துளி 1

'அம்மா கொஞ்சம் இங்க வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுனங்களேன், ஹாப்னவரா தேடிட்டு இருக்கேன். கெடச்ச மாதிரி இல்லை..' உள்ளிருந்து வந்த குரலில் எரிச்சலும் அவசரமும் இருந்துது.

'ரிஷி அவளோ முக்கியமான பேப்பர என்கிட்டே கொடுத்து வைச்சா என்ன?. உங்க அப்பா கிட்ட கொடுத்தா அதோட மறந்துற வேண்டியதுதான்...அது பத்திரமா பரலோகம் போயிருக்கும் .திரும்ப பாக்குறது இனி கஷ்டம் தான்..', எந்த நேரமா இருந்தாலும் நிதானமான பதில் தான் வாணிக்கு, எப்பவும் போல் லேசான சிரிப்போடு.

'என்னமா நீங்களும், என் அவசரம் புரியாம அவரை கிண்டல் பண்ணுற நேரமா இது. நான் போகுறப்போ AC சர்விஸ் சென்டர்ல போய் கம்பளைண்ட் பண்ணிட்டு போகலாம்னு பார்த்தேன் இப்போ நேரமாச்சு'

' இன்னும் கொஞ்சம் நேரம் இரேன். வாக்கிங் தானே போயிருக்கார் வந்தவுடனே தேடி எடுத்துட்டு போ. அப்புறம் அங்க போய் கோவமா எதுவும் அவுங்க கிட்ட பேசிடாத அப்புறம் அதுக்கும் சேர்த்து பில் போட்ர போறாங்க'

'அதெப்படி போடுவாங்க , எனக்கு ரீபிளேஸ்மெண்ட் வேணும்னு சொல்ல போறேன்.. வாங்கி ரெண்டு மாசம் கூட ஆகல அதுக்குள்ள எப்படி மொத்தமா ரிப்பேர் ஆகும்....'

'அதெல்லாம் உங்காப்பா கைங்கைர்யம்டா, AC அஹ போட்டா ஏதோ ஒரு டெம்ப்ரேசர்ல செட் பண்ணி விட்ரனும், ஆனா இவரு அப்டியா பண்ணுறாரு ; பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை எந்திருச்சு அத ஆப் பண்ணுறது, அப்புறம் திரும்பவும் வேர்க்கும் திரும்ப ஆன் பண்ணுறதுன்னு நைட் புல்லா இதே வேலை தான்.

எனக்கு வர கோவத்துக்கு நானே எதாவது பண்ணி அத ரிப்பேர் பண்ணனும் நெனச்சேன். நல்ல வேளையா அதுவே ஆயிருச்சு...கொஞ்ச நாளைக்கு நீ அத சரி பண்ணாத அப்டியே விட்ரு..நானும் நிம்மதியா தூங்குவேன்.'

'இந்த ஊருலேயே நீங்க மட்டும் தான் இப்டி இருக்கீங்க ..இந்த வெயிலுக்கும் எப்போதும் கூலா '

'நான் எதுக்காகடா டென்ஷன் ஆகணும்; இதோ நீ இப்போபோனா எப்போ வருவேனே தெரியாது , உங்க அக்கா வாரத்துக்கு ஒரு தடவை போன் பேசரத்தோட சரி; உங்க அப்பாவாச்சும் ரிட்டைர்மெண்ட்க்கு அப்புறமாவது வீட்டோட இருப்பாருனு பார்த்தா, இப்போதான் புதுசு புதுசா எதோ செய்திட்டு நாள கடத்திட்டு இருக்காரு. இதுக்கெல்லாம் நான் கூலா இல்லை, அப்புறம் தனியா உடம்புக்கு வேற வந்து கஷ்டப்படணும்'

'நீங்க எப்பவும் இது மாதிரியே சிரிச்சிட்டே ஜாலியா இருங்கமா. யாரு இப்போ வேண்டான்னு சொன்னா?..இதுதான் பார்க்கறதுக்கும் நல்ல இருக்கு.....அப்பா வர ரொம்ப நேரம் ஆகுமா ? மணி இப்பவே 8 ஆக போகுது'

'வந்திருவாரு..வர்ர நேரம் தான் ..வாக்கிங் போயிட்டு அங்கேயே நியூஸ் பேப்பர் வாங்கி முழுசா படிச்சிட்டு தான் வருவாரு. வீட்ல வந்து படிச்சா நான் டிஸ்டர்ப் பண்ணுரேனாம் ...இப்போ அவரும் சீக்கிரமா வந்து எந்த ஆபீஸ்க்கு கிளம்பி போக போறாரு அது தான் மெதுவா வரட்டும்னு விட்டுட்டுட்டேன், நீ எதுக்கும் அவருக்கு ஒரு கால் பண்ணி கேளு. நான் கொஞ்சம் அடுப்பை பாக்குறேன்'

'ஹ்ம்ம் அதுவும் சரிதான், இப்டி சும்மா வெயிட் பண்ணுறதுக்கு, எங்கன்னு கேட்டு தேடி பார்க்கலாம்..... .... ................ ................... ......

