9 நீ தானா அந்த குயில்?
9 நீ தானா அந்த குயில்?
தன்னைக் காப்பாற்றிய பெண், மதுமிதாவாக இருப்பாள் என்பதை துளியும் எதிர்பார்க்காத ரிஷி, தன்னை மறந்த நிலையில் அவளை பார்த்துக் கொண்டு நின்றான். அவனும், அவன் நண்பர்களும் செய்த அத்தனை அட்டூழியங்களையும் மறந்து, அவள் உண்மையிலேயே அவனை காப்பாற்றினாளா? அவனால் அதை நம்ப முடியவில்லை.
அவன் வைத்த கண் வாங்காமல் மதுமிதாவை பார்த்துக் கொண்டு நின்றதை கண்ட பாலா, அவனது தோளைத் தட்டினான்.
"மச்சான், அவ நம்ம காலேஜ்ல படிக்கிற மதுமிதா தான். எதுக்காக அவளை இப்படி பார்த்துக்கிட்டு நிக்கிற?"
சுயநினைவு பெற்றவனாய், எஸ்கலேட்டரை விட்டு கீழே இறங்க இருந்த மதுமிதாவை நோக்கி ஓடினான் ரிஷி. திடீரென்று தன் முன்னாள் தோன்றிய ரிஷியை பார்த்து, பின்னோக்கி நகர்ந்தாள் மதுமிதா. மூச்சு வாங்க அவளை பார்த்து புன்னகை புரிந்தான் ரிஷி. அவள் அங்கிருந்து செல்ல நினைக்க அவளது வழியை மறித்து நின்றான். குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள் மதுமிதா. அதற்குள் அவனது நண்பர்களும் அவனிடம் வந்து சேர்ந்தார்கள்.
"அது நீ தானா?" என்றான்.
"யாரு?"
"என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணது நீ தானே..."
அவனை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள் மதுமிதா.
"இல்ல" என்று கூறியபடி அவள் அங்கிருந்து செல்ல முயல, அவள் கரத்தை பற்றினான் ரிஷி.
"என்ன சேட்டை இது? என் கையை விடுங்க" சுற்றும் முற்றும் பார்த்தபடி கூறினாள் மதுமிதா.
"என்னை காப்பாத்தின பொண்ணு நீ தான்னு எனக்கு தெரிஞ்சு போச்சி"
"நான் தான் இல்லன்னு சொல்றேனே"
"நீ பொய் சொல்ற"
அப்பொழுது அங்கு வந்து சேர்ந்தார் அந்த செவிலி.
"ரிஷி, இந்த பொண்ணு தான் உன்னை காப்பாத்தி, உன் கூடவே இருந்து உன்னை அம்மா மாதிரி கவனிச்சுக்கிட்டா"
குட்டி சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது மதுமிதாவிற்கு. ரிஷியின் நண்பர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நீ தானா அந்த குயில்?" என்று சுதாகர் பாடத் துவங்க, மூவரும் சேர்ந்து அதை முடித்தார்கள்.
"இவளே தான்" என்றார் அந்த செவிலி.
"தயவு செய்து நிறுத்துறீங்களா?" என்றாள் மதுமிதா அந்த செவிலியை பார்த்து.
"ஏன் நிறுத்தணும்? இப்போ நான் உண்மையை சொன்னா என்ன தப்பு?" விடாமல் வாதாடினார் அந்த செவிலி.
யாருக்கோ ஃபோன் செய்ய, தனது கைபேசியை எடுத்தாள் மதுமிதா. அதில் அவள் எண்களை அழுத்த முயல, அவள் கையில் இருந்த கைபேசியை பிடிங்கிய ரிஷி, அதில் தன்னுடைய என்னை சுழற்றினான். அவன் செய்கையை பார்த்து வாயைப் பிளந்த மதுமிதா, அதை அவனிடமிருந்து பிடுங்க முயன்றாள். ரிஷியின் கைபேசி, மதுமிதாவின் எண்ணை தாங்கி குரல் கொடுத்தது.
"இது தான் என்னுடைய நம்பர். சேவ் பண்ணிக்கோ" என்று அவளது கைபேசியை அவளிடம் கொடுத்தான் ரிஷி.
