🌻💮ʕ•ε துளி 09 ε•ʔ💮🌻
வார நாளிதழ் ஒன்றில் பாதி கவனமும் , இருபுறம் மூடியிருந்த அறைகதவுகளில் மீதியும் இருக்க வாணி, நடு ஹாலில் அமர்ந்திருந்தார் யோசனையுடன்.. இரண்டுபேரும் நடந்துக்கிறந்தெல்லாம் ஒரே மாதிரிதான் ஆனா அவன் செஞ்சா இவருக்கு, இவர் சொன்னா அவனுக்கு கோவம் மட்டும் வந்திரும், நடுவுல நம்ம நிலைமை தான் கஷ்டம்
ரேகாவின் வீட்டில் ரிஷியின் கேள்விக்கு அவனை கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் பேசிய சுந்தரராஜன் அங்கிருந்து கிளம்பிய அடுத்த நிமிடம் அவரது அர்ச்சனையை ஆரம்பித்திருந்தார் காருக்குளேயே...
'நீ என்னதாண்டா நெனச்சிட்டு இருக்க, உன் இஷ்டத்துக்கு இதுதான் எங்க முடிவு, வீட்டுக்கு வாங்க அது இதுனு நீயே சொல்லிட்டா, அப்புறம் பெரியவுங்கன்னு நாங்க ஏன் இருக்கோம்..கொஞ்சமாவது அடுத்தவுங்க முன்னாடி மரியாதை கொடுத்தியா எனக்கு?'
'அப்பா மரியாதை கொடுக்கலைங்கிறதெல்லாம் பெரிய வார்த்தை. மனசில தோணுனத சொல்லணும்னு நினைச்சேன், வேற மாதிரி யோசிக்காதீங்க '
'உனக்கு தோணுனத பேச அது நம்ம வீடு இல்லடா.. அந்த வீட்டு மனுசங்க என்ன நினைப்பாங்க..எதையும் பொறுமையா சொல்லணும்....கண்டிப்பா நம்மள இனிமே மதிக்கமாட்டாங்க '
'எப்படி வீட்டுக்கு போய் நாலு நாள் கழிச்சு லெட்டர் போடலாம்னு சொல்லவறீங்களா? இல்ல சும்மா பொழுதுபோக்குக்கு வந்தோம்னு எல்லாத்தையும் மறந்துரலாம்னு நினைச்சீங்களா... இதுக்குதான் இங்க வரதுக்கு முன்னாடி நான் நூறு தடவை கேட்டேன்..எல்லாம் என் இஷ்டம்னு சொல்லிட்டு இப்போ மாத்தி பேசுனா என்ன அர்த்தம்?'
இதுவரை அப்பாவும் மகனும் பேசிக்கொள்ளட்டும் என அமைதியாக வந்த வாணி, ..காரில் அவர்களோடு மற்றும் ஒருவர் இருப்பதை மறந்து பேசிக்கொண்டிருப்பதை இருவருக்கும் சூசகம உரைத்தவர்
'எதையும் மாத்திப்பேசல ..' என திரும்ப ஆரம்பித்த சுந்தர்ராஜனை பேச்சை நிப்பாட்டுமாறு தோளை பற்றினார்..
அடுத்த சில நிமிடத்தில் ..'இனிமே எப்போ போய் சமைச்சு சாப்பிடறது எனக்கு பசிக்குது இங்கேயே சாப்பிட்டு போகலாம்' என பொதுவாக உரைத்து வண்டியை உணவகத்தில் நிறுத்தியவன் அவர் பக்கம் திரும்பவும் இல்லை அதற்குமேல் இருவரும் பேசிக்கொள்ளவுமில்லை, வழியில் ஜெயந்தியை வீட்டில் விட்டுவிட்டு வந்தவர்கள்... வீட்டிற்குள் நுழைந்தவுடன் இருவரும் ஆளுக்கொரு அறைக்குள் சென்று பூட்டி கொண்டனர்
செய்வதற்கு ஒன்றுமில்லாமல் தூக்கமும் வராமல் மகனையும் கணவனையும் எண்ணி வருந்தி கொண்டிருந்தார் வாணி.. லேசுல பேசிமுடிச்சிருக்கலாம், சத்தம் போட்டு கெடுத்துகிட்டாரு....இது சரியாக எத்தனை நாளு ஆகா போகுதோ என்று எண்ணியவர் ரிஷியின் அறை கதவு திறப்பதை கண்டு கொஞ்சம் ஆறுதல் அடைந்தார்...
