவாறு.

"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு. உன்னை நான் ட்ராப் பண்றேன்" என்றான் ரோஹித் காபியை பருகியபடி.

"வேண்டாம். நானே போய்க்கிறேன்"
 
"ஏன் ஹரிணி? அவன் தான் உன்னை டிராப் பண்றேன்னு சொல்றானே..."

"ஆமாம் ஹரிணி நான் உன்னை ட்ராப் பண்றேன்"

"இல்ல... என்னோடு செயலால நான் யாரையும் சங்கட படுத்த விரும்பல"

அவள் *யாரையும்* என்று குறிப்பிட்டது சித்தார்த்தை தான் என்று புரிந்தது ரோஹித்துக்கு.

"நான் காரில் தான் வந்திருக்கேன்" என்றான் ரோஹித்

"நான் *வண்டியை* பத்தி பேசல" என்றாள் ஹரிணி.

"நான் உன் ஃப்ரண்ட் தானே ஹரிணி..."

அவன் மீது அனல் கக்கும் பார்வையை வீசினாள் ஹரிணி. அவள் பார்வையை பொறுக்கமாட்டாமல் தலைகுனிந்தான் ரோஹித்.

"வரேன் மா" என்று கிளம்பினாள் ஹரிணி. அவளைப் பின்தொடர்ந்தான் ரோஹித்.

"என்னை தப்பா நினைக்காத ஹரிணி"

"என்னை யாரும் தப்பா எடுத்துக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன்"

"நீ பேசுறது சித்தார்த்தை பத்தி தானே?"

"ஆமாம்"

"அவர் உன்னை சந்தேகப்படுறாரா?"

"அவர் என்னை சந்தேகப்படல. அதனால தான், அவர் என்னை சந்தேகப்படுறதுக்கு எந்த சந்தர்ப்பத்தையும் கொடுக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்"

"ஆனா, நம்ம முன்ன மாதிரி பேசினா என்ன தப்பு?"

"தப்பு தான். ஏன்னா, நீ முன்ன மாதிரி இல்ல"

"ஹரிணி ப்ளீஸ்... "

தன் கையை காட்டி அவனை தடுத்து நிறுத்தினாள் ஹரிணி.

"என்னை கன்வின்ஸ் பண்றதுக்காக உன்னுடைய நேரத்தை தேவையில்லாம வேஸ்ட் பண்ணாத. அது உன்னால முடியாது. நான் உன் மேல வச்சிருந்த நம்பிக்கையை நீ உடைச்சிட்ட. அதை  பழையபடி மாத்த முடியாது..."

அங்கிருந்து நடந்தாள் ஹரிணி, அவனுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் பொடிப் பொடியாக்கிவிட்டு.

தேவா டெக்ஸ்டைல்ஸ்

ஹரிணி, தேவா டெக்ஸ்டைல்ஸ்ஸில் நுழைந்த அதே நேரம், சித்தார்த்தும் உள்ளே நுழைந்தான். ஹரிணியை அங்கு எதிர்பார்க்காத அவன், அதிர்ச்சி அடைந்தான்... இன்ப அதிர்ச்சி...!

"ஹரிணி...?" என்றான் லேசான புன்னகையோடு.

"ஹாய்... "

"நீ எங்க இங்க?"

"கிரணை பாத்துட்டு போலாம்னு வந்தேன்"

"ஏன், அந்த டிசைன் உனக்கு பிடிக்கலையா? இல்ல டிரஸ்ல ஏதாவது ஆல்டர் பண்ண வேண்டி இருக்கா?"

"பிடிக்கலையாவாவது...! சான்சே இல்ல... செம்ம்ம்ம சூப்பரா இருக்கு. இது இவ்வளவு அழகா வரும்ன்னு நான் நினைச்சு கூட பாக்கல"

லேசாய் புன்னகைத்தான் சித்தார்த்.

"கவலைப்படாதீங்க... நான் அவங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நிறைய நேரம் எடுத்துக்காம, சீக்கிரமே பார்த்து பேசிட்டு போயிடுறேன்" என்றாள் ஹரிணி.

"அவங்க இன்னைக்கு ஆஃபீஸுக்கு வரல"

"அச்சச்சோ, அவங்க வரலையா? என்னைக்கு வருவாங்க?"

தன் தோள்களை குலுக்கினான் சித்தார்த்.

அப்போது அங்கு வந்தான் சீனிவாசன்.