அதைப் பெற்ற மதுமிதா, அவனது எண்ணை டெலிட் செய்தாள்.
"எனக்கு உங்க நம்பர் தேவை இல்ல"
"சரி விடு, என்கிட்ட தான் உன் நம்பர் இருக்கே... எனக்கு அது தேவை" என்றான் புன்முறுவலுடன்.
"ஆமாம். யார் ஃபோன் பண்ண போறாங்களோ, அவங்களுக்கு தானே அது தேவை?" என்றான் பாலா ரிஷியை சுட்டிக்காட்டி.
"ஆமாம், உனக்கு ஃபோன் பண்ண போறது நம்ம ப்ரோ தானே" என்றான் சுதாகர்.
அந்த இடத்தை விட்டு வேகமாய் அகன்று சென்றாள் மதுமிதா. அந்தப் பெண்ணை கண்டுபிடித்து விட்ட குதூகலத்தில், அவர்கள் அனைவரும் ஹைஃபை தட்டிக் கொண்டார்கள்.
"தேங்க்யூ சோ மச் சிஸ்டர். உங்க ஹெல்ப்பை நான் எப்பவும் மறக்க மாட்டேன். உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும், நீங்க எனக்கு கால் பண்ணுங்க" என்றான் ரிஷி.
"அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல. அவ ரொம்ப நல்ல பொண்ணு. அதனால தான் உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணேன்"
"இருந்தாலும் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லாம என்னால இருக்க முடியாது"
"அது சரி, உங்களுக்கு அந்த பொண்ணை எப்படி தெரியும்?"
"அவ எங்களோட காலேஜ் மேட் தான்"
"அப்புறம் எதுக்கு அவ, நான் தான் காப்பாத்தினேன்னு உங்ககிட்ட சொல்லாம விட்டுட்டா? நீங்க அவளை ரொம்ப கிண்டல் பண்றீங்களா?"
சுதாகரை பார்த்து முறைத்தான் ரிஷி.
"சும்மா விளையாட்டுக்கு செஞ்சோம் சிஸ்டர்" என்றான் சுதாகர்.
"அத சொல்லு... அதனால தான் அந்த பொண்ணு உங்களை பார்க்க விரும்பல. இனிமே அவளை யாரும் டீஸ் பண்ண கூடாது. சரியா?" என்றார் ரிஷியிடம்.
"இனிமே அப்படி நடக்காது. நான் யாரையும் அவளை டீஸ் பண்ண விட மாட்டேன்" என்றான் அசடு வழிந்து கொண்டு நின்ற சுதாகரை பார்த்து.
"ஆங்... அவ உன்னை எப்படி காப்பாத்தினாளோ, அதே மாதிரி, அவளை காப்பாத்த வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு" என்றார் அவர்.
"நிச்சயமா செய்வேன் சிஸ்டர்"
"கவலைப்படாதீங்க சிஸ்டர், வாழ்நாள் முழுக்க அவளை அவன் காப்பாத்துவான்... அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு..." என்றான் பாலா.
ரிஷியை வியப்புடன் பார்த்தார் அந்த செவிலி.
"ஆமாம் சிஸ்டர், அந்த பொண்ணை பாக்காமலேயே, அவளை நேசிக்க ஆரம்பிச்சுட்டான்" என்றான் சுதாகர்.
"அப்படின்னா, நான் ஒரு நல்ல பிள்ளைக்கு தான் ஹெல்ப் பண்ணி இருக்கேன்..." என்றார் அவர்
"சந்தேகமே இல்ல" என்றான் ஜெயபிரகாஷ்.
"காட் பிளஸ் யூ போத்" அவர்களை வாழ்த்தினார் அவர்.
"தேங்க்யூ சிஸ்டர்"
"சரி, நான் கிளம்பனும். போயிட்டு வரேன்" அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
"அந்த பொண்ணு மதுமிதா தான்னு என்னால நம்பவே முடியல" என்றான் ரிஷி.
"அவளை பத்தின ஏ டூ இசட் டீடெயில்ஸ் நாங்க கலெக்ட் பண்றோம், கவலையை விடு" என்றான் பாலா.
"ஆமாம், அவளோட ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், ஓட்டர் ஐடி, எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிடுறோம்" என்றான் சுதாகர்.