அம்மா இது ஒன்னு தானே இப்போ அப்பா யூஸ் பண்ணுற டைரி?...இதுல தானே இருக்குனு சொன்னாங்க...அப்டி எதுவும் இல்ல.....'

'அங்க பச்சை கலர்ல இருக்குல்ல அதுதான் ...என்ன அதுலேயும் இல்லையா?'

'அப்பா டைரிகுள்ள தான் இருக்குனு சொன்னாங்க ..ஒன்னும் காணோம்..ஆனா இது என்ன என்பேருல ஒரு கவர் இருக்கு..'

'எங்க கொண்டா ?...ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா ..நானும் ரெண்டுநாளா உன்கிட்ட இத காட்டணும்னு நெனச்சி நெனச்சி மறந்துட்டேன்...நல்லவேளை உன் கண்ணுலே பட்ருச்சு..பிரிச்சு பாரு....

இது நம்ம ஜோசியர் கொடுத்து விட்டாங்க உனக்குத்தான், நம்ம அம்முக்கு காதுகுத்தறதுக்கு நாள் பார்க்க அப்பா போனாங்களா, அப்போ இந்த பொண்ணோட ஜாதகம் வந்திருந்திச்சாம். நமக்கு சரியாய் வரும்னு சொன்னதுனால, உடனே உங்க அப்பா பொருத்தம் பார்த்துட்டு , நல்ல பொருந்திருக்குனு கையோட இத வாங்கிட்டு வந்துட்டாங்க. அதுல அந்த பொண்ணோட டீடைல்சும் இருக்கு..'

'ப்ச்ச்ச்..நீங்க ரெண்டு பேரும் இத எப்போ நிறுத்த போறீங்க?'

'எதடா நிறுத்தணும் ? ". கேள்வியோடு உள்ளே வந்துது அவனோட அப்பா சுந்தராஜன் தான்..

'அது , அப்பா ..இது இதைத்தான் இந்த பொண்ணு பார்க்குற வேலைய நிறுத்த போறீங்கனு கேட்டேன்...வாராவாரம் ஒரு புது கதையா இருக்கு.'

'நாங்க நிறுத்திட்டா நீ பார்த்துகிறயா?, பார்த்துகிறேன்னு சொல்லு , நாங்க பேசாம இருக்கோம்.. நீயும் பார்க்காம நாங்களும் பார்கலைனா உனக்கு எப்பிடிடா கல்யாணம் பண்ணுறது.'

'நீங்களும் ஒன்றை வருசமா பாத்துட்டு தானே இருக்கீங்க..எதுவும் சரியாய் வரலைனா விட்ரலாமே, கண்டிப்பா கல்யாணம் பண்ணும்னு இருக்கா என்ன?'

'ரிஷி ..நீ இப்போ ஆபீஸ்க்கு கெளம்பு..சாயந்தரம் எல்லாம் பார்த்துக்கலாம்..' ஒவ்வொரு முறையும் வரும் சிறு உரசல் தான், எனினும் இதை காலையிலேயே ஆரம்பித்தால் நாள் முழுதும் பாதிக்கும் என்பதால், வாணி இதை இப்போதைக்கு தள்ளி போட முயன்றார்.

'உனக்கு ஏன் ரிஷி அப்படியெல்லாம் தோணுது, எதோ நிறைய இடம் பார்த்து உனக்கு அமையலைனு நினைக்கிறியா என்ன? . நீயே சொல்லு இதுவரைக்கும் நீ எத்தன பொண்ண வந்து பார்த்திருப்ப ?. ஒன்னு கூட இல்லையே , பொண்ண போய் பார்த்துத்துட்டு எப்படி வேணாம்ன்னு சொல்லுரதுனு சொல்லற, வாஸ்தவம் தான் அது நல்லாயிருக்காது தான்; ஆனா நேரிலேயே பார்க்காம எப்படி முடிவு பண்ணறது. ஏதாவது ஒரு விதத்துல நீ சரினு சொன்னா தானே நாங்களும் அடுத்து என்ன பண்ண முடியும்னு பார்க்கலாம் '...

அப்பாவின் பேச்சும் வருத்தமும் நியாயம்தான் ஆனா அவனுக்கு  'அப்பா நீங்க சொல்லுறதெல்லாம் சரிதான்..ஆனா எனக்கு இது சரியாவரும், நேர்ல பார்க்கணும்னு இதுவரைக்கும் தோணவே இல்லப்பா, நான் என்ன பண்றது.'

'...தோணல ...ஹ்ம்ம் பேசாம நீயும் உங்க அக்கா மாதிரியே உனக்கு அப்டி தோணுற ஆள பார்த்து லவ் பண்ணேன்... எங்களுக்கும் வேலை ஈஸியா முடிஞ்சிரும்..'