தூங்கியிருப்பான் போல, கண்ணெல்லாம் சோர்ந்திருந்தது. வெளியே வந்தவன் நேராக சமையலறைக்கு செல்ல, தாய்மனம், பிள்ளைக்கு பசிக்குதோ என்ற எண்ணத்தில் வேகமாய் எழுந்து வாணியும் அவன் பின்னே சென்றார், அவர் எண்ணம் சரி என்பது போல அங்கே ரிஷியும் அடுப்பை பற்ற வைத்து பாலை அடுப்பிலேற்றிருந்தான்..
'என்னப்பா பசிக்குதா, எதாவது டிபன் பண்ணட்டா ?'
'ப்ச்..வேண்டாம்மா, காபி சாப்பிலாம்னு வந்தேன், நீங்க தூங்கலையா ?'
'இல்ல தூக்கம் வரல.. நீ தள்ளு நா போட்டு தரேன் '
'காபி தானே, நானே போடுறேன் உங்களுக்கு வேணுமா ?'
அவனை பார்த்தவாறே அருகிலிருந்த சேரில் அமர்ந்தவர் 'சரி கொடு' என்றார்
அவருக்கும் ஒரு கோப்பையை எடுத்தவன், அன்னையின் ருசிக்கேற்ப இனிப்பையும், டீகாசனையும் கலந்து கொடுத்து விட்டு தனதை பருகினான்
வழக்கத்தை விடவும் மகனின் அமைதி உறுத்த 'என்ன ரிஷி அப்படி என்ன யோசனை, அப்பா சொன்னதை நெனச்சிட்டு இருக்கியா?' என்றார்
'அது இல்லமா, வேற ஒன்னு நெனச்சேன் '
'வேறென்ன? ரேகா வீட்டுல என்ன சொல்வாங்களோனு யோசிக்கிறியா, அவனுங்க சம்மதம் சொல்லுவாங்கனு தான் எனக்கு தோணுது '
'அது அவுங்க இஷ்டம் .. எங்க ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட அஞ்சு வயசுக்குமேல வித்தியாசம் இருக்கே எல்லாம் சரியாய் வருமான்னு யோசிக்கிறேன்'
வாணி 'அதிலென்னடா இருக்கு..இது வழக்கம் தானே எல்லா எடத்துலேயும்..' என
'இல்லம்மா, இப்போல்லாம் எல்லாரும் ஈஸியா அப்டி செய்யறதில்ல..நிறைய practical difficulties இருக்கும்னு feel பண்ணுறாங்க'
'மத்தவுங்க யோசிக்கறதா விடு உனக்கு அப்டி தோணுதா ?'
'முழுசா இல்லைனு சொல்ல முடியாதுல'
'ஏன் முடியாது...வேற எங்கேயும் போகவேண்டாம் ரஞ்சியும் மாப்பிள்ளையும் உனக்கு தெரியாதா, அவுங்கள விடவா உனக்கு உதாரணம் வேணும்'
அக்கா மாமாவை நினைத்தவுடன், ரிஷியின் முகத்தில் மென்னகை பூத்தது..வாணி சொல்வதிலும் உள்ள உண்மை புரிந்தது கூடவே ரஞ்சி தன்னைவிட ஏழு வயது பெரிய ஒருவனை காதலிப்பதாய் சொன்ன பொழுது இதே வீட்டில் அவனது அப்பாவிற்கும் அத்தைக்கும் அதே வயதை வைத்து நடந்த உரையாடலும் அவனுக்கு மறக்கவில்லை.
ஆனால் ரஞ்சனியும் அவளது கணவன் சந்திரனும் இவர்களது கவலையும் பேச்சும் சுத்த வீண் என முதல் ஓராண்டுக்குள் அனைவருக்கும் சொல்லாமல் சொல்லியிருந்தனர் அவர்களது அந்நியோனத்தில்.