"பண்ணிடுவோம்..." என்று ஜெயப்பிரகாஷ் கூற, வாய்விட்டு சிரித்தான் ரிஷி.
அன்பு இல்லம்
தன் வீட்டு வேலைக்காரரை உதவிக்கு வைத்துக் கொண்டு, தன் மகனுக்கான இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்தார் கிரிவரன். அவரை நோக்கி ஓடிய ரிஷி, அவரை தலைக்கு மேலே தூக்கி கொண்டு வட்டம் அடித்தான்.
"டேய், டேய், என்னடா செய்ற நீ?" என கத்தினார் அதை எதிர்பார்க்காத கிரிவரன்.
அவரை கீழே இறக்கி விட்டு,
"அவளை கண்டுபிடிச்சிட்டேன் டாட்" என்றான் ரிஷி.
"யாரை கண்டுபிடிச்ச?"
"மதுமிதாவை..."
"மதுமிதாவா? யாரது?"
"ஐயோ டாட்... என்னை காப்பாத்தினாளே, அந்த பொண்ணு..."
"நெஜமாவா?" என்றார் குதூகலமாய்.
"நிஜமா தான்..."
"எப்படிடா கண்டுபிடிச்ச?"
"அந்த நர்ஸ் எனக்கு ஹெல்ப் பண்ணாங்க. அவங்களை இப்போ தான் ஸ்பேஸ் மால்ல பாத்துட்டு வரேன்"
"கலக்கிட்டடா நீ... அவ தன்னோட பேரை சொன்னாளா?"
இல்லை என்று தலையசைத்தான்.
"அப்பறம் அவளோட பெயர் மதுமிதான்னு உனக்கு எப்படி தெரிஞ்சிது?"
"அவ எங்க காலேஜ்ல தான் டாட் படிக்கிறா"
"ஒ... அவ ஏன் நம்மளை பார்க்க விரும்பலன்னு எனக்கு இப்ப புரியுது..."
அவரை கேள்விக்குறியுடன் பார்த்தான் ரிஷி.
"பின்ன என்ன.? எந்த பொண்ணு தான் தன் காலேஜோட *டானை* சந்திக்கணும்னு விருப்பப்படுவா? அதுமட்டுமில்லாம, உன்னோட காலேஜ்ல, உன்மேல ஒரு *பிளேபாய்* இமேஜை நீயே கிரியேட் பண்ணி வச்சிருக்க..."
"நிறுத்துங்க டாட்... பிளேபாய்ன்னு சொல்லி என்னை அசிங்கப்படுத்தாதீங்க..."
"நீ என் வாயை மூடிடலாம்... ஆனா மதுமிதாவை என்ன செய்யப் போற? அவ ரொம்ப நல்ல பொண்ணா இருக்கணும். அதனால தான் உன்னை அவாய்ட் பண்ணி இருக்கா"
"இதுக்கு அப்புறம் அவளால என்னை அவாய்ட் பண்ண முடியாது" என்றான் திடமாய்.
"ஒ..."
"ஒரு நல்ல அப்பாவா நீங்க அவளை எனக்காக பொண்ணு கேட்க மாட்டீங்களா?"
"நிச்சயமா செய்வேன்... ஆனா, அவளுக்கு உன்னை பிடிச்சிருந்தா மட்டும் தான் செய்வேன்"
"அவளுக்கு என்னை பிடிக்க... இல்ல இல்ல, என்னை காதலிக்க வைப்பேன்..."
"பாக்கலாம்... "
"உங்க ஃபோன் எங்க?"
மைக்ரோவேவ் அவண் மீது வைக்கப்பட்டிருந்த தனது கைபேசியை அவனிடம் காட்டினார். அதை எடுத்து, தான் மனப்பாடம் செய்து வைத்திருந்த மதுமிதாவின் கைப்பேசி எண்ணை தட்டினான்.
"அவ கிட்ட பேசுங்க" என்று கிரிவரனிடம் நீட்டினான்.
"யார்கிட்ட?"
"வேற யார்கிட்ட? மது கிட்ட தான்"
"அவ நம்பரை கூட வாங்கிட்டியா?"
"பிடிங்கிக்கிட்டேன்..."
