2.சொல்லாத காதல்💚
"அப்புறம் சொல்லுடி ஏன் சொல்ல மாட்ட ஏன் அதோட நிறுதிட்டா" என்று பாருமா என்னை நோக்கி பால் எடுத்துக் கொண்டு வந்தாள்.
" சிசி...சீ.. .... சி... அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன் அது உன் தனிப்பட்ட விஷியம் பாருமா "என்று நான் தலையை ஆட்டி கொண்டு நகன்று விட்டேன்.
" நான் உன் பாட்டி டி அட பெருமாளே இவள் எனக்கு பேத்தியானு எனக்கே சந்தேகமா தான் இருக்கு." என்று என் மத்திய உணவு தயிர் சாதத்தை எடுத்து டிபன் பாக்ஸில் வைத்துக் கொண்டு இருந்தாள்.
"பாட்டினு நீயே சொலிக்கிற அப்புறம் சந்தேகமும் நீயே படுற இது ரொம்ப ரொம்ப தப்புமா பாருமா...." என்று நான் தண்ணிர் பாடில்லை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்.
"ஐயோ இப்படி மொக்கை போடுறாளே இவ கிட்ட மாட்ட போற ஜீவன நினைச்சா எனக்கு ரொம்ப பரிதாபமாக இருக்கு" என்று எங்கோ இருக்கும் இல்லை இருந்துக் கொண்டிருக்கும் ஆளை நினைத்து பாருமா வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்.
" அது அவன் கஷ்டம் நீ ஏன் இப்ப வாராத ஒருத்தனுக்கு ஜால்ரா அடிக்குற பாருமா" என்று நான்காவது வருடம் முதல் நாள் என்பதால் காலில் விழுந்து ஆஷி வாங்கினேன்.
"அடுத்த வருஷம் ஜோடுயா ஆசிர்வாதம் வாங்கணும் சரியா " என்று விபூதி பூசி விட்டாள்.
"என்னைய டென்ஷன் ஆகாத ஒழுங்கா ஓடிரு பாருமா " என்று பொய்யாக கோபம் கொன்டேன்.
" நானெல்லாம் உன் வயசுல அவ்ளோ அழகு எனக்கு காதல் தொல்லைகளே நிறையா " என்று கடந்த காலம் நியாபகங்களுக்குள் மீன் போல மிதந்துக் கொண்டிருந்தாள்.
"அய்யடா ... நிப்பாடுங்கள் உங்கள் புராணத்தை நான் கேட்டு கேட்டு புழுச்சு போச்சு" என்று சரியாக கிளம்பி விட்டதை நினைத்து பெருமை பட்டுக் கொன்டேன்.
கல்லூரி பேருந்து வீட்டு வாசலுக்கு பக்கத்திலே வரும்.அதனால் பேருந்து நிலையமும் போக தேவை இல்லை. வெளியில் உள்ள ஊஞ்சலில் உக்காந்துக் கொண்டு மலர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன்.
"போடி ...உனக்கு பொறாமை ஆப் இந்தியா ...." என்று தோட்டத்தில் இருக்கும் பூவை பறித்து கொன்டே இருந்தால் பாருமா.
"அப்ப இன்னும் நீ உன் கதையே முடிக்கவில்லையா சரியான பிளேகல் (play girl) பாருமா நீ" என்று பேருந்து வந்த ஓசையை கேட்டு பெரிய கதவு பக்கத்தில் சென்று நின்றுக்கொண்டேன்.
"ஆமா ஆமா நான் பெரிய பிலேகல்(play girl) குத்துச்சண்டை வீராங்கனை தெரியும்ல " என்று புருவத்தை உயர்திக் கூறினாள்.
"தெரியும் தெரியும் தாத்தாவை கொன்றது நீதானே... ஹாஹா...நீயெல்லாம் பேசியே கொன்றுப்ப இப்பவே இப்படி பேசுற இதுல என் வயசுல சொல்லவே தேவையில்லை" என்று கணத்தில் முத்தம் ஒன்று கொடுத்து விட்டு விடைப் பெற்றேன்.
"ஓவர் ஆஹ் பேசுன்னா ... பேத்தினு கூட பாக்க மாட்டேன் உனக்கும் பாயசம் போற்ற வேண்டித்தான் "என்று பாருமா கோபத்தில் சீண்டினாள்.
"இல்லை பேபி யூ ஆர் ட்மன் கூட்( you are damn cute )" என்று ஐஸ் மழையை பொழிந்து விட்டு பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.
காதலன் இன்றி
காதல்
பேருந்தில் பயணிக்கும்
காதலி
சொல்லாத காதலின்
பயணம் தொடரட்டும்...!!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top