💚மூன்று💚
இவர்கள் இருவரும் இரண்டாம் தளத்தில் இருந்த கடைசி ரூம்மை நோக்கி நடந்தனர். அவர்களிடம் கொடுத்திருந்த சாவியில் ரூம் நம்பர். பதிமூன்று என்று எழுதப் பட்டிருந்தது.
அதைக் கவனித்த பிரீத்தி "என்னடி, பேய் ரூம் நம்பர்ரை கொடுத்திருக்காங்க" என்று முகத்தை சுருக்கிக் கொண்டு, வலது காலைத் தரையில் தட்டியவாரே கூறினாள்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லை , கரெக்ட்டா தான் கொடுத்திருக்காங்க" என்று கையில் ட்டோரோலியை இழுத்துக் கொண்டு கூறினாள், தீபிகா.
"என்ன?" என்று அவளை முறைத்தாள், பிரீத்தி.
"நீ பிசாசு தானடி, அதைத் தான் சொன்னேன்" என்றாள் தீபிகா.
"இல்ல எனக்கு இந்த ரூம் பிடிக்கலை, வேற ரூம் வேண்டும் " என்று நகராமல் அதே இடத்திலேயே நின்றாள், பிரீத்தி.
"என்ன சத்தம், இன்னும் நீங்க ரூம்மைத் திறக்கலையா ? " என்றாள், இவர்களுக்கு பின்னாடி நடந்து வந்து கொண்டிருந்த பிரீத்தியின் தாய், பவித்ரா.
"இதோ திறக்க போறேன்! " என்று அவளாகவே முன் வந்து வேகமாக ரூமின் கதவைத் திறந்தாள், பிரீத்தி.
அப்படியா என்பது போல் கண்களை மட்டும் விரித்து முகத்தை ஆட்டிக் கொண்டு கேட்டாள், தீபிகா.
அவள் பேய் பிசாசு க்கு பயந்தவள் இல்லை என்று அவள் அம்மாவிடம் காட்டிக் கொள்ளவே இந்தச் செயல், என்று புரிந்து கொண்டு, இவள் செய்கையில் தீபிகா நமட்டுச் சிரிப்பு சிரித்து கொண்டே இருந்தாள்.
"ஹாஸ்டல் ஓகேவா தான் இருக்கு..." என்றாள், பவித்ரா.
"நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான இந்த ரூம்..." என்று 360 டிகிரில கண்களை உருட்டிச் சுற்றி பார்த்தவாறே கூறினாள் பிரீத்தி.
"ஆமாண்டி நமக்கு மட்டும் தான்... நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன் " என்று பையைத் திறந்துத் துண்டை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்றாள் தீபிகா.
"ம்ம்ம்ம்.. அப்போ சரி நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் ... " என்று கட்டிலில் பொத்தென்று விழுந்தாள் பிரீத்தி.
"சரி நீங்க ரெண்டு பேரும் ரெடி ஆகிட்டு வாங்க, நான் உன்னோட அப்பா கூட கீழே இருக்கேன் , உங்களை காலேஜ்யில் இறக்கி விட்டுப் போறோம் " என்று பிரீத்தியிடம் கூறிவிட்டு நகர்ந்தாள், பவித்ரா.
குளியல் அறையில் இருந்து ஊதா நிறச் சுடிதார் அணிந்து வந்தாள், தீபிகா. காலேஜ் முதல் நாளுக்குக் கூட அவளின் தந்தை வராமல் போனது, மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது, தீபிகாவிற்கு. மேலும் , இதுவரை அவரிடம் இருந்து அழைப்பும் ஏதும் வராமல் போக , அவளின் வேதனையோடு கோபமும் தொற்றிக் கொண்டது. அவரே போன் பண்ணட்டும் என்று கோவத்தில் வாய் கூறினாலும், தந்தை தனியாக இருக்கிறார், ஏதேனும் நடந்திருந்தால் என்று மனம் கவலையில் போராடியது.
"ஹலோ அங்கிள்... நான் அப்பாவுக்கு போன் பண்ணேன் எடுக்கல .. அதான் என்னன்னு பார்த்து சொல்றீங்களா..? "என்று அவர்கள் வீட்டில் டிரைவராக வேலை செய்யும் மூர்த்தியிடம் தயங்கி தயங்கி பேசினாள், தீபிகா.
