♡('துளி 3')♡

'ப்ச்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...ஐயோ அம்மா முடியலப்பா..ஹஹஹஹஹஹ....'

'பாருங்க ரிஷி, இப்படி தான் காலைலேயும் இவுங்க செட் பூரா சிரிச்சாங்க..'

'டேய் கௌதம்,.நான் உன்னை ஸாரி சொல்ல சொன்னேன். நீ திரும்ப திரும்ப சிரிக்க அப்பிடி என்ன தான் இருக்கு அவுங்க சொன்னதில'

'ஹஹஹ.....இருடா..மூச்சு விட்டுக்கிறேன்....எங்களுக்கு அவ சொல்லரத கேட்டா....ஹிஹிஹி. கேட்டா தேங்காய் சீனிவாசன் நியாபகம் வந்திருச்சு..'

இதை கேட்ட உடனே ஹால்ல உள்ள மற்ற சிலபேரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பிச்சதும், ரேகாக்கு இன்னும்தான் கோவம் வந்தது..அவர்களை தாண்டி கோபமாக வெளியேர, ரிஷியும், கௌதமும் அவளை தொடர்ந்து வந்து..

'ரேகா.....நில்லுங்க.. எங்கங்க போறிங்க.....கௌதம் நீ கொஞ்சநேரம் சும்மா இரு.....நான் பேசிக்கிறேன்..நீ சிரிச்சு சிச்சுவெசனா இன்னும் மோசமாக்காத..'

'டிரை பண்ணுறேன்டா...'

'ரிஷி, நீங்க விலகிக்கோங்க,.உங்களால தான் முடியலலேல, நான் வேற ஸ்டாஃப் கிட்ட சொல்லிக்கிறேன்...'

'ப்ளீஸ் கோபபடாதீங்க..அவன் இனிமே அப்படி சிரிக்க மாட்டான்.. நான் ஸாரி சொல்ல சொல்லுரேன்.........'

'ஸாரி ஸாரி ரேகா.. சும்மா ஃபன்னுக்காக தான் பண்ணுணோம்..உங்களுக்கு இவ்ளோ ஹர்ட் ஆச்சுனா இனிமே சொல்லல.. பட் நீங்களும் எங்கள மாதிரி இனிமே பேர சொல்லுங்க..'

'ப்ச்ச்.. இப்படித்தானே சொல்லவருது, என்னோட பழைய ஸ்கூல்ல அப்படி தான் சொல்லணும், எனக்கு அதே பழக்கம் ஆயிருச்சு...'

மொதநாள், இன்னைக்கே இந்த பொண்ணு போய் ரேகிங் அது இது ஏதும் சொல்லிவச்சா பெரிய ப்ரோப்ளம் ஆகுமேனு பயந்துட்டே இருந்த ரிஷிக்கு, சட்டென சின்ன குழந்தை போல் முகமாரி, ரேகா இதை சொல்லவும் தான், கொஞ்சம் படபடப்பே அடங்குச்சு.

ஒரு ஸாரில முடியற விஷயம் இதுக்கு, எவ்ளோ பயமுறுத்திருச்சு இந்த பொண்ணு நெனச்சிட்டு அமைதியா நின்னு வேடிக்கை பார்க்க ,கொஞ்ச நேரத்துல கெளதம் எப்படியோ பேசி ரேகாவை சிரிக்க வைச்சுட்டான்.

அப்பாடான்னு நிம்மதியா உள்ளபோய், மீதி விஷயத்தை சொல்லி முடிச்சிட்டு திரும்ப வெளிய வரப்போ...கௌதம தொரத்திட்டு ரேகா காரிடர்ல ஓடி வந்து..

'ரிஷி, ப்ளீஸ் எனக்கு இவனே நீ பிடிச்சிச்சு மட்டும் கொடுத்திரு நான் யாருகிட்டேயும் கம்பளைண்ட் பண்ண மாட்டேன், இவனுக்கு நானே நல்ல பனிஷமன்ட் தர்றேன் ...'

'நண்பா, நீயும் நாயும் எவ்ளோ கிளோஸ், இந்த பெண்ணுக்காக என்ன பிடிச்சிகொடுத்திராத...'

'ரிஷி எனக்கு தான் ஹெல்ப் பண்ணுவான்...ரிஷி பிளீஸ் பிளீஸ் ..ஏய்.. கெளதம் ஓடாத ....'

'ரெண்டுபேரும் என்னை ஆளவிடுங்க , ஓடிடுறத பார்த்தா P.T சார் நல்லா பெரிய கிஃப்டா தருவாரு, நீங்களே ஷேர் பண்ணிக்கோங்க '

ரிஷிக்கு அன்னைக்கு ஆரம்பிச்சதுதான் கௌதம்க்கும்,  ஏன் மொத்த ஸ்கூலுக்கும் ரேகாக்கும் இடையே அம்பயர் வேலை.

