💜🌸^o^ துளி 08 ^o^🌸💜
"sorry அது நாங்க உங்கள , I mean உங்க Social profiles எல்லாம் last two weeks ஆஹ கொஞ்சம் follow பண்ணிட்டு இருந்தோம்...."
'ஓஹ Cyber stalking அப்படித்தானே ...'
'நான் தான் தப்பா எடுக்காதீங்கன்னு சொன்னேன்ல , அப்புறம் மோதேலேயே sorry வேற சொல்லிட்டேன் ' என அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு ரேகா சொல்ல
ரிஷிக்கு அவள் செய்கையில் சிரிப்பு வந்தாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் 'இல்ல தப்பில்ல ஆனா, நான் அதுலேயெல்லாம் பெருசா ஆக்ட்டிவா இல்லையே, உங்களுக்கு அதுல என்ன தெரிஞ்சது?'
'ஹ்ம்ம் ஆமா, .நாங்க மொத்தமாவே தெரிஞ்சுக்கிட்டது அதுதான்.... ஒரு போஸ்ட் கூட இல்ல recent times ஆஹ, எல்லாமே tagged போஸ்ட் இல்லைனா போட்டோஸ்.. அதுலேயும் உங்க insta account password உங்களுக்கு மறந்துபோச்சா?, புதுசா கட்டுன வீடுமாதிரி சுத்தமா இருந்துச்சு'
'நல்ல கண்டுபிடிப்புதான், எப்போவோ எதுக்கோ ஓபன் பண்ணேன் அப்பறம் நிஜமாவே மறந்துட்டேன் .. சரி...நாங்க நாங்கனு சொல்லுறீங்களே அது யாரெல்லாம்...'
திருடறப்போ மாட்டிக்கொண்ட நிலைமை தான் ரேகாக்கு, ஆர்வக்கோளாறுல உளரி வச்சிட்டேன் என விரலால் முகத்தை மூடிக்கொண்டு 'அது நான், அண்ணா, என் close friend அப்புறம் என் roommates '
' ஏன் உங்க ஹாஸ்டல்ல மத்தவுங்களுக்குகெல்லாம், நிறைய வேலை இருந்துச்சா....?'
'ஹே ஓட்டாதீங்கபா , இதெல்லாம் இப்போ சகஜம் தானே, இல்லைனா, எப்படி உங்கள தெரிஞ்சுகிறது'
இவ்ளோ நேரம் வெக்கப்பட்டு இருந்த பொண்ணு இவ்ளோ சீக்கிரமா, சகஜமா பேசறது ரிஷிக்கு பிடித்துப்போக 'அது சரி...வேற என்னலாம் தெரிஞ்சுக்கிட்டிங்க....அப்புறம் என் ப்ரொபைல் டீடெயில்ஸ் எல்லாம் எப்படி கிடைச்சது...?'
'அதெல்லாம் பெரியவிஷயமில்லங்க ...south sideல ரிஷிவர்தன் ஒன்னும் அவ்ளோ common name இல்லையே , அதோட உங்க அப்பா தான் உங்க linkendIn link share பண்ணாங்க, பத்து நிமிசத்துல எல்லாம் கிடைச்சிருச்சு'
மொத்த குடும்பமம் நம்மள மாட்டி வச்சிருக்காங்க என எண்ணியவன் ' ஹ்ம்ம் point தான் but இதுல ரஞ்சி எப்படி வந்தா?'
'அதுலதான் நாங்க கொஞ்சமா கோட்டைவிட்டுட்டோம், உங்க அக்கா வீடு கிரஹப்பிரவேசம் பங்க்சன் போட்டோஸ்ல, ஒரு கேண்டிட் ஷாட் எல்லாரும் யாரையோ பார்த்து ஒண்ணா சிரிக்கிற மாதிரி, ரொம்பவே நல்ல இருந்துச்சி...தெரியாம like பண்ணிட்டேன் போல, உங்க அக்காகிட்ட மாட்டிகிட்டேன்', என வெட்கப்பட்டுட்டே சொன்னவளை பார்த்தவன்
இப்போது நிஜமாவே வாய்விட்டு சிரித்தான் ' ரஞ்சி எப்பவுமே ரொம்ப ஷார்ப் நீங்கதான் கண்டுபிடிச்சிட்டாளா..?'