"அப்பா கோவிலுக்குள் இருக்காருமா. வந்தொன்ன பேசு வாருனு நினைகிறேன், போன் கார்லியே வச்சுட்டுப் போயிட்டார் அதான் எடுக்கள, நான் நீங்க பேசுணிங்கனு சொல்லிறேன்மா" என்று அவளின் தந்தையைப் பற்றி கூறினான், மூர்த்தி.
"ஓகே அங்கிள்... நான் ஹாஸ்டலுக்கு வந்துட்டேன்... காலேஜ்க்கு பொரப்புட்டேனு சொல்லிருங்க " என்றாள் தீபிகா மனதில் வருத்தத்துடன்.
"கண்டிப்பா சொல்லுறேன்..." என்று கூறி வைத்து விட்டார், மூர்த்தி. ஏமாற்றத்துடன் போனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தீபிகா. இருந்தாலும், அவளை உற்சாகமாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று அவளின் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
இவளுக்கு பக்கத்தில் வேற்று கிரக ஜந்து மாதிரி தூங்கி கொண்டு இருந்தாள் பிரீத்தி.
"இரு நல்லா தூங்குரியா... வரேன்..." என்று மெதுவாக கையில் மாஸா பாட்டிலுடன் குளியலரைக்குள் சென்றாள் தீபிகா.
"பிரீத்தி... இங்கே பாரு... " என்று கத்திக்கொண்டே அவள் தலையில் அரை பக்கெட் தண்ணீரை எடுத்து ஊற்றினாள் தீபிகா.
"ஹே... என்னதுடி இது ... " என்று கையை தடுக்க நீட்டி சுதாரிப்பத்குள் அவள் தொப்பென்று நினைந்துவிட்டாள்.
"ஹாஹா... உனக்கு நல்ல தேவைத் தான். ..ஹையோ ஹையோ. இப்போ தான் எனக்கு மனசு திருப்தியாக இருக்கு .. டிட் ஃபார் டாட் " என்று சிரித்துக் கொண்டே அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் தீபிகா.
"சைத்தானே... உன்னை அப்புறமா வச்சுகிறேன்டி... பழிக்கு பழி வாங்குறியாக்கும் " என்று விருட்டென கட்டிலில் இருந்து எழுந்து குளியலறைக்குச் சென்றாள் பிரீத்தி.
"ஏய்... என்னதடி கலந்து ஊத்துன... ஏதோ நாத்தம் வருது..." என்று கையை மூக்கின் அருகில் வைத்து மோந்து பார்த்து யோசித்து கொண்டிருந்தாள் பெரிய வெங்கட் பட் என்ற நினைப்பில்.
"ஒன்னும் இல்ல கொஞ்சமா காம்பாட் (comfort) தண்ணீர் மாஸா தண்ணீர் தான்... மத்தபடி அதுல ரெண்டு சொட்டு டெட்டால் அதுக்கு மேல வேற எதுவும் இல்லை.." என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறினாள் தீபிகா.
"போதும்டி. .. இதுக்கு மேல எதுவும் நீ சொல்லாத.. " என்று வாகா எல்லையில் பாகிஸ்தான்னைப் பார்த்து இந்தியா கேட்டை அடைப்பதுப் போல டம்முனு சாத்தினாள் பிரீத்தி.
பின் இருவரும் அவர்களின் புத்தகப் பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்கள். பிரீத்தி யின் பெற்றோர்கள் அவர்களுக்காக காரில் காத்துக் கொண்டு இருந்தனர். பின் அங்கு இருக்கும் ஒரு ஹோட்டலில் காலை உணவை முடித்துக் கொண்டு காலேஜ்ற்கு வந்தடைந்தனர்.
தீபிகாவிற்கோ பிரீத்தியையும் அவளின் பெற்றோர்களையும் பார்த்து பொறாமை என்று சொல்ல முடியாது, இப்படி அவள் அம்மாவும் அவளுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஏக்கமாக இருந்தது. அவள் வாழ்க்கை அவளுக்கு பிடித்தார் போல் இல்லை என்று மனதில் மருக்கிக் கொண்டு இருந்தாள், தீபிகா.
இதேது அவள் அன்னை அவளுடன் இருந்திருந்தால், எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டவளுக்கு,
அவளின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அன்று,
" தீபு .. எங்கடி இருக்க ? " என்று அவளின் தாய் கையில் ரிப்பனையும் சீப்பையும் வைத்துக் கொண்டு ஹாலில் தேடிக் கொண்டு இருந்தாள்.
