(灬♥துளி 4♥灬)
***Kanmanis, please check author note at the bottom before proceeding..Thank you!
ஒன்று
இரண்டு
மூன்று
அடுத்தடுத்து ஒவ்வொரு காலும் மிஸ் ஆனது..
இதுக்கு மேல இந்த நேரத்துல கூப்பிடுறது சரியா வராதுன்னு தன்னையே தேற்றிட்டு ரிஷி தூங்கப்போன அடுத்த பத்தாவது நிமிஷம் அவனோட மொபைல் அடிக்க, அவளாக இருக்கணும்ங்கிற வேண்டுதலோடு எழுந்தான்.
அவனது நல்ல நேரமோ கெட்ட நேரமோ, லைன்ல வந்தது ராக்கி என்கிற ராதாகிருஷ்ணன்.
பேர பார்த்த அடுத்த நொடி ரிஷிக்கு புரிந்தது ஒன்னே ஒன்னு தான் இன்னைக்கு நைட் தூக்கம் அம்பேல். இந்த வில்லன் இன்னைக்கு என்ன எந்த ஸ்டைலில் ஸ்டண்ட் பண்ண போகுறாரோ என்பது போல சலிப்பில் ஆரம்பித்து,
'Raki just give me five mins, I will join the warroom call' என பதிலடிக்கு தயாராக பேசிமுடித்தான்.
அந்த இருபத்திஐந்து நிமிட உரையாடலோட கதைச்சுருக்கம் இதுதான்.
வழக்கம் போல ஒரு சுண்டக்காய் பிரச்சனைய அவனோட கிளைன்ட் சுரைக்காய் சைக்குக்கு பெருசு பண்ணி சொல்ல, அத இந்த வில்லன் பரங்கிக்காய் சைக்குக்கு புரிஞ்சுகிட்டு ஒரு புது பஞ்சாயத்தை கூட்டியிருக்கு, அதுவும் இந்த நேரத்துல...
இப்போ ரிஷி அது சுண்டக்காய் தான்னு சுடம் அடிச்சு சத்தியம் பண்ணாலும் ஒருத்தரும் நம்ப போறதில்ல. அதனால அவுங்க வழிக்கே போய், ஆமாங்க இது பரங்கிக்காய் தான், ஆனா இத வெட்டி கூட்டு வைக்க எப்படியும் ரெண்டு நாள் ஆகும் சொல்லி அவுங்கள தூங்க வச்சுட்டு காலையில வரப்போற ரிவியூ மீட்டிங்கு முன்னாடி பிரச்சைனைய முடிக்கணும்...
எப்படியும் நாளைக்கு நாலு ஆப்பிரிசியேஷன் மெயில் கான்போர்ம். வாங்கி வச்சுப்போம் பின்னாடி உதவும்.
சரி சரி சமையலை ஆரம்பிக்கனுமே , சக சமையல்கலை நிபுணர்களை எல்லாம் இப்போ எழுப்பனும், எதுதது என்னனே நிலைமையிலே இருக்கானுகளோ.
இந்த ரீதில போனது அவனது மனமும் மீதி இரவும். இதுல ரேகா காணாம போய் ரொம்ப நேரமாச்சு.
"ஒரு நாளின் அற்புதங்கள் சூரிய உதயத்தில் தொடங்குகின்றன, அது அனைவருக்கும் ஒராயிரம் கேள்விகளையும் பல்லாயிரம் பதில்களையும் தரவல்லது"
அந்த நாளின் முதல் கேள்வி வாணியிடமிருந்து, 'ரிஷி இந்த வீக்கெண்ட், நீ பிரீ தானே, வெளியூர் எங்கேயும் போகலைல ?'
'அப்படி எதுவும் பிளான் இல்லை, ஆனா என்ன விஷயம், உங்களுக்கு எதுவும் வேலை இருக்கா.?'
சுந்தரராஜன், 'எங்களுக்கு இல்லைடா, நமக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு'
'அம்மா, நீங்க எதுவும் கோவிலுக்கு போகுறதா ஐடியா வச்சிருந்தீங்கனா, ப்ளீஸ் என்ன விட்ருங்க நான் வரல இப்போவே சொல்லிட்டேன் ' நொடியில் வந்தது அவனின் பதிலும்..
'ஏங்க, நீங்க தெளிவா எப்போதான் பேச போறீங்களோ !. அவனை எடுத்த உடனே வரலன்னு சொல்லவச்சுட்டு, கொஞ்சம் அமைதியா இருந்தீங்கனா நான் பேசுறேன். இல்லன்னா என்ன விட்ருங்க நீங்களாச்சு அவனாச்சு '
'அம்மா நீங்களே சொல்லுங்க, எங்க போகணும் ..'
