💚ஒன்று💚
"தீபிகா எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கிட்டியாமா?... எது வேண்டுமானாலும் கேளுமா... கைல காசு இருக்குல ... மேனேஜர் கிட்ட சொல்லி உன் அக்கவுண்ட்டில் ஐம்பதாயிரம் போடச் சொல்லிருக்கேன்..." என்று ஒற்றை விரலால் நெற்றியை தேய்த்துக் கொண்டு யோசனையுடன் கூறினார், ரவிச்சந்திரன்.
"எதுக்குப்பா இப்போ அவ்ளோ காசு...? எல்லாமே வாங்கியாச்சு.. ஹாஸ்டலுக்கும் எல்லாமே செட்டில் செய்தாய்ட்ரு.. இதுக்கு மேல எதுக்கு அப்பா. எனக்கு ஒரு செலவும் கிடையாது." என்றாள் துணிகளை திணித்து விட்டு அதை மூட முடியாமல் மூச்சை கூட வெளியேற்றாமல் அதனுடன் போராடி கொண்டிருந்த தீபிகா.
"பரவாயில்லை வச்சுக்கோடா .. தள்ளு நான் லாக் போடுறேன் " என்று கூறி அவள் சூட்கேஸில் அவளுக்கு தெரியாமல் ஒரு கவரை வைத்தார் இரவிச்சந்திரன்.
"சரிப்பா... நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வந்துறேன் பத்து நிமிஷத்துல..." என்று கங்காரு குதிப்பது போல் படியில் ரெண்டு ரெண்டாக தாவிக் கொண்டு ஓடினாள், தீபிகா.
"இன்னும் சின்னப் பொண்ணாவே இருக்கா.. ஏன் சுமதி இப்படி எங்கள தனியா விட்டுட்டு போய்ட்ட... நாங்க ரெண்டு பேரும் நீ இல்லாமல் ஆனாதையா இருக்கோம் சுமதி." என்று ஒரு ஆண்டு முன் ஆக்ஸிடென்ட்டில் இறந்து போன அவர் மனைவியின் புகைப் படத்தைப் பார்த்து எண்ணங்களால் பேசினார், இரவிச்சந்திரன்.
"டாடி... நான் ரெடி... ஏன் இப்படி உன் முகம் வாட்டம்மா இருக்கு, கிளம்புறப்ப இப்படி நீ இருந்தால், எனக்கு அழுக வந்துரும் பார்த்துக்கோ .." என்று காரணம் அறிந்தும் அறியாதவளாய் பொய் கோபம் கொண்டாள் தீபிகா.
"அப்டிலாம் ஒன்னும் இல்லடா...டைம் ஆச்சுமா சாப்பிட்டு சீக்கிரம் கெளம்பினால் தான் ரயில்வே ஸ்டேஷன் போக சரியா இருக்கும் .. சென்னை தான் கடைசி நிறுத்தம், சரியா பார்த்து எக்மோரில் இறங்கிருமா.." என்று தனது மகள் முதல் முறை தனியாக தம்மை பிரிந்து வெளியூர் பயணம் செல்வது அவருக்கு கவலை ஊட்டினாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளித்தார், இரவிச்சந்திரன்.
"நான் என்ன தனியாகவா போறேன்... கூட பிரீத்தி வருகிறாள்... அவ எல்லாத்தையும் பார்துப்பா .. கவலையே வேண்டாம் " என்று சாப்பிட்டு முடித்து கழுவிய கையை துண்டில் துடைத்துக் கொண்டு வந்தாள் தீபிகா.
இருவரும் காரில் ஏதும் பேசிக் கொள்ள வில்லை. தீபிகா பிரீதியிடம் இரயில்வே ஸ்டேஷன்க்கு வந்து கொண்டு இருக்கிறோம் என்று கைப்பேசியில் கூறிக் கொண்டு இருந்தாள்.
