அம்மா தேடுவாங்க!

"அம்மா!!!! இந்த சைமன பாரு!" ஓவென அழுதபடியே வீட்டிற்குள் ஓடி வந்தாள் சிமி!

"ஏன் சிமி அழர? சைமன் என்ன செஞ்சான்?!" ஜூலி கேட்டாள்.

"நானும் அவனும் தோட்டதுல விளையாடிட்டு இருந்தோம்! அப்போ ஒரு மரவெட்டை வந்துச்சு! சைமன் அத கையால அமுக்கினான். அது நசுங்கி செத்துப்போச்சு!" கண்ணீர் மல்க கூறினாள்!

"சைமன்! அப்படி பண்ண கூடாது! பெரிய பாவம்!" தன் அம்மா திட்டவும்,

"ஏன் mummy பாவம்! நான் fun க்கு தானே பண்ணேன்!" குழப்பமாய் கேட்டான் சைமன்.

"உனக்கு Fun. அதோட mummy அத காணோம் ந்னு தேடுவாங்களே?!"விளக்கினாள் ஜூலி.

பேசிக்கொண்டிருக்கையில் "ஜூலி!!! dinnerக்கு Chicken Piccata கேட்டேனே? Readyஆ?!" என்றபடி உள்ளே வந்தார் தாமஸ்.

"Mummy.. Chicken Piccata ஓட chickenஅ அவுங்க Mummy தேட மாட்டாங்களா?" சைமன் கேட்க...

"எனக்கு வேணாம்.. பசி முத்திப்போச்சு" என கூறி உண்ணாமல் கை கழுவினார் தாமஸ்!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top