epilogue
ஐந்து வருடங்களுக்கு பிறகு ,
மேகம் சிறிது சிறிதாய் தன் காதலனாம் கதிரவனின் கதிர்பட்டு வெட்கம் கொண்டு விலகி ஓடிட தன் காதலியின் வெட்கம் தந்த கர்வத்தில் கதிரவனும் மெல்ல மெல்ல மேலெழும்பி தன் ஒளியை உலகிற்கு பரப்பி தன் மேகக்காதலியை ஆட்கொள்ள மேகமோ தன்னவன் ஒளிச்சிறையில் சிறைப்பட்டு மேலும் சிவந்து செக்க சிவந்த வண்ணமாய் காட்சிஅளித்திருந்த அந்த விடிந்தும் விடியாத வேளையில் விக்ரமின் வீட்டில் ஒரே களோபரமாக இருந்தது.
ஐந்து வருடங்களுக்கு முன் இளம்கன்னியாய் உலா வந்த நவ்யாவின் முகத்திலும் உடலிலும் இந்த ஐந்து வருடத்தில் நிறைய மாற்றங்கள் இருந்தது .
முதலில் ஒடிசலாய்,முகம் ஒட்டி இருந்தவள் இந்த ஐந்து வருடத்தில் முகம் தாய்மையின் உபயத்தால் பூசி உடலும் சற்று பூசி இருக்க ஓட முடியாமல் தன் மகனின் பின் ஓடிக்கொண்டிருந்தாள் "டேய்ய் அபி ஒழுங்கா நின்னுரு அடி வாங்காத.ஏன்டா குளிக்குறதுக்கு இவ்ளோ பாடு படுத்துற "என்க
அவனோ திரும்பி பார்த்து "முடுஞ்சா என்ன பிடிமா "என்று பழிப்பு காட்டிவிட்டு சென்றான் விக்ரமின் xerox copy போல் இருந்த அவளின் நான்கு வயது புதல்வன் அபிநவ்.
அவன் பின்னேயே ஓடியவள் தோட்டத்திற்கு சென்றதும் அவனை அமுக்கி பிடித்துவிட அவனோ அவள் கைகளில் திமிறினான் "அம்மா விடுமா pleasema ப்ளீஸ் மா" என்று அவன் கெஞ்ச கெஞ்ச அவனை உள்ளே தூக்கி கொண்டு வந்தவள் பாத்ரூமிற்குள் அழைத்து சென்று அவனை தண்ணீர் தொட்டியில்(bathtub ) போட்டு தலை தேய்த்து விட துவங்கினால் "ஷோபா முடிலடா என்னால ஒரு தலை தேச்சு குளிக்குறதுக்கு இந்த பாடாடா படுத்துவ"என்க
அவனோ "ஈஈஈ"என்று இளிக்க அதன் பின்னா அவளிற்கு திட்ட தோன்றும் .அவன் நெற்றியில் முத்தமிட்டவள் அவனை குளிப்பாட்டி அவன் தண்ணீரை அடித்து விளையாடியதில் தானும் பாதி குளித்து வெளியே அழைத்து வந்தவள் அவனிற்கு சிறு அளவிலான பட்டு வேட்டியும் சட்டையும் அணிவித்து விட்டு "அழகுடா செல்லம் நீ "என்று அவன் கன்னத்தில் முத்தமிட விக்ரமோ கையில் கொழுக் மொழுக் என்று நவ்யாவின் xerox copy யாய் பாவாடை சட்டையில் குட்டி தேவதையாய் இருந்த அவர்களின் இரண்டு வயது புதல்வி அபிநயாவுடன் உள்ளே நுழைந்தான் "என் மகனாச்சே "என்ற வாக்கியத்துடன் .
அவனின் குரலில் நிமிர்ந்து பார்த்தவள் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய் இருந்த தன்னவனை ரசனையோடு பார்த்துவிட்டு சூப்பர் என்று கை காட்ட அவனோ பாதி நனைந்தும் நனையாமல் சேலையில் அன்று பூத்த மலராய் இருந்த தன் மனைவியை பார்வையாலேயே ரசனையோடு வருடினான் .
