❤💚(♡˙துளி 07 ˙♡)💚❤

பூரணி தந்த காப்பியில், ரிஷிக்கு இன்னும் கூடுதலாய் வேர்த்திருந்தது. அடுத்த சில நிமிடங்கள் மௌனதில் பயனிக்க, சூழ்நிலையின் இறுக்கத்தை தளர்க்கவே,

வாணி 'காஃபீ நல்லா இருக்குங்க, உங்க எல்லாரையும் மாதிரியே.. ரேகாவ தான் இன்னும் பார்க்க முடியல..' என்றார்

குறிப்பறியா நன்மரம் என, சீனிவாசனும், லலிதாவை நோக்க, அவர். 'இதோ கூட்டிட்டு வரேன்' என பூரணிய அழைத்துக்கொண்டு நகர்ந்தார்.

கதவை திறந்த சத்ததில், திகைத்து துள்ளி நின்றவளை கண்ட திகைப்பில் வந்தவர் ஒருபக்கமும், இருப்பு கொள்ளாமல் தவித்து நின்றவள் ஒரு பக்கமும் என, மூவரும் ஒருவரை ஒருவர் கண்களால் கேலி பேசி நொடிகளை தவறவிட...யுவன் கையிலிருந்த கிளுகிளுப்பை சத்தமிட்டு நேரமின்மையின் இருப்பை உணர்த்தவே....

அருகில் வந்து மகளை, ஒரு கையால் திருஷ்டி கழித்த லலிதாவிடம் தன்னிலை விளக்கமாய் 'அது ரொம்ப குண்டா காட்டுன மாதிரி இருந்துச்சுமா, அது தான் மாத்திட்டேன்' என்றால் களைந்து போட்டுட்டிருந்த காட்டன் சேலைய காட்டி.

'நல்ல இருக்கு கண்ணு' என அன்னை ஒப்புதலை தந்துவிட, அடுத்தது நீ என அண்ணியை பார்த்தாள்

இவள் பார்வையில், இடக்கையால் வாய்மூடி சிரிப்பை அடக்கியவளை கண்டு, அச்சம் மேலிட 'ஏன் அண்ணி, நல்ல இல்லையா? '

'யாரு சொன்னா? இப்போ இன்னும் சூப்பரா இருக்க வா வா, கூடப்பிடுறாங்க' , என உடனடியாக கண்களில் பாராட்டுடன், அவள் கவலையை மாற்றியவள், தோல்பற்றி கையோடு நகர்த்தி கொண்டு நடந்தாள்

பட்டெல்லாம் கட்டமாட்டேன் என்று அடம்பிடித்தவளுக்கு, வெத்திலை பச்சையில், குங்கும கரை மைசூர் மென்பட்டு, பாந்தமாய் பொருந்தியிருந்தது.

நேர்வகிடு எடுத்து பிண்ணுடி, அதுதான் உன் முகத்துக்கு அழகு என லலிதா முன்பு பாடிய பாட்டுகளுக்கெல்லாம் அப்போதுதான் அர்த்தம் புரிந்தது போல், இறுக்கமாய் பின்னியிருந்த பின்னலை தளர்த்தி, நேர்வகிடுத்து, மொத்த கூந்தலையும் இருபுறதிலிருந்து எடுத்த இருமுடிக்கற்றையால் சிறு முடியிட்டு அமர்த்தியிருந்தாள்.

பூரணி வைத்துவிட்டிருந்த ஜடை நீள மல்லிகையை நான்காய் மடித்து பாதி தோளில் படர விட்டிருந்தால்

இப்போது பயத்தில் விழித்திருந்தாலும் ,எப்போதும் கண்டவுடன் மனதை களவாடிக்கொள்ளும் கண்களில், இன்னுமொரு கருங்கோடு அழுந்து விழுந்திருந்தது.

வாசலை தாண்டும் முன் மிக முக்கியமான கவலையாக ' அம்மா, கண்டிப்பா தலையை குனிஞ்சு தான் நிக்கணுமா, எனக்கு வர மாட்டேங்குது..'

லலிதா ஆமாம் என்று சொல்லிவைக்கும் முன் 'அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, வீட்டுக்கு கெஸ்ட் வந்தா இருக்கற மாதிரி ஈஸியா இரு' என்றால் அண்ணியவள்

வரவேற்பரைக்கு வந்தவளை, சீனிவாசன் தன் பக்கத்தில் அழைத்து அமரச்செய்தார். எல்லாருக்கும் பொதுவாக ஒரு மென்கையை தந்து விட்டு அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு, பேசாதிருந்தால்.