'பொண்ணு பார்க்க போகணும்', சர்வ சாதாரணமாக சொன்னங்க வாணியும்
'என்னது ?.' இதை இவ்ளோ சீக்கிரம் அவன் எதிர்பார்க்கலைனுங்கற அதிர்ச்சி அவன் குரலே தெரிஞ்சுச்சு
'ஆமாடா நீ தான் நேத்து இந்த இடம் பார்க்கலாம்னு சொன்னியே, அது தான் உங்கப்பா காலையிலேயே அவுங்களுக்கு போன் பண்ணி விசாரிச்சாரு, அவுங்க நேர்ல வர சொல்லிருக்காங்க.. அப்பா தான் உங்கிட்ட கேட்டுட்டு நாள் கிழமை பார்த்து சொல்லுறதா சொல்லிருக்காரு'
'சொன்னேன் தான், அதுக்குன்னு இவ்ளோ அவசர மா எல்லாம் நடக்கும்னு நினைக்கல'
'டேய் உனக்கென்ன இப்ப 22, 23 வயசு நடக்குதுன்னு நெனப்பா, அடுத்த வருஷம் உன்ன அங்கிள் காடேகரீ சேத்துருவாங்க, நீ இன்னும் என்ன அவசரம்னு கேட்டுட்டு இருக்க '
ரிஷி கடுப்பாவது அவன் முகத்திலேயே தெரிந்தது, இந்த அப்பா இவ்ளோ வெளிப்படையா இல்லாம இருந்தா எவ்ளோ நல்ல இருக்கும்னு நினைச்சான். ப்ச் இனிமே அதே மாத்தமுடியாதே
வாணி மீண்டும் குறுக்கிட்டு 'நான் பேசிக்கிறேன்னு உங்ககிட்ட சொன்னேன், சும்மா இருக்க முடியலனா. எந்திருச்சு உள்ள போங்க இல்லைனா வெளில போங்க.. காலங்காத்தால என் பையன் வயசு பத்தின ஆராய்ச்சி ரொம்ப தேவை தான் இந்த தாத்தாக்கு'
'தாத்தாவா ...என்ன வாணி ?' கொஞ்சம் அரண்டு தான் போயிட்டாரு மனுசன்
'இல்லையா பின்ன ...பேத்தி பொறந்து மூணு வருஷம் ஆச்சு..தாத்தான்னு சொன்னா கோவம் வருது. என் பையன அங்கிள்னு சொல்லிட்டு' இந்த பதிலில் சர்வநிச்சயமாய் ரிஷி சிரித்திருப்பான் மற்ற நேரம் என்றால் ஆனால் இன்று
அவளிடம் பேசி நட்பை புதிப்பித்து கொள்ளும் ஆவலில் 'ஏன்மா இன்னும் ஒரு வாரம் கழிச்சு போகலாமா? '
'அந்த பொண்ணு வெளியூரூல வேலை பார்க்குது போலடா, நாம சொல்லுறத பார்த்து தான் வரச்சொல்லுவாங்க, இந்த ஞாயிறு விட்டா பத்து இருபதுநாளைக்கு நல்ல நாளா இல்லையேடா'
இந்த விஷயத்தில எந்தவொரு மந்தமான முடிவையும் எடுக்க முடியாதுனு அவனுக்கும் தெரியும், அதனாலயே ரிஷி இப்போவே ஒரு முடிவை எடுக்க வேண்டும்னு உறுதியாக இருந்தான்.
"ஒரு முடிவு அவசரமானது அல்லது முக்கியமானது அல்ல என்றால், நீங்கள் அதை எடுக்க வேண்டிய அவசியமில்லை" இதை எத்தனை முறை தன்னோட டீம் கிட்ட சொல்லிருப்பான், இன்னைக்கு அவன் எடுப்பது ஒரு அவரசரமான முடிவுதான் ஆனாலும் அவனுக்கு இது அவசியமாக பட்டது.
அதே உறுதியுடன், 'சரிம்மா, இந்த சண்டே நாம பார்க்க போகலாம், வேற ஒன்னும் விஷயமில்லையே, நான் கிளம்பவா..'
'வேறோன்னுமில்லடா, ரஞ்சிட்ட ஒரு தடவ பேசிரு, நீ நேத்துலேர்ந்து பேசுவனு எதிர் பார்துட்டே இருக்கா.'
'ஹ்ம்ம்ம், பேசனனும்.. நானும் நெனச்சேன், அப்புறம் மறந்துட்டேன்..என்னவாம்?'
'நீ பேசு, அவளே சொல்லுவா..அப்புறம் நான் சொல்லிட்டேனு சண்டைக்கு வருவா..'
'என்னமா, சின்ன பிள்ளைங்க மாதிரி, ஒன்னொனையும், ஒவ்வொருத்தரு கிட்டேயும் தனிதனியா சொல்லனுமா..உங்ககிட்ட சொன்னா நீங்க எங்கிட்ட சொல்ல வேண்டியதுதானே'
' அட நீ ஏன்டா, இதுக்கு இவ்ளோ டென்சன் ஆகுற, அவ அந்த பொண்ணு போட்டோவ பார்த்துட்டளாம். அதுதான் ஏதோ சொல்லவந்துருப்பா.....'