'ஏங்க நீங்க சும்மா இருக்கமாட்டீங்களா? ஊரு உலகத்துல பிள்ளைங்க எப்படி எப்படியோ இருக்கு..அவன் நாம காட்டுற பொண்ணையே தலைதூக்கி பார்க்க மாட்டேங்குறான், அவனப்போய்....'

'பின்ன என்ன வாணி , இவனுக்கு நாம பார்த்து வைக்கிற கல்யாணம் தான் வேணும்....ஆனா சார் எதிர்பார்க்குற பீலிங் எல்லாம் லவ் பண்ணாத்தானே கிடைக்கும்...இதெல்லாம் எங்க நடக்குறது..'

'ஹக்கும் .. அதெல்லாம் நடக்கும் நடக்கும், இவனுக்குனு ஒருத்தி இனிமேலா பொறக்கபோரா? . எல்லாம் பொறந்து வளர்த்து ரெடியா இருப்பா...தேடி கண்டுபுடிக்க வேண்டியது தான் உங்க வேலை..VRS வாங்கிட்டு வீட்டுல சும்மா தானே இருக்கீங்க செய்யறதுக்கு என்ன?'

'நீயும் அவன் கூட சேர்ந்தாச்சா, நான் என்ன மாட்டேனா சொல்லுறேன், இப்போ கைல இருக்கறத பிரிச்சி பார்த்து, என்ன செய்யலாம்னு சொல்ல சொல்லு..நான் ஜோசியர் கிட்ட பேசிட்டு தான் பொண்ணு வீட்டுக்கு போன் பண்ணனும்..'

இதுவரைக்கும் நடந்ததெல்லாம் பேசாம கேட்டுட்டு இருந்த ரிஷிக்கு அப்போ தான் உறைச்சது, இன்னும் அத திறந்து கூட பார்க்கலைனு..உள்ளேயிருந்தது ரெண்டே ரெண்டு பேப்பர் தான்..அதில ஒன்னுல நாலு பக்கமும் மஞ்சள் தடவி...8/10 னு போட்டு ஒரு பெரிய டிக் மார்க் இருந்துச்சு..இன்னொன்னுலே ஏதோ நாலு வரி....அவ்ளோ தான...?

'என்னப்பா இதுல ஒண்ணுமே இல்லையே, நான் என்ன பார்க்குறது ..போட்டோ கூட இல்லையா ?

'ஆஹ்ம் , அதேதான்டா நானும் கேக்குறேன், ரெண்டு நாளா போட்டோ கேட்டு வாங்குங்கன்னு சொல்லிட்டே இருக்கேன் , காதிலேயே போட்டுக்கல... இப்போ அவனே கேக்குறான் என்ன சொல்ல போறீங்க '

'நீ கொஞ்சம் சும்மா இருக்கியா..அது ஜாதகம் பார்க்க வந்ததுடா அவர் கிட்ட அவ்ளோ தான் இருந்துச்சு..போட்டோ அனுப்ப சொல்லி நம்பர் எழுதி கொடுத்திட்டு தான் வந்தேன்..ஆனா இன்னும் அனுப்பலை..'

'உங்க அப்பா அவரு நம்பரே கொடுத்திட்டு வந்துருக்காரு...அவரோட வாட்சப் எப்படி வேலை பார்க்கும்னு நமக்கு தெரியாதா? ...எனக்கு மெசேஜ் அனுப்புனா அது உனக்கு போகும். அவுங்ககிட்ட இருந்து போட்டோ வந்துச்சோ வரலையோ , இல்ல இவரு தான் அத மிஸ் பண்ணிட்டாறானு கூட தெரியல.

போன் பண்ணி அனுப்புன்னீங்களானு கேட்கவும் சங்கடமா இருக்காம். என் நம்பர் இல்லைனா உன்னோடது கூட கொடுத்திருக்கலாம்.. எல்லாம் இப்படியே பண்ணுங்க அப்புறம் அவனுக்கு கல்யாணம் நடந்த மாதிரி தான்.'

'போதும் போதும் என்ன ஓட்டுனது, போய் சீக்கிரம் சாப்பாட எடுத்துவை நான் குளிச்சிட்டு வெளில போகணும்.. ரிஷி ஒரு தடவ அந்த ப்ரொபைல இருக்கறத பார்த்துட்டு வேற ஏதும் கேக்கணும்னா சொல்லு, நான் போன் பண்ணி கேட்டு சொல்லுறேன்..'

'ஹ்ம்ம் சரிப்பா , நான் ஈவினிங் வந்து பார்த்துக்குறேன் , இது இங்கேயே இருக்கட்டும்..டைம் ஆச்சு நான் கிளம்புறேன்'

கையில் இருந்த பேப்பர மடிச்சு டீபாய் மேல வச்சுட்டு நகர்ரப்ப கண்ணுல பட்டதுதான்.

பெண்ணின் பெயர் : ரேகா சீனிவாசன்.

🍬§§§§§§§§🍭 இன்னும் இனிக்கும் 🍭§§§§§§§§🍬

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top