அவன் பார்வையின் பொருள் புரிந்தவள் வெட்கத்தில் மறுபுறம் முகத்தை திரும்பிக்கொள்ள ஐந்து வருடத்திற்கு பின்னும் முதல் நாள் சந்தித்ததை போல் வெட்கம் கொள்ளும் தன் மனைவியை பார்த்து ரசித்து சிரித்தவன் அபிநயாவை கீழே இறக்கி விட்டு மகனிடம் வந்து அவன் உயரத்திற்கு குனிய நவ்யாவோ அபிநயாவை தன் கைகளில் அல்லி எடுத்தவள் அவளை கொஞ்சிக்கொண்டிருந்தால்.
விக்ரமோ அவன் புதல்வனின் சட்டை காலரை சரி செய்து விட்டு "சூப்பர்டா மகனே "என்க
அவனோ அவனின் மீசையை பிடித்து இழுத்தவன் "அப்பா உங்கள மாறி டிரஸ் போட்ருக்கேன் ஆனா உங்கள மாறி இது எனக்கு இல்லையே "என்று மீசையை சுட்டி காட்ட
அவனோ சிரித்தவன் மகனின் நெற்றியில் முத்தமிட்டு "நீங்க அப்பா மாறி பிக் பாய் ஆனதுக்கப்புறோம் இது வரும் "என்க
அவனோ சிரித்தவன் "ஓகே பா "என்று மண்டையை ஆட்டிவிட்டு அவன் கன்னத்தில் இதழ் பதித்தவன் தன் அன்னையிடமிருந்த குட்டி தங்கையிடம் சென்று அவள் கையை பிடித்துக்கொண்டவன் அவள் பாவாடையை ஒரு கையிலும் ஒரு கையில் அவள் கையையும் பிடித்து கொண்டு அவ்வறையிலிருந்து அந்த வயதிலேயே பொறுப்பான அண்ணனாய் அவளை வெளியே அழைத்து செல்ல தன் பிள்ளைகளின் செயல்களையே கண்கொட்டாமல் ரசித்துக்கொண்டிருந்த நவ்யா தன்னை பின்னிருந்து விக்ரம் அணைக்கும் உணர்விலேயே சுயநினைவடைந்தாள்.
வழக்கம் போல் அவன் மேல் நன்றாய் சாய்ந்து கொண்டவள் "எம்மா..... உங்க பையன சமாளிக்க முடியலைங்க என்னால எப்பாஆஆ சாப்பாடு சாப்பிடுறதுல இருந்து குளிக்க ஊத்துற வரைக்கும் என்ன ஓட்டமா ஓட வைக்குறான்.இவனுக்காகவே நா கடவுள்ட extraava எனர்ஜி கேக்கணும் போல ."என்க
அவனோ அவள் கழுத்துவலைவில் தன் மீசையால் உரசியவன் "அவன் பின்னாடி ஓடியாச்சும் உடம்ப குறைடி குண்டச்சி "என்க
ஆவான் மீசை ஏற்படுத்திய குறுகுறுப்பில் நெளிந்தவள் அவன் அடுத்து குண்டச்சி என்று கூறியதில் அவனை விட்டு விலகி நின்றவள் அவனை முறைத்தாள் "அட பாவி குண்டாயிட்டேன்னு exercise பன்றேன்னு சொன்னப்பல்லாம் என் பொண்டாட்டி இப்டி இருந்தா தான் அழகுன்னு என்னைய வெயிட் குறைக்க விடாம பண்ணிட்டு இப்போ குண்டா இருக்கேனா சொல்றீங்க உங்கள "என்று அவனை அடிக்க கை ஒங்க