வாணி, நன்றாய் பத்து பன்னிரண்டு பற்கள் தெரிய சிரித்தது, 'வா' என்று அழைத்தார்.

ரேகா எதிரிலிந்த காலி டம்ளர்களில் பார்வையை நிலைக்க செய்யது மீட்டுக்கொண்டாள் இருபது நொடிக்கு ஒன்ரென்ற கணக்கில். மொத்தமாய் நூற்றியிருபது நொடிக்கு மேல் தாளவில்லை இந்த விளையாட்டு.

'எந்த ஊர்ல வேலை பார்க்கிறமா ?', மீண்டும் வாணி

'கோயம்புத்தூர்' இந்தமுறை பதிலுடன் தலையை திருப்பி பார்வை மேலிட, அவன் நெற்றியோடு திரும்பியது...போச்சு போச்சு இந்த அட்டெம்ப்ட்டும் படுதோல்வி என மனதிற்குள் குலைந்தவளை

'உங்க ஆபிஸ் சென்னைல இருக்குல்ல', இம்முறை ஜெயந்தி

'ம்ம் இருக்கு' அடுத்த முயற்சி பாதாதிகேசம் என முடிவெடுத்து, கீழிருந்து மேலேறி அவன் சட்டையின் மூன்றாவது பொத்தானில் தோற்றால். 'இது அவறதில்ல' என , மெதுவாய் மூச்சையிலுத்து மனதை சமன்படுத்த

'நாம பேச நிறைய இருக்கு அதுக்குள்ள அவுங்க ரெண்டு பேரும் கொஞ்சம் தனியா பேசட்டுமே இப்படிய எப்படி' என்று உதவிக்கு வந்தான் அரவிந்தன்

அந்த குரலில் அனைவரது கவனமும் அவன் பக்கம் போக, இந்த முறை சரியாய் ரேகா தலை நிமிர்த்தி நேராக ரிஷியை பார்த்துவிட அவனும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

'இப்டியே உட்காரவைச்சு கூட்டிட்டு போய்விடுவாங்களோ, வீட்டிலேயே அம்மாகிட்ட தனியா பேசணும் சொல்லி வச்சுருக்கணுமோ' என அவளை பார்த்தபடியே, சத்தம் வராமல் மனதோடு நலிந்தவனுக்கு, கண்ணுக்கு காதுக்கும் ஒரே நொடியில் அதிர்ச்சி வைத்தியம் தந்தனர் அண்ணனும் தங்கையும்.

தாடையை தாங்கியிருந்த கை காற்றில் நிற்க ஓரிரு நொடி அவள் கண்ணில் நின்றவன், மீண்டு நன்றியாய் அரவிந்தத்தை பார்த்து புன்னகைத்தான்

சீனிவாசனும் சுந்தராஜனும், கோரஸ்ஸாய் 'அதுக்கு என்ன பேசட்டும்' என்றனர்.

வீட்டுத்தலைவர்களின் ஒற்றுமையில், தலைவிகள் நகைக்க மற்றவர்கள் சேர்ந்துகொண்டனர். பேச்சுசிரிப்போடு இருந்துவிட கூடாதென, அரவிந்தன் எழுந்து ரிஷியை உடன் அழைத்து மொட்டைமாடி படிக்கட்டை கைகாண்பித்தான்.

பின்னோடு வந்த தங்கையிடம் 'ஒழுங்கா பேசு ஆனா ஓவரா பேசாத', என அளவான அறிவுரையுடன் தள்ளி சென்றான்.

ரிஷி நாலே எட்டில் மேலே சென்றவன் திரும்பி பார்த்தபொழுது, ரேகா மெதுவாய் புடவை மடிப்பை லேசாக கையில் தூக்கிக்கொண்டு மூன்றாவது படியில் ஏறினாள்,அவள் ஒவ்வொரு படியாய் ஏறிவர, அவளை பார்த்துக்கொண்டே ரிஷி மொட்டைமாடியின் வாசலில் நின்றான்

'ப்ச்ச்சு புதுசா புடவை கட்டுறாங்க போல, இதெல்லாம் என்ன தேவையில்லாத பார்மாலிட்டீஸ்' என அவனையறியாமல் அவன் வாய் முணுமுணுத்தது..

சொன்னது காதில் விழாமல் போகவே, படியிலேறியவாறே என்னவென்றறிய தலைலையை மட்டும் தூக்கி பார்க்க, உடனே இறங்கி போய் கையை பிடிச்சு கூட்டிடுவா என்ற மனதை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் ரிஷி.