'மகள் இனி தன்னைப் பிரிந்து இருக்க போகிறாள், அவளும் வளர்ந்துவிட்டால் தமக்கும் வயது ஆகி கொண்டு இருக்கிறது , நான் நல்லா இருக்கப்பையே சீக்கிரம் கல்யாணம் ஒன்று செய்து முடிதிட வேண்டும்' என்று சிந்தித்துக் கொண்டு இருந்தார்,
இரவிச்சந்திரன்.
" ஒழுங்கா சாப்பிடுங்க... சரியான டைம்க்கு மாத்திரை சாப்பிடுங்க .... Will miss you paa, take care" என்று இரயில் கிளம்பும் சமயத்தில் மனதில் கணம் கூட, அவ்வளவு கஷ்ட பட்டு நிறுத்தி வைத்திருந்த கண்ணீர், அவளையும் அறியாமல் கண்களில் பாய்ந்தது.
"அதெல்லாம் அப்பா பார்துப்பேன் தங்கம்... நீ சமத்தா இரு... அழுகாத மா.. அப்பாக்கு கஷ்டமா இருக்கு. எல்லா வெள்ளிக் கிழமையும் நீ சாயங்காலம் பஸ் ஏறி வந்துருமா... சனி ஞாயிறு இங்கதான், என்ன பிரீத்தி உனக்கும் தான்மா " என்று மகளை தேற்ற முயற்சி செய்தார் ரவி.
"கண்டிப்பா தீபிகா கூட வந்துரேன் அப்பா, நீங்க கவலை படாதிங்க, நான் தீபுவை நல்ல படியா பார்த்துக்கிறேன்" என்று தீபிகாவை ஒரு பக்கமாக கட்டி அணைத்தாள் பிரீத்தி.
பத்து நிமிடத்தில் ரயில் கிளம்ப, தீபிகாவின் முகம் தெரியும் வரை கையை அசைத்து வழி அண்ணுபினார். தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயிலையேப் பார்த்துக் கண் களங்கியப் படித் திரும்பினார், ரவிச்சந்திரன்.
சிறிது நேரத்தில் டி.டி.ஆர் வந்துவிட தீபிகாவும் பிரீத்தியும் அவரிடம் ஐடி யைக் காட்டியப் பின், சிறு கதைகளைப் பேசி கொண்டு இருந்தனர். ரயிலில் லைட்டை அணைத்தப் பின்னர், இருவரும் அவரவர் பெர்த்க்குத் தூங்கச் சென்றனர். அன்றைய நாள் களைப்பில் எதையும் யோசிக்க விடாது, தூக்கம் தீபிகாவை ஒட்டிக்கொண்டது.
"நிம்மதியா தூங்காளம்னு நினைத்தாயோ... உன்னைத் தூங்க விட மாட்டேன்.. " என்ற குரல் அவளின் காதில் கேட்டிருந்தும் அவளால் அசைய கூட முடியவில்லை, கட்டிப் போட்டார் போல் இருந்தது தீபிகாவிற்கு.
"எனக்கு இந்த ரயிலில் பொழுது போகவில்லை ... நீ என் கூட விளையாட வாராயா? " என்று விளையாட என்னும் வார்த்தையில் அழுத்தம் தெரிந்தது, கண்களை சுருக்கியும், அவளால் கண் முழிக்க முடியவில்லை.
என்ன இது நடு ராத்திரியில் இப்படி எல்லாம் நடக்குது என்ற அச்சம் உள்ளே இருந்தாலும் அவளால் சிறிது அளவு கூட அவ்விடத்தில் இருந்து எழுந்திருக்க முடியவில்லை.
"எல்லா சர்டிஃபிகேட்டையும் எடுத்து வச்சுக்கிட்டியா.. அதான முக்கியம். .." என்று திகில் ஊட்டும் குரலில் மீண்டும் கேட்க, தீபிகா சட்டுனு கண் விழித்தாள். அந்த இருட்டில் இவளின் ....
Hi Friends,
It's my another short story! Will complete it within two days!
How is the update?
Please don't forget to give your valuable votes and comments!
Thanks for Reading!
Spread Love,
Lolita! 💙
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top