அந்த வருஷம் முழுசும், இதே கதைதான், எல்லாருக்கும் சரினா அது தான் அவளுக்கு தப்புன்னு சொல்லிட்டு வருவா,

ரிஷிகிட்ட வரவரைக்குக்கும் அடிதடி மட்டும்தான் மிச்சம்னு இருக்கற சண்டை, அவன் 'இதுல என்ன தப்பு இருக்கு, எனக்கு கொஞ்சம் எக்ஸ்பிலைன் பண்ணேன்னு' .. சொன்னா அடுத்த நிமிஷம் உனக்கு ஓகேனா எனக்குக்கும் ஓகேனு போயிருவா..அப்புறம் மொத்த கூட்டமும் அவனை மொறைச்சு பார்பார்ப்பாங்க.

ரொம்ப சீக்கிரமே, ரிஷி கெளதம் கூட்டணில ரேகாவ அடிக்கடி பார்க்க முடிஞ்சது. ரொம்ப சுட்டி, துறுதுறுப்பு கூடவே சீரியஸ் ஆனா ஆளுனு , கூட இருக்கறவுங்களுக்கு சரியாய் மாறி ஒத்துப்போறதுனால ரேகாவும் ரிஷி மாதிரியே ஸ்கூல கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தான் எல்லாருக்கும்.

ஒரு வருட நட்பு, நிறைய சண்டை, சிரிப்பு, கிண்டல், கோவம் அழுகைனு சீக்கிரம் முடிஞ்ச கதை அது ....

இன்னைக்குனு இல்லை, எப்போ நினைச்சாளும், முகத்தில சிரிப்ப கொண்டுவர அழகானா நாட்கள்.

'என்ன ரிஷி, அதிசியமா தனியா நிக்கிற, அதுவும் சிரிச்சுட்டு...'

பக்கத்தில கேட்ட குரல்ல, பழைய நியாபகம் கலைய   'ஹான்..சரண், நீயா..நான் சும்மா ஒரு காஃபி,  ஸ்கூல் ஃபரண்ட்ஸ் நியாபகம்..அப்பிடியே..'

'ஹ்ம்ம்ம்...நல்லடைம் அதெல்லாம்,  மிஸ்பண்ணுனா கால் பண்ணிப்பேசிடுடா...அப்புறம் வேலைனு ஆரம்பிச்சிட்டா மறந்துருவோம்'

'எங்க, பெருசா யாரும் காண்டாக்ட்ல இல்லடா. எப்பவாது யாரவது கூப்பிட்டா தான்'

'ஏன் உங்க ஸ்கூல் செட்க்கு, இந்த வாட்ஸப் குருப் எல்லாம் இல்லையா?..இப்பெல்லாம் தான். வாக்கிங் போறதுல இருந்து, ஸ்கூல் காலேஜ், அபார்ட்மெண்ட், ஏன் பேமிலி குரூப் கூட இருக்கே..'

அவன் சொல்லவும் நினைவு வந்தவனாய் , தனது மொபைலின் வாட்ஸப் குரூப் லிஸ்டில் 'Johnians - A Hopeless group' ஐ தேட அது 1298 அன்ரீட் மெசேஜ்ஸ் காட்டியது.. ஷ்ஷப்பா இதுக்குதானே இந்த பக்கமே வரதில்ல....என்னது 132 மெம்பெரா , இதுல எப்படி அவள தேடுறது..

'என்ன ரிஷி அமைதியாயிட்ட, எந்த குரூப்னே, தெரியலையா'

'இல்ல சரண் , இதுல நம்ம பிரண்ட்ஸ எப்படி தேடுறது..இத்தனை பேரு இருக்காங்க '

'என்னடா நீ, சுத்த சாம்பிராணியா இருக்க, விட்டா இதுக்கு அல்கரிதம் எல்லாம் கேட்ப போலேயே .. நீ சும்மா ஒரு hi போடு, யாரு உன் பேரு சொல்லி ரெஸ்பாண்ட் பண்ணுறானோ அவனை பிடி. அவன்கிட்ட நீ கேக்குற காண்டாக்ட் கண்டிப்பா இருக்கும்.'