தன் காதல் மனைவிக்கு முன் தனது வயதோ மெத்தபடிப்போ ஒன்றுமேயில்லை என்பதுபோல் தான் சந்திரன் முதல் நாளிலிருந்து நடந்துகொண்டார், அவளது சந்துவையும் இவரது ரஞ்சுவையும் இந்த குடும்பமும் ரகிசியமாய் ரசிப்பது தான். மொத்தத்தில் அக்காவிற்கு மட்டுமல்லாமல் தம்பிக்கும் சந்திரன் ஒரு காதல் இளவரசனாக இருந்தார் எனலாம். மாமா கிட்ட பேசணும் என எண்ணியவன் வாணியிடம்
'நீங்க சொல்லுறது உண்மை தான், வயசு ஒன்னும் பெருசில்ல...ஆனா நம்மள மாதிரியே அவுங்களும் நினைச்சா சரிதான்' என்றான்
காலியான காபி கோப்பைகளை அலம்பியவாறே, வாணி 'இந்த வித்தியாசம் உனக்கு தான் இன்னைக்கு தெரியும். அவங்களுக்கு, நாம ஜாதகம் கொடுத்த அன்னைக்கே தெரிஞ்சிருக்கும், அவுங்க அப்படி நினைக்கலைனு இதுலே தெரியலையா, நீ இத பத்தி இதுக்கு மேல யோசிக்காத..' என்றார்
ஜாதகம் என்றவுடன் ரேகா சொன்ன வாழ்த்துதான் அவனுக்கு ஞாபகம் வந்தது, உடனே 'அம்மா கோவிலுக்கு போலாமா ?' என் கேட்டான்
அதிசயமாய் ரிஷி கோவிலுக்கு அழைத்ததில் சந்தோஷமானவர் ஏன் எதுக்கு என கேள்விகள் கேட்டு குழம்பாமல் 'போலாம் கண்ணா..நீ கிளம்பு ' என அனுப்பிவைத்தார்.
அவர்கள் திரும்ப ஹாலுக்கு வந்த பொழுது சுந்தரராஜன் டிவி ரிமோட்டை தேடி கொண்டிருந்தார், டைனிங் டேபிள் மேலிருந்ததை கையில் எடுத்தவன், அவர் கண்ணில் படுமாறு சோஃபாவின் மீது வீசி விட்டு, உடை மாற்ற சென்றான்
பின் வந்த வாணி ' ஒரு வழியா அந்தபுரத்திலிருந்து வெளிய வந்தாச்சா, புது பொன்னு நெனப்பு ஆனா ஊனா உள்ள போயி கதவை அடச்சிக்கிறது, உங்களல நான் இன்னும் போயிட்டு வந்த சேலையக்கூட மாத்தல'
சுந்தராஜனும் சலிக்காமல் 'என்ன அம்மாவும் மகனும் ரொம்ப நேரமா ஒரே தீவிர உரையாடல் போல நான் வந்தத கூட கவனிக்காம'
'ஒரு அஞ்சுநிமிசம் ஆயிருக்கும், ஒரு காபி போட்டு குடிச்சோம் அவ்ளோ தான், உங்களுக்கு வேணுமா?'
அவர் வேண்டாம் எனவும் ,' சரி கொஞ்சம் சீக்கிரம் கிளம்புங்க, கோயிலுக்கு போலாம்..'
