பதில்!
"அப்பா! நீங்க என்ன ஏமாத்திடீங்க!" கோவமாய் கடிந்து கொண்டான் கவின்!
"ஏன் பா! கோவம் வர அளவுக்கு என்ன பண்ணிட்டேன் அப்பா?!" கேட்டார் சமையலரையிலிருந்து வெளியே வந்த ரமேஷ்!
"நான் என்ன கேள்வி கேட்டாலும் Alexa பதில் சொல்லும் ந்னு சொன்னீங்க! அது பொய்!" என்றான் விளக்கேற்றிக் கொண்டிருந்த அப்பாவிடம்!
"நீ என்ன கேட்டு Alexa பதில் சொல்லல?!" நெருப்பு குச்சியை ஊதிக்கொண்டே சுவற்றிலிருந்த படத்தைப் பார்த்தபடி ரமேஷ் கேட்க,
"அம்மா சாமிகிட்டேந்து எப்போ வருவாங்க கேட்டேன்! 'Sorry I dont know that' ந்னு மட்டும்தான் சொல்லுது!" என்று கவின் கூறியதற்கு சிரிப்பதுபோல் சுவற்றில் ஓவியமாய் சிரித்துக்கொண்டிருந்தாள் ஓவியா!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top