இசை!
"அம்மா are you sure?! எனக்கென்னவோ நான் 'இசை தமிழ் நீ செய்த' பாட்டே பாடலாமோன்னு தோனுது" குழப்பத்தோடு கேட்டான் ஶ்ரீராம்!
"உன் Voice trainer சொன்னாரு ல?உனக்கு அந்த range எட்டல டா! ரொம்ப யோசிக்காம இந்த ஜீரக தண்ணிய குடி!" அம்மா அவன் கையில் flask ஐ தினித்தாள்!
"சென்னைக்கே கூட்டம் கண்ணாபின்னான்னு இருக்கும் மா! நான் அடுத்த roundக்கு select ஆனாலே பெருசு! கத்தாம voice ஆ save பண்ணிக்கிரேன்!பேசாம வரேன்!"
"ஆமா டா! Taxi ல வந்துருக்கனும்! Train ல வெளி காத்து pollution லாம் உன் குரல பாதிக்காம இருக்கனும்!! கடவுளே final 30 singersல இவன் வரணும், நீ தான் பாத்துகணும் !" என்று அம்மா பயப்படும் போது இருவருக்கும் கேட்டது
"இசை தமிழ் நீ செய்த அரும் சாதனை!.."
ரயில் பிச்சைக்காரனின் அந்த பிசிரு தட்டாத கணீர் குரல்!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top