"அம்மா, நான் இங்க இருக்கேன் " பாதாம் பருப்பை வாயில் அரைத்துக் கொண்டு கையில் சயன்ஸ் புத்தகத்துடன் கிச்சனில் இருந்து வெளியே வந்தடைந்தாள் தீபிகா.
அவள் வந்ததும் வேகமாக ரிப்பன்னை வைத்து ரெட்டை ஜடைப் போட்டு விட்டாள். பின், கைகளை கழுவி விட்டு ஹாட்பாக்ஸில் சுட்டு வைத்திருந்த தோசையை தட்டில் போட்டு கொண்டு வந்தாள் சுமதி.
"என்ன டா. .. ரிவிஷன் முடிந்ததா " என்று தீபிகா விற்கு அருகிலுள்ள சோஃபாவில் அமர்ந்தார், அவளின் தந்தை ரவிச்சந்திரன்.
"ஹான்..இன்னும் ஒன் லேசசன் ப்பா " புத்தகத்தின் பக்கங்களை திருப்பியவாரே கூறினாள், தீபிகா. "குட் குட்.. ரிலாக்ஸ் " என்றார் அன்றைய தின நாள் இதழை கையில் எடுத்துக் கொண்டு.
சுமதி ஊட்டி விட, தோசையை முழுங்கிய வாரே புத்தகத்தை பதற்றத்துடன் பொரட்டிக் கொண்டு இருந்தாள் தீபிகா.
"எனக்கு எக்ஸாம் இருக்கப்பத் தான் நீ சட்னி வகையா வைப்பியாமா " என்று குட்டி குழந்தைப் போல் உதட்டைப் பிதுக்கி முகம் சுளித்தாள், தீபிகா.
"அப்படியா சொல்ற பாப்பா" என்றார் தட்டில் உள்ள சட்னி மேல் கவனத்தைச் செலுத்தி, "ஆமா டாடி " என்றாள் அப்பாவியாக விசும்பிக் கொண்டு.
சாப்டுட்டு சொல்லுங்க என்று சொல்லிக் கொண்டே ரவிக்கு ஊட்டி விட்டாள் சுமதி.
"புதினா சட்னி ல ஏதோ வித்தியாசமான டேஸ்ட், சூப்பர் " என்று அவற்றை சுவைத்துக் கொண்டே கூறினார், ரவிச்சந்திரன்.
"நல்லா இருக்கா " என்று
மீண்டும் சுமதி ரவிக்கே ஊட்டி விட்டாள்.
"ஹலோ என் பெயர் தீபிகா " என்றாள் தீபிகா, கையில் இருந்த புத்தகத்தை மூடிக் கொண்டு.
இப்போ எதுக்கு சம்பந்தம் இன்றி சொல்லுகிறாள் என்று இருவரும் தீபிகாவை பார்த்து விழித்தனர்.
"என் அம்மா அப்பா பெயர் , ரவிச்சந்திரன், சுமதி " என்றாள் தற்போது சோஃபாவில் இருந்து எழுந்தாள், கைகளைக் கட்டிக் கொண்டு.
"அது நாங்கத் தான் பாப்பா " என்று சிறு பிள்ளைகள் 'குட் மார்னிங் மிஸ்' என்று இழுத்துக் கூறுவது போல் கோரஸாக கூறினர், இருவரும்.
" ரொம்ப சந்தோசம்... மறந்த்திருப்பிங்கனு நினைச்சேன்.., நியபாகம் வந்துருச்சு, இங்க ஒருத்தி பப்ளிக் எக்சாம் டென்ஷன்ல இருக்கேன், நீங்க ரெண்டு பேரும் இங்க என்னனா ரொமான்ஸ் பணிகிட்டு இருக்கீங்க " என்றாள் கண்களை உருட்டி கொண்டு.
"ஏண்டி, என் புருஷனுக்கு தோசை கூட ஊட்டி விட கூடாத " என்று சுமதி கூறிக் கொண்டே ரவியைப் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
" அதானே! " என்று ரவியும் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு எழுந்தார்.
" எப்பா சாமி , முடியல என்ன கிளப்பி விட்டு எதுனாலும் பண்ணுங்க " என்று ஷூ ஷாக்ஸை வேகமாக அணிந்தாள், தீபிகா.
"ஓகே, ரெண்டு பேரும் நில்லுங்க சீக்கிரம் " என்றாள் கடிகாரத்தைப் பார்த்தவாறு, "இதோ வந்துட்டோம்" என்று இருவரும் ஒன்றாக வந்து நின்றனர்.