ரிஷி லேசாக ஏதோ மனதை பிசைவதை உணர்ந்தான், நேற்றிலிருந்து உருவாகிய இந்த புது உணர்வு இன்னும் ஆழமாக படர்வதையும் அது இன்னும் வலுவடைந்ததையும் உணரவும் முடிந்தது. எப்படியிருந்தாலும் அவனால் அது சொல்லும் அந்த சிறிய விஷயத்தை மட்டும் ஏன் என இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
'அவ்ளோதானே, அப்போ நானும், பொண்ண பார்த்துட்டு பேசிகிறேன்..' சொன்ன வேகத்திலயே, வாணியின் பதிலுக்கு கூட நிற்காமல் நடந்தான்., இந்த நேரத்தில நமக்கு என்ன தெரியுமோ அதுவே போதும், ரஞ்சி எப்படியும் ஒரு சின்ன ஆராய்ச்சி, கட்டுரையே வச்சிருப்பா..இருக்கற குழப்பமே போதும் என எண்ணியபடி...
Think of the Devilnu சொல்லுவாங்களே அதுபோலதான் ஆனது இன்னைக்கு.
ரிஷி, கார ஸ்டார்ட் பண்ண அடுத்த நிமிஷம், வந்தது ரேகாவோட கால்..
'ஹலோ.....ரிஷி........ரிஷி கேக்குதா...'
'ஹ்ம்ம்ம்...நல்லாவே கேக்குது ...எப்டி இருகீங்க...'
'அப்ப்பா...உன் குரல கேட்டு எவ்வளோ நாள் ஆச்சு...ரொம்ப நாளா பேசனும் நெனச்சிட்டே இருப்பேன்..ப்ச்..முடியல'
'ஓஹ் அதுதான் நேத்து போன் பண்ணோடனே எடுத்துடீங்களா'
'...ஹே சாரிப்பா, நேத்து நைட் உன் கால் பார்த்தபோ ரொம்ப லேட்டாயிருச்சு..அதுதான் உன்ன டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு...'
'ஸோ, இப்போ கூப்பிடுரீங்க் மேடம்'
'ஹெய், என்ன மரியாதை ஒவரா இருக்கு..என்ன ரொம்ப ஓட்டாத சரியா..'
'சரி சரி, எப்படி இருக்கனு கேட்டேன்...பதிலே வரல இன்னும்..'
'நான் சூப்பரா இருக்கேன்.. நீ ? ஆச்சர்யமா இருக்கு, உங்கிட்ட இப்போ பேசுறது..கனவா, நிஜமானு புரியல'
'நிஜம் தான், எனக்கும் அப்படிதான் இருக்கு...நேத்து ஏனோ...உங்க எல்லார் நியாபகமும் வந்துச்சு.....எல்லாரும் எங்கேங்கயோ நகர்ந்து போய்யிட்டோம்ல..'
'ஆமா, அவுட் நீ கூட ஆஃப் இண்டியானு கேள்வி பட்டேன்.. இப்போ எங்க? எப்போ ?...'
'நான் வந்து ஃபோர் மந்த்'ஸ் இருக்கும்.. இப்போதைக்கு இங்க சென்னைதான்.... நீ, எப்போ அடுத்து ஊருக்கு வருவ?'
'நான் எங்க?.. இப்போதான் ஊருல இருந்து வந்தேன்.. ஏன்?
'சும்மா, வந்தா பார்க்கலாம்னு தான்...'
'பார்ரா...யாரு நீயா? வந்து என்ன பார்க்கபோற, சரிதான்..நம்பிட்டேன்'
'உண்மையா தான் சொன்னேன்..'
'பார்போம், அடுத்து ஏதாவது முக்கியமான வேலைனாதான் வரனும்..வந்தா சொல்றேன்....'
'அப்போ நீ அடிக்கடி,...வீடுக்கு வர்றமாட்டியா?'
'அடிக்கடியா !, சான்ஸே இல்ல, ட்ராவல்னாலே எனக்கு அல்ர்ஜி, அதுவும் இப்போ..... ...............................................................'
'..ஹேய் ரேகா...ரேகா... என்ன ஆச்சு.......?'
🍬§§§§§§§§🍭 இன்னும் இனிக்கும் 🍭§§§§§§§§🍬
A/N – Dear Kanmanis I just introduced a small change in this chapter. from now, you see the happenings or descriptions in normal text, character's mindset or POV will be in italics and their dialogues in Bold . Please let me know, if you could follow else, I will revert back to old. But just wanted to know.. Do comment or DM if you felt different.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top