7
விக்ரம் கூறிய திட்டம் கேட்க எளிதாய் இருந்தாலும் அதை செயல்படுத்து முடிப்பது அத்தனை எளிதாய் இல்லை.அவர்கள் தேர்ந்தெடுத்த கம்பனிகளின் ப்ரதிநிதிகளை வரவழைத்து சந்தித்து பின் அவர்களிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்தி வாங்கி அவர்களின் வேலையை விளக்கி ஒருமுறை அக் கம்பெனிகளின் மேலதிகாரிகளையும் சந்தித்து பேசி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது (சொன்ன எனக்கே இவ்ளோ tired ஆகுதுன்னா பாத்துகோங்களேன் )அனைத்தையும் ஒரு வழியாய் முடித்து விட்டு அலுவலகத்தை விட்டு இருவரும் கிளம்புகையில் மணி இரவு பத்திற்கு மேல் ஆகி இருந்தது.
கீழே வந்ததும் விக்ரம் காரில் ஏறி "நவ்யா வா நானே ட்ரோப் பண்ணிடுறேன் லேட்டா ஆயிருச்சு "
நவ்யா "இல்ல வேணாம் விக்ரம் லேட்டா ஆயிருச்சு நீங்க போங்க "
அவனோ "அதே தான் நானும் சொல்றேன் வா "என்க
நவ்யாவோ முறைத்தவள் "நா தான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல போங்க "என்க
அவனும் "சரி நா கிளம்புறேன் நீ safeaah போ "என்றுவிட்டு சென்று விட அவளோ scootyai வந்து ஸ்டார்ட் செய்ய அது ஸ்டார்ட் ஆக மறுத்தது .
நேற்றே இங்கு scootyai விட்டு வந்ததால் நவ்யா காலையில் வித்யுதுடன் தான் வந்தால் .
இன்று ஸ்டார்ட் செய்தாலோ scooty தன் வேலையை செவ்வெனே செய்து கெடுத்து விட்டது .அவள் எவ்வளவோ முயற்சி செய்தும் scooty ஸ்டார்ட் ஆக வில்லை.ஓங்கி scootyai ஒரு மிதி மிதித்தும் அது செயல்படாமல் போக பதட்டத்தில் நகத்தை கடிக்க ஆரம்பித்தாள் நவ்யா இரவு உணவு உண்ணாத பசி வேறு அவளை பாடாய் படுத்தியது . அவள் மனமோ "அப்போவே சொன்னான் ஒழுங்கா கூட போயிருக்கலாம் "என்று அவளை சமயம் பார்த்து கிண்டலடிக்க அவளோ தன்னை தானே நொந்து கொண்டு scootyai அங்கேயே விட்டு விட்டு வெளியே வந்து நடக்க துவங்க.சற்று நேரத்திற்கு பின் அவளை நான்கு பேர் பின்தொடர்வதைப் போல் இருக்க அவள் திரும்பி பார்க்க அங்கோ நான்கு ஆடவர்கள் அவளை பின் தொடர்ந்து கொண்டிருந்தனர் .
சுற்றி முற்றி பார்த்தல் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாமல்,ஆந்தையின் அகர்வாலும் காற்றில் ஆடிய இலைகளின் சலசலப்பையும் அந்த நிலவையும் அன்றி யாரும் அருகில் இல்லாதிருந்த அந்த நிசப்தமான சூழல் அனைவரும் நிர்மலமாய் துயில் கொண்டிருப்பதை எடுத்துரைக்க கால்கள் வேகமெடுக்க அவள் சற்றே ஓடிட அவர்களோ "மேடம் நில்லுங்க நீங்க நெனைக்குற மாறி இல்ல மேடம் "என்று கூறி கொண்டே வர அவளோ நில்லாமல் ஓட்ட மெடுக்க ஒரு திருப்பத்தில் உரசிக்கொண்டே ஒரு கார் வந்து நின்றது .
அவள் மிரண்டு விழிக்க அதிலிருந்து விக்ரம் கீழிறங்க விக்ரம் என்று தாயை சரணடைந்த சேயை போல் அவனை ஓடி சென்று கேவலுடன் அணைத்துக் கொண்டால் .
அவளை சற்று வம்பிழுக்க எண்ணி சற்று நேரம் கழித்து வந்தவன் அவளை அங்கு காணாது பதறி அருகிலேயே தேடிக் கொண்டு வர அவள் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தது தெரிய அவள் அருகில் காரை நிறுத்தியவன் கீழிறங்க அவளோ அவனை விக்ரம் என்ற அழைப்புடன் அணைத்துக் கொள்ள முதலில் திகைத்தவன் பின் அவள் உடல் பயத்தில் நடுங்குவதை உணர்ந்து அவள் முதுகை ஆதரவாய் வருடியவன் "ஹே ஸ்ஸ் ஸ்ஸ் நவ்யா ரிலாக்ஸ் ஏன் இவ்ளோ பயம் ஒன்னும் இல்ல நவ்யா நவ்யா ஒன்னும் இல்ல "என்று பின்னால் பார்க்க நால்வர் வருவதைக் கண்டான்.