"பாவம் அந்த பொண்ணு" என்று முணுமுணுத்த படி அந்த கைபேசியை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
தன் கைபேசியில் ஒளிந்த புதிய எண்ணை, யோசனையுடன் பார்த்தாள் மதுமிதா.
*இந்த நம்பர் நிச்சயமா ரிஷியோடது இல்ல. அவனுடைய நம்பர் எட்டுல ஆரம்பிச்சது* என்று தனக்குத்தானே கூறியபடி அந்த அழைப்பை ஏற்றாள் மதுமிதா.
"ஹலோ..."
அவளது குரலை கேட்டு புன்னகை புரிந்தார் கிரிவரன்.
"எப்படிடா மா இருக்க?"
அந்த குரலை அடையாளம் கண்டு கொண்டாள் மதுமிதா.
"நீ லைன்ல தானே இருக்க?" என்றார்.
"ஆங்... நான் நல்லா இருக்கேன் அங்கிள்"
"அன்னைக்கு உன்னை ஹாஸ்பிடல்ல பார்க்க முடியாம போனது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. ஆனா இப்போ, உன்கிட்ட பேசுறதுக்காக ரொம்ப சந்தோஷப்படுறேன்"
அமைதியாய் இருந்தாள் மதுமிதா.
"என் மகனோட உயிரை காப்பாத்தினதுக்கு ரொம்ப தேங்க்ஸ் மா. அவன் தான் எனக்கு எல்லாம். அவன் இல்லாம நான் இல்ல. அவனை காப்பாத்தினது மூலமா, நீ என் வாழ்க்கையை காப்பாத்தி கொடுத்திருக்க" என்று உணர்ச்சிவசப்பட்டார் கிரிவரன். அது மதுமிதாவையும் உணர்ச்சிவசப்பட செய்தது.
அவரது தோளை பற்றி அழுத்தி, அவரை சமாதானம் செய்ய முயன்றான் ரிஷி.
"இதுல என்ன அங்கிள் இருக்கு..." என்றாள் மதுமிதா.
"நான் உன்னை மீட் பண்ண விரும்பறேன்..."
ரிஷி குதூகலம் அடைந்தான்.
"இல்ல அங்கிள்... வந்து..." என்று தயங்கினாள் மதுமிதா.
"உன்னை நேரில் பார்த்து தேங்க்ஸ் சொல்லனும்னு நினைக்கிறேன், அவ்வளவு தான். நான் யாரையும் கூட்டிகிட்டு வரமாட்டேன். நீ என்னை நம்பலாம்"
தன் கண்களை பெரிதாக்கி கோபத்துடன் அவரைப் பார்த்தான் ரிஷி. அவருக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை மதுமிதாவிற்கு. அவரை எப்படி தவிர்ப்பது?
"ப்ளீஸ் டா மா, ஒரே ஒரு தடவை..."
"சரிங்க அங்கிள்" என்றாள் அவரது கெஞ்சலை தவிர்க்க முடியாமல்.
"எங்க மீட் பண்ணலாம்?" என்றார்.
"காந்தி பார்க்"
"சரி மா"
"நான் கரெக்டா அஞ்சரை மணிக்கு அங்க இருப்பேன் அங்கிள்"
"சரி மா, நம்ம நாளைக்கு பாக்கலாம்"
"சரிங்க அங்கிள்" அழைப்பை துண்டித்தாள் மதுமிதா.
"நீங்க செய்யறது கொஞ்சம் கூட சரியில்லை டாட்"
"நான் என்ன செஞ்சேன்?"
"எதுக்காக யாரையும் கூட்டிகிட்டு வரமாட்டேன்னு சொன்னீங்க?"
"அதனால என்ன?"
"நானும் வருவேன்"
"சரி வா"
"ஆனா, அவகிட்ட யாரையும் கூட்டிக்கிட்டு வர மாட்டேன்னு சொன்னீங்களே...?"
"நான் யாரையும் கூட்டிக்கிட்டு வர மாட்டேன்னு சொன்னேன்... நீ தனியா வா"
ரிஷியின் முகம் பிரகாசமடைந்தது.
