1.சொல்லாத காதல்💚

"மயூரி உனக்கு கொஞ்சமாவது
அறிவு இருக்கா இல்ல இல்லையா உன்னை என்ன செய்ய சொன்ன நீ என்ன செய்துகிட்டு இருக்க?" என்று என் பாட்டி பார்வதி பாக்கு கொட்டையை உடைத்துக் கொண்டு என்னை ஏச்சுவதற்கு காத்து கொண்டு இருந்தார்.

"வரேன் பாட்டி... " என்று நான் கத்த என்னோட மெத்தையில் இருந்து இறங்கி லூசியும் சேர்ந்து கொலைக்க சரியாக இருந்துச்சு.

எனதங்க நான் சொல்றது. எல்லார் பாட்டி மாதிரி எனக்கு என்ன பாசக்கார பாட்டி இல்லைங்க... என்னை அழுகை வைத்து பார்ப்பதும் என்னை வேலை ஏவி பார்ப்பதும் தான் என் கொடுமை கார பாட்டியின் வேலை.

அப்பா அம்மா ரெண்டு பேரும் பெரிய துணிக்கடை வச்சுருக்காங்க. பல ஊர்ல எங்க கடை இருக்கு. பெரிய பிசினஸ் மேன் பொண்ணு தான் ஆனால் பாட்டியின் கொடுமையில் இருக்கேன்.

என் அம்மா மாதிரி நான் இருக்குறது என் பாட்டிக்கு பிடிக்காது. ஆமா கொடுமை படுத்தும் மாமியாரும் கூட . எனக்கு கூட பிறந்தது யாரும் இல்லை இங்க கல்லூரி கோயம்புத்தூர் கிடைச்சது அதனால ஹாஸ்டல் சேர்க்காம இங்க ஒரு தனியா பெரிய வீடு வாங்கி என் பாட்டியோட என்ன இங்க தங்க வச்சுட்டாங்க.இவ்ளோ சோகமா இருக்குல்ல என் நிலைமை சரி நான் என் கதையை நிப்பாடுறான். இல்லாட்டி என் பாட்டி என்ன அடிக்கவும் செய்வாங்க. எனக்கு இது தேவையா😑

"அடியே மயூரி எங்கடி போன ...மணியை பாருடி கல்லூரிக்கு நேரம் ஆச்சு " என்று தன் அலைபேசியில் பாக்கு கொட்டையை புகைப்படம் எடுத்து வாட்ஸப் ஸ்டேட்ஸ்சில் போட்டுக்கொண்டு இருந்தார் பார்வதி.

இவள் தாங்க என் பேத்தி மயூரி , மருத்துவத்துக்கு படிக்குறாள்.இவளை இட்டு தான் இங்க என் தோழர் உறவினர் எல்லாரியும் விட்டு இங்க வந்திருக்கேன்.

சரியான சோம்பேறி கல்லூரிக்கு நேரம் ஆச்சு இன்னும் தூங்குரா எல்லாம் அவளோட பெற்றோர்கள் கொடுக்குற செல்லம். ஒரே பொண்ணுன்னு ரொம்பவே செல்லம் குடுத்து கெடுத்து வளத்துடங்க.

ஆனால் இதெல்லாம் என்கிட்ட செல்லுபடி ஆகாது. பிள்ளைங்களை அடித்து வழக்கனும். இல்லாட்டி நம பேச்சை கேக்காதுங்க.

ஆமா என்னை பற்றி உங்க கிட்ட என்னனு பத்தி வச்சுருக்கா
நம்பாதிங்க எல்லாம் பொய். அவள் தான் என்னை கொடுமை படுத்துறது. அவளோட வேலையைக் கூட ஒழுங்கா பணமாட்டால் என்னைய வம்புக்கு இழுகிறதே ஒரு பொழப்பு மாதிரி செய்யுது கிட்டு இருக்கா கடந்த மூன்று வருடங்களாக.

"ஹாஹா ஆமாங்க என் பாட்டி தான் எனக்கு உசுரு பாருமா வம்புளுக்காட்டி எனக்கு தூக்கமே வராது அப்போது சொன்னதெல்லாம் சும்மா லூலுலக்கி" என்று படியில் இறங்கி கொண்டு வந்தேன்.

"வெள்ளை நிற சுடிதார் அதுக்கு ஏற்றார் போல் வெள்ளை நிறத்தில் கைக்கடிகாரம் காதொட ஒட்டி குட்டியாக கம்மல் ஹ்ம்ம்....
இந்த ட்ரெஸ்ல கொஞ்சும் அழகா தான் இருக்க ...சீக்கிரமா வந்து சாப்பிடு" என்று நான் இறங்குவதை பார்த்துக் கொன்டே கூறினாள் பாருமா.

"என்னை சைட் அடித்துக் கொண்டு இருக்கியா பியூட்டி... ஜொள்ளு வடியூது வாய தொட "என்று சிரித்துக் கொன்டே கூறினேன்.

"நீ எல்லாம் ஒரு ஆளா போயும் போயும் உன்னையே போய் சியிட் அடிபேனா அதுக்கு தனி ஏரியா இருக்கு நீ பண்றது எதுமே சரியா இல்லை சீக்கிரம் வா "என்று அவள் மூக்கு கண்ணாடியை மேலே ஏற்றி விட்டு கூறினாள்.

"என் செல்லல.... கிளியே... கனியே.... கிழட்டு அழகியே... என்ன பாருமா சும்மா இப்படி இருக்க...!!!"என்று நான் கட்டி அணைத்துக் கொண்டு கேட்டேன்.

"எப்படி டி இருக்கேன் நல்லா தான இருக்கேன்...உன்னை மாதிரி லூசு மாதிரியா இருக்கேன்...." என்று மண்டையில் கொட்டு வைத்து பாருமா கேட்டாள்.

"இப்ப எதுக்கு சூடாக இருக்க பாருமா, இந்த வயசூலியும் சும்மா ஹாட் ஆஹ் இருக்கியே" என்று இருக்க கட்டிக்கொண்டு சொன்னேன்.

"அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணி வச்சுரனும் பாட்டி கிட்ட பேசுற மாதிரியா பேசுற" என்று பாருமா போனில் செலஃபி எடுத்தாள்.

"ஹ்ம்ம் மட்டும் சொல்லு நாளைக்கே கல்யாணம் தான்"என்று அங்கு தட்டில் வச்சுருந்த பிரேட் அண்ட் ஓம்ப்ளேட் சாப்பிட்டுக் கொன்டே கூறினேன்.

"என்னடி அவ்ளோ பாஸ்ட் ஆஹ் ஏற்கனவே செட் செஞ்சுட்ட போல என்கிட்ட சொல்லவே இல்லை போ அப்ப நான் தான் உன்னோட பிரஸ்ட் பிரண்டுன்னு சொன்னதெல்லாம் சும்மாவா" என்று எனக்கு பேச இடம் தராமல் பேசி முடித்தால் பாருமா.

"நீ ரொம்ப உணர்ச்சி வசம் படாத உனக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வைக்கிரேன் "என்று எப்போதும் போல் ஈஈ என்று பல்லைக் காட்டுனேன்.

அர்த்தங்கள் ஆயிரம்
உண்டு...
இனிமையான அனுபவம்
கொண்டு...
சொல்லாதக் காதலின் பயணம்
தொடரட்டும்!!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top