இருவரிடமும் , காலில் விழுந்து ஆசிப் பெற்று, ஆசை முத்தமும் பெற்று வெளியில் வந்தாள், தீபிகா. ஏதேனும் எக்சாம் இல்லை முக்கியமான நாட்களில் அவளின் பெற்றோர்களிடம் ஆசிப் பெறுவது அவளின் வழக்கம். அவளுக்கு அவளின் பெற்றோர் தான் கடவுள்.
சுமதியும் கப்பில் தண்ணீர் எடுத்து வந்து அவளின் மகளின் வாயைத் துடைத்து விட்டாள். பின், தீபிகா ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாள், தண்ணீரின் துளிகள் துடைத்துவிட்டு இடத்தில் அப்படியே இருக்க, சுமதியின் முந்தானையை கொண்டு தீபிகாவின் வாயை மீண்டும் துடைத்தாள்.
"அம்மா, இது புது சேலை தான " என்று சுமத்தியிடம் வினவினாள், "அது நாள என்ன? என் பிள்ளையை காட்டியா உசத்தி " என்று மெல்லிய சிரிப்புடன் கூறினாள் சுமதி.
தீபிகாவின் பழைய நினவுகளிருந்து அவளை மீட்டெடுத்தது, பிரீத்தியின் அழைப்பு.
"தீபு.. தீபு...இந்தப் பக்கம் வா " என்று பிரீத்தி அழைக்க, "வருகிறேன் " என்று கண்களில் கலங்கிய நீரை தொடைத்துக் கொண்டு நகர்ந்தாள் தீபிகா.
முதல் நாள் , இண்டக்ஷன் மற்றும் காலேஜ் யைச் சுற்றிக் காட்டுவதிலும் நேரம் ஓடியது. இவர்கள் ECE டிபார்ட்மெண்ட்டில் இருவருக்கும் ஒரே கிளாஸாக இருக்க வேண்டும் என்று இருவரும் வேண்டிக் கொண்டு இருந்தனர். பின், டிபார்ட்மெண்ட் ஸ்டாஃப் ஒருவர் வந்து வாசிக்க , இருவரின் பெயரும் ஒரே கிளாசில் வர, கட்டிக்கொண்டு மகிழ்ந்தனர்.
இருவரும் காலேஜ் விட்டு வெளிய வர, அங்கு நிறைய பஜார், ஹோட்டல், பிரியாணி கடைகள் , பேக்கரிகள் பாணிப் பூரி கடை, சாட்ஸ் ஐட்டம்ஸ் என்று எல்லாம் இவர்கள் கண்களுக்கே விருந்தாக இருந்தது.
கண்ணா லட்டு திங்க ஆசையா என்று இவர்கள் இருவரின் கண்களும் பாணிப் பூரிக் கடையை மேய்ந்தது. அக்கடைக்கு அருகில் செல்ல தீபிகாவின் கண்கள் மட்டும் சுமதி மலர் பூச்செண்டு கடை என்று எழுதப் பட்டிருந்த பலகையைப் பார்க்க, கால்கள் அக்கடையை நோக்கிப் பயணித்தது.
"டி.. பானிபூரி இங்கிட்டு டி... நீ எங்குட்டுப் போற " என்று கைகளை நீட்டிக் காட்டிக் கொண்டு நின்றாள் பிரீத்தி.
"அந்தக் கடை அங்கையேத் தான் இருக்கும் , இங்கப் பார்த்துட்டு வந்து கொட்டிகிடலாம் " என்று பிரீத்தியின் கையை அவள் கைகளோடு பிண்ணிக் கொண்டு பூச்செண்டு கடையினுள் இழுத்துச் சென்றாள் , தீபிகா.
அவளின் கவனத்தை இழுத்தது அப்பூக்கள்! அப்பூக்களின் அர்த்தங்கள் என்ன ? அவற்றின் சிறப்பு அம்சம் என்ன ? அவற்றை ஏன் இவள் மிகவும் விரும்புகிறாள்?
ヽ(。◕o◕。)ノ.
Hi Guys,
How is the update?
Enna poruthavara ithu romba periya updateu, kasta pattu type panirukaen, paduchutu epdi irukunu solunga friends!
I'm open ears to all kinds of comments, suggestions and doubts. So don't hesitate to ping me.
Don't forget to give your valuable votes and comments!🤗 It means a lot to me! 💕
Thanks for reading,
With lots of love,
Lolita! 💚
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top