'ஹ்ம்ம் ஆமா, ஒரு 20 25 மினிட்ஸ்குள்ள, மெஸ்சேன்ஜ்ர்ல கால் பண்ணாங்க....அப்புறம் ரொம்பநேரம் உங்களபத்த, உங்க familyல எல்லாரையும் பத்தி அவுங்களே சொன்னாங்க'
'ஹ்ம்ம் அப்போ என்னைப்பத்தி நிறைய தெரியும்னு சொல்லவரீங்க...'
'அப்படியில்ல, என்கிட்டே உங்களப்பத்தி சொன்னமாதிரி உங்க சிஸ்டர் உங்ககிட்டேயும் என்னைப்பத்தி சொல்லிருப்பாங்களே...'
'சொல்லிருப்பா, நான் பேசியிருந்தா... ஆனா நான்தான் எல்லாத்தையும் நீங்கச்சொல்லி கேட்டுக்கலாம்னு பேசாம வந்துட்டேன் '
ரேகா, முதலில் அவன் அவளைப்பற்றி ஒன்றும் தெரியாது என ரிஷி சொல்லியபொழுது , ஏதோ தான் மீது ஆர்வமே இல்லையோ என எண்ணியவள், அவன் அதை எப்படி ஒரு கோணத்தில் எடுக்கிட்டதா சொல்லியதை கண்டு, காணாமல் போயிருந்த நாணம் திரும்பிவந்து ஒட்டிக்கொண்டது. இயல்பாக அவன் கண்ணை சந்திக்கமுடியாமல், கையில் கிடைத்த தென்னங்கீற்றை நார் நாராக பிரித்து விளையாட ஆரம்பித்திருந்தாள்.
'உங்களுக்காக நம்ம ரூம்ல இருக்குற பொருள்ளெல்லாம் ஒழிச்சு வைக்கணும்னு நினைக்கிறேன், வெட்கம் வந்துட்டா நகத்துலேயே ஈஸியா எல்லாத்தையும் கிழிச்சு போட்டுருவீங்கன்னு போலயே'
விளையாட்டுபோல அவன் சொன்னதை கேட்டவள், லேசாக அதிர என்ன அதுக்குள்ள நம்ம ரூம்னு சொல்லிட்டாரு, இன்னும் ஒன்னும் பேசல, முடிவு பண்ணல...
'என்னங்க திரும்பவும் அமைதியாயிட்டிங்க, உங்கள பத்தி நீங்க சொல்லித்தான் கேக்கணும் சொன்னேன், எதுவுமே சொல்லல '
'என்னங்க...இல்ல என்ன சொல்ல '
'என்கிட்ட இப்போ என்ன சொல்லணும்னு தோணுதோ அத சொல்லுங்க. மத்ததெல்லாம் மெதுவா கொஞ்சமா கொஞ்சமா பேசி தெரிஞ்சுக்கலாம் '
'அது... நீங்க எப்படி, எதையோ முடிவு பண்ணிட்டு வந்த மாதிரி பேசுறீங்க..'
'ம்ம்ம், எப்படினு கேட்டா எனக்கும் தெரியல ஆனா எனக்கு இதுதான்னு என் லைப்னு தோணுது, I mean....YOU, உங்கள சொல்லறேன்' என அவள் முகத்திற்கு நேராக விரலை நீட்டி சொன்னான்
ரிஷி சொன்னதை கேட்டவளுக்கு, காதுக்கும் கன்னத்துக்கும் இடையே மின்சாரம் ஓடுனமாதிரி, உடலெல்லாம் தூங்கிக்கொண்டிருந்த சிறு இழைகளெல்லாம், ஒரே நேரத்தில் விழித்துக்கு கொண்டமாதிரி, ஏதேதோ எண்ணம் கண்ணுக்கு பின்னே கனவுபோல் தோன்ற பதில் சொல்லமுடியாமல் திணறினாள். நொடிகள், நிமிடமென கடக்க...