அவள் கையை பிடித்து பின்னே மடக்கியவன் அவளை பிடித்து தன்னோடு இணைத்தவன் அவளை பார்த்து சிரிக்க அவளோ முகத்தை வேறுபுரம் திரும்பி கொண்டாள்.அவள் முகத்தை தனக்கு நேராய் நிமிர்த்தியவன் "இப்போவும் சொல்றேன் நீ ஒல்லியா இருக்குறத விட குண்டா இருக்குறது தான் அழகா இருக்கு வசதியாவும் இருக்கு "என்க
அவள் என்ன என்பதை போல் பார்க்க அவனோ அவளை நன்றாய் கட்டிப்பிடித்துக்கொண்டவன் "முன்னலாம் உன்ன கட்டிபிடிச்சா உன் எலும்பு குத்தும் இப்போ தான் புஸுபுஸுஸ்னு teddybear மாறி இருக்கு .சோ உடம்ப குறைக்குறேனு எதையாச்சும் பண்ணாத"என்க
அவளோ கேலியாய் சிரித்தவள் "அப்டி நா பண்ணா"என்க
அவனோ அவளிற்கு மிகவும் பிடித்த அந்த ஒற்றை புருவத்தை தூக்கியவன்" அப்பறோம் மறுபடியும் குண்டாக்குறதுக்கான ப்ரோசெசஸ்ல நா இறங்க வேண்டி வரும்"என்க
அவளோ "மறுபடியும் குண்டாக்குற processaah என்னதது?"என்று கேள்வியாய் நோக்க
அவனோ சிரித்தவன் அவள் காதிர்கருகில் குனிந்து "உன்ன மாறி பொண்ணு இருக்கா என்ன மாறி பையன் இருக்கான் சோ உன்னையும் என்னையும் mix பண்ண மாறி ஒண்ணா ரிலீஸ் பண்ணுறதுக்கு நா யோசிக்க வேண்டி வரும். "என்று கூறிக்கொண்டே அவள் கழுத்துவலைவில் முத்தமிட அவன் என்னவோ கூறப்போகிறான் என்று கேட்டுக்கொண்டிருந்தவள் கடைசியில் அவன் கூறியதில் "அடப்பாவி ஆள விட்ரா சாமி" என்றவள் அவனை தள்ளி விட்டுவிட்டு தன் துணியோடு குளியலறைக்குள் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டாள் செய்தாலும் செய்து விடுவான் என்ற பயத்தில் .
அவள் ஓடுவதை பார்த்து சிரித்தவன் அந்த அறையை விட்டு வெளியே வர அவன் அம்மாவோ அவன் காதை பிடித்து திருகினார் "காது குத்துறதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு கோவிலுக்கு எங்களுக்கு முன்னாடி போய் வேலைய பாருடானா நீ இங்க என்னடா என் மருமகளோட வம்பிழுத்துட்டு இருக்க ?"என்க
அவனோ வலியில் அலறியவன் "ஐயோ மம்மி வலிக்குது காத விடுமா உன் மருமகளுக்கு உதவி பண்ணலாம்னு ஒரு நல்ல எண்ணத்துல போனேன் என்ன போய் நீ இப்டி சொல்றியேமா "என்று அப்பாவியாய் முகத்தை வைக்க
அவரோ "மகனே நீ யாருனு எனக்கு தெரியும் நா யாருனு உனக்கு தெரியும் சோ என்ட பீலா விடாத ஒழுங்கா கோவிலுக்கு போய் அங்க arrangements செக் பண்ற வேலைய பாரு வெளிய தான் வித்யுத் நிக்குறான் போ .என்று அவன் முதுகில் ஒரு தட்டு தட்டி அனுப்பி வைத்தார் .