'எதுக்கு இப்போ கோவிலுக்கு?' என்றார் சற்று எரிச்சலுடன்
'இப்போ உங்களுக்கு இங்க என்ன வேலை, நாம கூப்பிட்டா கூட வரமாட்டான், அவனே அதிசயமா கேக்குறான் போயிட்டு வரலாம்' என்றுவிட்டு தானும் கிளம்ப சென்றார்
வாணி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த மீதி பூவை தேடி கொண்டிருக்க, தயாராகி வாசல் வந்த சுந்தராஜன் அங்கே ரிஷி பைக்கை துடைத்து கொண்டிருப்பதை கண்டவுடன் கோவமாக, வீட்டின் மாற்று சாவியை கையிலெடுத்தவர் வீட்டுக்குள் நோக்கி ' நான் ராகவனை பார்க்கபோறேன், நைட் எனக்கு சாப்பாடு வேணாம்' என உரக்க சொல்லிவிட்டு விடு விடுவென நடந்து வெளியே சென்றார்
இவரு என்ன உளறாரு, கோவிலுக்கு போலாம்னு சொன்னேனே என எண்ணியவாறே வாணி வெளியே வரும் முன் அவர் வாசலை கடந்து தெருவில் இறங்கி இருந்தார் 'ஏங்க ஏங்க ' என்ற வாணியின் குரலை அவர் காதில் போட்டு கொள்ளவேயில்லை
வந்த கோவத்தில் ரிஷியின் முழங்கையில் அடித்தவர் 'ஏன்டா எப்படி இம்ஸை பண்ணுற, நான் அவரையும் கோவிலுக்கு வர சொன்னேன் நீ இப்போ போய் பைக்கை எடுத்து வச்சிருக்க..பாரு நல்லா கோவிச்சிட்டு போறாரு.. காலைல நடந்ததை சரி பண்ணலாம்னு நெனச்சேன்..இப்போ இதுவேற '
'எனக்கு தெரியதுமா..அப்பா கோவிலுக்கு வர ஓவரா பேசுவாரே..பக்கத்துல தானேனு நான் பைக்கை எடுத்தேன் ' என்றான் எதார்த்தமாக
'சரி விடு, நான் வீட்டை பூட்டிட்டு வரேன், இப்டியே நின்னா நேரமாயிரும் '
ரிஷி வண்டியை அந்த மீனாட்சி சுந்தரேசன் திருக்கோவிலின் பாதுகாப்பு வளாகத்துக்குள் நிறுத்திவிட்டு வாணியுடன் கோவிலுக்குள்ளே நடந்தான், அந்த கோவில் வாணியின் மனதிற்கு பிடித்தமான இடம், மீனக்ஷி அவருக்கு இஷ்ட தெய்வம்...வீட்டில் இல்லாவிட்டால் அவர் பெரும்பாலும் இருப்பது இங்கே தான், அதை தெரிந்துதான் இன்றும் ரிஷியும் அங்கே அழைத்துவந்திருந்தான்
அப்பனையும் அம்மையையும் ஒருசேர மனதில் நிறுத்தி எண்ணமெல்லாம் சித்தமாக உள்ளம் உருகி வேண்டிகொண்டார் வாணி தாயே மீனாக்ஷி அவனுக்கு மனசில அந்த பொண்ணு நல்லா பதிஞ்சு போச்சு, இந்த இடம் எங்களுக்கு தழைஞ்சு வரணும், கல்யாணம் நல்லபடியா நடந்துட்ட்டா உனக்கு பட்டுசாத்துறேன் தெய்வமே
ரிஷிக்கு வேண்டுதல் என ஒன்றும் இல்லை, வேண்டி கொள்ளவும் தோன்றவில்லை, அவனை பொறுத்தவரை கோவிலுக்கு வந்தால் மனது நிலைப்படுவதை உணர்த்திருக்கிறான், இன்றைக்கு அவனது தேவை அதுதான்....சந்நிதியின் அமைதியையும் இறைவன் இறைவியின் முகத்திலிருந்த கருணையும் மனதில் நிறுத்தியவாரே அமைதியாக நின்றான்..
கண்மூடி நின்ற தாயிடம் அசைவு தெரிந்தவுடன், அவர் பக்கம் பார்த்தவன் அவர் பின்ன மற்ற சந்நிதிகளை தரிசித்து, இருவரும் கோவில் மடம்பத்தின் படிகளில் அமர்ந்தனர்...
கீழே கிடந்த அரசமர இலையை கையில் எடுத்தவன், அதை விரலால் நீவி நகத்தால் இழை இழையென பிரித்துக்கொண்டிருந்தான், மனதில் நின்றவளின் நினைவில்..