'நா ..நீங்க ரொம்பவே அவசர படுறீங்களோனு தோணுது, உங்களுக்கு என்னப்பத்தி ஒன்னுமே தெரியாம எப்படி..இவ்வளோ பெரிய விசயத்தை முடிவு பண்ணமுடிஞ்சது'
'அது பின்னாடி ஒரு நாள், நம்ம கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா சொல்லுறேன் .... இப்போ சொல்லறது சரியா இருக்காது'
ரேகாக்கு, சிரிப்புதான் வந்தது ' ஏங்க , பொண்ணுபார்க்க வந்துட்டா உடனே கல்யாணம் ஆயிருமா'
என அவள் சொல்லி சிரிக்க ரிஷிக்கு, அவள் சொல்லிலினருந்த நிஜம் அப்போதுதான் புரிய, ச்சே ஆமா நான் ஏன் இதுபோல யோசிக்கவே இல்லை, அடுத்த முட்டாள்தனம், உனக்கு பிடிச்சிட்டா போதுமாடா? அவுங்க அப்பா பொண்ணு பார்க்க வரசொல்லறத்துக்கே ஊரெல்லாம் விசாரிச்சதா அப்பா சொன்னாங்களே, அவுங்க என்ன முடிவு பண்ணுவாங்க தெரியாம இப்டி இங்க உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கியேடா.. அதைவிட இவளுக்கு பிடிச்சிருக்கானு கூட தெரிஞ்சுக்காம உனக்கு கொஞ்சம் ஓவர் காண்பிடென்ஸ் தான்...போச்சு போச்சு...பேசாம இருந்திருந்தா கூட ஒன்னும் தெரியாது, இப்போ இவ சிரிச்ச மாதிரி எல்லாரும் சிரிக்க போறாங்க என தன்னை நொந்துக்கொண்டிருதான்
அதே நேரம், அவன் முகம் உடனே மாறியதை கண்டவுளுக்கு, அண்ணா சொன்ன மாதிரி ஓவரா பேசிட்டோமா அவுங்க முகமே ஒருமாதிரி டல்லா ஆயிருச்சு, லூசு லூசு ஏதாவது ஒழுங்கா பேசி, முதல பழைய மாதிரி சிரிக்கவை... 'சாரி நான் நீங்க ஹர்ட் ஆகுற மாதிரி ஏதும் சொல்லிட்டேனா, நான் பொதுவா நடக்கிறதா தான் சொன்னேன்'
அதற்குள் தன்னை சமாளித்துக்கொண்டு ரிஷியும் ' Its Ok, எனக்கு புரியுது..சரி சொல்லுங்க, நீங்க என்ன பண்றீங்க, என்ன படிச்சிருக்கீங்க'
என்ன ரொம்ப formala பேச ஆரம்பிச்ச மாதிரி இருக்கு, என்னவோ இருந்துட்டு போகுது இப்போ , ஒழுங்கா பதில் சொல்லு ' அது நா B.tech IT Coimbatore KCTல பண்ணேன், அப்புறம் oncampus job.. அங்கேயே மூணு வருசமா, அப்டியே....'
'சென்னையில வீடு இருக்கறப்போ, எதுக்கு வெளிஊர்ல போய் படிச்சு அதுவும் தனியா ஹாஸ்டல்ல இருந்து கஷ்டப்பட்டுட்டு. any particular reason ?
'அது நாங்க அங்கதான் இருந்தோம் இப்போ ஒரு ஏழு எட்டு வருசமாதான் சென்னை , சரியாய் சொல்லனும்னா, அப்பா Commerical taxல இருந்தாங்க, அம்மாக்கு Post Office, பத்து வருசத்துக்கு முன்னாடி அப்பாக்கு சென்னை transfer, அண்ணாவும் அப்போதான் இங்க காலேஜ் ஜாயின் பண்ணிருந்தான். சோ அவுங்க ரெண்டு பெரும் இங்க, நானும் அம்மாவும் கோவைல இருந்தோம். எனக்கு நான் கேட்ட காலேஜ் கிடைச்சிருச்சு அப்டியே ஹாஸ்டல் போய்ட்டேன் அம்மா VRS வாங்கிட்டு சென்னை வந்துட்டாங்க, எனக்கு கோயம்பத்தூர் ரொம்ப பிடிக்கும், அதனால அங்க இருக்கற வரைக்கும் இருக்கலாம்னுதான் '
'ஹ்ம்ம் , இன்டர்ஸ்டிங் ....அப்போ சென்னை வருவீங்களா இல்ல...'
'இப்போவே எப்படி சொல்லுறது...அது பார்த்துக்கலாம்'
'நான் நேரா கேட்டுறவா ? இந்த ப்ரோபோசல் உங்களுக்கு இஷ்டம் இல்லையா? வந்து உங்ககளுக்கு வேற ஏதும் எண்ணம் இருக்கா ?'
ரேகா இதுக்கு எப்படி பதில் சொல்லமுடியும் என பலவாறு யோசித்து 'அதெல்லாம் அப்பாகிட்ட தான் கேக்கணும்..நான் எப்படி சொல்லுறது'
'உங்க அப்பா சொல்லுறது சரி, அது அவரோட விருப்பம் முடிவு..நான் உங்கள கேட்டேன்'
'எனக்கு ஒன்னும் இல்ல எதுனாலும் அப்பா சொல்லுறது தான்'
சிறிதுநேரம் எதுவும் பேசாமல் இருவரும் ஆளுக்கொரு திசையில் பார்த்திருக்க, முடிவாக ரிஷி எங்கோ பார்த்துக்கொண்டிருந்த ரேகாவை பார்த்து 'ரேகா, என்ன கொஞ்சம் பார்க்குறீங்களா?