அவனோ அசடு வழிய சிரித்தவன் வெளியே நின்றிருந்த காரில் ஏறியவன் வித்யுதிடம் "ஹாய் மாமா "என்று கை ஆட்டியவாறு உள்ளே வந்தமர அவன் கண்ணை யாரோ போற்ற அந்த பிஞ்சு கரத்தை வருடிய யாரென்று தெரிந்து கொண்டவன் பொய்யாய் "யாரிது "என்க
அந்த பிஞ்சு காரத்திற்கு சொந்தக்காரியோ "கண்டுபிடிங்க பாக்கலாம் "என்க
அவனோ பொய்யாய் "தேரிலேயே யாருனு நீங்களே சொல்லீருங்க "என்க
கலகலவென சிரித்த வித்யுத் சைந்தவியின் புதல்வி சாருமதி"அச்சச்சோ மாமா இந்த தடவையும் நீங்க அவுட்"என்று கை தட்டி சிரிக்க
அவனோ பின் சீட்டிலிருந்து அவளை அள்ளி எடுத்து மடியில் வைத்துக்கொண்டவன் "என்ன பண்றதுடா குட்டி மாமாவால கண்டுபுடிக்க முடியலையே" என்று அவன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு 5 ஸ்டார் சாக்லேட் எடுத்து கொடுக்க அதை வாங்கிய குழந்தை அதை பிரித்து மூன்று பாகங்களை பிரித்து தன் தந்தையின் வாயில் முதல் துண்டை வைத்தவள் அடுத்து தன் மாமனின் வாயில் ஒன்றை வைத்து விட்டு தானும் உண்டாள்.
அவள் செய்கைகளை ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்த வித்யுதிற்கு தன் அன்னையின் முகச்சாயலில் அவரின் குணங்கள் பொருந்தி பிறந்த அவன் குழந்தை அவன் அன்னை சாருவின் மறுபிறப்பாகவே தெரிந்தால்.
பின் விக்ரமிடம் திரும்பியவன் "என்னடா எல்லாரும் ரெடியாக ?"என்க
விக்ரமோ "எங்க உன் மருமகன் பண்ற அளப்பறைல அவன் பின்னாடி ஓடி ஓடி உன் தங்கச்சி இப்போ தான் குளிக்கவே போயிருக்கா அம்மாவும் இருக்காங்க அடுத்த அரை மணி நேரத்துல வந்துருவாங்க அங்க எல்லாம் சரியா இருக்கா ?"என்க
வித்யுத் "ஹான் கரெக்டாக இருக்கு மச்சான்.ஷக்தி இப்போ தான் முழிச்சா சோ சது அவளை ரெடி பண்ணிட்டு கொஞ்சம் லேட்டாக வருவா மாமா அத்தையோட.இவ தான் என்ன பார்த்தா என் சட்டையை புடுச்சுட்டே தொங்கிட்டு இருப்பாளே அதான் இவளை கூட்டிட்டு வந்துட்டேன் முதல்ல "என்றவன் காரை கிளப்பி அவர்கள் காது குத்து விழா நடத்தும் கோயிலிற்கு சென்றான்.
அங்கே அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அணிவகுத்திருக்க பானையில் பொங்கல் வைக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள் சைந்தவி அவளிற்கு அருகில் ஸ்வஸ்திகாவும் மஹதியும் நின்று உதவி செய்து கொண்டிருக்க தூரத்தில் ஹரியும் அதிதியும் ஆளுக்கொரு குழந்தையை வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டிக்கொண்டிருக்க அவர்கள் அருகிலேயே ஆதித்தனும் சரணும் தங்கள் மகளையும் மகனையும் வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தனர் .
வினீஷாவிற்கு இரண்டாவது குழந்தை நேற்றே பிறந்திருக்க ஷ்ரவனாலும் வினீஷாவாலும் வர இயலாமல் போனது .
அனைத்து வேலைகளும் சரி பார்த்துக்கொண்டவர்கள் அடுத்த சில நிமிடத்தில் நவ்யா குழந்தைகளுடன் வந்துவிட ஹரி மற்றும் அதிதியின் புதல்வனுக்கும் புதல்விக்கும் வித்யுதின் இருபுறமும் அமர வைத்து காது குத்தப்பட்டது .காது குத்தயில் இரு குழந்தைகளும் அழ அவர்கள் அழுவதை பார்த்த அதிதி ஹரியின் தோளில் தன் முகத்தை மறைத்து லேசாய் கண்ணீர் விட அவனோ அவளை ஆதரவாய் பிடித்தவன் அவளை சமாதானப்படுத்த குழந்தைகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் நவ்யாவும் ஸ்வஸ்திகாவும் மஹதியும் ஈடுபட்டிருந்தனர் .