*

தென்னங்கீற்றின் நிழலில் நின்றபடி அவள் விரல்களை எண்ணிக்கொண்டிருக்க, அவனே ஆரம்பித்தான்

'சென்னைல இந்த டைம்ல இங்க இவ்ளோ கூலா ஆஹ் இருக்கே ஆச்சார்யம் தான் '

'ஹ்ம்ம் ஆமா'

'உங்களுக்கு நிக்க கஷ்டமா இருந்தா அந்த ஸ்டோன் பெஞ்ச்ல உட்கார்த்துங்கோங்க '

'இல்லை வேண்டாம் '

'இந்த occationala typicaly என்ன பேசன எனக்கு தெரியல, I am not prepared enough....'

'that's ok'

'நீங்க ஏதாவது பேசலாமே, நானே பேசிட்டு இருக்கேன்...'

'அது....'

'ஏங்க எனக்கும் தான் nervouse ஆஹ இருக்கு அதுக்குன்னு நானும் உங்கள மாதிரியே ஷர்ட் button எல்லாம் பிச்சி எடுத்தா நல்லா இருக்காதே'

சேலை முந்தியின் நூலை பிரித்து, விளையாடி கொண்டிருந்தவள் அவன் கேலியில், அடக்க முடியாமல் சிரித்தாள். அவள் சிரிப்பு அவனையும் தொற்றி கொள்ள, சேர்ந்து சிரித்தவர்கள் முடிக்கும் பொழுது முன்பிருந்த விலகல் குறைந்திருந்தது. இப்போதாவது ஏதாவது பேசேன் என அவன் கண்களை பார்த்துநின்றான்.

மெதுவாய் வாய் எடுத்து 'பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்றால்

அவன் பதில் எதுவும் சொல்லாமல் பார்க்கவும் 'முதல்ல இதுதான் சொல்லணும் நெனச்சேன், நீங்க பேசவும், அப்படியே...'

எதிர்பாராமல் வந்ததுதான் ஆனாலும் வருடத்தின் முதல் வாழ்த்துக்கு பதில் சொல்ல சற்று சிரமப்பட்டு போனவன் ' ஹ்ஹா தேங்க்ஸ், ஆனா நாளைக்கு தான்... '

அவன் முடிக்கும் முன்னே ' இன்னைக்கும் தான், Star birthday '

ஆனந்த அதிர்ச்சியில் இருந்து மீள, முழுதாய் ஒரு நிமிடம் தேவையாய் இருந்தது, 'அது எப்படி உங்களுக்கு ?' கேள்வியை முழுதாய் முடிக்க மறந்தான்.

'அது உங்க ஜாதகம் கொடுத்தாங்களே அதுல இருந்ததே'

'ஐய்யயோ அதுல இன்னும் என்னலாம் இருந்துச்சு என்னக்கு தெரியலையே' போலியாய் கவலைப்பட்டான்

லேசாய் சிரித்தாலும் ' அதுல வேற ஒன்னும் எனக்கு புரியற மாதிரி இல்ல ஆனா............'

'ஆனா?'

'அது ஒன்னுமில்ல, நீங்க சொல்லுங்க வேற ஏதும் கேட்கணுமா? '

' வேறயா? நான் இன்னும், ஒன்னுமே கேக்கலையே '

'இல்ல, என்ன பேசனு தெரியலைனு சொன்னீங்களே, ஏதாவது கேக்கணுமா கேளுங்க.. I don't want to repeat what you already know...'

'ஹ்ம்ம் உண்மையா சொல்லணுனா , எனக்கு உங்க பேர தவிர ஒன்னும் தெரியாது.. I just came blank to meet you'

இப்போது அதிர்ச்சியாவது அவள் முறையாயிற்று ' ஏன், எப்படி...உங்க அக்கா , ஒன்னும் சொல்லலையா ?'

'ரஞ்சியா , அவ என்ன சொல்லனும்' , அட கடவுளே என்ன பேசினாலோ, தெரியலையே..

'ஹ்ம்ம் நாங்க ரொம்பே நேரம் பேசினோம், அதுதான் உங்களுக்கும் எல்லாம் தெரியும்னு நெனச்சிட்டேன் '

'எல்லாம் தெரியும்னா, என்னெல்லாம் ?'

'அது...தப்பா எடுத்துக்க கூடாது சரியா'

'பரவாயில்ல...சொல்லுங்க'

🍬§§§§§§§§🍭 இன்னும் இனிக்கும் 🍭§§§§§§§§🍬

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top