"ஹலோ மேடம்... "

"ஹாய்..." என்றாள் சோகமாக.

 சித்தார்த்தின் பக்கம் திரும்பி,

"அப்போ நான் கிளம்புறேன்..." என்றாள்.

"என்ன ஆச்சு மேடம்?" என்றான் சீனி.

"நான் கிரணை பார்க்க வந்தேன்"

"அவங்க லீவுல இருக்காங்க மேடம். நீங்க அன்னைக்கு வந்துட்டு போனீங்க இல்லையா, அன்னைக்கு சாயங்காலம், அவங்க ஹஸ்பெண்ட் பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரு. அன்னையிலிருந்து அவங்க ஆஃபீஸுக்கு வரவே இல்ல. மூணு நாளா லீவுல தான் இருக்காங்க"

"அடக்கடவுளே... நான் அவங்களை பார்த்து ஒரு *ஹக்கை* போடலாம்னு வந்தேன்." என்று அவள் சோகமாய் கூற, உள்ளூர புன்னகைத்தான் சித்தார்த்.

"ஏன் மேடம்?" என்றான் குழப்பமாக சீனி.

"அவங்க டிசைன் பண்ண டிரஸை பார்த்து நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு அவங்ககிட்ட காட்டத்தான்"

அப்பொழுது தான் அவளுக்கு பொறி தட்டியது. மூன்று நாட்களாக கிரண் விடுப்பில் இருந்தால், அவளுடைய உடைகளை வடிவமைத்தது யார்?

"அது தான் விஷயம்னா, நீங்க உங்க ஹக்கை சார்கிட்ட போடுங்க. அவர் தான் உங்க டிரஸ்சை டிசைன் பண்ணி முடிச்சாரு" சிரித்தபடி அங்கிருந்து சென்றான் சீனி.

சித்தார்த் நின்றிருந்த திசையை நோக்கி அவள் கருவிழிகள் மட்டும் நகர்ந்தது.

"நீங்களா...????"

பதில் கூறாமல், புன்னகையுடன் அங்கிருந்து நடந்தான் சித்தார்த். நகத்தைக் கடித்தபடி நின்றாள் ஹரிணி. தனது அறைக்குள் நுழையும் முன், திரும்பி அவளைப் பார்த்தான் சித்தார்த். அதைப் பார்த்த ஹரிணி, அவனை நோக்கி ஓடினாள். அவனது அனுமதி பெறாமல் அவனது அறைக்குள் நுழைந்தாள்.

"என் டிரஸ்ஸை டிசைன் பண்ணது நீங்க தான்னு எனக்கு தெரியாது. எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா அப்படி சொல்லியிருக்க மாட்டேன்"

தனது நாற்காலியில் அமர்ந்து, கணினியை லாக் இன் செய்தான் அவளுக்கு எந்த பதிலும் கூறாமல். *நீ என்னைக் கட்டிப்பிடித்தால் எனக்கு சந்தோஷம் தான்* என்று அவனுக்கும் அவளிடம் கூறவேண்டும் தான்... ஆனால் அவள் அதை எப்படி எடுத்துக் கொள்வாள்?

"பை தி வே... ரொம்ப அழகா டிசைன் பண்ணியிருக்கிங்க. நீங்க ரொம்ப திறமைசாலின்னு நல்லா தெரியுது"

"அப்படியா?" என்றான் சீரியசாக.

"நான் உங்க கூட சேந்து என்னோட ப்ராஜெக்ட்டை பண்ண போறதை நினைச்சா ரொம்ப எக்சைட்டாடா இருக்கு"

கணினியின் திரையை பார்த்தபடி புன்னகைத்தான்.

"தேங்க் யூ ஸோ மச்"

"யூ ஆர் வெல்கம்"

"நான் கிளம்புறேன்"

"ஒன் மினிட்"

ஏன் என்பது போல அவனை பர்த்தாள் ஹரிணி.

தனது மேஜை டிராயரில் இருந்து ஒரு உரையை எடுத்து அவளிடம் நீட்டினான். அது அவர்களுடைய திருமண பத்திரிகை. அவனுடைய வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்க அதை அவன் பிரத்யேகமாய்  அச்சடித்திருந்தான். அவனிடமிருந்து அதை வாங்கினாள் ஹரிணி. அது அவளுடைய லெஹங்கவை போலவே வடிவமைக்கப்பட்டு இருந்தது. உதடு கடித்து சிரித்தாள் ஹரிணி.