அங்கே வந்திருந்த photographer சரணை அழைத்து "சார் இதனை பெரு இருக்கீங்களே யாரு என்ன முறை சார் வரும் ரொம்ப குழப்பமா இருக்கே சார் "என்க
அவனோ அவர் தோளில் கை போட்டவன்"கொஞ்சம் கஷ்டம் தான் பாஸ் நா சொல்றேன் உங்களுக்கு "
(அப்டியே உங்களுக்கு நா சொல்றேன் )
வித்யுத்திற்கும் சைந்தவிக்கும் இரண்டு பெண்குழந்தைகள் சாருமதி(5),ஷக்தி (5 மாதம்)
விக்ரமிற்கு நவ்யாவிற்கும் மூத்த மகன் அபினவ்(4 ),அடுத்ததாய் மகள் அபிநயா (2 ).திருமணத்திற்கு பின் நவ்யாவும் விக்ரமும் அவனின் அம்மாவும் ஒரே வீட்டில் இருக்க விக்ரமின் அம்மாவும் அவளும் சேர்ந்து செய்யும் சேட்டையில் விக்ரமை ஒரு வழி ஆக்கி விடுவர் இருவரும்.திருமணமான மூன்று மாதத்தில் நவ்யா கர்பம் தரிக்க அது வரை கணவனாய் அவளை நெஞ்சில் சுமந்தவன் அவள் கால் தரையில் படாத அளவிற்கு அவளை கையில் தாங்கினான்.சிறு சிறு உடல்களும் மௌனங்களும் சமாதானங்களும் சீண்டல்களும் என அவர்களின் மணவாழ்வு அமோகமாக சென்றுகொண்டிருந்தது.
ஹரிக்கும் அதிதிக்கும் ஒன்றரை வருடங்கள் முன்பே திருமணம் நடந்தது திருமணம் முடிந்த ஒன்பதாவது மாதமே இரட்டை குழந்தைகள் வேதேஷும், வேதித்யாவும் பிறந்து விட்டனர் அவர்களுக்கு வயது 7 மாதம்.இரண்டு வருடமாய் அந்த சென்னை companyil வேலை பார்த்த ஹரி பின் தான் சம்பாதித்ததை வைத்து சாரதா construction companuin பாதி ஷார்ஸை வாங்கியவன் அதிதியுடன் இணைந்து அந்த கம்பனியை திறம்பட நடத்தி வருகிறான் .
சரண் சவ்வஸ்திகாவிற்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை பெயர் சர்வேஷ்.திருமணம் முடித்த கையேடு இருவரும் அப்ரோடி செல்ல ஸ்வஸ்திகா தனது பிஜியின் மிச்சமொரு வருடத்தை அங்கேயே முடித்தால்.அவள் படித்து முடிக்கும் வரை கணவனாய் அவளிடம் உரிமை எடுத்துக்கொள்ளாத சரண் அவளிற்காக தான் மனதில் சேமித்த வைத்த மொத்த காதலையும் செல்ல சண்டைகள் மூலம் வெளிப்படுத்தினான் .அங்கேயே professoraai அவன் வேலை பார்க்க ஸ்வஸ்திகாவும் படிப்பை முடித்து அருகிலிருந்த மருத்துவமனையில் மருத்துவராய் வேலை பார்த்தாள்.அவர்களின் திருமண வாழ்வில் இரண்டு வருடங்களுக்கு பின் அவர்களின் காதலின் அடையாளமாய் பிறந்தான் சர்வேஷ். ஸ்வஸ்திகாவின் முதல் பிரசவம் மிகவும் சிக்கலாய் மாற சரண் அதிலேயே மொத்தமாய் அரண்டவன் இனி தனக்கு குழந்தையே வேண்டாமென்ற முடிவிற்கு வந்துவிட்டான் .அங்கே ஐந்து வருடம் வாசம் செய்தவர்கள் பைனான்சியலாய் மிகவும் நல்ல நிலைமைக்கு தங்களை உயர்த்திக்கொண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே இந்தியா வந்திறங்கினர்.சரண் இங்கே ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் ப்ரொபசராய் இப்பொழுது பணியாற்றி வருகிறான் .வேலைக்கு சென்று சர்வேஷயும் பார்த்துக்கொள்ள முடியாத காரணத்தால் தற்சமயம் ஸ்வஸ்திகா வீட்டில் இருக்கிறாள்.