மரங்கள் அசையும் பொழுதெல்லாம் எழும்பிய தீபநெருப்பின் ஜுவாலையில் மனதை லயித்திருந்தவர் மகனை பார்த்து 'திடீருனு ஏன் கோவிலுக்கு கூப்பிட ரிஷி ?' என்றார் அவன் மனதை புரிந்துகொள்ள
'இன்னைக்கு எனக்கு நட்சத்திர பிறந்தநாளாமா ?' என்றான் சிறுபிள்ளையின் குறுகுறுப்போடு
சிறுவயதிலிருந்தே ரிஷிக்கும், ரஞ்சிக்கும் பிறந்த நாள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை, மற்ற குழந்தைகள் பிறந்த நாளன்று பள்ளி செல்ல அதுவேண்டும் இதுவேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்யும் வயதிலேயே புது துணியை கோவிலுக்கு சென்று வந்தவிடவுன் மாற்றிவிட்டு சீருடையில் தான் பள்ளி செல்லுவாள் ரஞ்சி.. ரிஷிக்கும் அதே பழக்கம் தான் கூடவே யாருக்கும் அவனது பிறந்தநாள் தெரியக்கூடாதென கவனமாய் இருப்பான் ரிஷி..
அப்படிப்பட்டவன் இப்படி ஒரு கேள்வி கேட்டவுடன் வாணிக்கு ஏகத்துக்கும் சந்தோசமாய் இருந்தது மகன் ஊரிலுள்ள எல்லா குழந்தைகள் போல சின்ன சின்ன சந்தோசங்களை கவனிக்க ஆரம்பித்தது போலிருந்தது,
'ஆமா கண்ணா, உனக்கு யாரு சொன்னா? என் மருமக தானே?' என்றார் அதே குறுகுறுப்புடன்
லேசான வெக்க சிரிப்புடன் ரிஷி 'ஆமா, ரேகாதான் விஷ் பண்ணா..' என்றான்
தன் தலைக்கும் மேல் ஓரடி வளர்ந்திருந்த மகனை நேற்று பிறந்தவன் போல கணம் வருடி முத்தமிட்டு, 'ஹ்ம்ம் பரவாலையே ஒரு நாளுக்கே நல்ல மாற்றம் தான்... நல்ல பொண்ணுடா .. எனக்கும் உன்ன மாதிரிதான் பார்த்த ஒடனே மனசில ஓட்டிகிட்டா' என்றார்
தலையசைத்து ஆமோதித்தவன் 'ம்ம்ம், நாம வேற ஒன்னும் செய்ய வேண்டாம்ல ?' என்றான்
'நாம என்ன செய்யணும்', என்றார் வாணியும் புரியாமல்
'இல்ல இனி அவுங்களா எதுவும் சொன்னாத்தானே.......அத சொன்னேன்', என்றவன் அவள் முகம்பார்க்க
அதற்குள்ளேயே மகன் ஏங்குவதை புரிந்துகொண்டு, சொல்ல மறந்ததை சொன்னார் 'அவுங்க அப்பா போன் பண்ணாங்கடா'
'எப்போ? என்கிட்டே சொல்ல?' வேகமாய் வந்தது அவன் கேள்வி..
'இங்க வரத்துக்கு கொஞ்சம் முன்னாடி தான், அப்பாக்கு கால் வந்துச்சு, நாளைக்கு சாயங்காலம் நம்ம வீட்டுக்கு வாரங்களாம், இங்க வந்து சொல்லிக்கலாம் இருந்தோம்' என்றார்..
'ஓஹ், அப்போ நான் இருக்கணுமா வீட்டுல..' ரொம்ப கவனமாய் கேட்டான்
'இருந்தா நல்ல இருக்கும், ஆனா கண்டிப்பா ரேகாவ கூட்டிட்டு வரமாட்டாங்க எதிர் பார்த்து ஏமாந்துடாத..' என்றார் சின்ன கிண்டலுடன்
'தெரியும்மா, ஆனா நாளைக்கே பதில் சொல்லுவாங்களா' என்றான் தவிப்புடன்..
'ரிஷி எல்லாம் நடக்கவேண்டிய நேரத்துல நல்லபடியா நடக்கும், நடுவுல பேசாம இருந்தா, எதுவும் லேட்டா ஆகாது, நீ கொஞ்சம் பொறுமையா இருக்கனும்' என வாணி சொல்லும் பொழுதே கோவில் மணி அடித்தது
ஒரு அர்த்தமுள்ள பார்வையை அன்னையிடம் தந்தவன், அவர் சொன்னதை மட்டும் செய்வதென எண்ணம் கொண்டான்
🍬§§§§§§§§🍭 இன்னும் இனிக்கும் 🍭§§§§§§§🍬
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top