அவள் பயத்தின் காரணம் புரிய அவர்களை வெட்டும் பார்வை பார்த்தவன் அவளை கை அணைவில் வைத்தவாறே அங்கு செல்ல அவர்களில் ஒருவனோ "சார் நீங்க நெனைக்குற மாறிலாம் இல்ல சார் என்று ஒரு purse ஐ எடுத்துக் கொடுத்தவன் இது சிஸ்டர் போகேல கீழ விழுந்துருச்சு சார் அத கொடுக்கலாம்னு தான் பின்னாடியே வந்தோம் அவுங்க தப்பா நெனச்சுட்டாங்க "என்று கூற
அவனது கண்ணை பார்த்தவனுக்கு அவன் கூறுவதில் பொய் இருப்பதாய் தெரியவில்லை அவன் கூறியதை கேட்ட நவ்யா அதன் பின்னே தன் தப்பை உணர்ந்து "சாரி நா தப்பா"என்று கூற
இன்னொருவனோ "பரவால்ல சிஸ்டர் சிலர் பண்ற தப்பால 10 மணிக்கு மேல எந்த பையன ரோட்டல பாத்தாலும் பொண்ணுங்களுக்கு rapistaah தான் தெரியுறாங்க ."என்று ஒரு கசந்த புன்னகை சிந்தியவன்
அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு "சிஸ்டெர பத்திரமா கூட்டிட்டு போங்க சார். லேட்டா நைட்ல இப்டி வெளிய தனியா போகாதீங்க சிஸ்டர் safe இல்ல "என்றவர்கள் கிளம்பினார்கள் .
அவர்கள் கிளம்பிய பின்னும் அவள் அவன் காய் அணைவிலேயே அவன் மற்றொரு கையை கோர்த்துக் கொண்டு நின்றிருந்ததை இருவரும் அறியவில்லை.முதலில் தன்னிலை அடைந்த விக்ரம் அவளை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்த அவளோ அதன் பின்னே தான் நின்றிருந்த நிலையை அறிந்தவள் அவன் முகத்தை ஏரிடத் தயங்கி வெட்கம் மேலோங்க தலை குனிந்து நிற்க
அவனோ "இன்னும் எத்தனை பேர் எனக்கு அட்வைஸ் பண்ணனும்னு நெனைக்குற "என்று கோபமாய் கேட்க அவன் கோபத்தை குரலில் உணர்ந்தவள் அதன் பின்னே தலை நிமிர்ந்து அவனை பார்த்தால் ரௌத்திர மூர்த்தியாய் நின்றிருந்தான் அவன் ."சொல்லுடி இன்னும் எத்தனை பேர் எனக்கு அட்வைஸ் பண்ணணுன்னு நெனைக்குற பெரிய இவளாட்டம் நானே பொய்க்குவேன்னு சொன்ன. ஒன்னு தனியா போறதுக்கு தைரியம் இருக்கனும் இல்லையா கூட்டிட்டு போறேன்னு சொல்றவனோட வரணும் .பெரிய இவளாட்டம் டயலாக் பேசிட்டு இப்போ இப்டி நாலு பேர் follow பண்ணதுக்கே அழுதுட்டு வந்து நிக்கிற ."என்று
அவள் கையை பிடித்தவன் "பாருடி இந்த இடத்தை ஒரு ஈ காக்காவாச்சும் இருக்கா ஏதாச்சும் நடந்துருந்தா என்னடி பண்ணிருப்ப ? உன் நொண்ணனுக்கும் அறிவில்ல பொம்பள புள்ள இவ்ளோ நேரமாச்சே கூட்டிட்டு போவோம்னு அறிவிருக்கா "என்று வித்யுத்தை திட்ட துவங்க
அவளோ அது வரை மௌனமாய் இருந்தவள் "என் அண்ணனை திட்ற வேலைலாம் வேணாம் நா தான் வேணாம் நானே வந்துடுறேன் manage பண்ணிக்குவேன்னு சொன்னேன் "என்க
விக்ரம் "கிழிச்ச மேனேஜ் பண்ணி" என்க அவள் முகம் சுருங்கி விட
அவள் சுருங்கிய முகத்தை பார்த்தவன் தன் தலையை கோதி கோபத்தை சமன்படுத்தியவன் அவள் முகத்தை நிமிர்த்தி "நவ்யா இனிமே இப்டி பண்ணாதடா லேட்டா ஆச்சுன்னா நானே கொண்டு போய் விடறேன் சரியா."என்றவன் சற்று நிதானித்துவிட்டு அவள் கண்களை நேராய் பார்த்து "வா போலாம் "என்க அவளும் அவன் பின்னே சென்றால் .