ஆதித்தனுக்கும் மஹதிக்கும் மூன்று வயதில் அப்படியே மமதியின் சாயலில் ஒரு பெண்குழந்தை மமதியின் பிறந்த நாள் அன்றே பிறக்க அவள் பெயரையே தங்கள் குழந்தைக்கு வைத்தனர்.மஹதி இன்று joint commisioner of போலீஸ்.அவளது குற்றங்களை அலசும் திறனை கண்டு அவளை சிபிஐ டிபார்ட்மென்ட்டிற்கு மாற்றிவிட்டனர் .
குழந்தை பிறந்த போது ஆதித்தனின் தாயும் தந்தையும் இனி குழந்தையை பார்த்துக்கொள்வதில் மஹதியின் வேலையால் பாதிப்பு ஏற்படும் ஆதலால் வேலையை அவள் விட வேண்டும் என்று கூற ஆதித்தனோ தன்னவளின் வேலை அவளிற்கு எத்தனை முக்கியம் என்பதை அறிந்து வாரம் இரு முறை அவளிற்கு விடுமுறையாய் இருக்கும் நேரத்தில் மட்டும் தான் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் சென்று வருவான் .
மற்ற நேரங்களில் தானே தன் குழந்தையை அன்னையாகவும் இருந்து பார்த்துக்கொள்பவன் மஹதி வீட்டில் இருக்கும் சமயத்தில் குழந்தையை மொத்தமாய் அவளிடமே ஒப்படைத்து விடுவான் .குழந்தைக்கு அன்னையிடமும் தந்தையிடமும் சமமான ஓட்டுதல் இருக்கவேண்டுமென்று .மஹதிக்கோ ஏதோ ரெக்கை கட்டி விட்டார் போன்றிருந்தது .தன் தமக்கையின் இழப்பை எண்ணி ரணப்பட்டு இருந்த அவள் மனதில் மெல்லிய மயிலிறகாய் ஆதித்தனின் காதல் மனதை என்றும் சுகமாய் நிறைந்திருக்க அவன் அத்தனை முறை கேட்டும் கூறாத அந்த மூன்று வார்த்தையை ஒரு நாளில் ஒரு முறையேனும் கூறாது விட மாட்டாள் மஹதி.
அந்த photographaridam சரண் அனைவரையும் அறிமுகப்படுத்த அவர் தலையை பிய்த்துக்கொண்டது தான் மிச்சம் (என் நிலமையும் அது தான் )
பின் வித்யுத் "அடேய்ய் அங்க என்னடா பண்ற இங்க வாடா எல்லாரும் ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கலாம் "எங்க
சரண் "இந்தா வந்துட்டேன் மச்சான் "என்றவன் ஓடி சென்று அங்கே நின்றுகொள்ள .அந்த ஜோடிகள் அனைவரும் தத்தம் துணையுடனும் மகவுகளுடனும் நிறைவான குடும்பவாழ்க்கையில் இணைந்து மகிழ்ச்சியில் திளைத்திருக்க அவர்களின் அந்த மகிழ்வான முகத்தை தனது காமெராவில் போட்டோக்ராபர் சேமித்துக்கொள்ள தூரத்திலிருந்து அவர்களை கண்டு புன்னகைத்த நான் அவர்களின் பிம்பத்தை என் நெஞ்சில் நிறைத்துக்கொண்டேன் .இதே சந்தோஷம் என்றும் இக்காதல் ஜோடிகளுக்கு நிலைக்க வேண்டி விடைபெறுவோம் .
சுபமோ சுபம்
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top