"ஸோ நைஸ்... புதுமையா இருக்கு... ஒரு ஃபேஷன் டிசைனாரோட வெட்டிங் கார்ட் மாதிரியே இருக்கு. நிறைய இன்ஸ்பெயரிங் ஐடியாஸ் வச்சிருக்கீங்க போலிருக்கு...!"

அதற்கும் புன்னகைத்தான் சித்தார்த்.

"இதெல்லாம்,  உங்க மனசுல நீங்க சேத்து வச்சிருந்த ஐடியாஸ்... உங்களுக்கும் சிவாவுக்கும் நடந்த கல்யாணத்துல இதெல்லாம் செய்யணும்னு நீங்க ரொம்ப ஆசையா இருந்திருப்பிங்க இல்ல?"

அவள் யோசனையைக் கேட்டு அவன் முகம் மாறியது.  இந்தப் பெண் சரியாக யோசிக்கவே மாட்டாளா? ஏன் அவனுக்கு மட்டும் எல்லாமே இவ்வளவு கடினமாய் இருக்கிறது?

அந்தப் பத்திரிக்கையை தன் கைப்பையில் வைத்துக் கொண்டாள் ஹரிணி.

"நான் கிளம்பறேன். உங்களுடைய எக்சலெண்ட்டான டிரஸ்ஸுக்கு ரொம்ப தேங்க்ஸ். பை..."

எதுவும் சொல்லாமல் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த், கண்ணை மூடி நாற்காலியில் சாய்ந்தான். அவள் மீது தான் கொண்டிருக்கும் காதலை, அவளிடம் கூறி விடுவது தான் நல்லது என்று தோன்றியது அவனுக்கு. அவன் அதைச் செய்யாத வரை, அவள் நிச்சயம் ஷிவானியின் நினைவில் இருந்து வெளிவரப் போவதில்லை.

......

திருமண சடங்குகள் ஆரம்பமாயின. என்ன தான் திருமணத்தை ஆடம்பரமாக செய்யாமல் எளிமையாக செய்வது என்று முடிவு எடுத்திருந்தாலும், செய்ய வேண்டிய திருமண வேலைகள், இரு வீட்டாரையும் பரபரப்பாய் வைத்திருந்தது. வெங்கடேசன் குடும்பத்தினரால் ஷிவானியை நினைக்காமல் இருக்கவே முடியவில்லை. அவளுடைய நினைவுகள், அவர்களை விடாமல் துரத்திக்கொண்டு இருந்தது. இருந்தாலும் அவர்கள் யாருமே அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் சித்தார்த் குடும்பத்தின் நிலை, முற்றிலும் தலைகீழாய் இருந்தது. சுவாமிநாதனும், தேவயானியும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சந்தோஷத்தில் திளைத்தார்கள். சித்தார்த்தோ பதட்டமாய் இருந்தான். அவனுக்கு எப்படித் துவங்குவது என்றே புரியவில்லை... அவனுடைய அணுகுமுறையை ஹரிணி எப்படி அணுகப் போகிறாள்? என்ன தான் வெங்கடேசன் அவளுக்கு அறிவுரை கூறி இருந்தாலும், அதை அவள் உடனே செயல்படுத்துவாள் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா? திருமதி சித்தார்த் என்னும் கதாபாத்திரத்தில் தன்னை பொருத்திக் கொள்ள அவளுக்கும் கூட சற்று கால அவகாசம் தேவை. அவள் வேண்டிய நேரத்தை எடுத்துக் கொள்ளட்டும். அவள் என்ன செய்கிறாள், எப்படி அவனிடம் பழகுகிறாள் என்று கவனித்துவிட்டு பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தான் சித்தார்த். அவள் செல்லும் பாதையிலேயே சென்று விட்டால் பிரச்சனை இருக்காது அல்லவா? அவள் விரும்பினால் மட்டும் தான் இந்த உறவு முறையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது சுலபமாய் இருக்கும். அவளுடைய அணுகுமுறையை பார்த்த பிறகு தான், அவள் மீது தான் கொண்டுள்ள காதலை அவனால் வெளிப்படுத்த முடியும். ஏனென்றால் அவசரப்பட்டு அவன் ஏதாவது செய்ய போக, அவள் அவனை தவறாக நினைத்துவிடக் கூடாது.

நீண்ட பெருமுச்சு விட்டான் சித்தார்த். எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top