'ஓஹ நிஜமாவா சரண், அப்படியேல்லாம் கூட இருக்குமா '

'ப்ச் .. எல்லாம் ஒரு ட்ரைல் தானே, நீயே ட்ரை பண்ணிட்டு எனக்கு என்ன ஆச்சுன்னு ரிசல்ட் சொல்லு, நான் கிளம்புரேன்'

ஹ்ம்ம்ம்ம்.....ஐடியா நல்ல தான் இருக்கு, ஆனா யாரோ கிட்ட போய் அவ நம்பர கேக்கணுமா?...இல்ல அப்பாகிட்ட கேட்டு பார்த்தா... இப்டியே யோசனை போக அவன் மனசாட்சி அவனை வெளிய வந்து துப்புச்சு,

"அப்பாகிட்டயா, என்ன ரிஷி நீ இப்டி ஆயிட்ட ..சரி ஆபத்துக்கு பாவமில்லைனாளும் என்னனு கேட்க போற..நீ கொஞ்சம் இருக்கற மூளையை யூஸ் பண்ணேன் "

வீடுக்கு வந்தும் வெகு நேரமா ரூமே விட்டு வெளியே வராத ரிஷியை தேடிட்டு வந்த வாணி

'என்ன ரிஷி, இன்னும் இந்த போனே எவ்ளோ நேரம் நோண்டிட்டு இருக்க போற, சாப்பிட வா '

'அப்பா சாப்பிட்டு , போனதுக்கு அப்புறம் வர்ரேன்மா , கொஞ்சம் பிஸி இப்போ '

அப்போதுதான், அவன் இருந்த மொத்த லிஸ்டில் யூஸர் நேம்மில் இருந்த ரெண்டு ரேகாவை பில்டர் பண்ணிருந்தான்..ரெண்டுல யாருங்கற குழப்பதில் இருந்தப்ப தான் வாணி வந்தது

'அவரு நீ வரணும் உன்கிட்ட பேசணும்னு இவ்ளோ நேரம் உட்காந்துட்டு இருக்காரு, நீ என்னடா இப்படி சொல்லுற'

'என்னமா என்ன பேசணும்..'

'நைட்டு வந்து பேசலாம்னு நீ தானே சொல்லிட்டு போன, இப்போ எல்லாத்தையும் மறந்துட்டியா ?'

இதுதானா விசயம் ஆனா என்ன பேச போறங்கனு தெரியலையே 'சரி போங்க மா, ரெண்டு நிமிசத்துல வந்துறேன்'

இப்போ இந்த ரெண்டு நம்பர்ல எதுவா இருக்கும், எதாவது ஒன்னு தானே இருக்க முடியும், இருந்ததில் ஒன்று ஓவர்சீஸ் நம்பர், பொண்ணு வெளிநாட்டுல இருக்கா, இல்ல நம்பர் மட்டும் தானா.. சந்தேகத்தின் பலனை வலியவருக்கு கொடுப்பது போல் , அந்த இந்தியன் நம்பர்க்கு ஒரு 'Hi Rekha' என மெசேஜை தட்டிவிட்டு

'என்னப்பா பேசணும் சொன்னீங்களாம் ' என்றான்

'என்னடா, அந்த ப்ரொபைல் பார்த்தியா , நான் பேசி பார்க்கவா?.. '

'நீங்க எல்லாம் பார்த்துடீங்களா, நான் சரினு சொன்னதுக்கு அப்புறம் வேற ஒன்னும் சொல்லிட மாடீங்களே '

'நாங்க என்னடா சொல்லப்போறோம், '

'இல்லை, வீடு வசதிஅது இது எதோ ஒன்னு சரியில்ல, நமக்கு செட் ஆகாது, அவுங்க சொன்னாங்க, இவுங்க சொன்னாங்க, அப்புறம் ரஞ்சிக்கு பிடிக்கலை.....இது வேணாம்னு'

கடைசி வார்த்தைக்கு கம்மிய குரலில் ஏதோ புரிந்தது போல் வாணியும், சுந்தராஜனும் ஒருவரை ஒருவர், பொருள் பொதிந்த பார்வையுடன் பார்த்துக்கொண்டு

'உனக்கு பிடிச்சிருந்தா மட்டும் போதும் ரிஷி, வேற ஒன்னும் எங்களுக்கு பெருசில்ல' வாஞ்சையாய் கைப்பற்றி வாணியும், அதற்க்கு சரியென தலையசைத்து சுந்தர்ராஜனும் உறுதி தந்தனர்

அதன் பின்னான வழக்கமான உரையாடலில் மறந்திருந்த விஷயம், அறைக் கதவை திறந்தவுடன் வந்து தொற்றிகொண்டது. துரிதமாய் தன் சொடுக்கிக்கு கிட்டியிருக்கும் பதிலை தேடி படிக்க அது

'hey Rishi , நிஜமா நீதானா இல்லைனா ஏதும் பூதமா ?' என்றிந்தது.

அவளே தான், என உதடுகள் முணுமுணுக்க..சற்றுமுன்பு கிடைத்த புது தெம்பிலும், இந்த பதிலின் உற்சாகத்திலும் அவள் நம்பருக்கு டைல் செய்தான்.

🍬§§§§§§§§🍭 இன்னும் இனிக்கும் 🍭§§§§§§§§🍬

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top