"நான் அங்க போய், மதுமிதாவை மீட் பண்ண கொஞ்ச நேரம் கழிச்சு, நீ தற்செயலா வர்ற மாதிரி வா"
"சூப்பர் டாட்" என்று அவரை சந்தோஷமாய் கட்டிக் கொண்டான் ரிஷி.
"ஆனா, நம்ம பிளான் மதுமிதாவுக்கு தெரியக்கூடாது. அவ என்னை தப்பா நெனச்சுக்குவா..."
"அவளுக்கு தெரியாம பாத்துக்குறேன் டாட்"
"தேங்க்யூ மை பாய்"
இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.
"சுதா எங்க போனான்?"
"அவனுக்கு நான் ஒரு முக்கியமான வேலை கொடுத்து அனுப்பி இருக்கேன்"
"ஒ... மதுமிதாவோட டீடைல்ஸை அவனுங்க கலெக்ட் பண்ணிக்கிட்டு இருக்கானுங்களா?"
"டாட்... உங்களுக்கு எப்படி தெரியும்?"
"மகனே... உன் வயசுல நான் என்ன செஞ்சேனோ, அதைத் தான் இப்போ நீ செஞ்சுகிட்டு இருக்க..."
"ஓஹோ..."
"ஆமாம். அவ்வளவு ஈஸியா உங்க அம்மா எனக்கு கிடைச்சிடல... எனக்கு ரொம்ப கஷ்டப்பட்டு கிடைச்சவ அவ" என்றார் சோகமாய்.
"சாரி டாட்..."
"பரவாயில்ல விடு... போய் குளிச்சிட்டு வா, சாப்பிடலாம்"
சரி என்று தலையசைத்துவிட்டு தன் அறையை நோக்கி நடந்தான் ரிஷி. அவனை பார்த்தபடி நின்ற கிரிவரன்,
"பாத்தியா ரோகினி, உன் பிள்ளைக்கு காதல் வந்துடுச்சி. நீ உயிரோட இருந்திருந்தா, அவன் காதல்ல ஜெயிக்க, நீயே அவனுக்கு ஹெல்ப் பண்ணி இருப்ப... நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் ரோகினி... ரொம்ப..." என்ற போது அவருக்கு தொண்டை அடைத்தது.
வேளாங்கண்ணி, நாகைப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு
ஒரு குழந்தையின் முதுகை லேசாய் தட்டி, அவனைத் தூங்க வைத்துக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அவர் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது. கண்களை துடைத்துக் கொண்டு, அந்த குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்தார்.
"அம்மா, ஃபாதர் உங்களை கூப்பிடுறார்" என்றான் ஒரு சிறுவன்.
சரி என்று தலையசைத்த அவர், அருகில் இருந்த தேவாலயத்தை நோக்கி நடந்தார், ஃபாதரை சந்திக்க.
"வணக்கம் ஃபாதர்" என்றார் அந்த பெண்மணி.
அவரிடம் புதிதாய் பிறந்த குழந்தை ஒன்றை கொடுத்தார் ஃபாதர்.
"யாரோ இந்த குழந்தையை நம்ம சர்ச் வாசல்ல போட்டுட்டு போய்ட்டாங்க, அம்மா..."
அந்த குழந்தையை தன் கையில் பெற்று, அன்பாய் அதன் தலையை வருடி கொடுத்த அவர்,
"நான் பார்த்துக்கிறேன் ஃபாதர்" என்றார்.
"நீங்க பார்த்துக்குவீங்கன்னு எனக்கு தெரியுமா" என்றார் ஃபாதர்.
அந்த குழந்தையை தன்னுடன் எடுத்துச் சென்றார் அந்த பெண்மணி.
*பாவம் இந்த அம்மா... தன்னோட புருஷனையும், மகனையும் சுனாமியில பறிகொடுத்துட்டு, இந்த அனாதை ஆசிரமத்தில் தன்னோட வாழ்நாளை கழிச்சுக்கிட்டு இருக்காங்க. கர்த்தரே... அந்த அம்மாவுக்கு மனநிம்மதியை அருள்வீராக* என்று வேண்டிக் கொண்டார் அந்த தேவாலய அருட்தந்தை... ரோகினி என்ற அந்த பெண்மணிக்காக... ரிஷிவரனின் அம்மாவுக்காக... கிரிவரனின் மனைவிக்காக....!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top