3.சொல்லாத காதல்💚
"மயூரி நீ இன்னிக்கு அழகா இருக்க ... விடுமுறை நாளில் வீட்டில் இருந்தே அழகாக மாறிவிட்டாயா என்ன...?? " என்று என் முன்னாடி அமர்ந்திருந்த கௌசல்யா பின்னாடி திரும்பி கேட்டாள்.
கௌஸ் என் பேருந்து தோழி ரொம்ப நெருங்கிய தோழின்னு சொல்ல முடியாது, ஆனால் என்னை பற்றி கொஞ்சம் அவளுக்கு நன்றாக தெரியும்.
"கௌஸ் என்ன இன்னிக்கு ஐஸ் ரொம்ப இருக்கு.. என் கிட்ட ஏதும் காரியம் இருக்கா ???" என்று புருவத்தை உயர்திக் கேட்டேன்.
"சஹ்ஹ்ஹம்.... நீ எப்போ தான் என் பெயரை ஒழுங்காக சொல்லுவியோ... எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை ஏண்டி என்ன மாடுன்னு ஆங்கிலத்தில் அழைப்பது போலவே இருக்கு" என்று முன்னாடி திரும்பிக் கொண்டாள்.
"ஹாஹாஹா..அது தான் உண்மை....கௌஸ் கௌஸ்...கெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... இங்க பாரேன்... என்னையை திரும்பி பாரேன்... " வேணும்ன்னு சொல்லி வெறுப்பு ஏத்துனேன், நம பிரண்ட்ஸை சீண்டி பார்க்குறதே தனி சுகம். ஆனால் வேற யாராவுது சீண்டினால் அவ்ளோ தான் உண்டு இல்லன்னு பணிர்வோம்.
"அவள் என் பின்னால் திரும்பி இங்க பாருடி என்னை கெட்ட வார்த்தை பேச வைக்காத... அவ்ளோ தான் சொல்லிபுட்டேன்... உன் பெயரை சுருக்கி கூப்பிட்டா எப்படி இருக்கும்னு தெரியும்ல..." என்று மூஞ்சியை கோனிக் கொண்டு கேட்டாள்.
"ஹுஹீம்ம்....இரு என் டார்லிங் சுஜி வரட்டும் ... சொல்லிதரேன்... " என்று என் என்று இரு கைகளால் என் வாயை போத்திக் கொன்டேன்.
"குரங்கு பே... சொலிக்கோ யார்கிட்ட வேணும்னாலும்.." என்று திரும்பிக் கொண்டாள்.
அடுத்த நிமிடமே என் டார்லிங் சுஜி ஏறினாள். சுஜிதா என்னோட ரொம்ப ரொம்ப நெருங்கிய தோழி என்னை பற்றி முழுவதுமாக தெரியும் அவளுக்கு. என் வகுப்புதான் என் வீட்டுக்கு அடுத்த ஸ்டாப் அவுங்க வீடு. சனி ஞாயிறு என் வீட்டுக்கு வந்திருவாள் இல்லை நான் அங்கே சென்றிருவேன்.எனனோட ரகசியங்கள் பல தெரிஞ்ச பிசாசு குட்டி.
"சுஜி... செல்லம்.... எப்படி இருக்க..? என்று நான் அவளுக்கு ஜன்னல் சீட்டை கொடுத்துட்டு தள்ளி அமர்ந்தேன்.
ஐயோ இவனுங்க லவ்ஸ் தொல்லை தாங்க முடியலையே என்று விக்னேஷ் என்ற விக்கி அருந்த வாலு நடமாடும் பைத்தியம்... என்னையே மோரைக்குறான்... ஹாஹா சும்மா மச்சி கடுப்பாகாத நல்லபடியா சொல்ரேன் இரு... என் உயிர் தோழன் ... அப்புறம் செம்ம பயன் பாக்க பாக்க எல்லா பொண்ணுங்களுக்கு பிடிச்சிரும் இவனை பிடிகாதவுங்களே இல்லை.. படிப்பு மட்டும் கோட்டை கெட்ட பழக்கம் இல்லாத தங்க கட்டி... அது தானே முக்கியம்.
"ஓ... என்னோட லவ் உன்னை விட்டு என்னால ரெண்டு நாள் கூட இருக்க முடியவில்லை "என்று
என்னை கட்டி அணைத்துக் கொண்டாள்.
அடுத்த நிமிடமே கௌஸ் ஹெட் செட்டில் மூழ்கி விட்டாள். விக்கி ஜூனியர்ஸ் கிட்ட மொக்கை போட போய்ட்டான். அப்புறம் நானும் சுஜியும் தான் கடலை வருத்துக் கொண்டிருந்தோம்.
கடலை போடும் இந்நேரம் என் காதல் அலையாக உரு மாறும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.
"ஏதோ மேடம் சரி இல்லன்னு..."
சுஜியின் முகம் சரி இல்லாதத்தை கண்டு சொன்னேன்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லை மச்சி " என்று அப்போது அவள் மழுப்பிச் சொன்னாள்.
அவள் அவளின் போனை எடுத்து ஒரு சமூக வலைதளத்தினுள் சென்று இப்படியும் பசங்க இருக்காங்க பாரேன் ... இவுங்களை எல்லாம் என்ன பண்றது என்று அந்த பதிவை காட்டினாள்.
காணாமல் பேசாமல் இரு இதயங்கள் இணையத்தில் இணையுமா சொல்லாத காதலின் பயணம் தொடரட்டும்.!!!
I introduced all characters...yesh yesh including hero ...😉😉😉
Any doubts just ping me and clarify with me.😅😅
Only constructive criticism are accepted.😎
Do give your valuable comments.✌
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top