அந்த கார் பயணம் மௌனமாகவே செல்ல அந்த காரில் பாட்டின் மெல்லொலியைத் தவிர்த்து வேறெதுவும் கேட்கவில்லை.பின் காரை ஒரு உணவகத்தின் முன் நிறுத்தியவன் அவளை "இறங்கு நவ்யா" என்க
அவள் புரியாமல் பார்க்க அவன் "இன்னும் சாப்பிடலேல வா சாப்டுட்டு போலாம் "என்க
அவளோ "எனக்கு பசியில்லை வேணாம் "என்க
விக்ரம் "உனக்கு பசிக்களை எனக்கு பசிக்குது சோ கம்பெனி குடு "என்றவன் அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்று "ரெண்டு சப்பாத்தி ஒரு பன்னீர் பட்டர் மசாலா ஒரு மசால் தோசை ஒரு நான் "என்க
அவளோ மனதில் "பாவிப் பயலே சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா மறுபடி கேக்க மாட்டியாடா.இது இவன் நைட் சாப்பிடவா இல்ல இன்னும் ரெண்டு நாளைக்கு சாப்பிடவா "என்று நினைத்தவள் வெளியில் உர்ரென்று அமர்ந்திருக்க அவனோ அவளது இஞ்சி தின்ற கொரங்கு முகத்தை கண்டவன் உள்ளே சிரித்துக் கொண்டே உணவு வந்ததும் அதை ஆர்வமாய் பார்க்க அவளோ யாருக்கோ வந்த விருந்து என்பதை போல் கையை கட்டி கொன்று அமர்ந்திருந்தால்.
அவளை பார்த்து நக்கலாய் ஒரு புருவத்தை உயர்த்தியவன் சப்பாத்தியையும் பன்னீர் மசாலாவையும் அவள் புறம் தள்ளி வைக்க அவள் அவனை வினோதமான பார்வை பார்க்க அவனோ
"பசிக்கல்னு வாய் தான் சொல்லுது கண்ணு கொலப்பசில இருக்கனு தெளிவா சொல்லுது ஒழுங்கா வீம்பு பிடிக்காம சாப்பிடு "என்று கூற
அவளோ இல்லேன்னா என்பதை போல் ஒரு பார்வை பார்க்க அவனோ "இல்லேன்னா ஒன்னும் பண்ண மாட்டேன் யாரு என்ன நெனச்சாலும் பரவால்லன்னு ஊட்டி விட்ருவேன் எப்படி வசதி ?"என்று மறுபடி ஒற்றை புருவத்தை உயர்த்தி கேலிப் புன்னகையுடன் வினவ நவ்யாவோ இவன் செஞ்சாலும் செய்வான் என்று வேக வேகமாய் உண்ண துவங்கினால் .பின் இருவரும் உண்ட பின் அவளை அவள் வீட்டில் விட்டவன் அவள் இறங்கி செல்ல அவள் செல்வதை பார்த்தவன் காரை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு புறப்பட ஏதோ தோன்றியவள் "விக்ரம் " என்று அவனை அழைத்தால்.
அவன் நின்று என்ன என்பதை போல் பார்க்க அவளோ தலையை இடவலமாய் அசைத்தவள் "தேங்க்ஸ்" என்க
அவனோ மீண்டும் நக்கலாய் சிரித்தவன் "பிரியா லோகோன் வச்சே அபார ஜரூரி நத்தி "என்க அவள் ஆச்சர்யமாய் பார்க்க
அவனோ "என்ன புரியலையா பிரியமானவர்களுக்கு இடையில் நன்றி தேவை இல்லை "என்று அவள் கூறிய அதே வசனத்தை கூறி விட்டு செல்ல அவளோ தன்னை கண்டு கொண்டானே என்று அசடு வழிந்து கொண்டே திரும்பியவள் தலையில் அடித்துக் கொண்டே உள்ளே சென்று விட்டால் உதட்டில் உறைந்த புன்னகையுடன் .
இங்கே இவள் புன்னகையுடன் உறங்க அங்கோ ஸ்வஸ்திகா முட்டியில் முகத்தை புதைத்து கண்ணீரை சிந்திக்க கொண்டிருந்தாள் .நேரம் ஆனதே ஒழிய அவளது கண்ணீர் நின்ற பாடாய் இல்லை அவள் செல்போன் ஒலி எழுப்ப சிறிதாய் தலையை உயர்த்தியவள் அதில் சரண் என்ற பெயர் மின்ன அதை சுட் செய்தவள் phoneai தூக்கி போட்டால் அது அவள் எதிரில் அவனும் அவளும் இருந்த படத்தின் கண்ணாடியை உடைக்க மேலும் கேவியவள் "ஏன்டா இப்டி பண்ண "என்ற கேள்வியுடன் மீண்டும் வெடித்து அழ ஆரம்பித்தாள் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top