அவள் திரும்பவும் 'நான் ஏற்கனவே சொல்லிட்டேன், திரும்பவும் சொல்லுறேன் எனக்கு நீங்கதான்னு நான் முடிவு பண்ணிட்டேன், என்னோட முடிவு தான் என் வீட்லேயும்....இனி அடுத்து என்னனு நீங்க தான் சொல்லணும்....சரி சரி நீங்க சொன்ன மாதிரி உங்க அப்பா தான் சொல்லணும், அத அவரு என் பேரன்ட்ஸ் கிட்ட சொல்லிக்கட்டும், ஆனா என்கிட்ட உங்க முடிவை அதாவது உங்க அப்பா என்ன சொல்லறாரோ அத, நீங்க தான் சொல்லறீங்க..
தனது வேலெட்டிலிருந்து எடுத்த கார்டை அவளிடம் நீட்டியவாறே 'அதுல என் நம்பர் இருக்கும், எனக்கு உங்க கிட்ட இருந்து மட்டும் தான் அதை கேக்கணும், அது என்ன பதில்நாளும் சரி, நான் வெயிட் பண்றேன்.. இப்போ கீழ போவோமா ?'
ரேகா தலையசைத்து அவன் பின்னோடு வர, அவளோடு இறங்கி கீழே வீட்டினுள் வந்தான்.
போகும்போது இருந்த தயக்கம், கலக்கம் எல்லாம் மறைந்து தெளிவாய் வந்த ரிஷியையும், உற்சாகதோடு சென்று, இப்போது ஏதோ குழப்பத்தில் இருந்த ரேகாவையும், அரவிந்த் மாறி மாறி பார்த்துக்கொண்டிருக்க, லலிதா ரேகாவை உள்ளே செல்ல சொன்னார்.
ரேகா போகமனமில்லால் தலையை குனிந்தவாறே, உள்ளே செல்ல அடிமேல் அடிவைத்து நகர....அவளை, அவள் மனதை கண்டுகொண்ட ரிஷிக்கு திரும்பவும் லேசாக புன்னகை துளிர்த்தது
அந்த சிரிப்பு முகத்தில் மாறாமல், 'அங்கிள் நான் உங்ககிட்ட பேசணும், அதனால ரேகா இங்கேயே இருக்கட்டுமே ' என சீனிவாசனை பார்த்து நேராக சொல்ல மொத்தபேருக்கும் அவன் பேசியது கொஞ்சம் ஆச்சர்யமா இருந்தது..
வாணி மகன் முகத்திலிருந்தே அவன் மனதை கண்டுகொண்டவர், சுந்தராஜனை ஒருமுறை கண்ணால் பார்த்து அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருக்குமாறு செய்கை செய்தார். அனைவரும் ஒரே முகமாய் ரிஷியை பார்க்க, அவனோ,
'நான் ரேகாகிட்ட அவுங்க டெசிஷன் கேட்டேன், அவுங்க நீங்க சொல்லறதுதான் முடிவுன்னு சொல்லுறாங்க. நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு தெரியல..... ஆனா அதுக்கு முன்னாடி, இதோ இன்னைக்கு நாங்கெல்லாம் இங்க வந்த மாதிரி நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வாங்க, அதுக்கு அப்புறம் நீங்க எதுனாலும் முடிவு பண்ணிக்கோங்க...
ஆனா எங்களுக்கு இப்போவே இந்த கல்யாணத்துக்கு முழு சம்மதம் தான்...
நீங்க என்னப்பா சொல்றீங்க?'
என சீனிவாசனிடம் ஆரம்பித்து சுந்தராஜனிடம் முடித்தான் ரிஷி.. எல்லாரிடமும் ஒரு பொதுவான ஒத்தத்ததிர்வு தெரிந்தது....
அதே அதிர்வில் ரேகா ரிஷியை பார்க்க, ரிஷி யாரும் காணாமல் அவளுக்கு மட்டுமேனே ஒரு கண்ணசைத்தான்.
🍬§§§§§§§§🍭 இன்னும் இனிக்கும் 🍭§§§§§§§🍬
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top